September 17, 2010

தேவி தரிசனம் -ஹரித்வார் நினைவுக்குறிப்பு

நீல்பர்வதம் .அழகான மலை. மலைமேலே இருக்கிறாள் சண்டிதேவி. ஆதி சிலையை அமைத்தவர் ஆதிசங்கரராம். கோயிலுக்கு நடந்தும் செல்லலாம். நாங்கள் ரோப் காரில் சென்றோம். செங்குத்தான மலை மேலே ரோப் காரில் போவது நன்றாக இருக்கிறது. கீழே ஒரு கம்பி வலை இருந்தது. ரோப் கார் கீழே விழுந்தால்... என்று பாதுக்காப்புக்கு வைத்திருக்கிறார்கள் போல..

சண்டிதேவி கோயில்

சண்டி தேவி கோயில் இருக்கும் மலையில் அஞ்சனைக்கு ஒரு கோயில். கால் வலிக்குதுன்னு சொன்ன குட்டிப்பையன் 'ஹனுமான் சாலிசா பாடுவியே? அஞ்சனிபுத்ர பவனு சுத நாமா ன்னு அந்த ஹனுமானோட அம்மா அஞ்சனி இருக்காங்க அந்த கோயிலில்' என்றதும் எங்களுக்கு முன்னால் நடக்க ஆரம்பிச்சிட்டான்.. சின்ன கோயிலில் அஞ்சனை மடியில் சின்ன ஹனுமான்.



மானசி தேவியும் இன்னோரு மலையில் இருக்காங்க நீங்க வரிசையில் நிக்கவேண்டாம் என்று , இரண்டு கோயில் ரோப்காருக்கும் சேர்ந்தாப்ல டிக்கெட் வாங்கிக் கொண்டுவந்திருந்தார் பட் பட் ஆட்டோக்காரர். ரோப்காருக்காக கொஞ்சம் வரிசை இருக்கத்தான் செய்தது.

மானஸி தேவி கோயில் கடைகளில் வெள்ளிநிறக் குடையும் பூக்களும் அலங்கரிக்கப்பட்டு விற்பனைக்கு.

மான்ஸி தேவி கோயிலிலிருந்து கீழே இறங்கும் போது ஹரித்வாரின் முழு அழகையும் ரசிக்கலாம்.

மாயா தேவி மந்திர் இதுவும் மிகப்பழமையான ஒரு கோயில். சித்தப்பீடக் கோயில்களின் ஒன்னுன்னு சொல்றாங்க.. சதியோட உடலின் ஒரு பாகம் விழுந்த இடம்.

கங்கைக் கரையோரமாக நடந்து கொண்டே காலையில் பட்பட் ல் போகும் போது கண்ணில் பட்ட நம்ம தென்னிந்திய கோபுரத்தைத் தேடிப்போனோம். கங்காமாதா கோயில் தான். கும்பகோணத்து ஐயர் ஒருவர் இருந்தார். சாயரட்ச பூஜைக்கு நாங்கள் தான் இருந்தோம்.


இந்த படம் மொபைல் போனில் எடுத்ததால் தெளிவு இல்லை.. இப்படி தேவி தரிசனத்தோடும் கங்கை தரிசனம் செய்துவிட்டு கங்கா ஆரத்தி நடக்கும் ஹர்க்கி பௌரிக்கு கிளம்பினோம் .. தொடரும்..

23 comments:

settaikkaran said...

பரவசமூட்டும் அனுபவம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

படங்கள் அருமை.

Chitra said...

nice photos. nice post. :-)

ராமலக்ஷ்மி said...

//கால் வலிக்குதுன்னு சொன்ன குட்டிப்பையன் 'ஹனுமான் சாலிசா பாடுவியே? அஞ்சனிபுத்ர பவனு சுத நாமா ன்னு அந்த ஹனுமானோட அம்மா அஞ்சனி இருக்காங்க அந்த கோயிலில்' என்றதும் எங்களுக்கு முன்னால் நடக்க ஆரம்பிச்சிட்டான்..//

க்யூட்:)!

//சின்ன கோயிலில் அஞ்சனை மடியில் சின்ன ஹனுமான்.//

ஆகா!

நல்ல பகிர்வு முத்துலெட்சுமி.

ஹேமா said...

பகிர்ந்துகொண்டீர்கள் அக்கா.அழகும் அனுபவமும் நிறைவான பதிவு.நன்றி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அருமையான பதிவு... படங்களும் கூட

கால்கரி சிவா said...

முனகிக் கொண்டே போனேன் கங்கையில் முங்கி எழுந்ததும் முழுமனிதன் ஆனேன். ஜூனில் நான் அனுபவித்த பரவசம் இன்னும் என்னுள் மீந்திருக்கிறது.

பார்க்க

http://www.youtube.com/watch?v=zHQ9h_aUTLo

துளசி கோபால் said...

Everything noted;-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

சென்றதில்லை... ஆனால் படிக்கும் பொது அங்கிருப்பது போன்றொரு உணர்வு..

கோபிநாத் said...

ரைட்டு...;)

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்குக்கா.. கொஞ்சம் பெருசா தான் எழுதுறது :) பத்து பதினைஞ்சு தொடரா போடுற ஐடியாவாக்கா? :)

அம்பிகா said...

நாங்களும் கூட வந்த உணர்வு. நல்ல பகிர்வு, படங்களும்

சாந்தி மாரியப்பன் said...

அலங்கரிச்ச குடையும் பூக்களும் விற்பனைக்குன்னா ஏற்கனவே சாமிக்கு படைக்கப்பட்டதா, அல்லது அர்ச்சனைத்தட்டு பொருட்களா....

செல்வா said...

வழக்கம் போலவே படங்கள் அருமை ..!!
நல்லா இருக்கு அக்கா .!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சேட்டை உண்மையில் ரிஷிகேஷ் தான் பரவசமா இருந்தது இதைவிடவும்:)
------------------
நன்றி புவனா என்னோட அக்கவுண்ட் ல நிறைய படம் வைக்க முடியல அதனால் தான் கொஞ்சம் மட்டும் ஏற்றுகிறேன்..
-------------------
நன்றி சித்ரா..:)
--------------------
ஹனுமான்னா அவ்ளோ பிடிக்கும் ராமலக்ஷ்மி ,
குட்டிப்பையனுக்கு..
-----------------------
நன்றி ஹேமா
:)
--------------------
தொடர்வதுக்கு நன்றி நசரேயன் :)
------------------------
நன்றி அப்பாவி :)

---------------------
கால்கரி சிவா.. நாங்கள் இம்முறை கங்கையில் குளிக்கவில்லை .ஜனவரி மாதத்துக்கு
குளிர் எங்களை மிரட்டியது. அடுத்தமுறை போகவேண்டும் ..
நன்றி
--------------------
துளசி நோட் செய்துக்கிட்டீங்கள்ளா
விவரமா ப்ராஜக்ட் ரிப்போர்ட் ரெடி செய்து பதிவேற்றிடுங்க :)
--------------------
நன்றி வெறும்பய :)
-----------------------
நன்றி கோபி
:)
------------------
ஆதவன் நீட்டமா எழுதினா நான் நாளைக்கு திரும்ப படிக்கவேணாமா அதான்.. எனக்கு இப்பவே பொறுமை போயிட்டிருக்கு
வரும் காலத்துல நான் படிக்கத்தானே எழுதி வைக்கிறேன் :))
----------------------
வாங்க அம்பிகா :)
நன்றி
--------------------
அமைதிச்சாரல் அர்ச்சனை தட்டுங்க தான்ப்பா :)
-----------------------
நன்றி செல்வக்குமார்..:)

வல்லிசிம்ஹன் said...

குட்டிப் பையனுக்கு ஹனுமான் அவ்வளவு இஷ்டமா?படங்களும் பதிவும் அங்கே போய் வந்த உணர்வைக் கொடுக்கிறது கயல்.

ஆயில்யன் said...

//மானஸி தேவி கோயில் கடைகளில் வெள்ளிநிறக் குடையும் பூக்களும் அலங்கரிக்கப்பட்டு //

ரொம்ப் அழகா இருக்கு!

ADHI VENKAT said...

படங்கள் அருமை. குட்டிப் பையன் ஹனுமான் சாலிஸா சொல்வானா ரொம்ப சமத்து.

'பரிவை' சே.குமார் said...

படங்களும் பதிவும் அருமை.

Muruganandan M.K. said...

அருமையான ஊர் உலா வந்த நிறைவு கிடைத்தது. நன்றி

மாதேவி said...

ரோப் காரில் சென்று தர்சனம்... ஆகா

Unknown said...

நான் டெல்லிக்கு வந்து ரெண்டு வருஷமாகப் போகுது. ஹரித்வார்,ரிஷிகேஷ் எல்லாம் இன்னும் போனதில்லை.உங்களது பயணம் எனக்கும் போவதற்கு ஒரு வழிகாட்டியா இருக்கும்னு நம்பறேன். நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அருமை. மான்சா தேவி, சண்டி தேவி கோவில்கள் செல்வது ஒரு பரவசமான அனுபவம். பகிர்வுக்கு நன்றி.

வெங்கட்.