September 20, 2010

கங்கா பூஜா அவுர் பேட் கி பூஜா



கங்கைக்கு விளக்கேற்றி வழிபட பூக்களும் நெய்விளக்கும்..

காசி ஆரத்தி அளவு இல்லை ஆனால் ஹரித்வார் ஹர்கிபௌரியில் நல்ல கூட்டம். கரையை ஒட்டிய சிகப்பு நிற கங்கா மாதா கோயில். கங்கையின் மத்தியில் ஒரு படித்துறை கட்டி ஆரத்தியை எதிர்புறத்திலிருந்தும் பார்க்க வசதி செய்திருக்கிறார்கள்.

மணிக்கூண்டுக்கு பக்கத்தில் ஒரு மேடையில் ஆதிசங்கரரும் அவருடைய சீடர்களும்

ஹர்க்கிபௌரியில் கூட்டம் சேரத்தொடங்கியதும் , நீல நிற சீருடையில் இருப்பவர்கள் சிலர் கூட்டத்தை ஒழுங்கு படுத்தியபடி அன்னதானம் பற்றி கூறி நன்கொடை கேட்கிறார்கள். ஒரு குழுவை 'இங்க ஒக்காரு அங்க உக்காரு' என சொல்லிவிட்டு அவர்களுக்குள் பிரித்துக்கொள்வார்கள் போல..


ஆற்றில் ஒரு பக்தர் குழந்தையைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்தார். அந்தக்குளிர் மாதத்தில் மாலைநேரக்காற்றில் கங்கையும் என்ன குறைச்சலா பனிக்கட்டியாக வருகிறாள். அச்சிறுவனின் உடம்பின் ஒவ்வொரு எலும்பையும் நாங்கள் எக்ஸ்ரே இல்லாமலே பார்த்தோம்.. ரெண்டு செம்பு தான், ஓடிவிட்டான். கூட்டம் எக்கச்சக்கமாக சேர்ந்ததும் ஒரு தள்ளுமுள்ளு நடந்தால் என்று ஆற்றின் நடுவில் உட்கார்ந்திருக்கும் போது சற்று பயம் வந்தது. மக்களுக்கு அளவுக்கு மீறி பக்தி வரும். பக்திக்கு மீறி சில சமயம் உயிர் பயம் வருமே..

உட்காருவதற்கு என்று பளபளவென மன்ச் ஃபைவ்ஸ்டார் போன்றவற்றின் மேலட்டைகளுக்கு பயன்படுத்தப்படும் காகிதங்களை விற்றபடி இருந்தார் ஒரு தாத்தா. 5 ரூபாயாம். அவருக்காக வாங்கிக்கொண்டோம். எல்லாம் சீனாவிலிருந்து வருகிறது. டூப்ளீகெட் தயாரிக்கவா இருக்குமோ..!!


ஆரத்தி பாடல் ஒலித்தது. இங்கிருந்தே தெரிந்தவரைப்பார்த்தோம். (மறுநாள் ரிஷிகேஷில் பார்த்த ஆரத்தி இதை விட மிக நன்றாக இருந்தது)




ஹரித்வாரில் இருந்த வரை தினம் அகர்வாலில் சாப்பாடுக்கு பின்னர்... ஐய்யப்பன் கோயில் சந்தில் ஒரு மட்கி(சின்னமண்க்கலயம்) பால் ,கொஞ்சம்போல் ஏடுவிட்டு..

பின்னர் ஊறவைத்த சென்னாவில் சாட் மசாலா.. ஆகா அந்த குளிருக்கும் அதன் ருசிக்கும் நினைக்கவே நா ஊறுகிறது.

முக்கிய சாலையில் ஷிவ் மூர்த்தி தாண்டியதும் ஒரு திரையரங்கம் இருக்கிறது. நாங்கள் போயிருந்த போது '2012 'ஓடிக்கொண்டிருந்தது. மாலை நேரத்தில் அங்கே நம்ம ஊரு பையன் ஒருத்தர் தோசைக்கடை போடுகிறார். நல்ல வியாபாரம். ஒரு நாள் அதையும் ருசிப்பார்த்தோம். மசாலா வெங்காயம் தூவிய தோசைகள்.

காலையில் குஜராத் சமாஜம் எதிரில் இஞ்சி டீ. ஒரு குத்து இஞ்சியை கல்லால் நசுக்கி போட்டால் குளிர் ஓடிப்போச்..அவருக்கு அருகிலேயே இன்னோருவர் டோக்ளா விற்கிறார். எனக்கு அது பிடிக்காது அதனால் வாங்கவில்லை..அது நம்ம ஊரு இட்லிக்கு மஞ்சள் கலர் அடித்தது போன்ற சுவையில் இருக்கும். காலங்கார்த்தால கடலை மாவை உருண்டையா உருட்டி அதை ஒரு கையால மரப்பலகையில் அழுத்தி நீட்டமா பாம்பு சட்டையாட்டம் தேச்சுவிட்டு அதை அப்படியே தூக்கி எண்ணையில் போட்டு பொரிச்சு எடுத்து நீட்டறார். அதை தொன்னை தொன்னையா வாங்கி சாப்பிடறாங்க..
அடுத்து ரிஷிகேஷ் போலாம்...

பின்.குறிப்பு{கங்கா பூஜா அவுர் பேட் கி பூஜா- பூஜான்னா 'நான் கடவுள்' பூஜா இல்லை.. கடவுளுக்கு செய்கிற பூஜை..
பேட் - வயிறு}

39 comments:

☀நான் ஆதவன்☀ said...

'2012 'ஆஆஆஆ? அதுக்குள்ள நீங்க போய் ரெண்டு வருசம் ஆச்சா? :)))

ம்ம் நல்லாயிருக்குக்கா. தொடருங்க.

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் நல்ல பகிர்வு.

சென்னா சாட் மசாலா படம் மிக அழகு.

பி.கு.. :)!

ரிஷிகேஷ் வர நாங்க ரெடி!!!

துளசி கோபால் said...

படங்கள் அருமை.

ஆமாம்.... வாசகர்களுக்கு ஹிந்தி சொல்லிதர ஆரம்பிச்சுட்டீங்க போல!!!!

நோ ஒர்ரீஸ். இனிமே யாரும் தண்டவாளத்தில் தலை வைக்கமாட்டாங்க:-)

Chitra said...

படங்களும் தகவல்களும் நல்லா இருக்குங்க....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சின்ன ஊரு தானே ஆதவன் லேட்டா வந்திருக்கும் அப்படியும் நாங்க போனது 2009 தானே :)
----------------
நன்றி ராமலக்ஷ்மி..அடுக்கடுக்கா மலை
வயல்கள்
மாதிரி அழகான செட்டப் சென்னா வுக்கு :)
-------------------
துளசி உங்க ஐடியா தானே தலைப்பு
நன்றி..:)


----------------
நன்றி சித்ரா..:)

thiyaa said...

பதிவு சூப்பர்

Anonymous said...

அந்த சாட் மசாலா என்னோட ஃபேவரைட். படங்கள் சூப்பர்

ரோகிணிசிவா said...

சாப்டறதுக்காகவே ரிஷிகேஷ் போலாம் போல இருக்கே (;
பசிய கிளப்பீடீங்க

ஹுஸைனம்மா said...

டோக்ளா எனக்கும் பிடிக்காது!! :-)))

சாந்தி மாரியப்பன் said...

கங்கா பூஜையும் பேட்கிபூஜாவும் ஒண்ணையொண்ணு மிஞ்சுதே :-))

மலாய் மார்க்கே ஏக் தூத் பார்சல்... :-))))

வெங்கட் நாகராஜ் said...

”கங்கா மையா கீ ஜெய்” - படங்களும், விளக்கங்களும் நன்று. ஒருவழியா எழுத ஆரம்பிச்சுட்டீங்க போல! இன்னும் மற்ற பதிவையும் படிச்சுட்டு வரேன்.....

வெங்கட்.

விக்னேஷ்வரி said...

தெளிவான புகைப்படங்களுடனான நல்ல கட்டுரை.

செல்வா said...

//அடுத்து ரிஷிகேஷ் போலாம்...//
கண்டிப்பா எழுதுங்க ..
படங்கள் வழக்கம் போலவே அருமை ...!!

அம்பிகா said...

படங்களுடன் நல்ல பகிர்வு.
கங்கா விளக்கு அழகாயிருக்கு.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. புகைப்படங்களும் அருமை. எனக்கு டோக்ளா பிடிக்கும். புளிப்பும், இனிப்பும் கலந்ததாய் இருக்கும்.

"உழவன்" "Uzhavan" said...

//பூஜான்னா 'நான் கடவுள்' பூஜா இல்லை//
 
:-))

வல்லிசிம்ஹன் said...

பேட் கி பூஜா இல்லாம நாங்க வேற எதையும் செய்ய மாட்டோமே.:)
படங்களும் விளக்கமும் அருமை கயல்.
நீங்கள் பார்த்த கங்கை சுத்தமாகத் தெரிந்தாளா. இல்லை எல்லாரும் சொல்கிற மாதிரிதானா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை.

நிகழ்காலத்தில்... said...

படங்கள் நல்லா வந்திருக்கு, கட்டுரையும் நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்துகிறது :)

கோமதி அரசு said...

உங்கள் நினைவாற்றலை பாராட்ட வேண்டும். 2009ல் போனதை இன்று தான் போனது போல் எழுதியதிற்கு.

Thamiz Priyan said...

சென்னா சாட் மசாலா... ம்ம்ம்ம்ம்.. :)
पेट कि पूजा... ;-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தியாவின் பேனா :)
---------------------------
நன்றி சின்னம்மிணி :)
-------------------
ரோகிணி இது ஹரித்வார் ..:)
---------------------
ஹுஸைனம்மா என் இனமா நீங்க :)
-----------------------
பார்சல் அனுப்பிடலாம் அமைதிச்சாரல்..
வீட்டுல பால் எடுத்துவச்சிட்டு மறந்துடுவேன்
ஆனா அங்க டையத்துக்கு சரியாக அடுத்தடுத்து
எலலாம் சாப்பிட்டுட்டு அப்படியே போய் குளிருக்கு
ரஜாயைப்போத்திட்டு நல்ல தூக்கம்.. :)
-----------------------------
கங்கா மையாக்கீ ஜெய் ..
நன்றி வெங்கட் பழய பதிவெல்லாம் வேற
ஒன்னு விடாம படிச்சிருக்கீங்க..
:)
-------------------
நன்றி விக்னேஷ்வரி :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

செல்வக்குமார் நன்றி :)
----------------
நன்றி அம்பிகா :)
------------------
நன்றி ஆதி.:) .. டோக்ளா எங்க அப்பா
வந்தா வாங்குவாங்க..
--------------------
உழவன் :) நன்றி
---------------------
வல்லிம்மா சரியாச் சொன்னீங்க
எங்க போனாலும் அதுக்கு சரியா செய்துடனமே..
:)
கங்கை நல்ல சுத்தமாத்தான் இருக்கா.. கொஞ்சம் கூட்டமான படித்துறைகள் அழுக்கா இருக்கும்.
-------------------
நன்றி புவனேஸ்வரி )
------------------
நிகழ்காலத்தில் .. நன்றிங்க:)
------------------
கோமதிம்மா... அடுத்தநாள் போன ஒரு கோயிலை ஹரித்வாரில் இருக்கிறதா எழுதி முடிச்சிட்டுபப்ளிஷ் செய்யும்முன்ன அட இது ரிஷிகேசாச்சேன்னு கட் செய்தேன் ..அவ்ளோ ஞாபகசக்தி :))
----------------
நன்றி தமிழ்பிரியன் ..ஹிந்தி
பண்டிட் நீங்க :)

Muruganandan M.K. said...

ஹரித்வார் ஹர்கிபௌரியில் ஆற்று நீர் அலைமோதுவதும், ஏனைய படங்களையும் பார்த்து ரசித்தேன்.

கோபிநாத் said...

பின்குறிப்பு ;))))

மாதேவி said...

கங்கை ஆரத்தி.ஏட்டுப்பால்,சன்னா என இனியபயணம்.

சிங்கக்குட்டி said...

பாத்துங்க முத்துலெட்சுமி.

கலாச்சார காவலர்கள் உங்கள் தலைப்பை தமிழ் பதிவில் பார்த்து கொதித்து தார் பூச போறாங்க :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபி
:)
-----------
நன்றி மாதேவி :)
-----------
நன்றி சிங்கக்குட்டி.. :) அதெல்லாம் அந்தக்காலமில்லயா..இன்னுமா தார் பூசரானங்க..

'பரிவை' சே.குமார் said...

படங்களும் தகவல்களும் நல்லா இருக்கு...

callezee said...

First time i heard a new pooja like this..awesome..

geetha santhanam said...

நல்லா எழுதியிருக்கீங்க. வட இந்தியாவிலிருந்துகொண்டு டோக்ளா எப்படி பிடிக்காமல் போச்சு? நல்ல குஜராத்தி ஹோட்டலாகச் சாப்பிட்டுப் பாருங்கள்; பின்னர் விடமாட்டீர்கள்.--கீதா

ப.கந்தசாமி said...

என்னங்க இந்த அநியாயம்? பத்ரிநாத் தரிசனம் முடித்துவிட்டு ஹரித்துவார் பற்றி எழுதலாம்னு இருந்தா, நீங்க முந்தீட்டிங்க. இது அளுக்கானி ஆட்டமுங்க. நான் எங்க தாத்தா கிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ணப்போறேன்.

Unknown said...

நான் டெல்லிக்கு வந்து ரெண்டு வருஷமாகப் போகுது. ஹரித்வார்,ரிஷிகேஷ் எல்லாம் இன்னும் போனதில்லை.உங்களது பயணம் எனக்கும் போவதற்கு ஒரு வழிகாட்டியா இருக்கும்னு நம்பறேன். நல்ல பகிர்வு.அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

எனக்கும் ஹிந்தியில் இருக்கும் தலைப்பு என்னனே முதலில் புரியலே முத்து..கடைசி வரி படிச்சு தான் புரிஞ்சுட்டேன்...ரெண்டுநாளைக்கு முன்னாடி இந்த தலைப்பை படிச்சேன் தமிழ்மணம் னு நினைக்கிறேன்..புரியாத மொழியில் இருக்கவும்,ஹிந்தி பட விமர்சனம் போலே:-)) ன்னு நினைச்சுட்டேன்..இப்போ தான் புரிஞ்சது..படங்கள்,உங்கள் அனுபவம் எல்லாமே ஏதோ நானும் உங்ககூட போயிட்டு வந்தமாதிரி இருந்தது..நல்லா பதிவு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டாக்டர் முருகானந்தன்.. செய்திகளில் நாங்கள் நின்று பார்த்த ஹர்கிபௌரி எல்லாம் கங்கையின் வெள்ளத்தில் தற்போது மூழ்கி இருக்கிறதாம்..
-----------------------------
நன்றி குமார் :)
--------------
call2zee என்னங்க வயிற்றுக்கு படைப்பதையா தெரியாதுங்கறீங்க
மூன்று காலமும் செய்கிறமே :)
-------------------------
கீதா குஜராத் எல்லாம் டில்லிக்கு ரொம்ப தூரம்ன்னு பிடிக்கல போல.. :)
-----------------------
வாங்க முனைவர் கந்தாசாமி..அட நமக்கு முன்ன பலர் எழுதி இருக்காங்களே
அதுக்கெல்லாம் கவலைப்படாம நம்ம நம்ம அனுபவத்தை எழுதுவோம் ;)
---------------------
ஜிஜி மெதுவா போய்ட்டுவாங்க .. :) நாங்களும் 12 வருசம் கழிச்சித்தான் போய்வந்தோம்.
-------------
வாங்க ஆனந்தி.. ஹிந்தி சினிமான்னு நினைச்சீங்களா
சரியா போச்சு.. :)

Anonymous said...

அட..கலக்கலான் ஃபோட்டோக்கல்..அருமையான வர்ணணை..நாக்கில் நீர் ஊற செய்யும் ஃபுட்ஸ்

மங்கை said...

சொன்ன மாதிரி இத்தனை இவ்ளோ நாள் நியாபகம் வச்சுட்டு எழுதறதே பெரிய விஷ்யம்....அதுக்கு ஒரு சபாஷ்

சி.பி.செந்தில்குமார் said...

ஆப் கி பதிவு தூள் ஹை

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் நல்ல பகிர்வு.