November 4, 2009

பிடிக்கும் ஆனா பிடிக்காது, பிடிக்காது ஆனா பிடிக்கும்

பிடிச்சவங்க பிடிக்காதவங்களுக்கு உங்களை சீக்கிரமே யாராச்சும் கூப்பிடனும்ன்னு நேத்து ஒரு தோழி அதிரடியா ஆசைப்பட்டாங்க.. வாக்கு உடனடியா பலிச்சுருச்சு ரொம்ப நாளே தியானத்திலிருந்த வெட்டிஆபிசர் ராப் தியானத்தை கலைச்சு போஸ்ட் போட்டிருக்காங்க . ராப் கூப்பிட்டு பதிவு போடாம இருக்கலாமா?

பிடிச்சவங்கன்னு நானா ஒரு சிலரை இது இதுனாலல்லாம் பிடிக்குதுன்னு நினைச்சிட்டிருப்பேன். அவங்களோட இன்னோரு பக்கத்தை யாராவது சொன்னா தெரிஞ்சுகிட்டு அடடா ந்னு ஆகிடும் சில சமயம்.

பிடிக்காதவங்கன்னு சிலரை நினைச்சிருப்பேன் அவங்களோட இன்னோரு முகத்தைப் பார்த்து அட இவங்களுக்குள்ள இப்படி ஒரு நல்ல குணமான்னு நினைச்சுக்கறதும்.. நிறை குறை இருக்கவங்க தானே மனுசங்கன்னு மனசைத் தேத்திக்கிட்டதும் உண்டு.

பிடிச்சது பிடிக்காததை நம் சரிபாதிங்களுக்கு தெரிஞ்சுருக்கனும்ன்னு சில போட்டிகள் நடத்தறாங்களே.. அது எப்படி முடியும் ? நமக்கே நமக்கு பிடிச்சது பிடிக்காதது எதுன்னு சரியா முடிவெடுக்கமுடியலயே.. என்று எனக்கு இப்ப செம குழப்பமாகிடுச்சு.. எதோ தோணினதை எழுதிட்டேன்.



அரசியல் தலைவர்
பிடித்தவர்:திருமாவளவன், நல்லகண்ணு (இவங்களப்பத்தி எல்லாம் ரொம்ப ஓவரா திட்டி எங்கயும் படிக்கல) இறந்துபோனவங்க தமிழ்நாட்டைவிட்டு வெளியே இருக்கவங்களையும் சொல்லலாம்ன்னா (இந்திராகாந்தி)
பிடிக்காதவர்:மத்தவங்க எல்லாருமே

கவிஞர்
பிடித்தவர்: தாமரை, நாமுத்துக்குமார் (பட்டுக்கோட்டை)
பிடிக்காதவர்: அப்படி சொல்லத்தெரியல

நடிகர்
பிடித்தவர்:வடிவேலு, ரஜினி,ப்ரகாஷ்ராஜ் ,ஈரம் ஆதி ( ரங்காராவ், தங்கவேலு)
பிடிக்காதவர்: தியாகு,எஸ் எஸ் சந்திரன் ரெண்டுபேரு காமெடி பிடிக்காது

நடிகை
பிடித்தவர்: சரளா,சரண்யா பொண்வண்ணன் ,பத்மபிரியா( பண்டரிபாய், ஜமுனா)
பிடிக்காதவர்:யாரும் அப்படி சொல்ல நினைவுக்கு வரல

பாடகர் :
பிடித்தவர்: ஹரிஹரன்,எஸ்பிபி, டி எம் எஸ்
பிடிக்காதவர்: நினைவுக்கு வரல

பாடகி
பிடித்தவர் : கல்யாணி, ஜென்சி
பிடிக்காதவர்: அனுராதா ஸ்ரீராம்

எழுத்தாளர்
எஸ்.ரா படிப்பதுண்டு. பலரோட புத்தகங்களை படிச்சுட்டு சூப்பர்னு நினைச்சுட்டு அப்படியே புத்தகத்தை யும் அவங்களையும் மறந்துடற என்னோட மோச்மான நினைவாற்றலால் பிடித்தவங்களையும் சரி பிடிக்காதவங்களையும்சரி , சரியா குறிப்பிட முடியல..

இதை தொடர அழைக்க விரும்புபவர்கள்

மிஸஸ் தேவ்
சின்னம்மிணி

25 comments:

☀நான் ஆதவன்☀ said...

ஏய்ய்ய்ய்ய்ய்ய் எல்லாரும் நல்லா பாத்துகங்க முத்தக்காவும் ரவுடி தான்...முத்தக்காவும் ரவுடி தான்

ஆயில்யன் said...

எஸ்கேப் ஆனாமாதிரி இருக்கு ஆனா எஸ்ஸாகல!

எஸ்ஸாகியிருக்கீங்க ஆனா எஸ்ஸான மாதிரி காமிச்சுக்கிடல!

குட் !

குட்! :))

☀நான் ஆதவன்☀ said...

நிறைய இடத்துல பிடிச்சவங்க மட்டும் ரெண்டு மூனு பேரு இருக்கு. பிடிக்காதவங்க ஒருத்தர் கூட இல்லையே?

ராமலக்ஷ்மி said...

பிடித்தவங்களை கூட சொல்லிடலாம் போலிருக்கு, பிடிக்காதவங்களை சொல்ல கொஞ்சம் தலையைப் பிய்த்துக் கொள்ளத்தான் வேணும் போலிருக்கு. ஏன்னா அந்த ரீதியில் யோசிப்பதில்லை. நீங்க ‘நினைவுக்கு வரல’ன்னு விட்டது ‘பிடித்திருக்கு’:)!

பலதடவை என் கமெண்டுகளுக்கு ஆயில்யன் ரிப்பீட்டேய்ய் போட்டிருக்கிறார், இங்கே அவர் கமெண்டுக்கு நான் போட்டுக்கறேன் ஒரு ரிப்பீட்டேய்ய்:))!

R.Gopi said...

இதிலிருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால்

முத்துலெட்சுமிக்கு பிடிச்சவங்க நிறைய பேரு... பிடிக்காதவங்க குறைவு...

இது நல்லதுதான்... வாழ்த்துக்கள்...

ஆனாலும், அந்த தியாகு, எஸ்.எஸ்.சந்திரன், அனுராதா ஸ்ரீராம் பிடிக்கலைன்னு சொன்னது ஏன்னு தெரியல....

ப்ரியமுடன் வசந்த் said...

பிடிச்சுருக்கு ஆனா பிடிக்கலை

:))))

சென்ஷி said...

:)

நீங்களும் எழுதியாச்சா! பிடிக்காதவர்கள் உங்க லிஸ்ட்ல சுத்தமாவே இருக்காதுன்னு நினைச்சுட்டு இருந்தேன்.

கோமதி அரசு said...

’”பிடிக்கும் ஆனா பிடிக்காது ,
பிடிக்காது ஆனா பிடிக்கும்”

என்னத்தே கன்னையா,அறிவொளி மாதிரி
முத்துலெட்சுமி பதில் இருக்கிறதே.

கருத்துச் சொல்லாம்,ஆனா சொல்லக்
கூடாது.

டவுசர் பாண்டி... said...

காரம்,மணம்,குணம்...மிஸ்ஸிங்

முத்துலட்சுமி பதிவு மாதிரியே இல்லை...

:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆதவன்.. அடிக்க ஆளைக்கூப்பிடறாப்பலயே ஒரு ஃபீலிங்க்.. :)
-------------------
ஆயில்யன் குட் கமெண்ட்..கீப் இட் அப்
------------------
ராமலக்‌ஷ்மி பிடிக்காதவங்களை போட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் தான் சிலர் பெயரை குறிப்பிட்டிருக்கேன்.
------------------------
ஆர் கோபி அதான் காரணம் சொன்னேனே .. அவங்க காமெடியும் கத்தலும் பிடிக்காது. அனுராதா அவங்களோட பிடிச்ச பாடல்களும் இருக்கு.. ஆனா சொல்லச்சொன்னால் இவங்களோட சில பாடல்கள் பிடிக்காது. குரலை ஒருமாதிரி மாத்தி பாடறது வயசான காலத்து ஜானகி மாதிரி கஷ்டமா இருக்கும் .அதுவும் ஒரு மாதிரி பாடல்கள் என்றாலே இவங்கதான்னு முடிவா கூப்பிடுவாங்க போல.. :)
------------------------
வசந்த் உங்களுக்கு பிடிச்சவங்க சிலர் பிடிக்காதவங்க லிஸ்ட்ல வந்துட்டாங்களோ :) ஒன்னும் பிரச்சனை இல்லை..
தலைப்பை பார்த்துக்குங்க..
-----------------------------
கோமதிம்மா ... இது சூப்பர் கமெண்ட்.. இது இது இதைத்தான் எதிர்பார்த்தேன்.
--------------------
டவுசர் பாண்டி வாங்க நலமா?
என்ன நிறைய மிஸ்ஸிங்க் ஆ நானும் அஞ்ஞாத வாசம் போகட்டா.. :)

கோபிநாத் said...

\\( பண்டரிபாய், ஜமுனா)\\

இன்னாது...!!!!!!!!!

rapp said...

இன்னைக்கே பதிவேற்றியதற்கு நன்றி முத்து. எழுத ஆரம்பிக்கும்போது நானும் தியாகு நினைச்சிருந்தேன், அப்புறம் மறந்துட்டேன்.

அரசூரான் said...

உங்க பதிவோட தலைப்பு பிடிச்சிருக்கு... :)

Anonymous said...

அழைப்பிற்கு நன்றி முத்தக்கா. விரைவிலேயே இடுகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\சென்ஷி said...
:)

நீங்களும் எழுதியாச்சா! பிடிக்காதவர்கள் உங்க லிஸ்ட்ல சுத்தமாவே இருக்காதுன்னு நினைச்சுட்டு இருந்தேன்.//

பிடிக்காதுன்னு சொன்னவங்களை தனிப்பட்ட முறையில் பிடிக்காதுன்னு சொல்லலை.. அவர்களுடைய வேலையில் தான் பிடிக்காத விசயம் இருக்குன்னு சொல்லி இருக்கேன்.
-------------------------
கோபி ஏன் அதிர்ச்சி அவங்களைத்தான் அடைப்பில் போட்டிருக்கேனே.. அண்ட் பண்டரிபாயோட சின்னவயசு பாட்டு பாத்ததில்லயா.. என்ன அழகு தெரியுமா? “ ஒரு பெண்ணின் மனசைத்தொட்டு போறவரே” ஜமுனா “அன்புள்ள மான்விழியே” ஆகா..
----------------------------
நன்றி ராப். எஸ்.எஸ் ந்னா கூடவே இவர் நினைவுக்கு வந்துடுறார் :)
---------------------
அரசூரான் .. நன்றி :)
-----------------------------
நன்றி சின்ன அம்மிணி.

பித்தனின் வாக்கு said...

@@@@@

வல்லிசிம்ஹன் said...

நாசூக்கா வேலையச் செய்திட்டீங்க.

எனக்கு உங்க பதிவு ரொம்பப் பிடிச்சிருக்கு.

பண்டரிபாயின் அமைதியான அழகும், மான்விழிப் பாட்டில் ஜமுனாவின் உணர்ச்சி பாவங்களும் உங்களுக்குப் பிடித்திருப்பது எனக்குப் பிடிக்குது:))
எஸ் ஜே சூரியா,சந்திரன் இவர்களெல்லாரும் சூரியாவைவிடச் சந்திரன் ஒரு படி மேலேயே பிடிக்காது.

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு முத்து!!

/கவிஞர்
பிடித்தவர்: தாமரை/ - எதிர்பார்த்தேன்!!

:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பித்தனின் வாக்கு, நீங்க எதோ சொல்லவார்ரீங்க தெரியுது.. ஆனாஎன்னன்னு தான் தெரியல..:)
-------------------
வல்லி நன்றி. பிடிக்காதவங்கள்ள பர்ஸ்ட் ப்ரைஸ் செகண்ட் ப்ரைஸ் எல்லாம் தருவீங்க போல நீங்க.. :)
------------------------
முல்லை.. நன்றி :)

ஆமா கவிஞர்கள் நீங்க எதிர்பார்த்தமாதிரியெ தான். அவர்கள் இருவர் பற்றியும் நான் கட்டுரை எழுதிக்கொடுத்திருக்கிறேன். :)

TCTV said...

hi latchumi

thnks 4 ur comment

நர்சிம் said...

//பிடிச்சவங்கன்னு நானா ஒரு சிலரை இது இதுனாலல்லாம் பிடிக்குதுன்னு நினைச்சிட்டிருப்பேன். அவங்களோட இன்னோரு பக்கத்தை யாராவது சொன்னா தெரிஞ்சுகிட்டு அடடா ந்னு ஆகிடும் சில சமயம்.//

பல சமயம்னு இருக்கணுமோ..ங்க?

மிக யோசிக்க வைத்த வரிகள்.

thiyaa said...

அழகா எழுதியிருக்கீங்க

கண்ணகி said...

முத்து...பிடித்தவர்,பிடிக்காதவர்களின் மறுபக்கம் .....உங்கள் கருத்தே என் கருத்தும். வெல் செட்.

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு மற்றும் பதில்கள் வாழ்த்துக்கள்.

ஸ்வர்ணரேக்கா said...

// பிடிக்காதவங்கன்னு சிலரை நினைச்சிருப்பேன் அவங்களோட இன்னோரு முகத்தைப் பார்த்து அட இவங்களுக்குள்ள இப்படி ஒரு நல்ல குணமான்னு நினைச்சுக்கறதும்.. நிறை குறை இருக்கவங்க தானே மனுசங்கன்னு மனசைத் தேத்திக்கிட்டதும் உண்டு//

உண்மைதாங்க... நானும் பல முறை அப்படி தேத்திக்கிட்டது உண்டு...