April 22, 2009

மரம் வளர்ப்பவங்களுக்குத்தான் ஓட்டுப்போடனும்



தேர்தல் நேரத்து வழக்கமாக தொலைக்காட்சியில் ப்ரச்சாரக்கூட்டங்களைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். ஜே வின் பேச்சைக் கொஞ்ச நேரம் கேட்டபின் மகளுக்கு எதோ சந்தேகம்..
அம்மா இவங்க யாரு பேரு மறந்துடுச்சு..
இவங்க தான் ஜெயலலிதா பழய முதலமைச்சர்.
சரி இவங்க யாரை இப்படி திட்டிக்கிட்டிருக்காங்க?
இப்பத்தைய முதலமைச்சரை..
ஏன் திட்டறாங்க?
தேர்தல்ல்ன்னா அப்படித்தான் .. இன்னன்ன செய்வோம் இன்னன்னத்துக்காக எனக்கு ஓட்டுபோடுங்கன்னு எல்லாம் இப்ப கேட்பதில்லைம்மா இதான் ட்ரெண்ட்..
பள்ளியில் எர்த்டே கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வந்த அன்று சொல்கிறாள்...
"அம்மா எந்த நேத்தா ( அரசியல்வாதி) மரம் வளர்த்து நம்ம ஊரை நல்லா வச்சிப்பாரோ அவருக்குத்தான் ஓட்டுப்போடனும்மா.." ( அவ கவலை அவளுக்கு அவ தானே நாளை உலகத்தில் வாழப்போறவ)

தில்லியில் பாலிதீன் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்லியிருந்தும் பல இடங்களில் இன்னமும் அதே பழக்கம்தான் இருக்கிறது என்றாலும் மக்கள் அதிகம் துணிப்பைகளுடன் பார்க்க முடிகிறது. வழக்கமாக வாங்கும் மளிகைக்கடையில் ப்ரவுன் கவர் கொடுக்கிறார்கள்.. வீட்டிலிருந்து பை கொண்டுவந்தால் நேராக அதிலேயே வாங்கிக்கொள்ளலாம்.

அரசின் காய்கறிக்கடையான சஃபலுக்கு சென்றிருந்தேன். அவரசரத்திற்கு நாலு தக்காளி தேவை.. கைகளிலேயே எடுத்துச் சென்றுவிடலாம் கார் அருகில் தானே என்று நினைத்தேன்.அதிகப்படியாக மாம்பழங்களையும் வாங்கி விட்டேன். வெளியே சென்றுவிட்டு திடீரென்று நினைத்துக்கொண்டு சஃபலுக்கு சென்றதால் பை கொண்டு செல்லவில்லை. கடைக்காரப் பையன் ஒரு பையைக் காட்டி 20 ரூ தான் வேண்டுமா என்றான்.. இது எதுக்கு ஒரு நாள் கூத்துக்கு என்று வாய் திறப்பதற்குள்.. இது திருப்பி குடுத்தால் நாங்க 20 ரூபாயைத்தந்துவிடுவோம் என்றான். ஆகா என்று வாங்கிக்கொண்டுவந்தேன்.. நல்ல ஐடியா தானே..

பத்திரமாக எடுத்துவைத்து அடுத்த வாரத்திலேயே அந்த பக்கம் போகும் போது கொடுத்துவிட்டு 20 ரூபாய் வாங்கிட்டோம்ல..
(ஆனால் சிலர் அதை வைத்துக்கொண்டு வாரசந்தையில் காய்கறி வாங்குவதைப் பார்த்திருக்கிறேன்.
பயன்படுத்தி பழசாக்கிட்டு சிறிது நாள் கழித்து எல்லாம் குடுக்காதீங்க மக்களே!!..)
இன்னைக்கு கூகிளில் படம் எர்த்டே... அதான் இந்த பதிவு..

25 comments:

அமுதா said...

/*இன்னைக்கு கூகிளில் படம் எர்த்டே... அதான் இந்த பதிவு*/
அவசியமான பதிவு

துளசி கோபால் said...

அட! இந்த ஐடியா சூப்பரா இருக்கே!!!

ரொம்ப நல்ல விஷயம்தான் மகள் சொன்னது.

பிஞ்சின் மனசுலே நல்ல சேதிகள் பதிவது மகிழ்ச்சி.

மகளுக்கு எங்கள் பாராட்டுகள்.

சென்ஷி said...

ஓக்கேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :-)

ஆயில்யன் said...

நல்ல கான்செப்ட் :))

பாவத்துல ஒரு புண்ணியம் தேடிக்கிற மாதிரி அரசியல்வியாதிகள் கொடுக்கட்டுமே இந்த வாக்கு!

ராமலக்ஷ்மி said...

எர்த் டே-க்கு போடுவோம் ஒரு ஜே!

நல்ல பதிவு. இப்போ பலரும் சந்தைக்கு தங்கள் [ஜூட் அல்லது துணி] பைகளுடன் வருவதைப் பார்க்க முடிகிறது.

Anonymous said...

இந்த மாதிரி விழிப்புணர்வு எல்லாருக்கும் இப்ப கொஞ்சம் வர ஆரம்பிக்கறது நல்ல விஷயம். கேக்கவே சந்தோஷமா இருக்கு

Vetirmagal said...

உங்கள் மகளுக்கும், இந்த ஐடியா சொல்லிக் கொடுத்த பள்ளிக்கும்
பாராட்டுக்கள்.

எல்லாப் பள்ளிகளிலும் இதைக் கற்பித்தால் நன்றாக இருக்கும்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அமுதா.. :)

நன்றி துளசி... :)
நன்றி சென்ஷி ...:)
------------
வாக்கு குடுக்கிறது எல்லாமே வா நிறைவேத்தறாங்க ஆயில்யன்...:)
---------------------
ஆமா ராமலக்ஷ்மி விதவிதமான பைகள்.. சிலர் தாங்களே தைத்த கோணாமாணா பைகள்ன்னு அழகு தான்..
:)
--------------------

சின்ன அம்மிணி ... இருந்தாலும் சாமான்கள் பேக் செய்து வருவது இன்னும் பாலிதீன்கள் தான் :(
-----------------------
வெற்றிமகள் நன்றி....
ஐடியா பள்ளிக்கூடத்துலயே சொல்லிக்கொடுக்கப்பட்டதான்னு தெரியல .. கேக்கிறேன்..

சென்ஷி said...

பதிவு வழக்கம் போல சூப்பர் :-)

//"அம்மா எந்த நேத்தா ( அரசியல்வாதி) மரம் வளர்த்து நம்ம ஊரை நல்லா வச்சிப்பாரோ அவருக்குத்தான் ஓட்டுப்போடனும்மா.." ( அவ கவலை அவளுக்கு அவ தானே நாளை உலகத்தில் வாழப்போறவ)//

ப்ச்ச்ச்ச்ச்ச்ச்.. வருங்காலத்துக்காக நான என்ன கொடுத்துட்டு போவோமுன்னு தெரியலை. ஒரு மரமாச்சும் நட்டுட்டு போகலாம்!

சந்தனமுல்லை said...

நல்ல விழிப்புணர்ச்சி! இப்போ நிறைய அலுவலகங்களிலும் பேப்பர் கப்ஸ் உபயோகிக்கிறதை கட்டுபாட்டில் வச்சிருக்காங்க!

விக்னேஷ்வரி said...

சரி இவங்க யாரை இப்படி திட்டிக்கிட்டிருக்காங்க?
இப்பத்தைய முதலமைச்சரை..
ஏன் திட்டறாங்க?
தேர்தல்ல்ன்னா அப்படித்தான் .. இன்னன்ன செய்வோம் இன்னன்னத்துக்காக எனக்கு ஓட்டுபோடுங்கன்னு எல்லாம் இப்ப கேட்பதில்லைம்மா இதான் ட்ரெண்ட்.. //

ரொம்ப சரி

நல்ல, உபயோகமான பதிவு.

pudugaithendral said...

உங்க மஞ்சபை பதிவுக்கு ஒருலிங்கும் கொடுத்திருந்திருக்கலாம்.

அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

goma said...

பைய்யப் பைய்ய தான் நாம இந்த மாற்றங்களை விழிப்புணர்ச்சியைக் கொண்டு வரமுடியும் .முதலில் பையில் தொடங்கி வைப்போம்
எர்தடே அன்று மக்கள் எல்லோரும் தத்தம் ழிழிப்புணர்ச்சிக்கு பெர்த்டே கொண்டாடட்டும்.
வாழ்க எர்த் தினமும் திகழட்டும் எர்த்டே.

Dhiyana said...

உங்க மகள் சொன்னது சூப்பர் ஐடியா.


சில கடைகள்ல ரீசைக்கிள் செய்யக்கூடிய பைகள் தாராங்க. பில் போடும் பொழுது பைகளுக்கு என ஒரு ரூபாய் எடுத்துகிறாங்க.

Sanjai Gandhi said...

ஹ்ம்ம்ம்.. நானும் கூட எழுத நினைத்தேன்.

//அம்மா எந்த நேத்தா ( அரசியல்வாதி) மரம் வளர்த்து நம்ம ஊரை நல்லா வச்சிப்பாரோ அவருக்குத்தான் ஓட்டுப்போடனும்மா.." ( அவ கவலை அவளுக்கு அவ தானே நாளை உலகத்தில் வாழப்போறவ)
//

:))

கோவைல ஒரு பேருந்து நடத்துனர் இருக்கார். ஆயிரக் கணக்கான மரங்களை நட்டு ஜனாதிபதியிடம் விருது வாங்கி இருக்கிறார். இப்போதும் தொடர்கிறார்.தன் சொந்த செலவில். இரு பெண் குழந்தைகளுக்கு தகப்பனார் அவர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி , அதான் நிறைய மரம் உங்க வீட்டுல வளர்க்கிறீங்களே அப்பறமென்ன..?
---------------------
பேப்பர் கப்ஸ்க்கு பதில் என்ன செய்யறாங்க முல்லை??
-----------------------------
நன்றி விக்னேஷ்வரி..
--------------------------
நன்றி புதுகை நீங்க சொன்னீங்களேன்னு லிங்க் சேர்த்துட்டேன்ப்பா.. :)
-------------------------
நல்லா சொன்னீங்க கோமா..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தீஷு அம்மா...ரிலையன்ஸ்ல இன்னும் நீங்க சொல்ற ரீசைக்கிளபிள் கவர் தான் ஆனா அதை ரீசைக்கிள் செய்யறமான்னா இல்லையே அதை கொடுமையா குப்பையோட குப்பையாத்தானே கொண்டுபோய் சேர்க்கிறோம்..
என் மக கிட்ட கேட்டுட்டேன் வெற்றிமகள் சொன்னமாதிரி பள்ளிக்கூட ஐடியா இல்லையாம் அவளே யோசிச்சது தானாம்.. :))
------------------------
சஞ்சய், வின்செண்ட் பதிவில் அந்த நடத்துனரைப் பற்றி படிச்சிருக்கேன் .. புத்தகத்திலும் பார்த்தேன்.. ஆனா அவங்களாம் நன்மை மட்டும் செய்யறாங்க.. பதவி ஆசையெல்லாம் அவங்களுக்கு இல்லையே.. :(

சின்னப் பையன் said...

நல்ல, உபயோகமான பதிவு.

இயற்கை நேசி|Oruni said...

பரவாயில்லயே, டெல்லியில் பாலிதீன் பைகளின் மோகம் குறைந்திருக்கிறது என்பதனை அறிய!

இந்த தேர்தல் வாக்குறுதி நல்லா இருக்குமே ... நாங்க ஆட்சிக்கு வந்தா, எங்களோட ஆட்சியில தரிசு நிலங்கள் அனைத்திலும் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவோங்கிற... ரீதியில, உங்க பொண்ணுக்கு ஒரு சபாஷ் :)

Sasirekha Ramachandran said...

அட!பள்ளிகள் இப்படி எல்லாம் கூடவா செயல்படுகின்றன!!அதுவும் சிறு குழந்தைகளுக்கு இதுபோன்ற விஷயங்களை பதிய வைப்பதால் எதிர்காலத்தைப் பற்றி கவலைப் பட தேவை இல்லை....நல்ல பதிவு

கோபிநாத் said...

நல்ல ஐடியா...;))

"உழவன்" "Uzhavan" said...

//அம்மா எந்த நேத்தா ( அரசியல்வாதி) மரம் வளர்த்து நம்ம ஊரை நல்லா வச்சிப்பாரோ அவருக்குத்தான் ஓட்டுப்போடனும்மா.." ( அவ கவலை அவளுக்கு அவ தானே நாளை உலகத்தில் வாழப்போறவ)//

நாட்டு மக்களுக்கோர் நல்ல செய்தி.

பட்டாம்பூச்சி said...

சூப்பர் ஐடியா :)

SUFFIX said...

நேற்று கடைக்குச்சென்று போது, ஏற்கனவே ஒரு பை என்னிடம் இருந்தது, அதனால் கடைக்காரரிடம் பை வேண்டாம் எனக்கூறி நான் கொன்டு வந்த பையில் அவரிடம் வாங்கிய பொருட்களை போட்டுக்கொன்டேன், கடைக்கார அரபியருக்கோ மிகவும் ஆச்சர்யம் (it is common to use plastic bags in this part of the world, nobody care about it) ஆனால் எனக்கோ ஏதோ பெரிய நன்மை செய்த மன‌நிறைவு. தஙகள் பதிவிற்க்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ச்சின்னப்பையன் ..
நன்றி இயற்கை நேசி...
நன்றி சசி பள்ளிகள் பாராடப்படவேண்டியவையே..
நன்றி கோபி..
நன்றி உழவன்...
நன்றி பட்டாம்பூச்சி///
ஷாஃபி ப்ளாக்ஸ் ஹியர்.. நன்றிங்க..
வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..
மனநிறைவோடு மகிழ்வாக இருங்கள்..