February 28, 2011

மூங்கிலில் பூத்து தொங்குது பூ


அமைதிச்சாரல் வீட்டுத்தோட்டம் பற்றி பதிவிட்டிருந்தார்கள். அப்போது நான் பார்த்த மூங்கில் குழாய் தொட்டி பற்றி பின்னூட்டமிட்டேன். அதைப் புகைப்படமாக எடுத்துக் காண்பிக்குமாறு கேட்டிருந்தார்கள். நேற்று கடைத்தெரு பக்கம் போனேன். கைபேசியின் மூலமே புகைப்படமெடுத்து வந்தேன். இரவு வெளிச்சமென்பதால் சுமாராகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு ஐடியாவிற்கு இங்கே.மூங்கில் குழாயில் ஒரு பட்டை மட்டும் நீக்கிவிட்டு  அதில்  மண் நிரப்பி பூந்தொட்டியாக்கி  பூக்களை  பதியனிட்டு  அதை இப்படி தொங்கவிட்டிருந்தார்கள் கடை வாசலில்...

இணையத்தில் தேடும்போது கிடைத்த படத்தை  பாருங்களேன் ஆகா..


நன்றி ராமலக்‌ஷ்மி :)

இந்த ஐடியாவை சீக்கிரம் நானும் செய்து பார்க்க ஆசைப்படுகிறேன்.


எனக்குமூங்கிலென்றால் ரொம்ப பிரியம். வீட்டுல சோபா செட் கூட மூங்கில் தான். குளிர்காலத்தில் வெயிலில் உட்கார்ந்திருக்க மூங்கில் மோடா தான்.

ஆரோவில் கூட மூங்கிலுக்கென்று ஒரு தளம் வைத்திருக்கிறார்கள்.
----------------------------------------------

நம்ம லிட்டில்ஸ்டார் அவங்க அக்காவோடு சேர்ந்து ஒரு வேப்பமரம் வளர்க்கிறதாக கையெழுத்துப்போட்டு இருக்கிறார். இங்கே போய் பாருங்க அவருடைய பெருமிதத்தை...
-------------------------------------------------

இந்தவாரம் ஒரு தோழியோடு பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார் எல்லாரும் பாலிதீன் பேக் ல் பொருட்களை வாங்கிக்கொண்டு போகும்போது நாம் மட்டும் வேண்டாமென்று சொல்லும்போது மற்றவர்கள் திரும்பிப்பார்ப்பது சங்கடமாக இருக்கிறது என்று.. ஆனால் உண்மையில் நாம் அந்த சங்கடத்தை அடையவேண்டியதே இல்லை. எனக்கும் இருக்கத்தான் செய்தது. ஆனால் வருடங்களாக இப்பொழுது அந்த பழக்கத்திற்கு வந்த பிறகு தற்போது சங்கடமும் இல்லை பெருமிதமும் இல்லை.. இயல்பாய் ஆகிவிட்டது.32 comments:

ராமலக்ஷ்மி said...

தொங்கும் மூங்கில் தொட்டி அழகு. அருமை.

/இணையத்தில் தேடும்போது கிடைத்த இந்த இடத்தில் இருக்கும் படத்தை/

பார்த்தேன். அதில் பார்க்கையில்தான் எப்படி செய்துள்ளார்கள் என்பதை முழுதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

/இங்கே கொண்டுவர முடியவில்லை/

இதோ அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த மாதிரி கொண்டு வந்து தருகிறேன். பதிவில் இணைத்திடுங்கள்:)!

அமைதிச்சாரல் said...

ஹையோ.. ஹையோ.. ஹையோ.. எனக்கு தலைகால் புரியலைங்க :-)))))))))

மூங்கிலை ரெண்டா பிளந்து அதில் நெல்வளர்க்கும் ஒரு முயற்சியை ஒரு பத்திரிகையில் பார்த்தேன். அதனால் இதை எப்படி செய்திருப்பார்களென்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

அதாவது, மூங்கிலில் இரண்டு கணுக்களுக்குமிடையே இருக்குமிடம் வெற்றிடமாகத்தான் இருக்கும். அதில்தான் குடைந்து உருவாக்கியிருக்கிறார்கள் இந்தத்தொட்டியை. அந்த வெற்றிடத்தில் மண் நிரப்பிக்கொள்ளலாம்.

Chitra said...

மூங்கில் குழாயில் மலர்கள். பார்க்க அழகாக இருக்கிறது.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தங்கள் பகிர்வுக்கு நன்றி...ரொம்ப நல்லாச் ஒல்லி இருக்கீங்க எனக்கும் வீட்டு தோட்டத்துல நிறைய ஆர்வம் உண்டு

புதுகைத் தென்றல் said...

புது வீட்டில் தோட்டம் அமைக்க ஆசையா இருந்தேன்.அமைதிச்சாரல் ஐடியா பார்த்து மைண்ட்ல ரிஜிஸ்டர் செஞ்சு வெச்சிருக்கேன். உங்க பகிர்வும் உதவும் எனக்கு.

ரெண்டு பேருக்கும் மிக்க நன்றி.

யார் எப்படி பாத்தா நமக்கென்ன நான் ப்ளாஸ்டிக் பேக் வேணாம்னு சொல்லிட்டு கம்பீரமா வந்திடுவேன்.

வின்சென்ட். said...

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். முதலில் தேவை மனம் பின்பு எல்லாம் வந்துவிடும்.உங்கள் முயற்சிக்கும் தகவலுக்கும் நன்றி.

ஹுஸைனம்மா said...

நல்ல ஐடியா. தொட்டியைத் தொங்கவிடுவதைவிட இது எளிது போல. பார்க்கவும் புதுமை.

பிளாஸ்டி பேக் - முதல்ல அப்படித்தான் இருக்கும். அப்புறம் பழகிடும்.

மூங்கில் ஃபர்னிச்சர் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். ஆனா எங்க வீட்டுப் பசங்க ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து உடையாம நிக்குமான்னு பயம். அத்தோட அழுக்கு, மூட்டைப் பூச்சிக்கு ரொம்ப ஈஸியா இடம் கிடைக்கும்கிறதால தயங்கிகிட்டே இருக்கேன்.

கோபிநாத் said...

:)

asiya omar said...

ரொம்ப அழகாயிருக்கு,பகிர்வுக்கு மகிழ்ச்சி.அடிக்கடி ஊர் போய் வருவதால் இங்கு செடி வளர்க்க தயங்கியே நாட்கள் சென்று விட்டது,வீட்டு தோட்டம் பார்த்தவுடன் வழக்கம் போல் ஆசை தலை தூக்குகிறது.

அம்பிகா said...

நல்ல ஐடியா.
முயற்சிக்கும் தகவலுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

//எல்லாரும் பாலிதீன் பேக் ல் பொருட்களை வாங்கிக்கொண்டு போகும்போது நாம் மட்டும் வேண்டாமென்று சொல்லும்போது மற்றவர்கள் திரும்பிப்பார்ப்பது சங்கடமாக இருக்கிறது//

இந்தச்சங்கடம் தேவையேயில்லீங்க.. நான் பிக் ஷாப்பரிலேயே காய்கறிகளை போடச்சொல்லிடுவேன். உண்மையைச்சொன்னா, அவங்களுக்கும் அது நிம்மதியாயிருக்கு. ஒவ்வொரு அயிட்டங்களுக்காகவும் எத்தனைதான் பார்சல் கட்டுவாங்க!!!. அவங்களும் கேரிபேக்குகளை காசுகொடுத்துல்ல வாங்குறாங்க.. கட்டுபடியாவுமா :-)))))

அமுதா said...

அழகுங்க... பகிர்வுக்கு நன்றி.

goma said...

மூங்கில் தோட்டம் அழகோ அழகு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்‌ஷ்மி படத்துக்கும் :)
--------------
ஆமா சாரல் எனக்கும் இப்பவே மூங்கில் கழி எங்க கிடைக்குமென்று பாக்கனும்ன்னு இருக்கு..:)
---------------------
நன்றி சித்ரா முக்கியமா வெளிநாடுகளில் மூங்கிலைக்கொண்டு டைல் மாதிரி போடறாங்களாம்..:)
------------------------
நன்றி சதீஷ் :)
------------
புதுவீட்டு தோட்டத்தை அழகுபடுத்திட்டு எங்களுக்கு இற்றைப்படுத்துங்க புதுகைத்தென்றல்:)
--------------------

நன்றி வின்சென்ட் சார்..:)

---------------------
ஹுசைனம்மா அதே அதே தொட்டி எங்க வ்ந்து தலையில் விழுமோன்னு இருக்கிறதுகு இது நல்லா இருக்கே ஐடியா.. :)
ஃபர்னீச்சர் நான் ஹோஸ் பைப் வச்சி நல்லா கழுவி காயவைப்பேன்..
எனக்கு இந்த சோபா செட் தான் பிள்ளைங்க விளையாட நகர்த்தி வைக்க ஈசியா இருக்கு.. உடையல்லாம் உடையாது.
-------------------

நன்றி கோபி :)
-------------------------
ஆசியா. .. இந்த ஊருக்குப் போறதுங்கறது தோட்டத்துக்கு கண்டம் தான் .. இருந்தாலும் மனசு கேக்குதா.. எதும் வழி செய்து இதுவரை காப்பாத்திட்டிருக்கேன்..:)
சில செடிகள் எல்லாம் பலகாலமா தாக்குபிடித்து கண்டத்தை தாண்டி வாழ்ந்துட்டிருக்கு..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அம்பிகா :)
--------------------

உண்மைதன் சாரல் .. காசு கொடுத்து தான் அவங்க பாலிதின் வாங்கிவச்சி நமக்கு தராங்க.. ஆனா வாங்கரவங்க அது இல்லைன்னா வாங்கறதில்லங்கறதால் தான் வச்சிருக்காங்க.. பொதுவா கை தானாக வேகவேகமா கவரில் போட்டுத்தருது.. வேண்டாமென்று சொல்ல நாம் தான் சுதாரிச்சு சொல்ல வேண்டி இருக்கு.
-----------------------
நன்றி அமுதா :)
----------------
நன்றி கோமா :)

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வு முத்துலெட்சுமி. மூங்கிலில் நெல் சாகுபடி செய்வதை பற்றி அவள் விகடனில் படித்து இருக்கிறேன். உங்க வீட்டுக்கு வரும் போது இந்த மூங்கில் தோட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன். கடைத் தெருவுக்கு போகும் போது நானும் பிக் ஷாப்பர் எடுத்துப் போய் அதிலேயே வாங்கி வந்து விடுவேன். சபரியும் மாதினியும் வேப்ப மரம் வளர்ப்பதில் மகிழ்ச்சி.

அன்புடன் அருணா said...

அட!மூங்கில் பூ!இந்த லீவில் முயற்சி செய்து விடவேண்டியதுதான்!
நல்லதைச் செய்றதுக்கு எதுக்கு சங்கடம்???

கோமதி அரசு said...

தொங்கும் மூங்கில் தொட்டி அழகு.
மூங்கிலில் செடி வளர்ப்பது ,நெல் பயிரிடுவது எல்லாம் நல்ல முயற்சிதான்.

வயல்கள் எல்லாம் வீட்டுமனை ஆகும் போது மூங்கில் கம்புகளில் நெல் சாகுபடியை அவரவர்கள் செய்து கொள்ள வேண்டிய நிலைமை தான் வரும் போல முத்துலெட்சுமி.

சபரி, மாதினியின் வேப்பமரம் வளர்ந்து எல்லோருக்கும் பலன் அளிக்கட்டும். வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. நன்றி சகோ.

☀நான் ஆதவன்☀ said...

மூங்கில்ல செடியா? சூப்பர் :)

//எனக்கும் இருக்கத்தான் செய்தது. ஆனால் வருடங்களாக இப்பொழுது அந்த பழக்கத்திற்கு வந்த பிறகு தற்போது சங்கடமும் இல்லை பெருமிதமும் இல்லை.. இயல்பாய் ஆகிவிட்டது. //

எனக்கு எப்ப பொறுப்பு வருமோ! ம்ம்ம்

மங்கை said...

pinnaadi vacant space la vainga... super aaa irukkum....

சே.குமார் said...

அழகு... அருமை.

Anonymous said...

really nice..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மூங்கில் தொட்டிச் செடிகள் அழகு.. பார்க்கவே ரெஃப்ரெஷா இருக்கு..:)

ஜிஜி said...

மூங்கில் தொட்டி சூப்பரா இருக்குங்க.ஆனா எனக்கு ஒரு சந்தேகம்.இதுல பெரிய செடிகள் எல்லாம் வளர்க்க முடியுமா.வேர்கள் பரவி வளர போதிய இடம் இருக்குமா?

பாரத்... பாரதி... said...

வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆதி பிக்‌ஷாப்பரில் வாங்குவதற்கு உங்களுக்கும் பாராட்டுக்கள்..
மூங்கில் தான் தேடிக்கிட்டிருகேன்ப்பா..:)
-------------------------
நன்றி கோமதிம்மா :)
-----------------------
நன்றி வெங்கட் :)
--------------------
ஆதவன் பொறுப்பு வராது .. நாம் தான் வரவழைச்சுக்கனும்.. சரியா :) வேலை விசயத்துல இருக்கிறதே பொறுப்பு அப்ப இதுலயும் வரவழைச்சிக்கிறது பெரிய விச்யமே இல்லைப்பா..
-------------------------
ஆமா மங்கை அங்க தான் வச்சிருக்கேன் வேப்பமரம்..:)
------------------
நன்றி குமார் :)
--------------------
நன்றி தமிழரசி :)
---------------------
நன்றி தேனம்மை.. :)
------------------------
ஆமா ஜிஜி இதுல சின்ன செடிகள் பொதுவா அழகுச்செடிகள் வளர்க்கறது தான் முடியும்..
---------------------
நன்றி பாரதி :)

மாதேவி said...

அழகு. இங்கும் காட்டன்களில் வளர்த்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

Anonymous said...

பூத்து குலுங்கும் பதிவுகள் நெடுநாளாய் காணவில்லை, ஏன்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ மாதவி முடிந்தால் இப்படி படமெடுத்துக் காண்பியுங்களேன்.. வித்தியாசமாக இருந்தால்..:) நன்றி
-------------------------
புலி எதும் எழுதத்தோணலைங்க.. தோன்றியதும் எழுதுகிறேன். நன்றி.:)

Thekkikattan|தெகா said...

மூங்கில் மரத்தில் துளையிட்டு செடி வளர்ப்பது வனத்தினுள் இருக்கும் தாக்கத்தை மேலும் தருவது...

//எல்லாரும் பாலிதீன் பேக் ல் பொருட்களை வாங்கிக்கொண்டு போகும்போது நாம் மட்டும் வேண்டாமென்று சொல்லும்போது மற்றவர்கள் திரும்பிப்பார்ப்பது சங்கடமாக இருக்கிறது என்று... //

இங்கே திரும்பி பார்க்க வைப்பதனை, விழிப்புணர்வேற்று சந்தர்ப்பமாக வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களிடம் ஏன் எதற்கு என்று விசாரிக்கவில்லையே தவிர தனக்குள் ஏதோ ஒரு கேள்வி பதில் செஷன் ஓடத்தான் செய்திருக்கும். திரும்பி பார்க்க வைக்கும் நொடிகளை கொண்டு கர்வம் கொள்ளுங்கள்... :-)

வல்லிசிம்ஹன் said...

மூங்கில் தோட்டம் ரொம அழகா இருக்கு. எங்க பையன் வீட்டிலும் இடே போல ஃபர்னிச்சர்தான். அதுதான் இயற்கையா இருக்கு என்பான்.
மூங்கிலி வளர்க்கும் ஆர்க்கிட் பூச்செடி இவர் ஒண்ணு வச்சு இருக்கார்.

நல்ல தகவல் பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி. முத்து.
குழந்தைகள் வளர்க்கும் வேப்ப மரம் செழிக்க வாழ்த்துகள்.