July 5, 2009

கடமை 32..

32 ல வெட்டீஸ் வெர்சன் எழுதலாமான்னு பார்த்தா.. இத்தன நாளுக்கப்பறமா எழுதினா இந்த பதிவே வெட்டீஸ் வெர்சனாத்தான் இருக்கும்ன்னு நினைச்சு, மாசம் ஒரு பதிவு போடும் கோபி அழைத்ததன் பேரில் இங்கே கேள்வி 32.. சில கொஸ்டின் கடைசியில் கைவலிச்சதுனு வழக்கம்போல விட்டாச்சு..

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எங்கப்பாக்கு தமிழ் பெயர் வைக்கனும்ன்னு ஆசை.. கயல்விழின்னு வச்சாங்க.. தாத்தாபாட்டி பேரை பேத்திங்களுக்கு பேரன்களுக்கு வைக்கிற பழக்கத்தையும் விட மனசில்லாததால் ரெண்டுபக்கப் பாட்டி பேரை சேத்து முத்துலெட்சுமி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்.. (முத்தம்மாள் - வீரலெட்சுமி)
என் பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். பரிட்சை மற்றும் பெரிய லிஸ்ட்களில் தேட ஈஸியா இருக்கும் .


2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பசங்க படம் பாத்துட்டிருக்கும்போது..
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும் . ஆனா ஒரு பாராவுக்கு மேல அதே அசிங்கமானதும் பிடிக்காது.4.பிடித்த மதிய உணவு என்ன?
ரசம் சாதம் பீன்ஸ் பொரியல்


5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
பேசறதை கேக்கமட்டுமே பிடிக்குமா இருந்தா நட்பு வச்சிக்கிடலாம்.. நான் பேசனுன்னு ஆசை இல்ல நானே பேசனும்ன்னு பேராசை பிடிச்சவளா இருக்கறதால கஷ்டம் தான்..


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல் காலை நனைக்கமட்டும் தான்.. அருவி தான் அருமை.அது சுருளி மாதிரி டமால் டிமீல்ன்னு விழறதுல இருந்து சின்ன அருவி வரை ..எதுன்னாலும்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம் . சில சமயம் வந்துட்டு போனாங்களே அவங்க் அந்த மாடல் தோடு ..இந்த மாதிரி ட்ரஸ் ந்னு யாராவது திரும்ப நினைவுப்படுத்த முயற்சித்தால் .. என்ன போராடினாலும் அதை நான் கவனிச்சதா நினைவே இருக்காது..


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விசயம் ... ப்ரண்ட்லியா இருக்கறது..
பிடிக்காத விசயம்.. பொறுப்பா நடந்துக்காம இருக்கிறது.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
எல்லாத்துலயும் பெர்ஃபெக்டா இருக்கிறது.
பிடிக்காததும் அதேதான்.. பின்ன எங்களுக்கு கில்டியா இருக்குமில்ல..

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பச்சை

14.பிடித்த மணம்?

மண்வாசனை,மருதாணி வாசனை

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

யாரையும் அழைக்கப்போறதில்ல.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
கோபி போடறமாசம் ஒரு பதிவில் .. என்ன செலக்ட் செய்யரது ?
வேறயாரும் கூப்பிட்டாங்களான்னு தெரியல.. பதிவுகள் படிச்சு ஒரு மாசம் ஆகுது.


17. பிடித்த விளையாட்டு?
zuma கம்ப்யூட்டர் கேம்...


18.கண்ணாடி அணிபவரா?
ஆமா .. கவச குண்டலம் போல

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ஆர்ட் பிலிம் மாதிரி இருக்கிற படம். மணல் கயிறு மாதிரி ஜோக் படம்

20.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க21.பிடித்த பருவ காலம் எது?
தில்லியில்ன்னா நவம்பர் .. மிதமான குளிர்


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
வ.உ.சி எழுதிய ஆற்றலுக்கு வழி அமைதிக்கு வழி..23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இல்லை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

தெரியல.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சிங்கப்பூர்
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தெரியல.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முன் கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மலை சார்ந்த இடங்கள் (கூட்டமில்லாம)

35 comments:

☀நான் ஆதவன்☀ said...

//மனசில்லாததால் ரெண்டுபக்கப் பாட்டி பேரை சேத்து முத்துலெட்சுமி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்.. (முத்தம்மாள் - வீரலெட்சுமி) //

வீரம்மாள்ன்னு வைக்காமா விட்டாங்களே :))

☀நான் ஆதவன்☀ said...

//5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
பேசறதை கேக்கமட்டுமே பிடிக்குமா இருந்தா நட்பு வச்சிக்கிடலாம்.. நான் பேசனுன்னு ஆசை இல்ல நானே பேசனும்ன்னு பேராசை பிடிச்சவளா இருக்கறதால கஷ்டம் தான்.//

நாங்கெல்லாம் இளிச்சவாயன்கன்னு சொல்லாம சொல்லிட்டீங்க :)

☀நான் ஆதவன்☀ said...

சமீமீமீமீபத்தில பதிவு போட்ட கோபியே உங்கள கூப்பிட்டத மறந்திருப்பாரு...இதுல மத்தவங்க எங்க ஞாபகம் வச்சிருப்பாங்க மேடம்

ஷ‌ஃபிக்ஸ் said...

Welcome Back!!பதில்களை படித்தோம..:)

பிடித்த மனம், மருதானி? வித்யாசமா இருக்கு

Anonymous said...

//உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?//
நல்லா இருக்கு பேர் வந்த கதை. இப்பத்தான் கயல்விழின்னு யாரும் எழுதறதில்லையே. நீங்க திரும்பவும் கயல்விழின்னு பேர் மாத்தப்போறீங்களா?? சும்மாத்தான் கேட்டேன். :)

சந்தனமுல்லை said...

//வீரம்மாள்ன்னு வைக்காமா விட்டாங்களே :))//


:-)))))

sindhusubash said...

மறுபடியும் பேர் மாறிடுச்சா!!!! பதிவுக்கு ரொம்பவே இடைவெளியாடுச்சே...

ஆயில்யன் said...

/சில கொஸ்டின் கடைசியில் கைவலிச்சதுனு வழக்கம்போல விட்டாச்சு..
//

ஒ அதுவும் கடைசியில கை வலிச்சுதுன்னு பீல் பண்ண பெறவுதான் சாய்ஸ்ல விட்டீங்களா ரைட்டு :))

மத்தபடி கேள்விகள் பெரும்பாலும் அப்ஜெக்டிவ் டைம் ஆன்சராத்தான் இருக்கு இனி கேள்வி கேக்கும்போதோ எத்தனை வார்த்தைகள் இருக்கணும்ன்னு சொல்ல வேண்டியதுதான் போல :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல வேளை .. ஆதவன்.. உங்கள மாதிரி யோசிக்கிறவங்க எங்க
வீட்டுல இல்லாம இருந்தாங்க..இப்ப நினைச்சு மனசு மகிழ்ச்சியா இருக்கு..

-------------------------
சின்ன அம்மிணி
புரியுது அம்மிணி புரியுது ..
------------------
ஷபி நல்லா விசாரிச்சிப்பாருங்க நிறைய பேருக்கு மருதாணி மணம் பிடிக்கும்.. வச்சுட்டு எடுத்தப்பறம் அதையே நாலஞ்சு நாள் கவனைச்சிட்டிருப்பாங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முல்லை..
பாருங்க எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கன்னு.. வீரம்மா ...அப்படியாச்சும் வீரம் வந்திருக்குமோ ஒருவேளை...
--------------------
சிந்து என்னப்பா நீங்க அப்டேட்டா இருக்கவேண்டாமா?
---------------------
ஆயில்யன் நான் முதல்ல கொஸ்டின் எல்லாம் காப்பி செய்துட்டு ஈசியானதை எல்லாம் முதலில் எழுதினேன்.. பரிட்சை மாதிரியே .. பின்ன நடுவில் ரெண்டு கடைசியில் ரெண்டு இப்படி விட்டுட்டேன் .. அதை முன்னாடியே சொல்லிட்டா நல்லதுன்னு ஒரு பாரா மேலே சேர்த்திட்டேன்..

எல்லாகேள்விக்கும் பதில் எழுதினா தெய்வகுத்தம் ஆகிடும்..

ஷ‌ஃபிக்ஸ் said...

//ஷபி நல்லா விசாரிச்சிப்பாருங்க நிறைய பேருக்கு மருதாணி மணம் பிடிக்கும்.. வச்சுட்டு எடுத்தப்பறம் அதையே நாலஞ்சு நாள் கவனைச்சிட்டிருப்பாங்க..//

நல்லா விசாரிச்சா, நல்லா இருக்காதுங்க. மருதானி நிறத்தைத்தான் இப்படி நாலஞ்சு நாளா ஜும் செஞ்சு பார்ப்பாங்க. அடுத்த முறை நோட் பன்ரேன்.
நம்ம பக்கமும் எட்டிப்பாருங்களேன் நேரம் இருந்தால்!!

கானா பிரபா said...

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பசங்க படம் பாத்துட்டிருக்கும்போது..//

ஏன் ஏன் ஏன்

♫சோம்பேறி♫ said...

/* யாரையும் அழைக்கப்போறதில்ல. */

ஏன் கா? என்னைக் கூப்பிடுங்க. நான் மறுக்கா எழுதுறேன்..

சென்ஷி said...

செம்ம கலக்கல்... ஆனாலும் கடைசிகட்ட கேள்விகள் சாய்சுல விட்டது செல்லாது. அடுத்த பதிவுல எழுதியாகணும். இம்பொசிஷன் மாதிரி :)

சென்ஷி said...

// ☀நான் ஆதவன்☀ said...

//மனசில்லாததால் ரெண்டுபக்கப் பாட்டி பேரை சேத்து முத்துலெட்சுமி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்.. (முத்தம்மாள் - வீரலெட்சுமி) //

வீரம்மாள்ன்னு வைக்காமா விட்டாங்களே :))//

டோண்ட் ஒர்ரி ஆதவா. அக்கா அடுத்த முறை பேர மாத்தும்போது இந்த பேரை ரெக்கமண்ட் செய்யலாம் :)

சென்ஷி said...

/ஷபி நல்லா விசாரிச்சிப்பாருங்க நிறைய பேருக்கு மருதாணி மணம் பிடிக்கும்.. வச்சுட்டு எடுத்தப்பறம் அதையே நாலஞ்சு நாள் கவனைச்சிட்டிருப்பாங்க..//

ஆமாம். இலையை பறிக்குறப்ப ஆரம்பிச்சு அதை அரைச்சு கையில வச்சு நாலு நாள் வரை வாசம் சுத்திட்டு இருக்கும். :)

சென்ஷி said...

//2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பசங்க படம் பாத்துட்டிருக்கும்போது..//

பசங்க அடம்பிடிச்சா சாமி பேர சொல்வேன்னு போன பதிவுல சொன்னீங்க. இப்பல்லாம் பசங்க படம் பார்த்தா அழவே ஆரம்பிச்சாச்சா..

பாவம் பசங்க!

ஷ‌ஃபிக்ஸ் said...

//சென்ஷி said...
/ஷபி நல்லா விசாரிச்சிப்பாருங்க நிறைய பேருக்கு மருதாணி மணம் பிடிக்கும்.. வச்சுட்டு எடுத்தப்பறம் அதையே நாலஞ்சு நாள் கவனைச்சிட்டிருப்பாங்க..//

ஆமாம். இலையை பறிக்குறப்ப ஆரம்பிச்சு அதை அரைச்சு கையில வச்சு நாலு நாள் வரை வாசம் சுத்திட்டு இருக்கும். :)//

நாலு நாள்.......? மருதானியுடனா? யப்பா கண்ண கட்டுதே!!

சென்ஷி said...

// ஷ‌ஃபிக்ஸ் said...

//சென்ஷி said...
/ஷபி நல்லா விசாரிச்சிப்பாருங்க நிறைய பேருக்கு மருதாணி மணம் பிடிக்கும்.. வச்சுட்டு எடுத்தப்பறம் அதையே நாலஞ்சு நாள் கவனைச்சிட்டிருப்பாங்க..//

ஆமாம். இலையை பறிக்குறப்ப ஆரம்பிச்சு அதை அரைச்சு கையில வச்சு நாலு நாள் வரை வாசம் சுத்திட்டு இருக்கும். :)//

நாலு நாள்.......? மருதானியுடனா? யப்பா கண்ண கட்டுதே!!//

மருதாணி முதல் நாள் இரவு வைச்சு மறுநாள் எடுத்துடுவோம். அதோட வாசம் நாலு நாள் என்ன ஒரு வாரம் கூட வீசும் :))

சென்ஷி said...

//நான் பேசனுன்னு ஆசை இல்ல நானே பேசனும்ன்னு பேராசை பிடிச்சவளா இருக்கறதால கஷ்டம் தான்..//

இது ஒண்ணுதான்க்கா யோசிக்க வேண்டிய விசயமா இருக்குது. ஆனாலும் மத்தவங்க உங்ககிட்ட நட்பா இருக்கறதுக்கு காரணம் அவங்களோட அதீத பொறுமையுணர்ச்சியாக்கூட இருக்கலாம். :)

S.A. நவாஸுதீன் said...

கடமை 32-ல சாய்ஸ்ல நிறைய போயிடுச்சே. பரவாயில்லை. ரொம்ப நாள் கழிச்சு திரும்பி வர வாய்ப்பாவது வந்துச்சே.

பதில்கள் செயற்கை வர்ணம் அடிக்காமல் இயல்பாக இருப்பது நல்லா இருக்கு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி வீரம்மாளும் நல்லாதான் இருக்கு .. லிஸ்ட்ல சேத்துக்கிறேன்.. அதுக்காச்சும் போட்டிக்கு யாரும் வரமாட்டங்கன்னு நினைக்கிறேன்..
-------------------------
நவாஸுதின் சராசரி மாணவியின் கேள்வித்தாள்ன்னா அப்படித்தாங்க..

கோபிநாத் said...

இந்த மாதிரி நிறைய கேள்விகளை லூசுல விட்டுப்புட்டு இதுக்கு தலைப்பு கடமையா!!...ம்ஹூம்...செல்லாது செல்லாது ;)

ராமலக்ஷ்மி said...

முதலில் பிடியுங்கள் பாரட்டை “கடமை”யை செவ்வனே சிறப்பாக ஆற்றியதற்கு:)!

எனக்கும் மழை பெய்து முடித்தவுடன் ‘கும்’மெனக் கிளம்பி நெஞ்சை நிறைக்கும் மண் வாசம் ரொம்பப் பிடிக்கும்.

பெயர் வந்த காரணம் அழகு. ஏன் பிடிக்கும் என்ற காரணம் அதை விட அழகு:)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சோம்பேறி ... இதை விடவும் எழுதவேண்டிய எத்தனையோ முக்கியமான ப்ராஜக்ட்கள் உங்க வரிசையில் நிக்குதேன்னு தான் கூப்பிடல..அண்ட் ரிவர்ஸ் ரிச்சர்ட் கணக்கா எழுதுவேன் தான்னா எழுதுங்க .. :)
------------------------
கோபி , எழுதுன கேள்விக்கு மார்க்கைப் போட்டு பாஸாக்கிவிடவும்..:)
----------------
ராமலக்‌ஷ்மி நீங்கதான் நல்ல்ல்ல்ல்ல்லவங்க பாராட்டறீங்க..

Thekkikattan|தெகா said...

கேள்விகளை நல்லா ஹாண்ட்ல் பண்ணியிருக்கீங்க...

"பசங்க" படம் - ஆசான் படித்துறையில அமர்ந்து பேசுற சீன்லதானே அசந்துட்டீங்க :-)

☼ வெயிலான் said...

தில்லி திரும்பியாச்சா?

// மலை சார்ந்த இடங்கள் (கூட்டமில்லாம) //
ம்.... என்ன மாதிரியே :)

விக்னேஷ்வரி said...

பிடிக்கும் . ஆனா ஒரு பாராவுக்கு மேல அதே அசிங்கமானதும் பிடிக்காது. //

எனக்கும் இதே தான்.

எல்லாத்துலயும் பெர்ஃபெக்டா இருக்கிறது.
பிடிக்காததும் அதேதான்.. பின்ன எங்களுக்கு கில்டியா இருக்குமில்ல.. //

அக்கா, உங்க கருத்தோட நான் முழுக்க ஒத்துப் போறேன். எனக்கும் அத்தே கில்ட்டி பீலிங் தான். :)

ஆமா .. கவச குண்டலம் போல ///

பொறந்ததிலிருந்தேவா ..... :O

ரெண்டு கேள்விக்கு விடை தெரியல. மூணு கேள்விய விட்டாச்சு. நல்லா எழுதிருக்கீங்கக்கா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெகா.. உணர்ச்சிவசப்படாம எல்லாரும் அறிவுபூர்வமா யோசிச்சு நடக்கிறாங்க படத்துல..
அட்வைஸ் கேட்டாலே எல்லாருக்கும் ஒரு விதமான குற்ற உணர்ச்சியில் கோவம் தான் வரும்.. இங்க அது மிஸ்ஸிங்க்கிறதே அழகா இருக்கு.

----------------------------

வெயிலான் .. ஆமாங்க வந்தாச்சு தில்லி..
:)
----------------
நன்றி விக்னேஷ்வரி.. டைப்பிங்க்ல பாரு எவ்வளவு அடிச்சாலும் அதே அழ்கா விழுது .. வசதி தானே நமக்கு. :))

கோமதி அரசு said...

கயல்விழி,
எனக்கும் 'பசங்க ' படத்தில் வாத்தியார் படித்துறையில் அமர்ந்து இயல்பாய் பக்கத்து வீட்டுக் காரரிடம் 'அட்வைஸ் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள் 'என்று ஆரம்பிக்குமிடம் பிடித்தது.
தன் அப்பாவை அடிக்கும் வாத்தியாரை அடிக்கும் குட்டிப்பையனும் என்னை மிகவும் கவர்ந்தான்.

நசரேயன் said...

(மணி) ரத்தின சுருக்க பதில்கள், இதுவும் கடமைன்னு நினைக்கக்௬டாது :)

துளசி கோபால் said...

தில்லிபோன கையோடு சூட்டோடு சூடாய் எழுதிட்டீங்க போல!!!

எல்லா பதில்களுமே ஜூப்பர்:-)
அதுலேயும் அந்த அஞ்சு= டாப்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோமதிஅரசு , குட்டிப்பையன் எல்லார் மனசையும் கவர்ந்திட்டான் தானே .. எப்பூடி...:)
----------------------------
நசரேயன்.. நன்றி நன்றி.. :)
--------------------
துளசி .. பேசினால் சிலபேர் ஏனோதானோன்னு கேப்பாங்க கோபமா வரும்.. ஆனா நீங்க நல்லா கவனமா கேப்பீங்க.. இப்படி கேக்கறவங்களுக்கிட்ட இன்னும் நிறைய பேசலாம்.. :)))

rapp said...

மருதாணி வாசனை, எனக்கு பேவரிட்.
உங்களை தீஷு கூப்டாங்க. கோபி அண்ணனுக்கு முன்னயே கூப்டாச்சே அவங்க.
//வீரம்மாள்ன்னு வைக்காமா விட்டாங்களே :))//

ஹே அது:):):)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் .. தீஷூ கூப்பிட்டது எனக்கு தெரியாது .. தீஷூ ந்னா அவங்க பதிவில் பிடிச்சது அவங்க குழந்தைகளுக்கு குடுக்கற எல்லா ஐடியா பதிவுகளும்ன்னு சேத்துக்கலாமா.. இங்க.. :)