October 15, 2008

குணமென்னும் குன்றேறி

வளவனுக்கு அய்யாசாமி ஐயாவைப்பார்த்து கடும்கோபம் வந்தது. வளவன் இந்த பள்ளியில் சேர்ந்த ஓரு வருடத்தில் அய்யாசாமியின் மதிப்பு அவனுக்கு தெரிந்திருந்திருந்தது.
'இந்த பள்ளிக்காக எத்தனை செய்திருப்பார் ஐயா' என்று வாயார ஒவ்வொருவரும் சொல்லும்போது அவரை தனக்கு ஒரு முன் மாதிரியாக கொள்ளவேண்டும் என்று தோன்றும்.

இந்த பள்ளியில் படித்து பேரும் புகழுமாய் இருப்பவர்கள் எல்லாமே ஐயாவின் அறிவுரையால் மேலே போனவர்கள் தான். இத்தனை ஏன் வருடா வருடம் பத்திரிகையில் பேர் வரும்படியாக பள்ளி மாணவர்கள் தேர்ச்சி இருப்பதற்கும் ஓரிருவர் மாநில அளவில் பதக்கம் வாங்குவதும் கூட ஐயாவால் தான். இருந்தும் அவரை ஒருவர் மதிக்காமல் கத்திவிட்டு போகிறார் வளவனுக்கு ரத்தம் கொதித்தது.

ஆனால் அய்யாசாமி முகமோ எப்போதும் போலவே பளபளப்பாய் இருந்தது. உடல் நிறத்தின் காரணமாய் சிறிதே சிரித்தாலும் பற்கள் பளிச்சிட்டது. அவரென்னவோ அவரை ஒருவர் நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்வதாய் சொல்லிப்போனது போல் மகிழ்ச்சியாய் இருப்பதாகத் தோன்றியது வளவனுக்கு.

அவனும் பொறுத்துப் பொறுத்துப்பார்த்தான். அவர் ஒரு முறை கூட வளவனிடம் வந்து போன ஆளைப்பற்றி குறையும் சொல்லவில்லை அதுபற்றி வருத்தம் இருந்ததாய் கோடும் காட்டவில்லை. இப்படியும் மனிதர் இருப்பாரா? இல்லை இவருக்கு அந்த நேரம் காது தான் கேட்காமல் போய்விட்டதா? அவன் மனம் ஆறவே இல்லை.

மெதுவாக அவர் இருந்த மேஜை பக்கம் சென்று வந்தான். இது ஒன்றும் முதல் முறையில்லை. காலையில் இருந்தே ஆறேழு முறை அவனும் அவரும் ஒருசேர எப்போதெல்லாம் வகுப்பு முடித்து ஆசிரியர் அறைக்கு வந்தார்களோ அப்போதெல்லாம் இப்படி ஒரு நடை நடப்பான். அய்யாசாமி ஒரு முறை நிமிர்ந்து பார்ப்பார் . எதையோ எடுக்க வந்ததாக போக்கு காட்டி திரும்பிவிடுவான்.

மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு தைரியம் வரவழைத்தான். இம்முறை எப்படியும் கேட்டுவிடவேண்டும் , கேள்வி எல்லாம் தயார்.

"என்னதான் தவறு செய்தீங்க ? எதற்கு அமைதியாக இருக்கிறீங்க?
அடுத்தவர் தான் தவறுன்னு தெரிஞ்சப்பறம் கோபம் வருவது கூட தவறு என்று எந்த புத்தகத்தில் படிச்சீங்க? "
அவரரகில் சென்றதும் எல்லாம் மறந்து போய், "ஐயா! எனக்கு மனசே சரியில்லை வீட்டிற்கு கிளம்புகிறேன்" என்று முடித்தான்.

வளவா! என்ன அவசரம் பேசவேண்டும் உட்காரேன். நீ மனோகருடைய அப்பா வந்து கத்தியதை நினைச்சு வருத்தப்படறேன்னு நினைக்கிறேன். நான் ஏன் கோபப்படலேன்னும் கூட உனக்கு கேள்வி குடையுது சரியா?
"தெரிஞ்சு என்ன ஐயா புண்ணியம் .. அப்ப பேசாம விட்டுட்டீங்களே"

மனோகர் நல்லா படிக்கற பையன் தான்ப்பா .. முயற்சி எடுத்தா படிக்கலாம் அதற்குத்தான் அவனை நான் தனிமைப்படுத்தி வச்சேன் . அவனும் படிக்காம நாலு பேரை படிக்கவும் விடாம தடுத்தான்னு செய்தவிசயத்துக்கு இவர் வந்து கத்திட்டு போறார். வேற எதோ காரணமா நான் தண்டிக்கறதா நினைச்சுக்கிட்டார். போனவாரத்துக்கு இந்த வாரமே அவன் வீட்டுல செய்யவேண்டிய வேலையெல்லாம் நோட்டில் சரியா செய்திருக்கிறான். பாரேன் இவனே நாளை முதல் மதிப்பெண் எடுத்தாலும் ஆச்சரியமில்லை. என் கோபமெல்லாம் அவனை வழிப்படுத்த மட்டுமே..என்ன சரிதானே!

நீத்தார் பெருமை
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.

* அறிவில் முழுமைப் பெற்ற குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஓரு கணம் கூட நிலைத்து நிற்காது.

அழைத்த புதுகைத்தென்றல் ... ஆரம்பிக்க காரணமான ஜீவ்ஸ் இருவருக்கும் நன்றிகள்.

நான் அழைப்பவர்கள்..

1. புகழன்
2. புதுவண்டு
3. செல்விஷங்கர்

விதிமுறை: திருக்குறளின் கருத்தும் கதையின் கருத்தும் ஒன்றாக இருக்கவேண்டும்.
இன்னும் மூன்று பேரையாவது அழைத்து எழுத வைக்க வேண்டும்.


( யாரங்கே இது என்ன 1973 ல் வந்த கதை மாதிரியே இருக்குன்னு சொல்வது ? அப்ப நானே பிறக்கலைப்பா..அந்த ட்ரெண்ட்ல இருக்கு கதை ஓட்டம் அவ்வளவு தான் )

32 comments:

தமிழ் பிரியன் said...

நல்லாரிசிரியரின் கதை! நன்று!

Jeeves said...

nalla irukkukkaa kathai :)

Thekkikattan|தெகா said...

அறிவில் முழுமைப் பெற்ற குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஓரு கணம் கூட நிலைத்து நிற்காது.//

அப்படியா சொல்லுறீங்க. யோசிச்சிப் பார்த்தா சரின்னுதான் தோணுது.

மங்கை said...

எப்படி...இப்படி?...

என்னமோ போங்க (அபூர்வ சகோதரர்கள் ஜனகராஜ் - சிவாஜி ஸ்டைல்ல)

ஆயில்யன் said...

அருமையான குறள்!

அதுக்கேத்த மாதிரியே டக்குன்னு கதையெல்லாம் எழுதி அசத்திட்டீங்க அக்கா!

வாழ்த்துக்கள்1

கோபிநாத் said...

நல்ல முயற்சி...கதை அருமையாக இருக்கு ;)

வாழ்த்துக்கள் ;)

மொக்கைச்சாமி said...

ரொம்ப சீரியஸ் கதையாயில்ல இருக்கு... ஆனாலும் நல்ல இருக்கு.

Anonymous said...

நல்ல கதை அக்கா :D

rapp said...

நல்ல கதை முத்து. இது பழைய கதை மாதிரி இல்லை. துணைப்பாட நூலில் வருகிற கதை மாதிரி இருக்கு:):):)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

விருதே குடுத்திட்டீங்களா தமிழ்பிரியன் நன்றி நன்றி..

---------------
ஜீவ்ஸ் நீங்க சொன்ன குறளில் யோசிச்சேன் ஒன்னுமே தோணலை.. எதோ ஒப்பேத்திட்டேன்..:)
-------------
ஆமா தெகா அறிவில் முழுமை பெற்றுவிட்டால் அந்த கோபம் என்ன செய்யும்ன்னும் அதனால் அடுத்த உயிருக்கு என்ன பாதிப்பு எதும் நன்மை இருக்கான்னு பார்த்துட்டு வராமாலே போயிடும்.. அதனால் உண்மைதான். ஆனா முழுமை பெற்றவங்க எங்க இருக்காங்கனு தேடித்தான் பார்க்கனும்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நம்மளையும் இன்னும் நம்பி கதையெல்லாம் கேக்கறாங்களே மங்கை என்ன செய்ய ? அப்படி இப்படி தேத்தி இப்படி ..
ஜனகராஜ் :)))
-------------------
ஆமா டக்குன்னு தான் ஆயில்யன் ஒரு 10 இல்லாட்டி 15 நிமிசம். தான்.
--------------------
பிசி மேன் கோபி நன்றி.. மாசம் ஒரு பதிவு போடும் வழக்கம் இன்னும் இருக்கா?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மொக்கை சாமி .. ஆமால்ல சீரியஸாத்தான் இருக்கு.. ஆனா நம்மாலல்லாம் அந்த குன்றின் பாதி கூட ஏறமுடியாது விட்டுருவோம்.. :)
-------------------------
நன்றி துர்கா.... :)
----------------
நன்றி ராப்.. எதோ இதை கதைன்னு ஒத்துக்கிட்டாலே போதும் ன்னு இருந்தேன் .. ஆமா நீ பள்ளிக்கூடம் படிச்சு இத்தனை நாளாகியும் துணைப்பாடமெல்லாம் நினைவில் வச்சிருக்கியே ..

AMIRDHAVARSHINI AMMA said...

ஆமா டக்குன்னு தான் ஆயில்யன் ஒரு 10 இல்லாட்டி 15 நிமிசம். தான்

இவ்ளோ ஸ்பீடா, நன்றாக இருக்கிறது "திருக்குறள் கதை"

கானா பிரபா said...

யாரங்கே இது என்ன 1973 ல் வந்த கதை மாதிரியே இருக்கு
1
1
1
1
1
அப்படி நான் சொல்ல மாட்டேன், நல்ல நீதிக்கதை, இதே மாதிரி புதிய ஆத்திசூடி கதைகளையும் பதிவர்கள் ஆரம்பிக்கலாம் போல

ராமலக்ஷ்மி said...

பதினைந்தே நிமிடத்தில் எழுதியதா?
மனதில் பதியுமாறு பதிந்திருக்கிறீர்கள் முத்துலெட்சுமி, வாழ்த்துக்கள்.

//ஆனா முழுமை பெற்றவங்க எங்க இருக்காங்கனு தேடித்தான் பார்க்கனும்.//

உண்மை:(.

//ஆனா நம்மாலல்லாம் அந்த குன்றின் பாதி கூட ஏறமுடியாது விட்டுருவோம்.. :)//

முற்றிலும் உண்மை:)!

ராமலக்ஷ்மி said...

துணைப்பாட நூலை நினைவுக்கு கொண்டு வந்த ராப்புக்கு நன்றி. ஹி..எனக்கு படிக்க(வாசிக்க) ரொம்பப் பிடித்த சப்ஜெக்டாக்கும்.

சென்ஷி said...

//கோபிநாத் said...
நல்ல முயற்சி...கதை அருமையாக இருக்கு ;)

வாழ்த்துக்கள் ;)
//

ரிப்பீட்டே :)

சென்ஷி said...

// அறிவில் முழுமைப் பெற்ற குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஓரு கணம் கூட நிலைத்து நிற்காது.
//

சூப்பர் கருத்துக்கா..

சென்ஷி said...

//rapp said...
நல்ல கதை முத்து. இது பழைய கதை மாதிரி இல்லை. துணைப்பாட நூலில் வருகிற கதை மாதிரி இருக்கு:):):)
//

ரிப்பீட்டே :)

இசக்கிமுத்து said...

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவை படிக்கிறேன்.. திருக்குறள் கருத்து கதை அருமை. நல்ல குறள் அதற்கேற்ற கருத்துகள்...

புகழன் said...

ரெம்பவே சிம்பிளான கதையா இருக்கு

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................சீக்கிரமே சென்ஷி அண்ணனுக்கு கல்யாணம் ஆகிடும் பாருங்க. சிவா மாதிரி இவரும் வீக்கென்ட் கடமை(/கயமை) பதிவு போடறார், பின்னூட்டம்னா ஜாலியா ரிப்பீட்டே போட்டுட்டு போயிடறார்:):):)

rapp said...

வளவன் அப்படிங்கற பேரைக் கேட்டாலே, எனக்கு துணைப்பாடம்தான் நியாபகம் வரும்:):):) பிளாஷ்பேக்க நியாபகம் வெச்சுப்பேன், ஆனா நிகழ்காலத்தை தான் ஜாலியா லூசுல விட்டுருவேன்(இல்ல லூசானதால விட்டுருவேன்(நான் போடலைன்னாலும் வேற யாராவது சொல்லப்போறீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா :) ... வேற சில குறள் எடுத்துக்கிட்டு யோசிச்சேன் யோசிச்சேன் எதுமே தோணலைங்க..:(

------------------------------
கானா எதைப்பத்தி கருத்து எழுதனும்ன்னாலும் நம்ம கருத்து கந்தசாமிகளாகி எழுதிடலாம் ஆனா கதை கஷ்டம்டா சாமின்னு ஆகிடுது.
-----------------------

ஆமாங்க ராமலக்ஷ்மி எல்லாரும் புத்தகம் வாங்கியதும் முதல்ல அதுல இருக்கற கதை எல்லாம் படிச்சிடுவோம்ல...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றி சென்ஷி.. குறள் ஒவ்வொன்னுமே சூப்பர் கருத்து தானே சென்ஷி.
:)
---------------
அதானே ஏன் இசக்கி முத்து ரொம்ப நாள் கழிச்சுப்பபடிக்கிறீங்க.. நான் கூட நினைச்சேன். பிசியா இருந்தீங்களோ?
-------------------
புகழன் சிம்பிளான்னாலும் கதைன்னு தோணறமாதிரி எப்படியோ வந்துடுச்சேன்னு நானே சந்தோஷப்ப்ட்டுக்கிட்டுர்க்கேன் நீங்க வேற ....
கஷ்டமான கதை சோகமான கதை ஜீவ்ஸ் எழுதியிருக்காரு படிங்க.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அது வந்து ராப் தமிழ் பெயர்ன்னாலே அப்படி ஒரு பற்று வந்துடுச்சு கொஞ்ச நாளா.. என் பேரை இப்படி பழசா இருக்கேன்னுநினைச்சது அந்தக்காலம்..

ஆமா இது என்ன ஜோசியமா சொல்ற..

NewBee said...

கயலக்கா,

நலமா? :)

கதை அருமை.அதுவும் இன்ஸ்டண்ட் கதை. வெகு அருமை.

என்னையும் அழைத்ததற்கு நன்றி. வண்டு-சிண்டுவை, செவ்வாயில் அளித்தபின், இதைச் செய்தால், பரவாயில்லையா? :D :).

கொஞ்சம் (நெரய) நேரம் வேண்டும் :D

செல்விஷங்கர் said...

நன்றி கயல் - என்னையும் அழைத்ததற்கு - நானும் எழுதி விட்டேன்.

குணமென்னும் குன்றேறி நின்றவர் வெகுளி கணமேயும் காத்தல் அரிது தானே !

வளவனின் சிந்தனை நன்று !
அய்யாசாமி ஆழமாகவே சிந்தித்திருக்கிறார்

nandhu said...

yennanga Kayal.....Thirukkurala vacchu kathai yezutha aarambichitteena....appa innum 1329 kathaiyai yethirparkkalam
Nandhu

முத்துலெட்சுமி-கயல்விழி said...

புது வண்டு உங்களுக்கு இல்லாமலா .. நேரம் எடுத்துக்குங்க.. வண்டு சிண்டுக்குத்தான் முதல் மரியாதை..நாங்களும் காத்திருப்போம்ல..
-------------------'
செல்வி நீங்களே அய்யாசாமியின் சிந்தனை நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் வேறு என்ன வேண்டும்.. நன்றி நன்றி.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நந்து பயப்படுத்தாதீங்கப்ப்பா.. 1329 ஆ யாரால ஆகும்.. இதுவே ஒருத்தங்க தொடர் விளையாட்டுன்னு ஆளுக்கொரு குறளுக்கு கதை எழுத சொன்னதால் தானே.. மீதிய வேற யாராச்சும் எழுதுவாங்களா இருக்கும்.. :)

புதுகைத் தென்றல் said...

அருமையான கதை

வாழ்த்துக்கள்.