April 6, 2009

விருது , மகுடம், தோல்வி..

நான் போட்ட புத்தகம் நல்ல விற்பனை( பின்னூட்டம்)தமிழ்பிரியன் உபயத்துல தமிழ்மண மகுடத்தில் கூட ஏறிடுச்சு.. முதல்ல இது தப்போன்னு தோன்றிக்கொண்டிருந்தாலும் திட்டிவர கண்ட பதிவெல்லாம் வரும் போது நான் வரைஞ்ச புக்கைப்போட்ட பதிவு.. இதிலென்ன தவறுன்னு நானே சொல்லிக்கிட்டேன்.. :)

ஆனா கொஞ்ச நேரம் மகுடத்தில் ஏறியதுமே தம்ஸ் டவுன் குத்து குத்துன்னு யாரோ குத்தி இறக்கிவிட்டுட்டாங்க.. இப்படி ஒரு சீசா நடக்குதான்னு கேட்டாங்க தோழி.. சீசாவில் ஏறினால் தானே ஏற்ற இறக்கம் தெரியும்...இதனால் நல்லா பொழுது போச்சு.
----------------------------------
தமிழ்சங்கத்தில் மகளிர் தினப் போட்டிகள் வருடா வருடம் நடந்த சுவடு தெரியாமல் நடந்து விடும். பரிசளிப்பு நடக்கையில் மட்டும் தான் தெரியவரும். இந்த முறை விண்ணப்பதாள்கள் முன்னமே வழங்கப்பட்டு நடந்தது. என்னையும் நம்பி நாலு பேர் கலந்துக்க சொல்லி வற்புறுத்தவே நான் ஒரு அனுபவம் தானே என்று ஒரே ஒரு போட்டிக்கு மட்டும் பெயரளித்திருந்தேன். கவிதை கட்டுரைக்கு ஸ்லாஷ் போட்டு இருந்தது. 15 நிமிடம் முன்பு நூலகத்தில் கூடியவர்களுக்கு தலைப்பு வழங்கப்படும்.. பின்னர் எழுத 30 நிமிடம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

கட்டுரையும் கவிதையும் இரண்டுமே செய்யுங்களேன் என்று சொன்னதும் சும்மாத்தானே இருக்கோம் என்று தலையாட்டிவிட்டேன்.
அறிவித்திருந்தது போல அல்லாமல் பரிட்சை கேள்விகளைப்போல தலைப்பை சொன்ன மறுநிமிடம் டைம் ஸ்டார்ட்ஸ் சொல்லிவிட்டார்கள். 15 நிமிடம் தான் என்றும் சொன்னார்கள். என்ன என்று தலை நிமிர்ந்தவர்களுக்க்கு .. இதைக்கேட்டு இன்னும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்லிவிட்டார்கள். இருப்பதிலேயே டப்பா தலைப்பாகப் பார்த்து கட்டுரையை ஆரம்பித்தேன்.

கவிதைக்கும் அப்படியே .. ஆனால் மக்கள் மிகத் தெளிவாக பெண் சமூகம் இரண்டு தலைப்பும் எப்படியும் ஒத்துப்போகும் என்று சில நோட்ஸ்களை நெட்டுருவும் செய்துகொண்டிருந்தார்கள்.. வந்திருந்தவர்களில் சிலர் ஆசிரியர்களாம், ஒரு பெண்மணி பட்டிமன்றத்தில் பேசுபவர்கள். நான் 15 நிமிசம் டைம் என்றதுமே முடிவு செய்துவிட்டேன் . நம்மாலாகாது என்று. ..

சிவசங்கரி கையால் பரிசு எனக்கில்லை ... சொக்கா என்று கிளம்பி வந்துவிட்டேன் .. நடுவரம்மாவைத்தவிர யாரும் படித்துவிடக்கூடாதே என்று தான் இப்போதைய கவலை.. :))

கவிதையெல்லாம் தானாகவே தன்னை எழுதிக்கொள்ளும் என்ற கொள்கையே என் கொள்கை. இதுவரை தலைப்புக்கெல்லாம் கவிதை எழுதியதில்லையாக்கும் நான். உள்ளுக்குள் பாதிக்கப்பட்டு வார்த்தைகள் தானாகவே உள்ளே உருப்பெற்ற பின் தான் கவிதை என்று எதையோ எழுதி வைப்பது பின்னர் தான் தலைப்பிடுவது.. சரி சரி.. நிறுத்திட்டேன்..
-----------------------------------------
இந்த பட்டாம்பூச்சி விருது ரெண்டு பேரு தரேன்னு சொன்னாங்க.. வீட்டுல இடமில்லங்கன்னு சொல்லிட்டேன்.. இதெல்லாம் என்னவோ நாம தான் குடுத்துக்கறமான்னா இல்லீங்க.. ஆங்கில ப்ளாக்கர்ஸ் பக்கம் போனா .. ஸ்க்ரோல் டவுன் மெனு போட்டு எக்கச்சக்க விருது வச்சிருக்காங்க.. ஸ்டார் ல வர்ரதெல்லாம் விஜய் டிவியில் தமிழ்படுத்தி வராதா? அது மாதிரி தான் இதுவும். ட்ராப் டவுன் மெனுவெல்லாம் இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன் .. வீட்டுல இடமில்லன்னாலும் விருது வச்சிக்கலாம் போலயே.. :))

என் பதிவில் வகைகள் (லேபிள்) ஸ்க்ரோல் டவுனில் மாற்றிவிட்டேன்.. ரொம்ப நாட்கள் கழித்து டெம்ப்ளேட்டில் கை வைத்திருக்கிறேன். வழக்கமாக இப்படி எதும் செய்தால் தமிழ்மணத்துல இணைக்க போராட வேண்டி இருக்கும்..அப்படி இல்லாமல் இந்த கூட்டு தமிழ்மணத்துல மணக்குதா பார்க்கலாம்..

31 comments:

கோபிநாத் said...

செய்திகளுக்கு நன்றி ;)

Thekkikattan|தெகா said...

ஓ!இதுக்குப் பேருதான் சட்னி/தொவையல்/அவியல்/கூட்டா... :-))

தலைப்பு கொடுத்து எழுதச் சொல்லி உங்களுக்கு எழுத வந்துருச்சு நம்ம அடுத்தப் படத்திற்கு நீங்கதான் கவிஞர் ;-).

Thamiz Priyan said...

தலைப்புக்கு கவிதை எழுதியதைப் பதிவில் போட்டால் நல்லா இருக்கு! சூப்பர்! போன்ற பின்னூட்டங்களைப் போடத் தயாராக இருக்கிறோம் என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கின்றோம்.

சென்ஷி said...

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகசம்ன்னு நீங்க நிரூபிச்சுட்டீங்க :)

☀நான் ஆதவன்☀ said...

//உள்ளுக்குள் பாதிக்கப்பட்டு வார்த்தைகள் தானாகவே உள்ளே உருப்பெற்ற பின் தான் கவிதை என்று எதையோ எழுதி வைப்பது பின்னர் தான் தலைப்பிடுவது.. சரி சரி.. நிறுத்திட்டேன்..//

இதுக்காக தான் நான் கவிதையே எழுதறதில்ல மேடம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி வரலாறு முக்கியமில்லையா.. நான் இதுவரைக்கும் இந்த மாதிரி போட்டின்னு போய் எழுதியதே இல்லையே.. :)
----------------------------
தெகா நன்றி .. அட்வான்ஸ் எவ்வளவு ?

சென்ஷி said...

//தமிழ் பிரியன் said...

தலைப்புக்கு கவிதை எழுதியதைப் பதிவில் போட்டால் நல்லா இருக்கு! சூப்பர்! போன்ற பின்னூட்டங்களைப் போடத் தயாராக இருக்கிறோம் என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கின்றோம்.//

நோ கமெண்ட்ஸ் :)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சென்ஷி..:)
-----------------------
தமிழ்பிரியன்.. அதெல்லாம் நீங்க போடுவீங்க எனக்குத்தெரியாதா? ஆனா எனக்குத்தான் ஞாபகசக்தி கம்மி..இல்லன்னா நான் நெட்டுரு செய்துட்டு வந்து எழுதி இருக்கமாட்டனா.. ?

Vidhya Chandrasekaran said...

ஹி ஹி ஏதோ ஒரு புண்ணியவான் எனக்கும் ஓட்டைக் குத்தி சூடான இடுகைகள் வரவச்சிட்டாங்க. யாரெல்லாம்ன்னு தெரிஞ்சா ஒரு கிப்ட் கொடுக்கலாம்னு பார்ர்க்கிறேன். தமிழ் பிரியன் நீங்க அக்காவ விடாதீங்க. முடிஞ்ச வரை தேத்திக்குங்க:)

நட்புடன் ஜமால் said...

\\தமிழ் பிரியன் said...

தலைப்புக்கு கவிதை எழுதியதைப் பதிவில் போட்டால் நல்லா இருக்கு! சூப்பர்! போன்ற பின்னூட்டங்களைப் போடத் தயாராக இருக்கிறோம் என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கின்றோம்.\\

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

யாரு எப்படி ஓட்டு போட்டா என்னா

நாங்க படிக்கிறோம்ல

ராமலக்ஷ்மி said...

வாசகர் விருப்பம்:
போட்டியில் எழுதியதை எங்களுக்குப் படிக்கத் தாருங்களேன்.

Muruganandan M.K. said...

"கவிதையெல்லாம் தானாகவே தன்னை எழுதிக்கொள்ளும் .." மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

காட்டாறு said...

//என்னையும் நம்பி நாலு பேர் கலந்துக்க சொல்லி வற்புறுத்தவே நான் ஒரு அனுபவம் தானே என்று ஒரே ஒரு போட்டிக்கு மட்டும் பெயரளித்திருந்தேன்.//

என்று மாறும் இந்த 4 பேர் சொலல்? ;-)

ஆயில்யன் said...

//எனக்குத்தான் ஞாபகசக்தி கம்மி//


நம்பிட்டோம்...!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வித்யா சூடான இடுகைக்கு ஓட்டு குத்த வேண்டியதுல்ல.. அடிக்கடி திறந்தாலே அது சூடான இடுகைக்குப் போகும் ..இன்னிக்கு நான் மட்டுமே விடை தெரிய பல தடவை திறந்தேன்ப்பா.. அதனால் எனக்கும் குடுங்க கிஃப்ட்.. :))
------------------------------------
ஜமால் நன்றிங்க.. நன்றி.. அதுக்குத்தானே ப்ளாக்கராகி இருக்கேன்.. நானே ராணி நானே மந்திரி.. :)
-------------------------------
ராமலக்ஷ்மி இது அநியாயம் நான் தான் அதுநல்லா இல்லைன்னு சொல்லிட்டேன்ல..கொஞ்ச நாள் கழிச்சு மெருகேற்றி போட்டுடறேன் .. :) சரியா..?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டொக்டர் சார்.. உண்மை தான்.. ஆனா..மத்தவங்கள்ளாம் வரகவியா இருக்காங்களே.. :)
------------------------
காட்டாறு இப்படியாப்பட்ட விசயம்ன்னா வந்துட்டீங்களே..
எப்ப மாறும் இது , நான் வளர்ந்தால்மாறும். நானின்னும் வளரலைன்னு தெரியுது..
:)
-------------------------
ஆயில்யன் ..நம்பிடுங்க வேற வழி இல்லை.. ரஃப் காப்பி கூட இணைத்து அங்கயே கொடுக்க சொல்லிட்டாங்க..

பரிசல்காரன் said...

பரிசு உங்களுக்குத்தான் வரும்.. பாருங்களேன்..

நாகை சிவா said...

:)

ராமலக்ஷ்மி said...

சரி. ஆனால் நீங்களே ஏன் அப்படி நினைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் எழுத்து மேல் எங்களுக்கு இருக்கிறது நம்பிக்கை உங்களை விடவும்.

ஒருவேளை பரிசு கிடைத்து விட்டால்.. இப்போதே எதற்கும் தயாராக எழுதி மெருகேற்றி வைத்திருங்கள். முடிவு வந்த அன்று எங்களுக்கு ரிலீஸ் செய்யுங்கள். சரியா:)?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பரிசல் , அன்னைக்கே பரிசு வழங்கும் விழா சாயங்காலம் முடிஞ்சுருச்சுன்ங்க.. ரிசல்ட் ஓகேன்னா போன் செய்திருங்கன்னு ஒரு தோழிகிட்ட சொல்லிட்டு வந்துட்டேன் .. ஏன்னா எனக்குத்தான் நம்பிக்கை இல்லையே.
--------------------------------
ராமலக்ஷ்மி போதும்ப்பா போதும்.. :)
எனக்கு பள்ளிக்கூட பரிட்சை மாதிரி அவசரப்படுத்தியதும் டைம் குறைச்சலா குடுத்ததும் சரிப்படலைப்பா.. இங்க யாருமில்லாத தனிமையில் தட்டச்சுவது :)
---------------------
நன்றி நாகை சிவா..:)

அபி அப்பா said...

ஆஹா நல்லா இருக்கு இந்த அவியல். நல்ல வேளை எனக்கு தமிழ்மணத்திலே ஓட்டு கூட போட முடியாது யாரும்:-)

அமுதா said...

:-)

Poornima Saravana kumar said...

சிவசங்கரி கையால் பரிசு எனக்கில்லை ... சொக்கா என்று கிளம்பி வந்துவிட்டேன் .. நடுவரம்மாவைத்தவிர யாரும் படித்துவிடக்கூடாதே என்று தான் இப்போதைய கவலை.. :))

//

:)

Anonymous said...

பரிசு உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

பின்னி பெடலெடுத்திட்டீங்களா போட்டியிலே! :-)

Sasirekha Ramachandran said...

இதெல்லாம் வாழ்க்கைல சாதார்ணமப்பா!!!!!!!!!

மங்கை said...

அவங்க என்ன பரிசு கொடுக்கறட்து ப்பா.. நாம குடுப்போம்...நாம குடுத்து தான பழக்கம்...வாங்கி பழக்கம் இருக்கா என்ன..:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா உங்க தமிழ்மணம் கோட் சரியா இருக்கா செக் செய்யுங்க.. :)
------------------------------
நன்றி அமுதா:)நன்றி பூர்ணிமா. ..:)
---------------------
சின்ன அம்மிணி முல்லை..நீங்களுமா..அதான் இல்லைன்னு சொல்லிட்டேனே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சசி அதே அதே.. :))
------------------------------
மங்கை நமக்கு நாமே திட்டமா.. :) அதுக்குத்தானே ப்ளாக்கர்..

அன்புடன் அருணா said...

//ஆனா கொஞ்ச நேரம் மகுடத்தில் ஏறியதுமே தம்ஸ் டவுன் குத்து குத்துன்னு யாரோ குத்தி இறக்கிவிட்டுட்டாங்க..//

அட இப்பிடில்லாம் கூட நடக்குதா???.நல்லா எழுதிருக்கீங்க!!
அன்புடன் அருணா