October 30, 2009

தாகூர் திஸ் இஸ் நாட் ஃபேர்

குட்டிப்பையனுக்கு தமிழில் சில பாடல்கள் மற்றும் திருக்குறள் சொல்லிக்கொடுத்திருக்கிறோம். அவன் இப்போது அதிகம் தமிழ்சொற்களை பயன்படுத்தத் துவங்கிவிட்டான். எப்போதும் எனக்கு சாஹியே என்பதும் கூட ’எனக்கு வேண்டும்’எனமாறிவிட்டது. வேணும் என்பது கூட இல்லை ’வேண்டும்’ என்று தூயதமிழில் சொல்கிறான்.அவன் அக்கா தமிழிசைப் போட்டிக்காக ’எனக்குவேண்டும் வரங்களை இசைப்பாய்’ என்ற பாரதியார் பாடலை பாடிக்கொண்டிருந்த காரணம் தான் இந்த ”வேண்டும்”.

சரி பாடல்களை இங்கே போய் கேளுங்கள்.

----------------------------------------
பாடல்களை பதிவேற்ற எம்பெட் செய்ய வேறு சிறந்த தளம் இருக்கிறதா என்பதை அறியப்படுத்துங்கள். தற்போது ஈஸ்னிப்ஸ் மற்றும் இமெம் பயன்படுத்தி வருகிறேன்.
-----------------------------------------

கோவையருகே இருக்கும் ஈச்சனாரி கோவில் சென்றிருந்தபோது புத்தகங்கள் விற்பனை நிலையத்தில் ஒரு பார்வை விட்டுக்கொண்டிருந்தேன். பாரதிதாசன் கவிதைகள் புத்தகத்தை எடுத்த உடன் கடைக்காரர் பார்த்தார் . இவங்க எதோ கவிதைபிரியை என்று மடமட வென கலீல் ஜிப்ரான் பற்றிய இரண்டு சிறுபுத்தகங்கள், ஒரு தாகூர்கதைகள் புத்தகம் என என் பட்டியலை உயர்த்தினார். ரெண்டு நாளில் வாங்க தாகூர் கவிதைகள் எடுத்துவைக்கிறேன் என்றார். ஜிப்ரானுடைய கடிதங்கள் இருந்த புத்தகமும் தாகூர் கதைகளும் நன்றாகவே இருந்தன.

ரயில்பயணத்தில் தாகூர் கதைகள் தான் வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஊருல ஒரு ராஜான்னு ஆரம்பிப்பது பற்றி எழுதி இருந்தார் . எந்த குழந்தைக்கும் அது எந்த ஊர் ராஜா அவர் பெயர் என்னவாக இருக்கும் என்று கேட்க தோன்றாது கதை தானே முக்கியம். அந்த கதையில் பாட்டி தானாக வாய்க்கு வந்தபடி இட்டு கட்டிய கதையில் கதை கேட்கும் சிறுவனுக்காக முடிவை மாற்றிச்சொல்வதை அழகாக எழுதி இருந்தார். உண்மையில் தாகூருக்கு நன்றாக இட்டுகட்ட வந்திருக்கிறது (இதெல்லாம் நான் சொல்லலாமா ஓவரா இருக்கே)..பசி கொண்ட பளிங்குமாளிகை என்ற கதையில் யாரோ இட்டுக்கட்டி சொன்ன கதை என்று ஒரு பிசாசு மாளிகையைப் பற்றி செமத்தியாக சுற்றிவிட்டிருந்தார். கடைசியில் முடிவே சொல்லவில்லை. அதான் கதையை சொல்லிக்கொண்டிருந்தவர் ரயில்பயணத்தின் நடுவில் வேறு பெட்டிக்கு மாறிவிட்டாராமே.. தாகூர் திஸ் இஸ் நாட் ஃபேர். :)

கனம் கோர்ட்டார் அவர்களே என்ற கதை அந்த காலத்து சிவாஜி படம் போல இருந்தது. காபுலிவாலா என்ற கதை மனதை கனக்கவைத்தது. ஒரு குழந்தைக்கும் தன் குழந்தையை வெளியூரில் விட்டுவந்த ஒரு வியாபாரியான தந்தைக்கும் இருந்த நட்பைப் பற்றிய கதை அது.
இருந்தும் இல்லாமல் என்று ஒரு கதை கண்கள் என்று ஒரு கதை . அந்த இரண்டையும் மட்டும் நம்ம ஊர் சீரியல்காரர்கள் கண்ணில் படவிடக்கூடாது. ஏற்கனவே பெண்களை தியாக பிம்பங்களாக காட்டி அழுகாச்சி குடுப்பவர்களுக்கு நல்ல ஒரு விசயம்.இருந்தும் இல்லாமலில் இறந்து விட்டதாக நினைத்த பெண் தான் உயிரோடு இருப்பதை இறந்து நிரூபித்த கதை. ( என்ன தலை சுத்துத்தா?) கண்களில் அரைவைத்தியரான கணவர் மனைவியின் கண்ணை குருடாக்கிய கதை.

நீங்களும் படித்துப்பாருங்கள் . நயஞ்சோர் சீமான்கள் , மன்னவன் நீயே என்ற இரண்டு கதைகளிலும் நல்ல நையாண்டியோடு வெற்று ஜம்பம் அடிக்கும் இருவரைப்பற்றி சுவாரசியமாக எழுத் இருந்தார். புத்தகத்தை வாங்கச் சொன்ன கடைக்காரருக்கும்.. எதாவது புத்தகம் வாங்கிக்கோயென் என்று கடைக்கு முன்னால் நிறுத்திய கணவருக்கும் நன்றி.

25 comments:

ஆயில்யன் said...

புது அவதாரம் - கவிதைபிரியை

வாழ்க வாழ்க!

தேடியலைந்து திகட்டாத கவிகள் படித்து அதை பகிர்ந்து கொள்ளுங்கள் :))))

Sanjai Gandhi said...

சபரி தமிழ் கத்துக்கிட்டிருக்கானா? வெரி குட். ஒவ்வொருவாட்டியும் நான் எதாவது பேச, தோராயமா அவன் ஹிந்தியில எதாவது சொல்ல .. ஹ்ம்ம்ம்.. இனியாவது 2 பேரும் புரிஞ்சிகிட்டுப் பேசுவோம்ல.. :)

பாடல்கள் அப்லோட் பண்ண esnips நல்ல தளம் தான். Soundcloud.com முயற்சி பண்ணுங்க. நல்லா இருக்கு. இதுல நடு நடுவே டெக்ஸ்ட் கமெண்டுகளை சேர்க்கலாம். அந்த இடத்தில் மவுஸ் நகர்த்தும் போது கமெண்டுகள் தெரியும்.

☀நான் ஆதவன்☀ said...

பாட்டெல்லாம் சூப்பரா பாடுறான். அதுவும் நிலா நிலா ஓடி வா மழலை குரலில் கேட்க நன்றாக இருந்தது.

தாகூர் கதைகள் கிடைச்சா படிக்கலாம். இட்டு கட்டி கதை சொல்றதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அக்கா பசங்களுக்கு என் இஷ்டத்துக்கு கதை சொல்லுவேன் :)

ராமலக்ஷ்மி said...

தலைப்புக்கான காரணம் அருமை:)!

தூயதமிழில் குழந்தைகள் பேசினால் அது எத்தனை அழகு.

பாடல்கள் கேட்டுவிட்டு சொல்கிறேன்.

சென்ஷி said...

GOOD POST SIS.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் நன்றி...:)
----------------------------
நன்றி சஞ்சய் அந்த சைட் பயன்படுத்திப் பார்க்கிறேன்.
-----------------------
ஓ ஆதவன் நீங்க இட்டுகட்டிய கதை தான் படிச்சமே சூப்பர்.. உங்க அக்காவை கிச்சன்லேர்ந்து வேலைய விட்டுட்டு வந்து அப்பறம்ன்னு கேக்க
வச்ச கதை தானே.. :))
ஞாபகமிருக்கு,
---------------------
ராமலக்‌ஷ்மி உண்மைதான்.. எனக்கு வேண்டும்ன்னு சொல்லிட்டு அவன் நாடியைத் தட்டிகிட்டு யோசிப்பான். மிட்டாயா? பிஸ்கட்டா , சீஸா இல்ல சிப்ஸா ந்னு :)
------------------
நன்றி சென்ஷி..

அமிர்தவர்ஷினி அம்மா said...

சென்ஷி said...
GOOD POST SIS.

repeat

சந்தனமுல்லை said...

வீட்டுலே போய் கேக்குறேன்! அப்புறம் யூ டூ இலக்கியவாதி?? அவ்வ்வ்! :-)

கோமதி அரசு said...

சபரியின் அழுத்தம் திருத்தமான பாடல்,
திருக்குறள் எல்லாம் மிக,மிக அருமை.

சுத்தமான தமிழ் (எனக்கு வேண்டும்)
எனக்கு வேண்டும் வரம் தர வேண்டும், என்று சபரி கேட்கிறான்,அவன் வரம் கேட்கும் போதலெல்லாம் பிஸ்கட்,சாக்லேட் தர வேண்டும்.

கானா பிரபா said...

சபரி பாஸ் பின்றார், நிலா நிலா முடியும் போது அரபிக் கடலோரம் பாட்டு முடியிற எபெக்ட் வருது ;-0

முத்துலெட்சுமி/muthuletchumi said...

mr.நவநீதன் உங்கள் மெயில் ஐடியைக் குடுங்களேன்.

விக்னேஷ்வரி said...

ஒரு ஹிந்திக் கவிஞரை தமிழ் கவிஞரா மாத்துறீங்க. நடத்துங்க.

நன்றி சொல்லும் அளவுக்கு கதைகள் நல்லா இருந்ததா... வீட்டுல தான இருக்கு. வந்து வாங்கிக்குறேன். :)

Anonymous said...

சபரிக்கு வீட்டுல தமிழ் பேசறதுனால ஒரளவுக்கு சுலபமா இருக்கும்னு தோணுது. தாகூர் புத்தகத்தில எத்தனை கதைகள் இருந்தது?

கோபிநாத் said...

நல்லாயிருந்தது உங்க பகிர்வு ;)

நசரேயன் said...

//குட்டிப்பையனுக்கு தமிழில் சில பாடல்கள் மற்றும் திருக்குறள் சொல்லிக்கொடுத்திருக்கிறோம். அவன் இப்போது அதிகம் தமிழ்சொற்களை பயன்படுத்தத் துவங்கிவிட்டான்.//

குட்டிபையன் பாலிவுட் ஹீரோ இல்லையா ?

SurveySan said...

//காபுலிவாலா என்ற கதை மனதை கனக்கவைத்தது. ஒரு குழந்தைக்கும் தன் குழந்தையை வெளியூரில் விட்டுவந்த ஒரு வியாபாரியான தந்தைக்கும் இருந்த நட்பைப் பற்றிய கதை அது.
//

இந்த கதை ஸ்கூல்ல நான்-டீ-டெயில் தொகுப்புல இருந்தது. நல்லாருக்கும் கதை. என் நண்பன் ஒருவனுக்கு அன்னிலேருந்து இன்னி வரைக்கும், 'காபுலிவாலா'ன்னுதான் nick name.

யப்பா, வருஷங்கள் ஒடுதுங்கோவ்.

R.Gopi said...

ஒண்ணு ரெண்டு ஹிந்தி வார்த்தை சொன்னா நாங்க கூட அப்படியே ஹிந்தி கத்துப்போமே முத்துலெட்சுமி...

குழந்தையின் மழலைக்கு ஈடு இணை உண்டோ... திருவள்ளுவர் கூட இதை சிலாகித்து சொல்லி இருக்கிறாரே...

கண்மணி/kanmani said...

அது சரி தலைப்பு இப்படி வச்சாத்தானுங்களே சட்டெனப் படிக்கத் தோன்றும்.
நானும் கூட இதென்னடா தாகூருக்கே ஆப்பா னு பயந்துட்டேன்:)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அமிர்தவர்ஷினிஅம்மா,
--------------------------
கடித இலக்கியம் எழுதிக்கொண்டிருக்கும் முல்லை நீங்க என்னை இப்படி கேக்கலாமா ? :)
-----------------------------
கோமதிம்மா ..வரம் கொடுக்கலாம் ஆனா வரம்கொடுத்தவன் தலையில் கைவைச்சிட்டான்னு பயம் தான்.. :)
----------------------------
கானா ரஹ்மான் கிட்ட பாட்டு பாட அனுப்பிடலாமா சபரிய? :) நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விக்னேஷ்வரி பன்மொழிப்புலவரா மாத்தினா தப்பாப்பா?
--------------------------
சின்னம்மிணி தாகூர் கதையில் மொத்தம் 12 கதை இருந்தது. அதுல சீட்டுக்கட்டு ராஜாங்கம்ன்னு ஒரு பின்ந்வீனத்துவம் மாதிரி ஒரு கதை இருக்கு அதும் சூப்பர் தான். ஆனா அதை நேத்து தான் படிச்சே அதனால் பதிவில் வரலை.
-----------------------
நன்றி கோபிநாத்
--------------------------
நசரேயன்.. ஹிந்தி தமிழ் தெரிந்த மாதவன் மாதிரி ஆக்கிடலாம் கவலைப்படாதீங்க.. டைரக்டர் நீங்க வேற இருக்கீங்க..
---------------------
சர்வேசன் உங்களுக்கு ஆனாலும் ரொம்ப ஞாபக சக்தி போல எனக்கு துணைப்பாடமெல்லாம் மறந்து போச்சு..
------------------------
ஆர். கோபி ஹிந்தி கத்துக்கனுமா..நீங்க பதிவர் ஆடுமாடு பதிவுக்கு போங்க..அங்க நிறைய இது போல ஹிந்தி தெரியாதவங்களுக்கு வகுப்பு எடுத்திருந்தார்..
---------------------
கண்மணி பதிவு எழுதிட்டு தலைப்பை அதுக்குள்ளே இருந்தே தேர்ந்தெடுத்துப்போட்டுடறது தான்.. :) அலைகடல்ல சிறுதுரும்பு எப்படிங்க பின்ன தெரியறது...

jeevagv said...

பாடல்களை பதிவேற்ற எம்பெட் செய்ய வேறு சிறந்த தளம் இருக்கிறதா?
- imeem

R.Gopi said...

//ஆர். கோபி ஹிந்தி கத்துக்கனுமா..நீங்க பதிவர் ஆடுமாடு பதிவுக்கு போங்க..அங்க நிறைய இது போல ஹிந்தி தெரியாதவங்களுக்கு வகுப்பு எடுத்திருந்தார்.. //

ப‌கூத் ஷூக்ரியா மேம்சாப்....

பித்தனின் வாக்கு said...

இது எனது முதல் பின்னூட்டம். சபரிக்கு எனது வாழ்த்துக்கள். நான் என்ன தோன்ருகின்றதே அதை பின்னூட்டம் இட்டு டின் டின்னா வாங்கியிருக்கன். ஆதலால் உங்கள் பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டம் இடுகின்றேன். தாகூர் படிக்கின்ற அளவுக்கு எனக்கு ஞானம் பத்தாது. ஆனால் பதிவில் அருமையாக சொல்லியிருகின்றிர்கள் நன்றி.

பித்தனின் வாக்கு said...

தாகூரின் கவிதை ஒன்றை மட்டும் படித்து இருக்கின்றேன். ஜனகனமன அம்புட்டுதான். நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜீவா நானும் இமெம் குறிப்பிட்டிருக்கேன் சில சமயம் அது முழுப்பாடலை ஒலிபரப்பரது இல்லை..
--------------------------
பித்தனின் வாக்கு உங்களுடைய அவசரப்பின்னூட்டம் வேறு பதிவுகளீல் பார்த்து அதிர்ந்தும் இருக்கிறேன்.. அழகான பின்னுட்டம் பார்த்து அதை வழிமொழிந்தும் இருக்கிறேன்..நிதானமாக வே பின்னூட்டமிடுங்கள் அவசரமில்லை.

தாகூரைப் படிக்க அதுவும் அவருடைய இந்த கதைகளைப் படிக்க பெரிய ஞானமெல்லாம் வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஏன்னா எனக்கே புரிஞ்சுடுச்சே. :))