November 12, 2009

இஷ்டமோ கஷ்டமோவும் ஒரு விருதும்

என் கணினியின் ஆமை வேகத்தால் முன்பே சிலர் ’தங்கள் பதிவை மாற்றம் செய்திருக்கிறோம் ..கொஞ்சம் சரிபார்த்துச் சொல்லவும்’.. என்று டெஸ்ட் இஞ்சினியர் வேலை பார்க்கச்சொல்லிவந்த விசயம் அனைவரும் அறிந்ததே! இதனால் ரீடர் மூலமாக படித்து மடல் மற்றும் அரட்டைப் பெட்டிகளின் மூலமோ அல்லது அவர்களிடமே உங்கள் பின்னூட்ட உரலைத் தாருங்கள் என்று சொல்லி நேராக பின்னூட்டங்களில் நுழைந்தோ கடமையாற்றிவந்தேன்.

சரி ஒரு கவிதைக்கு எதிர்கவிதை எழுதலாம் என்று உட்கார்ந்தால் கூட இப்படித்தான் வருதுன்னா பார்த்துக்கோங்களேன்..

கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்

ஒரு நாளைக்கு ஒரு கேம் தான்
அதிகம் கணினி பார்த்தால்
கண் மூன்றாகிப்போகும் என்று
நான் சொன்ன பொய்யை நம்பி
நீ
ஆன்லைனிலேயே விட்டு வந்த
டவுன்லோட் ஆக தாமதிக்கும்
அந்த ஏஃபார் கேம்.காம்
என் நினைவையும் கம்ப்யூட்டர் மெமரியையும்
ஹேங்க் செய்துகொண்டே இருக்கிறது
இன்னமும்!



சரி பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று ’ரீடர்ஸ் ப்ரண்ட்லி’ பதிவுகளுக்குன்னு அவார்ட் கொடுக்கறதா முடிவு எடுத்து அரட்டைப் பெட்டியின் ஸ்டேடஸில் அதை தெரிவித்து ஐடியா மணிகளுக்கு அறை கூவல் விடுத்திருந்தேன். ( முல்லை கொடுத்த அவார்ட் ஒன்றும்
பகிர்ந்தளிக்கப்பட வேண்டி இருந்தது . அவார்ட் பெயரை மாற்றி கொடுத்துவிடலாம் என்ற ஐடியா தான்)

முதல் ஐடியா மணி தமிழ்பிரியன் - சாட் பூட் த்ரி
நல்லாதான் இருக்கு .. ஆனா ரீடர்ஸ் ப்ரண்ட்லிக்கு தமிழில் என்னவா இருக்கும் என்றதும் ’பயனாளருக்கு இலகுவான்?’ என்று கேட்டுவிட்டு நகர்ந்தார். இப்படியே டமில் டமில் ன்னா நம்ம கருப்பாக்கிடுவாங்களாமே (நன்றி : கடகம் ஆயில்யன்) கருப்பு= block

இரண்டாம் ஐடியா மணி ...நான் ஆதவன் - அவசரக்குடுக்கை ( அவரில்லைங்க அவர் தந்த விருதுக்கான பெயர் ஐடியா அது)

மூன்றாவது ஐடியா அம்மணி - அப்பத்தான் எங்கருந்தோ இம்சை அரசி குதிச்சாங்க.. அவங்க எப்பேர்ப்பட்ட நகைச்சுவை வித்தகின்னு உங்க எல்லாருக்கும் தெரியுமில்லயா.. வந்ததும் ’படா பட் விருது’ ந்னாங்க.. ஆமா படாபட் ஜெயலக்‌ஷ்மிய யாரும் மறக்கமுடியாது. ஆனா யாராவது வந்து ஹிந்தி ஒழிக என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று நான் இழுக்க..

சட்டென்று சொன்னாங்க ‘ வாம்மா மின்னல் விருது ‘ எப்பூடி?

சரி விருதுக்கான பெயர் கிடைச்சாச்சு .. “வாம்மாமின்னல் பதிவு விருது”



யாருக்கு குடுக்கலாம் .. அதான் நம்ம டெஸ்ட் இஞ்சினியர் வேலை அனுபவம் இருக்கே.. முதலில் மாட்டியது வல்லி சிம்ஹன் பதிவு.. சிறிது நாட்களுக்கு முன்பு அவங்க பல சோதனைகளை செய்து படம் ஏற்றி திறக்கமுடியாம இருந்து வந்தது. ஆனா இப்ப திறந்ததும் மின்னல் போல பதிவு திறந்தது. தி அவார்ட் கோஸ் டூ திருமதி வல்லி சிம்ஹன் .

சரி இன்னும் ஒருத்தருக்கும் குடுக்கலாம் என்று நினைக்கும்போது.. இந்த பதிவு
லிங்க் கிடைத்தது.. ஸோ ரசிகன் நீங்களும் ’வாம்மா மின்னல் பதிவு விருது’ பெறுகிறீர்கள்.
அதிகம் படிப்பாளிகளைப் பெற்று நீங்க நூறு நூறு ஃபாலோயர்களைப் பெற வாழ்த்துகிறேன்.

45 comments:

சென்ஷி said...

:))

அக்கா... உங்க பதிவு எனக்கு ஓப்பன் ஆக கொஞ்சம் டைம் எடுக்குதுன்னு சொல்லி உங்களை வருத்தப்பட வைக்க விரும்பல..

விருது பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்.. (எப்படியும் இந்த விருது எனக்கு கிடைக்கப் போறது இல்லை)

சென்ஷி said...

//"இஷ்டமோ கஷ்டமோவும் ஒரு விருதும்"//

தலைப்பு உம் விகுதி பெற்று பின்நவீனத்துவ ரேஞ்சுல இருக்குதுக்கா :)

சென்ஷி said...

நீங்க அதிகம் பின்னூட்டம் போடுறது இல்லைன்னு தெரிஞ்சதுக்கப்புறம் தான் இந்த நிலை மாற ஏதாச்சும் செய்யனுங்கன்னு யோசிச்சுட்டு இருக்கோம் :)

நிஜமா நல்லவன் said...

:)

☀நான் ஆதவன்☀ said...

//என் நினைவையும் கம்ப்யூட்டர் மெமரியையும்
ஹேங்க் செய்துகொண்டே இருக்கிறது
இன்னமும்!///

சட்டுபுட்டுன்னு ஷட்டவுன் பண்ணிடுங்க்கா.. இல்ல அந்த கம்யூட்டரை உருட்டு கட்டையால நாலு சாத்து சாத்தவும்:)

☀நான் ஆதவன்☀ said...

//இரண்டாம் ஐடியா மணி ...நான் ஆதவன் - அவசரக்குடுக்கை ( அவரில்லைங்க அவர் தந்த விருதுக்கான பெயர் ஐடியா அது)//

நான் ஒரு அவசரகுடுக்கை... இதெல்லாம் பதிவுல வரும்னு தெரியாம அவசரப்பட்டு அவசரகுடுக்கைன்னு சொல்லிட்டேன்.

☀நான் ஆதவன்☀ said...

//“வாம்மாமின்னல் பதிவு விருது”//

இந்த விசயம் பில்கேட்ஸ்க்கு தெரிஞ்சு அவர் உங்களை டெஸ்டிங் இன்ஜினியரா வேலைக்கு சேர்த்தாலும் ஆச்சர்யபடுறதுக்கில்லக்கா

ஆயில்யன் said...

//சிறிது நாட்களுக்கு முன்பு அவங்க பல சோதனைகளை செய்து படம் ஏற்றி திறக்கமுடியாம இருந்து வந்தது. ஆனா இப்ப திறந்ததும் மின்னல் போல பதிவு திறந்தது. தி அவார்ட் கோஸ் டூ திருமதி வல்லி சிம்ஹன் .///


ஆஹா :)))

வல்லியம்மா பதிவு முன்னே டெம்ப்ளட் பிரச்சனையில டெரர் காமிச்சது இப்ப ஜம்முன்னு இருக்கு :))

☀நான் ஆதவன்☀ said...

//சரி இன்னும் ஒருத்தருக்கும் குடுக்கலாம் என்று நினைக்கும்போது.. இந்த பதிவு
லிங்க் கிடைத்தது.. ஸோ ரசிகன் நீங்களும் ’வாம்மா மின்னல் பதிவு விருது’ பெறுகிறீர்கள்.//

இவருக்கு ‘வாப்பா மின்னல் விருது’ தானே கொடுக்கனும்?

ஆயில்யன் said...

//Blogger நிஜமா நல்லவன் said...

:)//


முத்தக்கா அடுத்த விருது செலக்‌ஷன் கமிட்டி ஸ்டார்ட்டு பண்ணுங்க - இது மாதிரி வந்து ஸ்மைலியை போட்டுட்டு பதிவு புரிஞ்சுதா இல்ல புரியலையான்னு தெரியாமலே போகும் நல்ல உள்ளங்களுக்கு!

ஆயில்யன் said...

// சென்ஷி said...

:))

அக்கா... உங்க பதிவு எனக்கு ஓப்பன் ஆக கொஞ்சம் டைம் எடுக்குதுன்னு சொல்லி உங்களை வருத்தப்பட வைக்க விரும்பல..//

முதல்ல சிஸ்டத்தில பவர் சுச்சை அமுக்குங்க :))))

ஆயில்யன் said...

//சரி ஒரு கவிதைக்கு எதிர்கவிதை எழுதலாம் என்று உட்கார்ந்தால் கூட இப்படித்தான் வருதுன்னா பார்த்துக்கோங்களேன்..///

அச்சச்சோ நிம்மதியா ஒரு எதிர்கவிதை கூட எழுத முடியலன்னா எ.கொ.சா.இ!

ஆயில்யன் said...

//சென்ஷி said...

//"இஷ்டமோ கஷ்டமோவும் ஒரு விருதும்"//

தலைப்பு உம் விகுதி பெற்று பின்நவீனத்துவ ரேஞ்சுல இருக்குதுக்கா :)///

அது மட்டுமா ஆங்காங்கே பி.நவீனத்துவ தெளிப்புக்கள் அரங்கேறியிருக்கின்றது சரியாக கவனியுங்கள் பாஸ் :)))))

வல்லிசிம்ஹன் said...

இப்படியெல்லாம் யோசிக்க வைக்குதா என் பதிவு. :))
உங்க பதிவு அதுக்கு வர் பின்னோட்டங்கள் எல்லாம் பார்த்துச் சிரித்தாச்சு.
வாப்பா மின்னலுன்னா அர்த்தம் மாறிடுமே ஆயில்யன்:))))
நன்றிம்மா முத்து.

உடனடியா விளம்பரம் கொடுக்க வேண்டியதுதான்.

ஆயில்யன் said...

//டெஸ்ட் இஞ்சினியர் வேலை பார்க்கச்சொல்லிவந்த விசயம் அனைவரும் அறிந்ததே! //

ஆனாலும் உங்களுக்கு மனத்திடம் & பொறுமை நொம்ம்ப்ப சாஸ்தின்னு அப்பத்தான் எனக்கு புரிஞ்சுது !

கொடுக்கறவங்க லிங்கெல்லாம் ஒபன் பண்ணி பார்த்து லோட் ஆகுற டைம் கால்குலேட் செஞ்சு கீரின் கொடி காமிச்ச அந்த நாட்கள் மறந்து போகுமா....? :)

வல்லிசிம்ஹன் said...

@ஆயில்யன் என்னாது டெரர் காமிச்சதா!!!!
கலக்கறீங்கப்பா ஒவ்வொருத்தரும்!!!!
எனக்கு இந்த மாதிரி பேச எழுத வரலியே:(((
வாழ்த்துச் சொன்னவங்க எல்லாருக்கும் நன்றிங்கோவ்.
இனிமே என் பதிவு நல்ல பிள்ளையா இருக்கும்னு சொல்லிக்கிறேன்:)))

Thamiz Priyan said...

எனக்கு ஏதும் விருது இல்லியா? ஹிஹிஹிஹி.. உங்க பதிவுக்கு நீங்களே விருது கொடுத்துக்கங்க.. ;-))))

Anonymous said...

விருது பெற்றவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

//(எப்படியும் இந்த விருது எனக்கு கிடைக்கப் போறது இல்லை)//

சென்ஷி, எனக்கே கிடைச்சுருச்சு . உங்களுக்கு இன்னுமா கிடைக்கலை.

ஆயில்யன் said...

// வல்லிசிம்ஹன் said...

இனிமே என் பதிவு நல்ல பிள்ளையா இருக்கும்னு சொல்லிக்கிறேன்:)))//

வல்லியம்மா சொல்றத படிச்சா, அவுங்க ப்ளாக் முகப்புல ஒரு பாப்பா சமர்த்தா உக்காத்திருக்கறதுதான் ஞாபகம் வருது :))

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...

எனக்கு ஏதும் விருது இல்லியா? ஹிஹிஹிஹி.. உங்க பதிவுக்கு நீங்களே விருது கொடுத்துக்கங்க.. ;-))))//

விருது கேட்டு வாங்கிய வித்தகன்

ஆயில்யன் said...

//அந்த ஏஃபார் கேம்.காம்///


பை தி பை என்னை மாதிரி குட்டீஸ் வெளையாடற அந்த ஏ ஃபார் கேம் தேடி தேடியும் கிடைக்கல! :(

கோபிநாத் said...

ம்ஹூம்..ஒன்னுமே புரியல...எதுக்கும் விருது வாங்கியவர்களுக்கு வாழ்த்து ;)

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//Blogger நிஜமா நல்லவன் said...

:)//


முத்தக்கா அடுத்த விருது செலக்‌ஷன் கமிட்டி ஸ்டார்ட்டு பண்ணுங்க - இது மாதிரி வந்து ஸ்மைலியை போட்டுட்டு பதிவு புரிஞ்சுதா இல்ல புரியலையான்னு தெரியாமலே போகும் நல்ல உள்ளங்களுக்கு!/


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒரு நிமிடத்துக்கு குறைவானதெல்லாம் டைமில்ல சென்ஷி..:) நிலைமை மாற எதும் முயற்சி எடுத்தால் அது தான் இந்த பதிவின் வெற்றி..
----------------
நன்றி நிஜம்மா நல்லவன்
-------------------------
ஆதவன் மெதுவா இதுக்கொரு தனி அவார்டை உங்களைக்கொண்டே ப்ளாஷ் ல வரைஞ்சுருக்கலாம்.. நேரமின்மை தான் காரணம்..

-------------------
ஆயில்யன் இப்பவும் சிலர் பழசை மறக்காம டெம்ளேட் மாத்தியதும் சொல்லறாங்கப்பா..
----------------------------
வல்லி விருதை ஏத்துக்கிட்டதுக்கும் சிரித்து மகிழ்ந்ததுக்கும் நன்றி..
-----------------------

விக்னேஷ்வரி said...

பக்கா தமிழச்சியாகிட்டீங்க போங்க.

சந்தனமுல்லை said...

விருதும் ஒரு ரவுண்டு வரப்போகுதா!?!!
கவிதைக்கு - :))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கு விருதளித்த தமிழ்பிரியனுக்கு ந்ன்றி.. :)
------------------
ஆயில்யன் அது அவன் சொல்ற பேரு ஏ ஃபார் கேம்.. உண்மையில் அது பேரு www. a game .com :) கார் ரேஸ் தான் அதிகம் விளையாடறான் எனக்கு பயம்மா இருக்கு அதனால் தான் திட்டுவிழுது..

கண் வீங்கிப்போகும்ன்னு தான் எழுதினேன்.. பல்கொட்டற லெவலுக்கு திகிலா இருக்கனுன்னு தான் மூன்றாகிடுச்சு.. ;)
-------------------------

நன்றி சின்ன அம்மிணி.. :)
----------------
கோபி இன்னும் பதிவுன்னா என்ன பின்னூட்டம்ன்னா என்னன்னுஎல்லாம் நினைவு வச்சிருக்கறதே உனக்கு விருதுகொடுகலாம்ப்பா..:)

க.பாலாசி said...

எதிர் கவுஜ டெக்னிக்கலா நல்லா இருக்கு....

விருதோம்பல் தொடரட்டும்...

R.Gopi said...

//இதனால் ரீடர் மூலமாக படித்து மடல் மற்றும் அரட்டைப் பெட்டிகளின் மூலமோ அல்லது அவர்களிடமே உங்கள் பின்னூட்ட உரலைத் தாருங்கள் என்று சொல்லி நேராக பின்னூட்டங்களில் நுழைந்தோ கடமையாற்றிவந்தேன்.//

ய‌ப்பா..... மூச்சு விட்டுக்க‌றேன் முத்துலெட்சுமி.......உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

ம்ம்ம்... எதிர் க‌விதை ப‌ட்டையை கிள‌ப்புகிற‌து...

//சரி பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று ’ரீடர்ஸ் ப்ரண்ட்லி’ பதிவுகளுக்குன்னு அவார்ட் கொடுக்கறதா முடிவு எடுத்து அரட்டைப் பெட்டியின் ஸ்டேடஸில் அதை தெரிவித்து ஐடியா மணிகளுக்கு அறை கூவல் விடுத்திருந்தேன்.//

ய‌ப்பா... ம‌றுப‌டியும் மூச்சு வாங்குது...... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....புஸ்ஸ்ஸ்ஸ்....

வாம்மா மின்ன‌ல் விருது பெற்ற்வ‌ர்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்...

வேக‌மாக‌ வ‌ந்து அவ‌ர்க‌ள் ம‌றைவ‌த‌ற்குள் விருது கொடுத்திடுங்க‌ முத்துலெட்சுமி....

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த விருதுக்கு ரூல்ஸ் எதுவும் கிடையாதா?

விருது பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சென்ஷி said...
(எப்படியும் இந்த விருது எனக்கு கிடைக்கப் போறது இல்லை)

நான் உங்களுக்கு ஒரு விருது கொடுத்து ஒரு வாரத்துக்கு மேலே ஆகப்போகுது, சுற்றுலா பிஸியில கவனிக்கலையா சென்ஷி:)

இம்சை அரசி said...

விருது பெற்ற வல்லியக்கா, ரசிகன் இருவருக்கும் வாழ்த்துக்கள் :)))

விருது பேரை சஜஸ்ட் பண்ணின எனக்கு எந்த விருதும் இல்லயா முத்தக்கா?? :((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விக்னேஷ்வரி .. புரியலயே.. ஆங்கிலம் நிறைய சேர்ந்ததால் என்னை தமிழச்சியாக்கிட்டீங்களா..? :)
------------------------------
முல்லை .. விருதுக்கு எந்தவிதமான கண்டிசனும் போடலை என்பதால் விருது ரவுண்ட் வருமா தெரியல?
:)இல்லன்னா நானே வாரம் ஒன்னோ மாசம் ஒன்னோ குடுத்துடலாம்ன்னு பார்க்கிறேன்..
----------------------------
க.பாலாஜி தொடர்ந்துடலாம் .. :)
--------------------------
ஆர்.கோபி , நன்றி :)
-----------------------
அமிர்தவர்ஷினி அம்மா, இந்த விருதுக்கு ரூல்ன்னா .. அவங்க பதிவு திறந்தவுடன் சட்டுன்னு லோட் ஆகிடனும்.. :)

ராமலக்ஷ்மி said...

எதிர்க் கவிதை வெகு அழகு:))!

வாங்கம்மா மின்னலுக்கு பொருத்தம்தான் வல்லிம்மா, போய் செக் பண்ணியதில் சீக்கிரமேதான் திறக்கிறது இப்போ:)!

pudugaithendral said...

வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஐடியா அம்மணி , நகைச்சுவை வித்தகின்னெல்லாம் நடுவில் சில விசயங்கள் சொன்னதெல்லாம் உனக்குக்குடுத்த பட்டங்கள் தான் என்பது உனக்குத்தெரியலயே இம்சை அரசி :)
-------------------
நன்றி ராமலக்‌ஷ்மி ...:)

நன்றி புதுகைத்தென்றல்..:)

மகேஷ் : ரசிகன் said...

விருது வழங்கியமைக்கு மிக்க நன்றி தோழி.

வாழ்த்தியவர்களுக்கும் மிக்க நன்றி.

ஜெயந்தி said...

உங்கள் வலைப்பக்கம் எனக்கு 'வாம்மா மின்னல்' என்பதுபோல் ஓப்பனாகிவிட்டது.

நேசமித்ரன் said...

எதிர் கவிதை ரொம்ப நல்லா இருக்குஙக

சென்ஷி சொன்னதுதான் இந்த விருதெல்லாம் நம்ம வீட்டு பக்கம் கோட வராது கிடச்சவிங்கலுக்கு வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மகேஷ் விருதைப்பெற்றுக்கொண்டதுக்கு நன்றி.. :)
------------------
ஜெயந்தி நன்றிங்க :)
----------
நேசமித்ரன் உங்க பதிவு மின்னல் மாதிரி திறக்கத்தான் செய்யுது ஆனா உங்க பேக்ரவுண்ட் கலர் தான் ரீடர் ப்ரண்ட்லி இல்லை.. அதை ஒரு முறை உங்களுக்கு சொல்லியும் நீங்கள் தான் மாற்றவே இல்லை.. :(

மகேஷ் : ரசிகன் said...

நான் இப்ப ப்ளாக் டெம்ப்ளேட் மாத்தலாம்னு இருக்கேன். அதுக்கு அப்புறம் நல்லா இல்லனா விருத திருப்பி வாங்கிக்குவீங்களா?

- அப்பாவிகள் சங்கம்
பதிவு எண் - 23/67

மதிபாலா said...

விருது கொடுத்தவருக்கும் , விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

அட கொடுக்கறதுன்னு ஆச்சி...

வாம்மா இடி...
வாம்மா சுனாமி...
வாம்மா வெள்ளம்..
வாம்மா வறட்சி..

இப்படி ஒரு ரவுண்டா கொடுத்தா இன்னும் நாலு பேருக்கு கொடுக்கலாம்ல?

என்ன நாஞ்சொல்றது?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மதிபாலா இடி , வெள்ளம், சுனாமின்னெல்லாம் கூட சொல்லி விருது குடுக்கலாம் ஆனா வறட்சின்னு எப்படி குடுக்கறது ..நல்லா மாட்டிவிடறீங்களே.. :)

சிங்கக்குட்டி said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வடை போச்சே :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்பாவி சங்கம்மாதிரி தெரியல மகேஷ்.. :)
இது இந்த வருசத்து சிறந்த நடிகர் விருது மாதிரி தான்.. அடுத்தவருசம் வேறயாருக்கோ தான்னா போனவருசத்தோடத புடிங்கிடுவாங்கன்னா அர்த்தம்?
-------------------
சிங்கக்குட்டி விருதை தொடர்ந்து தரலாம்ன்னு தான் இருக்கேன்.. பார்க்கலாம் உங்க பதிவு திறக்கிற வேகம் எப்படி இருக்குன்னு :)