July 15, 2009

தங்கமாவோ $ ஆகவோ கொடுத்திருக்கலாம்ல.....



முன் குறிப்பு 1 : அவார்ட் என்றதும் ஆசிப் மீரானின் பட்டாம்பூச்சிக்கு பதிலான கரப்பான் பூச்சி அவார்ட் தான் எனக்கும் நினைவுக்கு வருகிறது. இனி எதிர்பதிவு மட்டுமல்ல தொடர்பதிவும் கேட்டுத்தான் போடவேண்டும் என்று கண்டிப்பான ரூல்ஸ் போடவேண்டுமோ.. ( கேட்டா மாட்டேனுவாங்கன்னு தானே கேக்காம தராங்க இப்ப நான் மட்டும் என்ன கேட்டுட்டாப் பேரைப்போடரேன்)

போனமுறை பட்டாம்பூச்சிக்கு தப்பினேன் .. ராப் விருதை கேக்காமலே அறிவிச்சிட்டபடியால் ஏற்றுக்கொண்டேன்.

1. ச்சின்னப்பையன் - எனக்கு பிடித்த மாது சீனு வச்சு நாடகம் எழுதியதற்காக மட்டுமல்லாமல் காமெடி போஸ்ட்களுக்காக..

2.கோமா - ஹஹஹா ஹாஸ்ய தலைப்பில் நகைச்சுவையில் ரசிக்கும்படியாக சுவாரசியமாக பதிவிடுகிறார்.

3. அவந்தி - முன்பு மிக சுவாரசியமாக ஜென்கதைகள் குடுத்துக்கொண்டிருந்தார். படிப்பில் பிசியாகிவிட்ட அவருக்கு அவார்ட் ஒரு ஊக்கமாக இருக்குமே என்று குடுத்திருக்கிறேன்.

4 . துளசி - 30 நாள் டூர் போய்விட்டு 45 பதிவு பயணக்கட்டுரை :) போடுபவர்கள் பதிவில் சுவாரசியத்துக் குறைச்சலே இல்லை.

5.ராமலக்‌ஷ்மி - முத்துசரத்தில் அழகான கவிதை முத்துக்களை தருவது அதில் நல்ல கருத்துக்களை அடுக்குவது எனக்குப் பிடித்தமானது.

6. தெகா - மிக சுவாரசியமாக சில நேரங்களில் என்னதான் சொல்லவருகிறார் என்று மண்டைய குடைய வைக்கும்படியாக வரிகளை சுத்தி சுத்தி ஜாங்கிரியாக ஆனால் பின்நவீனத்துவ பாணியும் இல்லாமல் ஒரு விதமாக (puzzle? ) எழுதி ஏன் இப்படி என்று கேட்கும் பதிவுகள் எழுதுவதால்.. :)



33 comments:

கோபிநாத் said...

உங்களுக்கும்....உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)

Thekkikattan|தெகா said...

ஆஹா! இதில என்னயுமா? உங்க ஞாபக சக்திக்கு இந்திய மரபுப் படி "கையெடுக்கிறேங்க" :-).

நன்றி அழைத்தமைக்கு? மத்த மக்களுக்கும் வாழ்த்துக்கள், மோதிரக் கையால குட்டுப் பட்டதிற்கு :D .

☀நான் ஆதவன்☀ said...

ஆகா அதுக்குள்ள போட்டுட்டீங்களா???

கடமை முடிஞ்சுதா? :)

சென்ஷி said...

// கோபிநாத் said...

உங்களுக்கும்....உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)//

ரிப்பீட்டே :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி நன்றி :)
--------------------
தெகா கையெடுக்கிறீங்களா.. என்னது அது... இதுக்கெல்லாம் வெட்டுகுத்தா..?
--------------------
ஆமா ஆதவன்.. :)
--------------
நன்றி சென்ஷி :)

goma said...

எனக்கா அவர்ர்டா!!!!
நன்றி முத்துலட்சுமி.

சந்தனமுல்லை said...

உங்களுக்கும்....உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

ராமலக்ஷ்மி said...

//"தங்கமாவோ $ ஆகவோ கொடுத்திருக்கலாம்ல....."//

ஹிஹி.. அப்படியெல்லாம் கேட்காமல் விருதை பெற்றுக் கொள்கிறேன். நன்றி நன்றி:)!

உங்களுக்கும் வாங்கியிருக்கும் மற்றவருக்கும் என் வாழ்த்துக்கள்!

Thekkikattan|தெகா said...

தெகா கையெடுக்கிறீங்களா.. என்னது அது... இதுக்கெல்லாம் வெட்டுகுத்தா..?//

சரியாத்தான் பொருள் போயிச் சேர்ந்திருக்கு :-)))

இந்தக் "கையெடுக்கிறதுங்க" அந்தக் கையெடுக்கிறதில்லீங்க, இது "கும்பிடுறேனுங்க"ன்னு கிராமப் புறங்களில் சொல்லிக்குவாங்க... :)

Thamiz Priyan said...

எனக்கு விருது இல்லியா? ஓ.. இது பழம் பெரும் பதிவர்களுக்குத் தானோ.. ;-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெகா இப்பத்தான் கவனிச்சேன் ... பழிக்கு பழி என்பது பெரியவங்களுக்கு அழகில்ல..மோதிரக்கை ..:((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோமா தொடருங்க .. உங்களுக்கு பிடித்த பதிவுகளுக்கு குடுங்க..
-------------------------------
நன்றி முல்லை :)
-------------------------
ராமலக்‌ஷ்மி... நன்றி..:)
-------------------------------

தமிழ்ப்ரியன்னு பேருவச்சவங்களுக்கு பெட்ரமாக்ஸ் விக்கரதில்ல.. :)

ராமலக்ஷ்மி said...

விருதை என் வலை முகப்பில் போட்டுக்கிட்டம்ல..:)!

ஹிஹி, நல்ல வேளையா பிரித்துக் கொடுக்கணும்ங்கிற கண்டிசன் உங்கபதிவிலே இல்லே, ஜாலி ஜாலி.

யாருக்குன்னு கொடுப்பது என்பது பெரும் குழப்பம். பாருங்க இப்பவே தமிழ் பிரியன் ‘யக்கோவ்’னு கண்ணை கசக்குது:)!

Iyappan Krishnan said...

அடுத்து யாராவது விருது தரவங்க ஒரு சர்டிபிகேட்டோட பணமாகவோ நகையாகவோ தரணும்னு இதுமூலம் நான் வேண்டுகோள் வைக்கிறேன்.

rapp said...

விருதுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்:):):)

rapp said...

//

போனமுறை பட்டாம்பூச்சிக்கு தப்பினேன் //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......போன தடவ யாருமே எனக்குக் கொடுக்கலப்பா:(:(:( பயபுள்ளைக ஒரு வார்த்தக் கேட்டிருக்கலாம்ல, பரிதாபப்பட்டு:):):)

rapp said...

//படிப்பில் பிசியாகிவிட்ட அவருக்கு அவார்ட் ஒரு ஊக்கமாக இருக்குமே என்று குடுத்திருக்கிறேன்//

சுத்திவளைச்சு இன்னொரு தொடர் ஆரம்பின்னு சொல்றீங்க:):):)

//சில நேரங்களில் என்னதான் சொல்லவருகிறார் என்று மண்டைய குடைய வைக்கும்படியாக வரிகளை சுத்தி சுத்தி ஜாங்கிரியாக//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........
இடியாப்பத்த செவப்பாக்கி, சின்ன சைஸ்ல குண்டாக்கினா ஜாங்கிரி, எப்டி என் கண்டுப் பிடிப்பு?

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களுக்கும்....உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

pudugaithendral said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

;-)வாழ்த்துக்கள் உங்களுக்கும் வாங்கினவங்களுக்கும்

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
;-)வாழ்த்துக்கள் உங்களுக்கும் வாங்கினவங்களுக்கும்
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

சின்னப் பையன் said...

ஆஹா... மிக்க நன்றி... மத்த அனைவருக்கும் வாழ்த்துகள்!!!!

முனைவர் இரா.குணசீலன் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

kanagu said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்‌ஷ்மி ,உங்களுக்குக் கிடைச்ச பட்டாம்பூச்சி விருதை யாருக்குத் தந்தீங்க :P எப்பூடி ?? ;))
-----------------------

நல்லவேளை ஜீவ்ஸ் கேமிராவா தாங்க , மெமரிக்கார்டா தாங்கன்னு கேக்கலை.. நீங்க..:)
----------------------------
ராப் , இப்ப என்ன பட்டர்ப்ளை விருது குடுக்கறத நிறுத்திட்டாங்களா என்ன குடுத்தவங்க கிட்ட இருந்து வாங்கிட்டா போச்சு..

-----------------------
அமித்து அம்மா , கானா, தென்றல் நன்றி நன்றி :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆயில்யன்
நன்றி ச்சின்னப்பையன்.
--------------------------.
நன்றி முனைவர் குணசீலன்
( சிபி போஸ்ட்ல என் பதிவுக்கு கமெண்ட்டைக் காணோன்னதும் அங்கருந்து வந்திட்டீங்க போலயே.. நல்ல ஐடியாதான் அவர் குடுத்தது..:) )

-----------------------
நன்றி கனகு..:)

கோமதி அரசு said...

கயல்விழி,
விருது பெற்றதற்கு வாழ்த்து!

உங்களிடமிருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்து.

"உழவன்" "Uzhavan" said...

உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

R.Gopi said...

My Hearty Congratulations to you and others for the AWARD...

This is my maiden visit.....

Still to read other posts.......

Seen the photographs of NAYI DILLI.

Wowww..... Fantastic photographs...

All the very best to win the competition.....

ராமலக்ஷ்மி said...

//எப்பூடி ?? ;))//

இப்பூடித்தான்:)!

கோவி.கண்ணன் said...

// 4 . துளசி - 30 நாள் டூர் போய்விட்டு 45 பதிவு பயணக்கட்டுரை :) போடுபவர்கள் பதிவில் சுவாரசியத்துக் குறைச்சலே இல்லை.//

உண்மையிலேயே 45 பகுதியோடு முடித்துவிட்டார்களா ?

Radhakrishnan said...

விருதுகள் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோமதி அரசு, நன்றி உழவன்,

வாழ்த்துக்களுக்கு நன்றி கோபி.

சூப்பரு ராமலக்‌ஷ்மி

கோவி துளசி அடுத்த தொடரை தொடங்கனும்ன்னா முதல் தொடரை முடிச்சிடுவாங்க :)

நன்றி வெ. ராதாகிருஷ்ணன்.