February 2, 2011

காற்றுவெளியில் ஒரு கவிதை


காற்றுவெளி இணைய இதழில்   என்  கவிதை மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இதழின் பிற பக்கங்களையும் இங்கே வாசியுங்கள். முழு திரை என்று க்ளிக் செய்து இதழை ஒவ்வொரு பக்கமாக வாசிக்கலாம்..

சிதல் அரிக்கும் நாட்கள்

சிதல் அரிக்கும் நாட்கள்
பாதிவழியில் திரும்புவதே
வழக்கமாகி விடுகிறது.
ஒவ்வொரு முறையும்
பிழைகள் எதிர்கொண்டு
பின்னங்களில் வெற்றியாய்
திருப்பி அனுப்பும்
முடிவில்லா
வாழ்க்கைக்கணக்குகள்

சென்று மீண்ட வழிகளின்
பள்ளங்கள் மேடுகள்
பழகியென்ன?
தடைகளாய் முளைக்கிறது
உதவிக்காய் கொணர்ந்தவைகள்

கண்ணாடிச் சுவர் மீது
சப்தமெழுப்பும் வழி தேடல்
முடிச்சவிழ்க்க அவிழ்க்க
வளரும் ரகசியங்கள்
மாதங்களை வருடங்களை
இரக்கமில்லாமல்
உறிஞ்சியபடி
நாட்களில் புயற்கண் அமைதி




*சிதல் - கரையான்

28 comments:

ராமலக்ஷ்மி said...

காற்றுவெளியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.

அருமையான பொருள் கொண்ட வரிகள்.

Chitra said...

nice...

Congratulations!!!

பா.ராஜாராம் said...

கரையான்-னே சொல்லி இருக்கலாம். எங்களுக்கெல்லாம் புரியற மாதிரி. :-)

மொத்தத்தில், மிக அருமை முத்து! (புயற்கண் அமைதி- fantasic!)

வாழ்த்துகள்!

பா.ராஜாராம் said...

மீள் பதிவா? இப்பதான் கவனித்தேன். :-)என்னடா எங்கையோ வாசித்திருக்கோமே என்று தட்டியது.

இப்படித்தான், பலநேரம் 'சிதல்' அரித்து விடுகிறது. :-)

பாச மலர் / Paasa Malar said...

இன்னும் நிறைய கவிதைகள் முயற்சியுங்கள் முத்துலட்சுமி....வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

காற்றுவெளியில் மிதந்த கவிதைக்கு வாழ்த்துகள் முத்துலெட்சுமி..

சுசி said...

வாழ்த்துகள் முத்துலெட்சுமி.

Thekkikattan|தெகா said...

great... vaazhthukkal! :)

ஜோதிஜி said...

உங்கள் கவிதைக்கு நன்றி.

Unknown said...

//தடைகளாய் முளைக்கிறது
உதவிக்காய் கொணர்ந்தவைகள்//
வாவ்....

வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்க்கையை சித்தரிக்கும் கவிதை வாழ்த்துக்கள் முத்துலஷ்மி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்‌ஷ்மி..

நன்றி சித்ரா


நன்றி பாரா திரும்பவும் பாராட்டினதுக்கு ரொம்ப நன்றி..:) அந்த புத்தகத்தின் பக்கத்தை என்னோட தளத்தில் சேமிப்பதற்காக இந்த பதிவு..

பாசமலர் நன்றி அது என்னவோ அடுத்தவங்களோடத படிக்கவே நேரம் சரியாப்போது இப்பல்லாம்.. முயற்சிக்கனும்..:)

சாரல் நன்றிப்பா

சுசி நன்றி

தெகா நன்றி

ஜோதிஜி நன்றி

நசரேயன் நன்றி

கலாநேசன் நன்றி

தமிழரசி நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

காற்றுவெளியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்!

மீள் பதிவு எனினும் இனித்தது வரிகள்!

கோமதி அரசு said...

காற்றுவெளியில் கவிதை வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

பாசமலர் சொன்னது போல் இன்னும் நிறைய கவிதைகள் எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்.

உயிரோடை said...

சூப்பர். கவிதை நல்லா இருக்கு

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க... கவிதைக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

அருமையான வரிகள்
காற்றுவெளியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்..

க.பாலாசி said...

நல்ல கவிதை... ‘சிதல்’ இப்போதுதான் அறிகிறேன் :-) வாழ்த்துக்களும்.

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி. தொடர்ந்து இது போல் கவிதைகள் எழுதுங்கள்.

ஆயிஷா said...

அருமையான வரிகள்.வாழ்த்துகள்.

Pranavam Ravikumar said...

வாழ்த்துக்கள்.

குட்டிப்பையா|Kutipaiya said...

வாழ்த்துக்கள்!! அருமையான வரிகள்!!

Asiya Omar said...

அருமை.வாழ்த்துக்கள்,முத்துலெட்சுமி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

காற்றுவெளியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்... Nice one...:)

மனம் திறந்து... (மதி) said...

"சிதலை தினப்பட்ட ஆலமரத்தை" நினைவூட்டியது உங்கள் கவிதை! இன்றைய நிலையில், வாழ்க்கையே அந்த ஆலமரம், மனமாட்சியை ஒதுக்கித் தள்ளி, ஓலமிட்டு ஆர்ப்பரிக்கும் பொருளாட்சியே (materialism) சிதலை என நான் நினைக்கிறேன்!

நிலாமகள் said...

வழக்கொழியும் அழகு தமிழ்ச் சொற்களை மீட்டெடுக்க வேண்டியதான சிறு முயற்சியாய் வெளிப்பட்ட 'சிதல்' நன்று. இறுதிப் பத்தியின் வரிகள் மனச் சுவரை ஓசை எழுப்பியபடி இருக்கிறது தோழி...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெங்கட் நன்றி :)
----------------------------------
கோமதிம்மா நன்றி கண்டிப்பாக முயல்வேன்:)
-----------------------------
லாவண்யா நன்றி :)
------------------------
கருணாகரசு நன்றி :)
--------------------
மலிக்கா நன்றிங்க:)
-----------------------------------
க.பாலாசி நன்றி ..சிதல் பல பழைய பாடல்களில் உள்ளதுப்பா
-----------------------------------
சே.குமார் நன்றி:)
---------------------
ஆதி முயற்சிப்பேன் நன்றிப்பா:)
-----------------------
மாதேவி நன்றி :)
--------------------
ஆயிஷா நன்றி :)
---------------------
ரவிக்குமார் நன்றி :)
------------------------
குட்டிப்பையா நன்றி:)
-------------------------------
ஆசியா நன்றீ :)
----------------------------
அப்பாவி நன்றி :)
-------------------
மதி நல்ல உவமை சொன்னீர்கள் நன்றி..
-------------------
நன்றி நிலாமகள் ..உண்மை வழக்கொழியும் தமிழ்சொற்களை மீட்டெடுக்க முயல்வோம்..