January 6, 2009

நியூ இயர் ஒரே பிசி.. பிசி

போன வருட கடைசியில் இருந்தே கொஞ்சம் பிசியாகத்தான் மாறிவிட்டது.. இந்த வருடம் இதுபோலவே தொடரும் என்று நினைக்கிறேன். குடும்ப நண்பர்களுடன் நியூ இயர் ஊர் சுற்றலாக ஆரம்பித்தது. பதிவெழுத நிறைய விசயங்கள் இல்லையே என்று இருந்த காலம் போய்...விசயங்கள் வரிசைக்கட்டி நின்றாலும் எழுத நேரமின்மை என்று நிலைமை தலைகீழாகி விட்டது. ஒரு வாரம் தென்னிந்தியா பயணம் வேறு காத்திருக்கிறது.

நியூ இயர் மலைமந்திர் முருகன் , ஆர் கே புரம் ஐயப்பன் என்று தரிசனத்துடன் துவங்கியது, ஒரு கெட் டு கெதர் லஞ்ச், ஈட்டோப்பியாவில் டின்னர்...

தில்லிக் குளிரோ ஆளைக் கொல்கிறது. பலமுறை செய்தித்தாளில் படித்த குளிர்மூட்டமான அதிகாலை, இரவு நிலைமைகளை நேரிலேயே இந்த வருடம் காண நேரிட்டது. டின்னர் முடித்து வருகையில் முன்னால் போகும் காரின் ப்ளிங்க்கர் லைட் மட்டும் தான் தெரிந்தது. ரோட்டின் மஞ்சள் கோட்டை வழியாக நம்பி வீடு வந்து சேர்ந்தோம்..பகவானே காப்பாத்து என்று மகளின் டென்சனும் .. இந்த புகை ஏன் வருது என்ற மகனின் அச்சமும் அன்று ஒரு திரில்லிங்க் அனுபவம் தான்.

தொடர்ந்து மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம் ....

பரிசல் சொன்னது போல நேரமின்மையால் பலரது பதிவுகளை படிக்க இயலாமல் போயிருக்கிறது என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன். படித்தாலும் பின்னூட்டமிடவும் நேரமில்லாமல் இருக்கின்றேன். :)

25 comments:

சந்தனமுல்லை said...

ஹேப்பி நியூ இயர்...சபரிக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்!

நட்புடன் ஜமால் said...

\\படித்தாலும் பின்னூட்டமிடவும் நேரமில்லாமல் இருக்கின்றேன்\\

எனக்கு பின்னூட்டமிட நேரம் உள்ளது

படிக்கத்தான் ...

அமுதா said...

ரொம்ப பிஸி போல. புத்தாண்டு வாழ்த்துகள். வடக்கே ரொம்ப குளிர்னு நானும் கேள்விப்பட்டேன். உங்க பையனுக்கு belated b'day wishes

pudugaithendral said...

பிலேட்டட் நீயூ இயர் விஷஷ்.

சபரிக்கும் என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க.

(படிக்காட்டி போனாலும் பின்னூட்டம் போடலாம். நாங்க கோச்சுக்க மாட்டோம்)

:)))))))

ஆயில்யன் said...

ஹேப்பி நியூ இயர்...சபரிக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்!

ஆயில்யன் said...

நாங்க கோச்சுக்க மாட்டோம்!


பின்னூட்டம் போடாட்டியும் சரி

படிக்காட்டியும் சரி !

பட் ஆன்லைன்ல வராம இருந்தாதான் நொம்ப்ப கோச்சுக்குவோம்!

ஆயில்யன் said...

பாசமலர் கூட்டமெல்லாம் முன்னாடியே வந்து அட்டெண்டன்ஸ் போட்டுட்டாங்களே வெரிகுட்

மீ த கொஞ்சம் லேட் :(

புதுகை.அப்துல்லா said...

புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா

//(படிக்காட்டி போனாலும் பின்னூட்டம் போடலாம். நாங்க கோச்சுக்க மாட்டோம்)

:)))))))
//

தென்றல் அக்காவுக்கு நக்கல பாரு :)))

அபி அப்பா said...

அது சரி! இத்தன பிசியா? நடத்துங்க!

கானா பிரபா said...

ஹேப்பி நியூ இயர்...சபரிக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்!

பின்னூட்டம் படிப்பீங்கல்லே

பரிசல்காரன் said...

சபரிக்கும், 2009க்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி said...

மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஹிஹி, சின்ன பதிவு அதனாலே சீக்கிரம் படித்து உடனே பதில் போட முடிந்து விட்டது. எல்லாருக்கும் நேரம் ஒரு பிரச்சனையாகிக் கொண்டுதான் வருகிறது முத்துலெட்சுமி. ஆனால் எல்லாம் தாண்டி வலைமீன்கள் [வாளமீனு, இல்ல:))] நாம வலைக்குள்ளேயே இருப்போமே தவிர வெளியே துள்ளி ஓடிட மாட்டோம்ல.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முல்லை, ஜமால்,அமுதா,தென்றல், ஆயில்யன்,அப்துல்லா, கானா, அபி அப்பா, பரிசல் எல்லாருக்கும் நன்றி..

பதிவு படிக்காம பின்னூட்டம் போட அபி அப்பாக்கிட்ட தான் ட்யூசன் எடுக்கனும்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப சரியா சொன்னீங்க ராமலக்ஷ்மி .. ஆயில்யனின் டெரரான நியூ இயர் ஐடியாவான .. ஒரு மாச ப்ளாக் லீவு கூட யோசிச்சிட்டு முடியலன்னா பாத்துக்குங்க.. பதிவு டைப்படித்த கை சும்மா இருக்காதுன்னு ஒரு புதுமொழியாம்.. :)

Anonymous said...

:)

sindhusubash said...

புத்தாண்டு மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
((படித்தாலும் பின்னூட்டமிடவும் நேரமில்லாமல் இருக்கின்றேன்))

டூர் எல்லாம் முடிச்சுட்டு வாங்க.

☀நான் ஆதவன்☀ said...

உங்க குழந்தைக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்...

சென்ஷி said...

சபரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

இனிய புத்தாண்டு தின வாழ்த்துக்கள்..

பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.. :-))

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ரொம்ப சரியா சொன்னீங்க ராமலக்ஷ்மி .. ஆயில்யனின் டெரரான நியூ இயர் ஐடியாவான .. ஒரு மாச ப்ளாக் லீவு கூட யோசிச்சிட்டு முடியலன்னா பாத்துக்குங்க.. பதிவு டைப்படித்த கை சும்மா இருக்காதுன்னு ஒரு புதுமொழியாம்.. :)
//

சேம் ப்ளட் :-(

ஆனாலும் இப்ப கொஞ்சம் பெரிய்ய ரெஸ்ட்ல இருக்கேன்ல... அதனால ஒன்லி சேட்டிங்க்... :-)

உண்மைத்தமிழன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்டர்..

இந்தப் பதிவை எழுதிய நேரத்திலும் ஒரு 5 பேருக்காவது கமெண்ட் போட்டு பின்னூட்ட கடமையை நிறைவேற்றியிருக்கலாம்.))))))))))))

தமிழன்-கறுப்பி... said...

புத்தாண்டு வாழ்த்துக்களும்
சபரிக்கு...
பிறந்தநாள் வாழ்த்துக்களும்...!

அபி அப்பா said...

\\ Thooya said...
:)

\\

பார்ரா பார்ரா! இவிங்க பெரிய பாஸ்டன் பாலா! சிங்கிள் ஸ்மைலி போடுறாக:-)))))))))))))))))

கோபிநாத் said...

சீக்கிரம் வந்து ஆரம்பிங்க...இப்போதைக்கு என்ஜாய் ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தூயா நீங்க சமயக்கட்டுல பிசி போல :)
--------------
சிந்து , ஆதவன், தமிழன் -கறுப்பி, சென்ஷி , கோபி எல்லாருக்கும் நன்றி :)
-------------
உண்மைத்தமிழன் ..நீங்க சொல்றமாதிரி செய்தா 5 தானே பின்னூட்டம் போடமுடியும் ... மத்தவங்களுக்கு என்ன சொல்றது ... ? :)
---------------
வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறீர்கள் ...எல்லாருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

உயிரோடை said...

ஜனவரி 2ம் தேதியும் ஒரே பனி தான். நாங்களும் ஒரு கெட்டுகதர் போயிட்டு கஷ்டபட்டு தான் வீட்டுக்கு வந்தோம்

பாச மலர் / Paasa Malar said...

புது வருடம் மற்றும் மகன் பிறந்த நாள் வாழ்த்துகள்..