May 21, 2010

விரும்பியதும் கிடைத்ததும்

ரொம்ப பயம்மா இருந்தது. ஊசிக்கு பயமில்லை. ஆனா வாய்க்குள்ள ஊசியா? அது எப்படி இருக்கும்? என்னால் முடியாத ஒன்றுக்காக மகளை மட்டும் எப்படி அழைத்துப்போனேன்? (அவளுக்கு பல்லை உள்புறமாக அமைப்பதற்கு நான்கு பற்களை எடுத்திருக்கிறோம்.) பயந்த அளவு இல்லை.. முதல் ஊசிக்கு கொஞ்சம் வலி இருந்தது. அடுத்த ஊசிகள் இறங்குவதே தெரியவில்லை. பல் எடுத்தபின்னும் தெரியவில்லை. எடுத்துவிட்டீர்களா என்ற என் ஆச்சரியத்தைப் பார்த்து மருத்துவருக்கு சிரிப்பு.

மரத்துப் போகவைத்து நமக்கு தேவையில்லாதவற்றை எடுப்பது என்பது எவ்வளவு வசதி. நம் மனதுகுள் இருந்து ரணமாக்கும் விசயங்களைக் கூட மரத்துப் போகவைக்க ஏதும் ஊசி உண்டா? வலியில்லாமல் எடுத்து எறிய...
உணர்வு வரும்போது இழப்பின் இடம் காலியாக இருக்கிறது. இரண்டு நாள் பெப்சியும் , ஐஸ்கிரீமும் வலியை மறக்க செய்தது.

அம்பிகா ஒரு தொடர்பதிவு எழுதச்சொன்னார்கள். ஆசைகள் கனவுகள் ..நான் என்ன படிக்க ஆசைப்பட்டேன்? பதினோராம் வகுப்பில் பாட்டனி வகுப்பில் ஆர்வமாய் இருந்தேன். மற்றதெல்லாம் என்னை குழப்பியது. போராடவேண்டி இருந்தது. ஓம் டாலர் டீச்சர் வகுப்பெடுக்கும் போது தூங்கும் தோழியை கிள்ளி எழுப்பிவிட்டேன்.’ எவ்வளவு நல்லா சொல்லித்தராங்க தூங்காதேடி’. நல்ல கல்லூரியில் படிக்கனும் என்பது கனவா இருந்தது. திருச்சியில் சீதாலக்‌ஷ்மியில் படிக்க ஆசைப்பட்டேன். எப்படியோ விண்ணப்பமெல்லாம் பூர்த்தி செய்து அனுப்பியாயிற்று.இடம் இருக்கிறது. ஆனால் தங்குமிடம் மட்டும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். உறவினர் வீட்டிலிருந்தபடி போக வேண்டாம் என அட்மிசன் கிடைத்தபின் அம்மா திரும்ப அழைத்துக்கொண்டார்கள்.

கணினி பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. என் தோழிகள் சிலர் கணினி எடுத்த போதும் நான் கெமிஸ்ட்ரியைத் தேர்ந்தெடுத்தேன். மேலே படிக்கமுடியவில்லை. வேறுஎன்ன டொனேசன் தான் அங்கே எல்லாம் .. இல்லைன்னா நல்ல மார்காவது வாங்கி இருக்கனும். நான் எந்த மெடலுமே வாங்கவில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாதே என்று கல்லூரி போட்டியில் கம்பிவாத்தியப்பிரிவில் (வயலின்) யாருமே போட்டிக்கு இல்லாததால் கிடைத்த மெடலை ரொம்ப நாளாக வைத்திருந்தேன் .

அதற்கு பிறகும் ஆசை விட்டதா? பேஷன் டிசைன் படித்து தொழிலதிபர் ஆகனும் என்று கனவு . கல்லூரி முடித்தவர்களுக்கு வங்கிக்கடன் கிடைக்குமென அறிந்து ஒரு தோழியின் உறவினரிடம் விசாரித்து வைத்திருந்தேன். சென்னை கோத்தாரி அகடமியில் விண்ணம் போட்டு , கிடைத்து ,அட்மிசனுக்கு வரச் சொல்லி இருந்தார்கள் . இம்முறை உறவினர் வீட்டில், சென்னையில், பெண் தனியாக சென்று வர இவ்வூர் வசதிப்படாது(!!!) என்றும்சொல்லிவிட்டார்கள். எனக்கும் அப்போதெல்லாம் வெளியிலும் தங்குமிடங்கள் இருப்பது தெரியாது. சிறிது வருடங்களுக்குப் பிறகு என் உறவுப்பெண்களே வெளியில் தங்குமிடத்தில் தங்கி வேலை , படிப்பு எல்லாம் செய்த போது தான் தெரிந்து கொண்டேன்.

தங்குமிடம் வேண்டும் என்பதை முதலிலேயே தேர்வு செய்யாமல் விட்டதற்கு இம்முறை என்னைத்தான் குறை கூறவேண்டும். அதற்காக அழுத கண்ணீரை கணக்கில் எடுக்கமுடியாது. அடுத்தவருடமும் முயற்சி செய்தேன். ஆனால் ஃப்ரஷர்ஷ்களைத்தான் எடுப்பார்களாக இருக்கும்.

எப்படியோ பெண் என்பதால் ஏற்பட இருந்த பலவிபத்துகளிலிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டார்கள்( !!!!!!!!!) . என் இழப்புகளுக்கும் என் தெரிவுகளுக்கும், என் தெளிவின்மை தான் காரணம். ஒரு கட்டத்தில் நான் படிப்பு வேலை பற்றிய
கனவு காண்பதையே விட்டுவிட்டேன். வாழ்க்கை என்பது அது பாட்டிலும் போய்க்கொண்டிருக்கிறது.

 தற்போது சில நண்பர்களின் உதவியால் இந்த ப்ளாக் உலகின் உதவியால் பல புதிய விசயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். இணையத்தை சுற்றிவருவது எனக்கு பிடித்தமானதாக இருக்கிறது. அந்த பிடித்தமான வேலையையே வேலையாகச் செய்யச்சொன்னால் சிரமம் இல்லையே.. இணையதளங்களுக்கு எழுதித்தருகிற வேலை சில சமயம் செய்கிறேன். ஆல் இஸ் வெல் (? !)

36 comments:

சாந்தி மாரியப்பன் said...

//வாழ்க்கை என்பது அது பாட்டிலும் போய்க்கொண்டிருக்கிறது.//

போராடிப்பெறும் வாழ்க்கை ஒரு சுகமென்றால் தன்போக்கில் போகவிட்டு ரசிப்பது இன்னொரு சுகமான அனுபவம்.
என்ன போராடினாலும் கிடைக்கல்லைன்னா அப்றம் எதுக்கு எனர்ஜியை வேஸ்ட் செஞ்சுகிட்டு . அதை பிடித்தமான வேறு வேலை செய்வதில் செலவழிக்கலாமே :-)))))

Chitra said...

எப்படியோ பெண் என்பதால் ஏற்பட இருந்த பலவிபத்துகளிலிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டார்கள்( !!!!!!!!!) . என் இழப்புகளுக்கும் என் தெரிவுகளுக்கும், என் தெளிவின்மை தான் காரணம். ஒரு கட்டத்தில் நான் படிப்பு வேலை பற்றிய
கனவு காண்பதையே விட்டுவிட்டேன். வாழ்க்கை என்பது அது பாட்டிலும் போய்க்கொண்டிருக்கிறது.



...... எதார்த்தம்...... எத்தனை அழகாக சொல்லி இருக்கீங்க...... பாராட்டுக்கள்!

settaikkaran said...

நீங்கள் விரும்பவில்லையென்றாலும், தமிழ்மணத்தில் சேர்த்து ஓட்டும் போட்டு விட்டேன். :-)

pudugaithendral said...

நானும் திருச்சி சீதாலட்சுமில படிக்க ஆசைப்பட்டேன். டேஸ்காலரா கிடைச்சுச்சு. வேணாம்னு பள்ளத்தூர் சீதாலட்சுமில சேர்ந்தேன். ஒரே மாசம்தான் ஹாஸ்டல். அப்புறம் டேஸ்காலரா படிச்சேன். அதுக்கு முன்னமே அங்க சேர்ந்திருக்கலாம். என்ன செய்ய நேரம்.

வெங்கட் நாகராஜ் said...

அழகா சொல்லியிருக்கீங்க முத்துலெட்சுமி - வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு விடுவது ஒரு சுகமான அனுபவம்.

Thamiz Priyan said...

இதையெல்லாம் யோசிச்சோம்ன்னா மண்டை தான் காயும்... டேக் இட் ஈஸி.. அப்படின்னு நாங்க நினைச்சுக்குவோம்.. ஆள் இஸ் வெல் நவ்.. ;-)

க.பாலாசி said...

சில இடங்கள்ல வருத்தமாவும் இருக்கு... பலஇடங்கள்ல கலகலப்பாவும் எழுதியிருக்கீங்க...

ஆமா..அதுக்கப்பறம் வயலின் கச்சேரி எதும் நடத்தலையா(?!)...

சந்தனமுல்லை said...

நல்லாவே எழுதியிருக்கீங்க முத்து...விருப்பங்களை புதைத்துவிட்டு வருபவற்றை ஏற்றுக்கொள்வது எளிதானதல்ல...

பனித்துளி சங்கர் said...

///////கணினி பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. என் தோழிகள் சிலர் கணினி எடுத்த போதும் நான் /கெமிஸ்ட்ரியைத் தேர்ந்தெடுத்தேன். மேலே படிக்கமுடியவில்லை. வேறுஎன்ன டொனேசன் தான் அங்கே எல்லாம் .. இல்லைன்னா நல்ல மார்காவது வாங்கி இருக்கனும். நான் எந்த மெடலுமே வாங்கவில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாதே என்று கல்லூரி போட்டியில் கம்பிவாத்தியப்பிரிவில் (வயலின்) யாருமே போட்டிக்கு இல்லாததால் கிடைத்த மெடலை ரொம்ப நாளாக வைத்திருந்தேன் .
//////////

அனுபவங்களைக்கூட மிகவும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் . சிறப்புதான் பதிவு . எதர்க்காக திரட்டிகளில் இணைக்கவில்லை இந்த பதிவை ? ஓட்டு எங்கு போடுவது என்று தெரியவில்லை .புரிதலுக்கு நன்றி !

கண்மணி/kanmani said...

கிடைத்ததை விரும்புவதே புத்திசாலித்தனம்.
வலைச்சர பொறுப்பாசிரியரா கொக்கா?:)

Radhakrishnan said...

யதார்த்தமான பதிவு.

//நம் மனதுகுள் இருந்து ரணமாக்கும் விசயங்களைக் கூட மரத்துப் போகவைக்க ஏதும் ஊசி உண்டா? வலியில்லாமல் எடுத்து எறிய... //

அளவுக்கு அதிகமான ஆசைதான். விரும்பியது கிடைக்கட்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமைதிச்சாரல் நானே ஒரு சோம்பேறி எங்க போய் எனர்ஜிய வேஸ்ட் செய்யப்போகிறேன்.. ;))
-------------------
ஆமாம் சித்ரா, இதான் யதார்த்தம் . போராடாதவளின் யதார்த்தம்.
-------------------
சேட்டைக்காரன் நன்றி.. :)
---------------------
புதுகைத்தென்றல் உங்கள் படிப்பு பெரும் போராட்டமாச்சே..
----------------------------
நன்றி வெங்கட்
-----------------
ஆமா.. அதான் அம்பிகாட்ட சொன்னேன் அழுவாச்சிய கிளறி விட்டீங்கன்னு ;)
------------------------
பாலாசி செய்தேனே.. இரண்டு முறை தியாகராஜ ஆராதனையில் வாசித்தேன்.. பத்திரிக்கை வச்சிருக்கேன் பேரு போட்டது :))

நன்றி முல்லை..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பனித்துளி சங்கர்.. ஏன் இல்லை பின்னூட்டங்களுக்கு கீழே ஓட்டுபெட்டி இருக்கிறதே...
----------------------
கண்மணி இப்போது பொறுப்பாசிரியர் சீனா அவர்கள் :)
---------------------------------
ராதாகிருஷ்ணன் .. நன்றி :)

ராமலக்ஷ்மி said...

ஆல் இஸ் வெல் :)!

Anonymous said...

நாம் எதை விரும்புகிறோம் என்பதை விட நமக்கு எது நன்றாக வருகிறது என்பதையும் கருத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமொ :)

ஸாதிகா said...

சுவாரஸ்யமாக சொல்லி இருக்கின்றீர்கள் முத்து லட்சுமி

ஸாதிகா said...

அருமையான புகைப்படங்கள்.தொடருங்கள்

கோமதி அரசு said...

//பிடித்தமான வேலையையே வேலையாகச் செய்ய சொன்னால் சிரமம் இல்லையே//

சிரமம் இல்லை,உண்மை.

அதைச் சரியான மனப்பான்மையுடன் எடுத்துக் கொண்டால் அதுவே மிக சிறந்த ஒன்றாக மாறும்.

வாழ்க வளமுடன்.

பத்மா said...

அழகா எழுதிருக்கீங்க முத்து லக்ஷ்மி ..இருப்பதுதான் யதார்த்தம்

PPattian said...

சுருக்கமாவும் தெளிவாயும் சொல்லிட்டீங்க.. கிடைத்ததை விரும்புவோம் :)

எல் கே said...

//இரண்டு முறை தியாகராஜ ஆராதனையில் வாசித்தேன்.. பத்திரிக்கை வச்சிருக்கேன் பேரு போட்டது :)//
வாழ்த்துக்கள், கிடைத்ததை வைத்து திருப்தி அடைபவர் குறைவு.

ஓட்டு பெட்டி இருக்கிறது. ஆனால் அதை நீங்க "submit " பண்ண வில்லை

அம்பிகா said...

காலையிலேயே பதிவை படித்து விட்டேன். உடனடியாக பதிவிட்டதற்கு நன்றி முத்துலெட்சுமி.
மிக மிக எதார்த்தமான பதிவு.
//இரண்டு முறை தியாகராஜ ஆராதனையில் வாசித்தேன்.. பத்திரிக்கை வச்சிருக்கேன் பேரு போட்டது :)//
ஆஹா...!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்‌ஷ்மி :)
நல்லாச்சொன்னீங்க சின்னம்மிணி அதே..
நன்றி ஸாதிகா
நன்றி கோமதிம்மா..
நன்றி பத்மா
நன்றி புபட்டியன்
எல்கே தமிழ்மணத்தில் ஓட்டு போட இயலும் தமிழீசில்சொல்கிறீர்கள் என்று நினைக்கிறென்.. சோம்பேறி தனம் தான்..

அம்பிகா நீங்கள்ளாம் நினைக்கிறது எதோ எனக்கு இடிக்குதே.. அது எங்க ஊரு ஆராதனைங்க மாயவரத்துல :)))

நசரேயன் said...

//கம்பிவாத்தியப்பிரிவில் (வயலின்) யாருமே போட்டிக்கு இல்லாததால் கிடைத்த மெடலை ரொம்ப நாளாக வைத்திருந்தேன் . //

கேட்க யாராவது இருந்தாங்களா?

Thekkikattan|தெகா said...

ஒரு பல்ல பிடிங்கிப்போட இத்தனை எண்ணங்கள் அதைத் தொட்டு குமிஞ்சிகிடக்கே... சும்மா சொல்லப்பிடாது நல்லா வந்திருக்கு.

//எப்படியோ பெண் என்பதால் ஏற்பட இருந்த பலவிபத்துகளிலிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டார்கள்( !!!!!!!!!) .//

இந்த மாதிரி நடக்காத ஒரு விசயத்தை நினைச்சு பயந்து, எவ்வளவு உலக விசயங்கள் அறிஞ்சிக்கிறதில இருந்து தவிர்த்து வைத்து பிள்ளைகளை வளர்த்து விடுகிறோம் நம் சமூகத்தில்.

//என் இழப்புகளுக்கும் என் தெரிவுகளுக்கும், என் தெளிவின்மை தான் காரணம்.//

இது ஒரு நல்ல introspection keep up the spirit and keep digging more :-)

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

எல் கே said...

ஆமாம்.

அன்புடன் அருணா said...

எதார்த்தம் புரிகிறது! Thank God! All is well!

கவி அழகன் said...

அருமை

மங்கை said...

:)

sakalakalavalli nnu sollalaama..:)

ippo onnum kuraichu pohalai...vittuteannu ninachu ellaam vera vitathula pidichuteeenga

vaalthukkal

ஹுஸைனம்மா said...

//பதினோராம் வகுப்பில் பாட்டனி வகுப்பில் ஆர்வமாய் இருந்தேன்//

படம் வரையணும்கிறதனாலேயே, இந்த சப்ஜெக்ட் வெறுப்பா இருந்துது!! ஆனா, தியரி பிடிக்கும்.

ஒரு கட்டத்தில் எல்லாருமே வாழ்க்கையை அதன் போக்கில் விடத் தொடங்கிவிடுகிறோம். பக்குவப்படுவதன் அடையாளமோ!!

geetha santhanam said...

பெண்கள் எப்பவுமே சமூகத்திற்கு கவலைப்பட்டு சில தியாகங்களை வாழ்க்கையில் ஆதாவது ஒரு கட்டத்தில் செய்ய வேண்டி வருகிறது. ---கீதா

சாந்தி மாரியப்பன் said...

ஊசியை கண்டு பயப்படாத உங்க வீரத்தைப்பாராட்டி ஒரு விருது கொடுத்திருக்கேன்.

http://amaithicchaaral.blogspot.com/2010/05/blog-post_28.html

நறுமுகை said...

வாழ்த்துக்கள் தொடருங்கள்..

அன்புடன்

www.narumugai.com

குடந்தை அன்புமணி said...

புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்' பும் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி. தலைப்பு 'மலையரசியின் எழில் அழகு' (சூழலியல் சார்ந்து) தொடர்புக்கு- 9443751641

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஊசின்னா எல்லாருக்கும் பயம் தான்... பயம் இல்லைனாத்தான் "என்ன ஆச்சு?" னு சந்தேகப்படனும்... இந்த விசியத்துல நானும் உங்க கட்சி தான்