May 28, 2009

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்....

பதிவு எழுதாத இந்த சில நாட்களில் கூடுதலாக சில நல்லவர்கள் ஃபாலோவர்ஸா சேர்ந்திருக்காங்க,, என்ன சொல்லவர்ராங்கன்னு தான் தெரியல.. :)
----------------------------------------------------------
தென்னிந்தியா வந்தாச்சு.. சுண்டைக்காய் குழம்பு சாப்பிட்டாச்சு.. லிஸ்ட்ல ஒரு டிக் அடிச்சாச்சு..
அரைக்கீரை கூட்டு , அரைக்கீரை கடைசல் ,அரைக்கீரை பொரியல்ன்னு வகைக்கொன்று டிக் அடிச்சாச்சு..எதிர்பாராம பம்ப்ளிமாஸ் கூட கிடைச்சுச்சு ., பிரிச்சு சீனி போட்டு சாப்பிட்டாச்சு..பொரிஉருண்டை, நவாப்பழம் கூட ஆச்சு.. சின்னச்சின்ன வெள்ளரிப்பிஞ்சும் சாப்பிட்டாச்சு..  

---------------------------------------------------------
பக்த கோடிகளை அம்மன் அருள் பெற அழைக்கும் ஆட்டோக்களுடன் ஊர் (மாயவரம் என்னும் மயிலாடுதுறை ) இன்னமும் பழமையை மறக்காமல் இருக்கிறது.  கடைகளிலெல்லாம் ஒல்லிபிச்சான் சுடிதார் பெண்கள் பாவமாய் வேலை செய்கிறார்கள்.. பெண்கள் எல்லாம் இன்னமும் ஜல் ஜல் கொலுசுடன் நடக்கிறார்கள்.. குட்டிப்பிள்ளைய பின்னாடி கேரியரிலும் ஒயர் கூடையை ஹேண்ட்பாரிலும் வச்சிக்கிட்டு கடைக்கு போகும் அம்மாக்கள்.. இதெல்லாம் ஊருல ( தில்லியில்)  பார்க்கமுடியாதில்ல..:-)

 
பள்ளி கல்லூரித் தோழிகளின் அம்மா வீட்டிற்கு தொலைபேசி புது எண்களை வாங்கி வழக்கம்போல எல்லாரையும் நலம் விசாரிக்க தொடங்கியாயிற்று.. வழக்கம்போல அவர்களும் பக்கத்து ஊரில் இருக்கும் தோழிகள் எண்களை என்னிடமே வாங்கிக்கொண்டார்கள்.. அழைப்பார்களோ இல்லை மீண்டும் அடுத்தமுறை நான் வரும்வரை காத்திருந்து அவர்களின் நலம் விசாரித்துக்கொள்வார்களோ தெரியவில்லை... :)






பூம்புகார் பீச்சுக்கு போயிட்டு தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் சாப்பிடாமலா அதையும் டேஸ்ட் செய்தாச்சு..


கடற்கரையே இல்லை. பாறைகள் போட்ட இடம் வரை அலைகள் வந்து கொண்டிருந்தது. வெகுதூரம் நடந்து சென்று தான் கடற்கரை உள்ள கடலில் விளையாட முடிந்தது.. :( கடலம்மா இன்னும் எத்தனை நிலத்தை உணவாக்க இருக்கிறாளோ தெரியவில்லை..

49 comments:

ஆயில்யன் said...

ஹைய்ய்ய்ய் ஞாபகம் வந்துருசு பப்ளிமாஸ்

பப்ளிமாஸ் + சீனி காம்பினேஷன் கொஞ்சம் புளிப்பு கலந்த சுவை ஐய்ய்ய்யோஓஓஓஓஓஒ

ஆயில்யன் said...

//சுண்டைக்காய் குழம்பு சாப்பிட்டாச்சு.///

சுண்டைக்காய் குழம்பு லாஸ்ட் டைம் நான் மிஸ் பண்ணிட்டேன்! அதுவும் சுண்டைக்காய் பொரிச்ச குழம்பு இருந்தா....!

ஹைய்யோ ஹய்யோ சொல்ல வாய் வர மாட்டிக்கிதே :)))

ஆயில்யன் said...

//பக்த கோடிகளை அம்மன் அருள் பெற அழைக்கும் ஆட்டோக்களுடன் ஊர் (மாயவரம் என்னும் மயிலாடுதுறை ) இன்னமும் பழமையை மறக்காமல் இருக்கிறது.///


பழமை மாறாமல் அதே பாசத்துடன் எஸ் எஸ்
(ஆனா பஸ்ஸ்டாண்டு இப்பத்தான் பழச புதுசு ஆக்கிறாங்க )
:))

ஆயில்யன் said...

//கடற்கரையே இல்லை. பாறைகள் போட்ட இடம் வரை அலைகள் வந்து கொண்டிருந்தது. வெகுதூரம் நடந்து சென்று தான் கடற்கரை உள்ள கடலில் விளையாட முடிந்தது.. :(//

:(

அந்த பாறைகள் போட்ட புராஜெக்ட்ல கவர்ன்மெண்ட் சார்பா நான் ஒரு அணில் அளவுக்கு வேலை செஞ்சிருக்கேன் :)
பட் முதலை அளவுக்கு அள்ளியிருக்காங்க நிறைய கல்லை போட்டு காசு எடுத்த கதை - வேணாம் பாலிடிக்ஸ் :))

ராமலக்ஷ்மி said...

//பதிவு எழுதாத இந்த சில நாட்களில் கூடுதலாக சில நல்லவர்கள் ஃபாலோவர்ஸா சேர்ந்திருக்காங்க,, என்ன சொல்லவர்ராங்கன்னு தான் தெரியல.. :)//

எனக்கும் இதே நடந்திட்டுருக்கு. ஹி,.என்ன சொல்ல வர்ராங்க..:( ? எனக்கும் தெரியலை:)!

"தே மா ப சு" சுறுசுறு சுவை.இந்தப் பதிவுக்கான தலைப்பு என்றாலும்
அவியல், கதம்பம் வரிசையில் தொடரலாம் போலிருக்கிறதே!

ராமலக்ஷ்மி said...

//மீண்டும் அடுத்தமுறை நான் வரும்வரை காத்திருந்து அவர்களின் நலம் விசாரித்துக்கொள்வார்களோ தெரியவில்லை... :)//

என்னிடம் இப்படித்தான் விசாரிப்பார்கள்:)! நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

கோபிநாத் said...

விடுமுறையை நன்றாக அனுபவியுங்கள்! ;)

நாங்களும் பதிவை படிச்சாச்சு ;)))

Thekkikattan|தெகா said...

போயி என்னவெல்லாம் சாப்பிட்டேங்கிறதுக்கு ஒரு பதிவா... என்னாத்தை சொல்றது :)

பூம்புகாருக்கு பக்கத்தில இரண்டரை வருஷத்திற்கும் மேலேயே இருந்திட்டு ஒரு தடவை கூட போகணுமின்னு தோணவுமில்ல பசங்களும் கேட்டதில்ல, ஏனா இருக்கும் ...

அபி அப்பா said...

முத்து மாயவரம் வந்தாச்சா! நம்ம வீட்டுக்கு போனீங்களா??

எத்தனை நாள் அங்க??

மங்கை said...

ஏன்பா...இப்படி வயித்தெரிச்சலை கிளப்பரீங்களே... தே.மா ப வாசனை இங்க வருது...

அபி அப்பா said...

தெகா நம்ம காலேஜ் தான்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன்.. பஸ் ஸ்டாண்ட்ல ஒன்னும் மாற்றம் தெரியல எனக்கு.. வெளியே இருந்து தான் பாத்தேன்..ரோட்டை மட்டும் புதுப்பிச்சிருப்பாங்க போலயே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்‌ஷ்மி .. :)
அப்படிங்கிறீங்க.. நல்லாத்தான் இருக்கு கேக்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி படிச்சி ரெண்டுவரியில் பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி :))

♫சோம்பேறி♫ said...

/* பொரிஉருண்டை, நவாப்பழம் கூட ஆச்சு.. சின்னச்சின்ன வெள்ளரிப்பிஞ்சும் சாப்பிட்டாச்சு.. */

அல்ல்ல்ல்லோ... அகில இந்திய கடுப்பேத்துவோர் சங்கத் தலைவி தானே நீங்க?

/*கடைகளிலெல்லாம் ஒல்லிபிச்சான் சுடிதார் பெண்கள் பாவமாய் வேலை செய்கிறார்கள்.. */

கோடை விடுமுறை என்பதால் இருக்கலாம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ப்ளாக்கர்ஸ்ன்னா இப்படித்தான் தெகா.. உலகத்துக்கே பகிர்ந்துக்க வேண்டாமா என் மகிழ்ச்சியை..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா மாயவரம் கொஞ்சூண்டு நாள் தான்..
தெகா நம்ம காலேஜுன்னு தான் முன்னமே தெரியுமே.. !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை வரும் ஆனா வராது மாதிரி உங்க லீவு வரமாட்டேங்குதே சீக்கிரம் வாங்க.. நீங்களும் லீவு எடுத்துக்கிட்டு.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சோம்பேறி உங்களுக்கு பதவி போட்டுக்குடுக்கலன்னா உங்க அடியாள் ப்ரண்டை வச்சு அடிச்சிடுவீங்களா .. இதோ ரெடியா இருக்கேன் என்ன பதவி வேணும்.. குண்டர் படை தலைமை ஓக்கேயா..

சந்தனமுல்லை said...

கூல்!! விடுமுறை ஜாலியா போகுது போலிருக்கே!!

Thamiz Priyan said...

வாவ்! மலரும் நினைவுகளோட விடுமுறையை சுவாரஸ்யமா க(ழி)ளிக்கிறீங்க... வாழ்த்துக்கள்! கலக்குங்க.. :)

sury siva said...

// சுண்டைக்காய் குழம்பு சாப்பிட்டாச்சு.. லிஸ்ட்ல ஒரு டிக் அடிச்சாச்சு..
அரைக்கீரை கூட்டு , அரைக்கீரை கடைசல் ,அரைக்கீரை பொரியல்ன்னு வகைக்கொன்று டிக் அடிச்சாச்சு..//
த‌ஞ்சாவூர் மாவ‌ட்ட‌மா நீங்க‌ள் ! தெரிய‌வே இல்லையே1

மயிலாடுதுறை கோர்ட்டுக்கு ப‌க்க‌க்த்துலே ஒரு ஹோட்ட‌ல்லே சுண்ட‌க்காய், ம‌ண‌த்த‌க்காளி, வெ ந்த‌ய‌ம், பூண்டு போட்ட‌ வெத்த‌க்குழ‌ம்பு, ப‌ருப்புத் துகைய‌ல், அரிசி அப்ப‌ள‌ம் 1994ம் வ‌ருட‌ம் சாப்பிட்ட‌து இன்ன‌மும்
நினைவில் இருக்கிற‌து.

அட‌டா ! அட‌டா!! அட‌டா !!! என்ன‌ சுக‌ம் ! என்ன‌ சுக‌ம் !!

அடுத்த‌ ஜ‌ன்ம‌ம் என்று ஒன்றிரு ந்தால், இது மாதிரி வ்த்த‌க்குழ‌ம்பு ப‌ண்ண‌த்தெரியுமா என்று
பெண் பார்க்க‌ப்போம்போதே கேட்க‌ணும்.

சுப்பு ர‌த்தின‌த் தாத்தா
ஸ்டாஃம்ஃபோர்டு, க‌னெக்டிகெட்
http://vazhvuneri.blogspot.com
http://Sury-healthiswealth.blogspot.com

*இயற்கை ராஜி* said...

இனிமையான‌ ம‌ல‌ரும் நினைவுக‌ள்..மாய‌வ‌ர‌மே போய்ட்டு வ‌ந்தாமாதிரி இருக்கு

கானா பிரபா said...

பப்ளிமாஸை பார்க்கும் போது ஏதோ வேற்றுகிரகவாசிபோல இருக்கு :)

சென்ஷி said...

:-(

அம்பி அன்னிக்கு சாப்பாடு மேட்டரை கிண்டல் செஞ்சு போட்ட பதிவை கரெக்டுன்னு சொல்ல வைச்சுட்டீங்க..

நல்லா இருக்கு தே மா ப சு

சென்ஷி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

ப்ளாக்கர்ஸ்ன்னா இப்படித்தான் தெகா.. உலகத்துக்கே பகிர்ந்துக்க வேண்டாமா என் மகிழ்ச்சியை..:)//

ஓஹோ. சாப்பாடை தனியா சாப்பிட்டு போட்டோ எடுத்து எங்களுக்கு கடுப்பை கிளப்பறது உங்களுக்கு மகிழ்ச்சியா.. நல்லா இருங்க :)

சென்ஷி said...

////பதிவு எழுதாத இந்த சில நாட்களில் கூடுதலாக சில நல்லவர்கள் ஃபாலோவர்ஸா சேர்ந்திருக்காங்க,, என்ன சொல்லவர்ராங்கன்னு தான் தெரியல.. :)//

ஹி..ஹி... அதேதான்.. நீங்க நினைச்சதேதான்.. ரொம்ப சந்தோசப்படக்கூடாது! :)

தமிழ் அமுதன் said...

//தென்னிந்தியா வந்தாச்சு.. சுண்டைக்காய் குழம்பு சாப்பிட்டாச்சு.. லிஸ்ட்ல ஒரு டிக் அடிச்சாச்சு..///
வீட்டுல கருவேப்பிலை,மணத்தக்காளி செடியெல்லாம் வைச்சு இருக்கீங்க ஒரு சுண்டைக்காய் செடி வைச்சா? வளர மாட்டேன்னா சொல்ல போகுது ?

///கடைகளிலெல்லாம் ஒல்லிபிச்சான் சுடிதார் பெண்கள் பாவமாய் வேலை செய்கிறார்கள்.. பெண்கள் எல்லாம் இன்னமும் ஜல் ஜல் கொலுசுடன் நடக்கிறார்கள்.. குட்டிப்பிள்ளைய பின்னாடி கேரியரிலும் ஒயர் கூடையை ஹேண்ட்பாரிலும் வச்சிக்கிட்டு கடைக்கு போகும் அம்மாக்கள்.. இதெல்லாம் ஊருல ( தில்லியில்) பார்க்கமுடியாதில்ல..:-)///

என்னங்க இது சொந்த ஊரையே கிண்டல் பண்ணுரதுபோல இருக்கு ;;))

டெல்லிக்கு ராஜான்னாலும் .......................;;))

நாகை சிவா said...

:)

மாயவரம் மாறி இருந்தா தான் ஆச்சரியப்படனும். ;)))

பூம்புகார் ல கொஞ்ச தூரத்துக்கு தாண்டி தான் கடல் இருந்தது. பெளர்ணமி சமயத்தில் சென்றீர்களா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாங்க முல்லை. நல்லா ஜாலியா இருக்கு..:)
தமிழ்பிரியன் மலரும் நினைவுகள் பார்ட் டூ போடறேன்..:)

Anonymous said...

நல்லாத்தேன் கவனிச்சிருக்கீங்க எல்லாத்தையும் அந்த வெள்ளரிக்கா ரொம்ப ருசியில்லையா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சூரி சார் ஏன் இப்ப மீனாட்சி அம்மா வத்தக்குழம்பு செய்து தரதில்லயா.. :P

---------------------------
நன்றி இயற்கை.. :)
--------------------------
சென்ஷி அவங்கள்ளாம் ரொம்ப நல்லவங்கன்னு நீயே சொல்லிட்டு இப்ப.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜீவன் ..சுண்டக்கா செடி புதர் மாதிரி வளருமாமே.. :(
சொந்த ஊரைக் கிண்டல் எல்லாம் இல்லங்க.. பாவமா இருந்ததுன்னேன்..
அண்ட் அவங்க பட்டை கொலுசு போட்டு ஜல் ஜல்ன்னு நடக்கிறது அழகாவே இருக்கு.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாகை சிவா.. நாங்க போனது அமாவாசைக்கு முன்னால் தான்.. போனவருசம் கடற்கரை இருந்தது இந்த வருசம் இல்லை..நீங்க எப்ப போனீங்க..?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா சின்னம்மிணி .. நல்ல சுவை ..கூடவே மிளகாய் உப்பும் தொட்டுக்கிட்டு கடிச்சிக்கிட்டா.. வேற என்ன வேணும்..

rapp said...

சுண்டல், ஆஹா ஆஹா:):):)

அதென்னது சுண்டக்காய் குழம்பு? சுண்டைக்காய் கசக்காது? சுண்டைக்காய் வத்தல் சாப்டும்போது, கொஞ்சம் கசக்கும் அதான்.

rapp said...

வெள்ளரிப் பிஞ்சை பொறுத்த வரை நம்மூர் வெள்ளரி வெள்ளரிதான். இங்கயெல்லாம் நான் பார்த்தவரை தோல்சீவி சாப்பிட்டால் தான் சுவைங்கர ரேஞ்சில்தான் இருக்கு முக்காவாசி. கூட்டுக்கு பயன்படுத்தற வெள்ளரிக்காவெஎல்லாம் சாலட்ல போட்டு வேற சிலப் பேரு நக்கல் விடறாங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுண்டக்காய் வத்தல் தான் கசக்கும்.. அதைக்கூட சாதத்தோட பெசைஞ்சு சாப்பிடலாம் ராப் நெய்போட்டு சூப்பரா இருக்க்கும்.. :)

உடம்புக்கு நல்லது ராப்..

வெள்ளரி சின்னச்சின்னதா விரல் சைஸில் இருந்தா சுவையே தனி.. இல்லையா..?

Dhiyana said...

அது என்னங்க பம்ப்ளிமாஸ்? போட்டோல பார்த்தா ஆரஞ்சு பழம் மாதிரி இருக்கு. கேள்விப்பட்டதே இல்லை.

SUFFIX said...

Welcome back ML!! சுன்டல்...yum yum, அந்த வெல்ல்ரிக்காய் கீற்றை மிளகாய் பொடியில் தோய்த்து, சுவைத்து மகிழும் சுகமே தனி...அப்படியே நம்மளோட வலைப்பூவிர்க்கும் வந்து சென்னை சுன்டலை கொரிச்சுட்டு போங்களேன்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தீஷு .. பம்ப்ளிமாஸ் பிங்க் கலரில் இருக்கும்ங்க நாலு சாத்துக்குடிய சேத்தா இருக்கும் சைஸ்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

Shafi இன்னும் தில்லி போகலைங்க வெக்கேசனில் தான் இருக்கேன்.
உங்க ப்ளாக் சுண்டலும் சுவைச்சாச்சு.. :)

SUFFIX said...

ஓ....இன்னும் எங்க ஊரு சைடுல தான் சுத்திக்கிட்டு இருக்கீங்களா...!! எலே பசங்களா உஷார இருங்கடோய்.

SUFFIX said...

ந‌ன்றி முத்து, விடுமுறையை ந‌ன்றாக‌ ஜ‌மாய்ச்சுட்டு (தென்னிந்தியாவை ஒரு கலக்கு கலக்கிட்டு) வாங்க‌!! அப்பாடா டெல்லி ரொம்ப‌ அமைதியா இருக்குதுடா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

shafi ..:) நான் இருக்க ஊரு எல்லாமே அமைதியாத்தானே இருக்கும்..

rapp said...

நான் வத்தக்கொழம்பு எக்ஸ்ட்ராக்ட் வாங்கிட்டு வந்தேன். அதிலும் சுண்டைக்காய் இருக்கு. சுண்டைக்காய் குழம்பும் வத்தக்குழம்பும் எப்டி வேறுபடும், என்பதை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பழமைபேசி said...

//பதிவு எழுதாத //

இடுகை இடாத...


ஃபாலோயர்சு--- பின்தொடர்வோர்

சரீ, சரீ....’நற நற’ங்றது நாலு பேர் பாக்குறாங்க...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் .. வத்தக்குழம்பில் சுண்டக்கா வத்தல் போடுவாங்க.. சுண்டக்கா வத்தல் கசக்கும் தான்..
சுண்டக்காய் குழம்புங்கறது சாம்பார் போல அதில் .. பச்சை சுண்டைக்காய் அதனால் கசக்காது..

;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க பழமை பேசி ..தொட்டில் பழக்கம் போல எங்களுக்கு இப்படியே பழகிடுச்சு..
பதிவில் எழுதாத இந்த சில நாட்களில்ன்னு திருத்திட்டா சரியா வந்திடுமில்ல ..எப்புடீ?? :))