கோபமோ மகிழ்ச்சியோ
அந்நேரமே
அழித்தொழித்தோ பகிர்ந்தளித்தோ
நிலை மாற்றி இடம் மாற்றி
வாழ்வடுக்கை அலங்கரித்தாள்.
பால் மறுத்து அழுத அழுகையோ
நினைத்த பொருள் கேட்டழுத அழுகையோ
அப்போதைக்கபோது
தனக்காக
கண்ணீர் வடித்தவள் வளர்ந்துவிட்டாள்.
முதிர்பருவத்தின் இழப்பென்று
அழுகை மட்டும் தொலைந்து போனது.
முகம் சுருக்கி அழுத
அகந்தை அறியாத - அந்த
பாவாடைச் சிறுமியாகி
எதற்கேனும் அழவேண்டும்.
பின்.குறிப்பு: நீங்கள் சிரிக்காதீர்கள்..
37 comments:
அக்கா...சிரிக்கலை.,.. உணர்வுகளைப் புரிய முடிகின்றது.
//நீங்கள் சிரிக்காதீர்கள்../
இல்லை சிரிக்கவில்லை!
உறவுகள் விரிந்து கிளைத்திருக்கும் பருவத்தில் அழ நினைக்கும்போது, உறவுகளற்று,தற்காலிகமாய் தனித்து திரிந்திருக்கும்போது எங்களுக்கும் கூட கொஞ்சம் அழத்தான் தோன்றுகிறது!
ஏங்க நீங்க வேற சந்தோசமா இருக்கறதை விட்டு, சின்னபுள்ள தனமா அழணும் சொல்லிகிட்டு
ஏன்பா அழறதுக்கு ஒரு ஆசையா.. அப்படி வந்தாலும் அழ வேண்டியது தானே... நாங்கெல்லாம் சூப்பரா அழுவோமாக்கும்...அப்புறம் மறந்துடுவோம்..
நானும் சிரிக்கலை
என்ன சொல்ல முடியும் இந்த கவுஜாவிற்கு, simply flawless!
அழுகையும் மற்ற உணர்வுகளைப் போன்றதுதானே. அதுவாகவே நிகழும் பொழுது கட்டவிழ்த்தால் அதுவும் ஒரு இறுக்கம் குறைப்பான் தான்.
ஆனால், இன்று அழ வேண்டுமென்று நாடிச் செல்வதனைத்தான் கவனிக்க வேண்டும் :-))
சத்தியமாக சிரிக்கவில்லை...
உணர்வுகள் புரிந்தன மேடம்
நன்றி தமிழ்பிரியன்..
------------------
ஆயில்யன் அதான் சொல்லவரேன்.. அழத்தோன்றுது ஆனா அழமுடியாதபடி இருக்குதுன்னு..
முத்து
டச்சிங் டச்சிங்...
அதேதான் மின்னல் சின்னப்பிள்ள மாதிரி அழறதுக்குத்தான் ட்ரையிங்
--------------------
மங்கை அப்ப அழறதுக்கும் தைரியம் வேணுமோ..
இயற்கை நேசியா வந்திட்டீங்களா தெகா.. நல்லது தான் அழுகையும் இயற்கைதான் ..ஆன ஈகோ தடுக்குதே செயற்கையா.. :)
----------------------------
நன்றி ஆதவன்..
பாசமலர் நன்றிப்பா..
அந்த நாட்கள் வேணும்னு நானும் அழுவுறேன்...
நல்லா இருக்குங்க...
பழமை பேசி நீங்கள் எளிதா பழயகாலத்தை நினைச்சுப்பாத்துடுவீங்களே.. :)
அழுவது மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் முதிர்ப்பின் இழப்பாக அது மாறி விடுவது அவலம்.
ம்ம்ம்ம்ம்ம்
இது நல்லா புரியுது! கோவிச்சுகிட்டு மூஞ்சை தூக்கி வச்சிகிட்டா இப்படித்தான் கோவம் வரும்:-)))
நல்ல ஏக்கம். எவருக்கும் வராது சிரிப்பு. மாறாக வரும் ஆசை மறுபடி அந்தப் பாவாடைச் சிறுமி ஆக, அரைக்கால் சட்டை சிறுவன் ஆக..!
நன்று முத்துலெட்சுமி.
சாய்ராம் , நாகை சிவா வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி..
--------------------
அபிஅப்பா, கோவமெல்லாம் நல்லாவே வருது.. அழுகை பத்தி தானே பேச்சு இப்ப.. :)
--------------------
நன்றி ராமலக்ஷ்மி.. உங்க பின்னூட்டகவிதையும் நல்லா இருக்கு :)
எதற்கேனும் அழ வேண்டும்னா.. அழறதுக்கு காரணம் முக்கியமில்லையாக்கா? நல்லாருக்கு கவிதை!
சாய்ந்துகொள்ள தோள்வேண்டும் சுகமாக அழவேண்டும் எனும் பாடல்வரிகள்தான் ஞாபகம் வந்தது.
காயத்ரி காரணமெல்லாம் தேவையில்லன்னு சிலர் சொல்றாங்க :)
ஆனா காரணம் கிடைச்சா மட்டும் என்ன, அழுதா .. சின்னப்புள்ளத்தனமால்ல இருக்குன்னு சொல்வாங்க..
-------------------------
நல்ல பாட்டு அது புதுகைத்தென்றல்..
சரி..சரி..
:-)
நல்லாயிருக்குதுக்கா கவிதை.. ஒரு நல்ல சிறுகதையா மாத்த வேண்டிய பல விசயங்களை நீங்க கவிதையா மாத்திடுறீங்க.
/*முதிர்பருவத்தின் இழப்பென்று
அழுகை மட்டும் தொலைந்து போனது.
முகம் சுருக்கி அழுத
அகந்தை அறியாத - அந்த
பாவாடைச் சிறுமியாகி
எதற்கேனும் அழவேண்டும்.*/
ம்... ஏக்கம் புரிகிறது..
//இயற்கை நேசியா வந்திட்டீங்களா தெகா.. நல்லது தான் அழுகையும் இயற்கைதான் ..ஆன ஈகோ தடுக்குதே செயற்கையா.. :)//
இது...இது தான் மேட்டர். நானும் இதை மாதிரி நெறைய வாட்டி ஃபீல் பண்ணிருக்கேன். ஆம்பளையா இருந்தா அழக் கூடாதுன்னு வேற ஒரு சட்டம் இருக்கே இதை எங்கே போய் சொல்ல? :(
கவிதை சூப்பர்.
புதுகைத் தென்றல் மாதிரியே எனக்கும் அந்த "கண்ணில் என்ன கார்காலம்" பாட்டோட அவங்க சொன்ன அதே வரிகள் தான் நியாபகம் வந்துச்சு. அந்த பாட்டை எழுதினவரு வைரமுத்து. ஆக...நீங்க வைரமுத்து லெவலுக்கு எழுதறீங்கன்னு அர்த்தம். இதுக்கும் நான் சிரிக்கலை.
கண்ணில் என்ன கார்காலம்
நன்றி கோபி..
--------------
நன்றி சென்ஷி.. கதை தான் எழுத வரலியே.. அதுக்காக அழமுடியலன்னு தான் கவிதையாக்கிடரேன்.:)
நன்றி அமுதவள்ளி..:)
---------------
கைப்ஸ் இது என்னங்க இது.. நீங்க சிரிக்காம எழுதிட்டீங்க மத்தவங்கள்ள சிரிப்பாங்க..
கவிதைய சூப்பர்ன்னு சொன்னதுக்கு நன்றிகள்.. :)
அழத்தான் முடியலைன்ன்னா நீங்க சிரிக்கவும் விட மாட்டேங்கறீங்க! ஹ்ம்ம்ம்! ;-|
இத்தனை வருடங்கள் வாழந்து விட்டதில் அழுவதைக்கூட சுதந்திரமாக செய்ய முடிவதில்லை
புரிகிறது...
அடிக்கடி இப்படித் தோன்றுமே!!!நல்லாருக்கு!!!
அன்புடன் அருணா
நல்லா எழுதியிருக்கீங்க. பின் குறிப்புத்தான் தேவையில்லாதது.
முல்லை நல்ல பிள்ளை.. :)
--------------------------
தமிழன் கறுப்பி.. நாம எப்பவும் அடுத்தவங்க பார்வையில் குறைஞ்சுடக்கூடாதுன்னு ஒரு முனைப்போட இருப்பதால் தான் இது.. :)
அருணா உங்களுக்கும் தோன்றுமா.. குட் குட்..:)
---------------------
வடகரை வேலன் நன்றி..
ஆமா முதலில் அதை கவிதையிலே சேர்க்க நினைத்து சே முட்டாள் தனம்னு பின்குறிப்பில் சேர்த்தேன்..அதும் செய்யாமல் இருந்திருக்கலாம் தான்.. இருந்தாலும் என் கவிதை மேல எனக்கிருந்த நம்பிக்கை அவ்வளவு தான் போல :))
//நீங்கள் சிரிக்காதீர்கள்../
இல்லை சிரிக்கவில்லை!
நிதர்சனமான ஒன்று இது!!அழகான கவிதை!!!
நன்றி சசி.. :)
really good one!!!
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கணபதி :)
Post a Comment