September 9, 2010

ஹரித்வார் - நினைவுக்குறிப்பு

சோம்பேறித்தனத்துக்கு ஒரு அளவு இருக்கிறதா? ஒரு விசயத்தை தள்ளிபோடுவதுக்கும் ஒரு அளவு இருக்கிறதா ? என் அளவில் இதற்கெல்லாம் அளவே இல்லை. போனவருடக் கடைசியிலிருந்து இந்தவருட ஆரம்பம் வரை (அதான் புத்தாண்டு விடுமுறை நாட்கள் ) செய்த சுற்றுப்பயணத்தின் சிறுநினைவுக்குறிப்பை இப்பொழுது தான் பதியப்போகிறேன். இப்போதும் எழுதவில்லை என்றால் அடுத்த பயணத்திட்டம் போடப்படுமா என்பது கேள்விக்குறியாகிவிடும் போல.. :)

டேராடூன் எக்ஸ்ப்ரஸில் ஹரித்வார் சென்றோம். ஐய்யப்பன் கோவிலில் தங்குவதாக ஏற்பாடு. ரயில்நிலையம் அருகில் தான், 5 -10 நிமிட நடை தூரம். கணவர் வேறுவேலையாக ஹரித்வார் சென்றிருந்த போது பேருந்தில் ஒரு தமிழர் நண்பரானார் .அவர் மூலம் தான் ஐய்யப்பன் கோயிலில் தங்கும் அறைகள் இருப்பதும் அது மிகக்குறைந்த பட்ஜெட்டில்(150ரூ ன்னு நினைக்கிறேன்) ஆனால் ஹரித்வாரின் மையப்பகுதி. (இப்படி இடத்தில் தங்க வருத்தப்படாத மனசுக்கு அடுத்த மாதமே ஒரு நாள் வாடகை 17,000 என்கிற ஹோட்டலில் இலவசமாய் தங்கும் வாய்ப்பும் வந்தது) அருகில் குஜராத் சமாஜம் தங்கும் விடுதி ஒரே ஆரவாரமாக இருந்தது.

இவர் தான் சிவ்மூர்த்தி . ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தால் இடதுபுறம் திரும்பிய சாலையில் சிறிது தூரத்தில் இருக்கிறார். சிவ்மூர்த்திக்கு வலது பக்கம் சந்தில் தான் ஐய்யப்பன் கோயில். சிவ்மூர்த்தி அருகில் ’அகர்வால் போஜனாலாயா’ அங்கிருந்த நாட்கள் முழுதும் எங்களுக்கு உணவளித்து காத்தவர். ஆலுபராத்தா , ரொட்டி , தால்மக்கனி, ராஜ்மா சாவல் , தயிர் இது தான் எங்கள் மெனு. நல்ல கவனிப்பு.. சின்ன ஹோட்டல். ஊரில் அகர்வாலுக்கு தெரியாமல் துரும்பு அசையாது என்பது போல அட்டகாசமான பேச்சு அவருடையது .

காலையில் இரண்டு மின்சார கொதிகலனில் வெந்நீர் சுட்டுக்கொண்டிருக்கும் வேண்டிய அளவு எடுத்துக்கொள்ளலாம். குளித்து விட்டு ஐய்யப்பனை தரிசித்தோம். கொள்ளை அழகு அவர். மகளும் அடுத்த வாரிசாக “ அம்மா அந்த கடைசி சன்னதியில் அனுமனை கவனிச்சியா? மேலே தோளில் ராமனும் லக்‌ஷ்மணனும் இப்படி எங்கயும் பாத்தது இல்லைல்ல” என்றாள். ஆமாம் அவ்ளோ அழகு . ஆனால் நின்றெல்லாம் ரசிக்கமுடியாமல் காலில் குளிர் தாக்கியது.

கோயிலிலும் உணவு கிடைக்கும். தென்னிந்திய உணவு வேண்டுபவர் முன்பே பதிந்து கொண்டால் நமக்கும் சேர்த்து செய்துவிடுவார்கள். எங்களுக்கு வடநாட்டு உணவு தான் வேண்டுமென்பதால் பதிந்து கொள்ளவில்லை.

பிறகு ஒரு பட்பட் ஆட்டோ எடுத்துக்கொண்டோம் . இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஹரித்வார் பற்றிய குறிப்புகளிலிருந்து வழிகாட்டியாக எடுத்துப்போன பிரிண்ட் அவுட்களில் அருகில் இருக்கும் ஆசிரமங்களுக்கும் கொஒயிலுக்கும் அழைத்துச் செல்ல சொன்னோம். முதலில் கீதா பவன். நான்கு வேதங்களை கைகளில் ஏந்தியபடி கீதாமாதா நிற்கிறாள். இங்கும் தங்கும் அறைகள் இருக்கின்றன.

பார்தேஷ்வர் மந்திர். பாதரச லிங்கம் .. கோயிலில் ஒரு சாமியார் படம் இருந்தது இவரை டிவியில் பார்த்திருக்கோமே என்று நினைக்கும் போதே பெரிய காரில் வந்து இறங்கினார். அவர் வழிபட்டு கிளம்பிய பின் நாங்கள் சென்று வழிபட்டோம்.அவர் பெயர் ஸ்வாமி அவதேஸானந்தா?! இந்த கோயிலில் மிகப்பெரிய ருத்ராட்ச மரம் உள்ளது.

மகா ம்ருத்ஜ்யர் இருக்கிறார்.


கோயிலின் தூண்களில் அழகான வேலைப்பாடுகள்.

27 comments:

Chitra said...

படங்களும் பயண கட்டுரையும் நல்லா இருக்குதுங்க.... சூப்பர்!

செல்வா said...

ஓ ,, தமிளிஷ்ள இணைங்க.. vote போட போனா submitனு கேக்குது ..!!

செல்வா said...

//இப்படி இடத்தில் தங்க வருத்தப்படாத மனசுக்கு அடுத்த மாதமே ஒரு நாள் வாடகை 17,000 என்கிற ஹோட்டலில் இலவசமாய் தங்கும் வாய்ப்பும் வந்தது)///

17,000 ரூபாயா ..?
படங்களும் கட்டுரையும் அருமை அக்கா ..!! முக்கியமாக படங்கள் அழகாக உள்ளது ..!

டுபாக்கூர் பதிவர் said...

இந்த பதிவை நான் படிக்கலை, படிச்சா வருமே பொறாமை அதெல்லாம் எனக்கு வரவே இல்லை....!

துளசி கோபால் said...

ஆஹா.... தொடங்கியாச்சா!!!!

நல்லா இருக்கு. நான் ருத்ராட்ச மரம் பார்த்ததே இல்லை.

சாந்தி மாரியப்பன் said...

சூப்பர்ங்க.. கட்டுரையும் சபரியும் :-))

ராமலக்ஷ்மி said...

படங்கள் கொள்ளை அழகு. குறிப்பாக சிவமூர்த்தி, பாதரசலிங்கம்.

நினைவிலிருந்து 'மீட்டு'த் தந்த குறிப்புகளும் அருமை! நன்றி. இனிமேல் உடனுக்குடன் பகிர்ந்திடுங்கள்:)!

settaikkaran said...

ஹும், திட்டம் போட்டபடி எல்லாம் நடந்திருந்தா, நானும் ஹரித்வார் வந்து நீங்க சொன்ன இடமெல்லாம் பார்த்திட்டு, அப்படியே ஸ்ரேயாவோட ஜென்மஸ்தலத்தையும் பார்த்துக் கன்னத்துலே போட்டுட்டு வந்திருப்பேன். பரவாயில்லை, உங்க இடுகையைப் பார்த்து, ஆறுதலா இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சித்ரா இதுல தொடரும் போட விட்டுபோச்சு :)
-------------------
செல்வக்குமார் இணைச்சிட்டேன் தமிழீசில் நன்றி..
ஆமா 17,000 தான் சொன்னாங்க அது 'அப்பறம் கதைகள்'ள வரும் (நன்றி:துளசி)
------------------
வாங்கய்யா டுபாக்க்கூர்.. எனக்கு கூட நீங்க காருல போய்க்கிட்டே லாப்டாப்புல இருந்தோ அல்லது போன்ல இருந்தத பதிவு போடறமாதிரி மொபைல் பதிவு எழுதனும்ன்னு ஆசை அதுக்காக பொறாமையா படறேன்.. சரி சரி படிங்க தொடர்குறிப்பாக்கும்.
:)
------------------------
துளசி நிறைய இருக்க்கு ஹரித்வாரில் ருத்ராக்ஷ மரம்.
அதுக்குள்ளயா பின்ன... நீங்க ஹரித்வார் போறதுக்குள்ள எழுதிடனும்ன்னு நேத்து தான் நினைச்சிக்கிட்டேன். அப்பறம் லேடி விஜயகாந்த் மாதிரி நீங்க புள்ளிவிவரத்தோட போடற பதிவு படிக்கனுமே ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அமைதிச்சாரல்.. ;)
----------------------------
ஆமா அப்பயே எழுதிரணும் ராமலக்ஷ்மி ,ஆனா பழக்கம்ன்னு ஒன்னு
இருக்குல்ல:)
-------------------
சேட்டை அந்த ஷ்ரேயா ஜென்மஸ்தலம் விட்டுப்போச்சேங்க பாக்க..:)

துளசி கோபால் said...

அது என்னப்பா ஷ்ரேயா ஜென்மஸ்தலம்?

புனித கங்கையில் மிதந்து வந்துச்சா பொண்ணு?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சேட்டை தான் ஸ்தலவரலாறு ஜியாகரபி எல்லாம் போய்வந்து சொல்லனும்.. அவருடைய பாஸ்
சீக்கிரம் பிசினஸ் டிரிப் போட்டு சுத்திக்காண்பிச்சா தான்தெரியும்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

பயணக்கட்டுரை மிக அருமை.

settaikkaran said...

//அது என்னப்பா ஷ்ரேயா ஜென்மஸ்தலம்?//

இப்படிக் கேட்டுட்டீங்களே? என் அபிமான நடிகை ஸ்ரேயா பிறந்த ஊருங்க ஹரித்வார்! :-)

11-09-2010 அன்று தலைவி ஷ்ரேயாவுக்கு பிறந்தநாள்! மறந்திராதீங்க!

கோமதி அரசு said...

ஹரித்வார் -நினைவுக் குறிப்பு நல்லா இருக்கு.

நாங்கள் ஹரித்வாரில் நீங்கள் பார்த்த இடங்கள் பார்க்கவில்லையே.

//அம்மா அந்தகடைசி சன்னதியில் அனுமனை கவினிச்சியா?//

அடுத்த வாரிசாக மகள் /

அருமை.வாழ்க வளமுடன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

படங்களும் பயண கட்டுரையும் நல்லா இருக்கு...

அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..

கோபிநாத் said...

:))

அம்பிகா said...

அழகான படங்களும், பயணக் கட்டுரையும். நல்ல பகிர்வு.

dogra said...

நல்ல கட்டுரை

ADHI VENKAT said...

பயணக்கட்டுரை அருமையாக இருந்தது. நான் ஹரித்துவார் போகும் போது இந்த இடங்களை எல்லாம் மறக்காமல் பார்க்கிறேன்.

விக்னேஷ்வரி said...

சூப்பர் பதிவுன்னு நினைச்சுட்டு வரும்போது, சட்டுன்னு பதிவு முடிஞ்சிடுச்சு. ஏன் இந்த சிக்கனம்?

மங்கை said...

இத்தனை நாள் கழிச்சும் நியாபகம் வச்சுட்டு எழுதறீங்களே....அதுவே பெரிய விஷ்யம்....அழகா இருக்கு

'பரிவை' சே.குமார் said...

பயணக்கட்டுரை அருமையாக இருந்தது.

படங்கள் கொள்ளை அழகு.

வல்லிசிம்ஹன் said...

ஹரித்வார். நான் போகணும். நன்றி கயலம்மா. சாப்பாடு மெனு சூப்பர். ருத்ராக்ஷ மரம் போடலியா.

R.Gopi said...

ஆஹா...

உங்க வலைப்பக்கம் வந்து கொஞ்ச நாள் ஆச்சோ....

பயணக்குறிப்பும், அதற்கான ஃபோட்டோஸும் ரொம்ப நல்லா இருக்கு...

இந்த நினைவு மீட்டல் அருமை.... மேலும் இருந்தால், பதியவும்...

படிக்க நாங்கள் ரெடி... பதிய நீங்கள் ரெடியா??

☀நான் ஆதவன்☀ said...

செம ஃபாஸ்டுக்கா நீங்க :))
உங்க கூட சேர்ந்தா பாங்காங்க் பயணம் எழுதவே முடியாது போலயே :)

வெங்கட் நாகராஜ் said...

அப்பாடா, ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தீங்க, இப்பவாவது எழுத ஆரம்பிச்சுட்டீங்க. தொடருங்கள். படிக்க ஆவலுடன்....


வெங்கட்.