March 10, 2011

நம்பிக்கை ஒளி

தில்லியில் ஆண்டுபரிட்சைக் காலமிது. எங்கள் வீட்டு வேலைக்காரங்க எப்போதும் போலல்லாமல் மிகத்தாமதமாக வருகிறார்கள். விவரம் கேட்டபோது எப்போதும் குழந்தைகள் சமையலில் வீட்டுவேலைகளில் உதவுவார்கள் இந்த நேரத்தில் அவர்களால் உதவி செய்யமுடிவதில்லை அதனால் தானே எல்லாம் முடித்துவிட்டு வருவதால் ஏற்படும் தாமதமென்று கூறினார். மற்ற வீடுகளுக்கும் ( அவங்கள்ளாம் திட்டுவாங்களே) போய்விட்டு இங்கு வருவார்கள்.

அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் ஒரு பையன். எல்லாரையும் நன்றாகப் படிக்கவைப்பதற்காகவே நான் அவர்களை மிக மதிப்பதுண்டு. அவர்களின் இரண்டாவது பெண் பள்ளி நடத்தும் இதழுக்காக ஒரு படைப்பை அனுப்பி அது வெளிவந்ததாகக் காண்பித்தார்கள். நீங்கள் என்னிடம் அடிக்கடி சொல்வீர்கள் ப்ளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று அதே போல என் மகளும் எழுதி இருக்கிறாள் என்று பெருமிதமாகச் சொன்னார்கள் , ஜெயந்தி. நான் எப்பவும் அவர்களுக்கும் லெக்சர் கொடுப்பது வழக்கம்.

அதிகமில்லையென்றாலும் நானும் அம்மாவிற்கு வீட்டில் வேலைகள் செய்துகொடுப்பது உண்டு. எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை டொமினிக் சிஸ்டர் எப்போதும் ஆண்டு விடுமுறைக்கு முன்பு ஒரு அறிவுரை வழங்குவார்கள். ”பெண்களே அம்மாவுக்கு உதவுங்கள்” என்று அந்தப்பேச்சைக் கேட்கும்போதே போன உடனே எல்லா வேலையும் இழுத்துப்போட்டு அம்மாவுக்கு உதவ வேண்டுமென்று தோன்றும். சமீபத்தில் நானும் என் மகளும் ,தோழி ஒருவர் வேலை செய்யும் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு சென்று இருந்தோம் . அங்கு சிறப்பு விருந்தினராக ஸ்டீபன் கல்லூரியின் முதல்வர் வந்திருந்தார். அவரை இப்படியாக ஒரு பள்ளிக்கு அழைத்திருந்தார்களாம் அது மிக பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாம். இவர்களுக்கு நான் என்ன அறிவுரை கூறிவிடமுடியும் நானோ ஒரு எறுமை மேய்த்துக்கொண்டிருந்த பையன் என்று நினைத்துக்கொண்டு பேசினாராம்.
”இன்றைய காலகட்டத்தில் படிப்பு என்பது மதிப்பெண் பெறுவது மட்டும் கற்றுக்கொடுக்கும் இடமாக இருப்பதால் தான் ஊழல் மலிந்து மக்கள் துன்புறுகிறார்கள் . குழந்தைகளும் பள்ளிப்படிப்பு என்று சொல்லிவிட்டு வாழ்க்கையின் பாடங்களை தெரிந்துகொள்வதில்லை. என் தாய்க்கு நான் சமையல் வேலையிலிருந்து மாடு மேய்ப்பது வரை உதவியபடியே தான் படித்தேன். அங்கே தான் வாழ்க்கை பாடம் இருக்கிறது என்றார். பெற்றோர்களே ஆணோ பெண்ணோ குழந்தைக்கு வாழ்க்கைப்பாடத்தை கற்றுத்தரத் தவறாதீர்கள் என்று”...அவ்வப்போது நானும் வேலைவாங்குவதால் மகளை நானும் அர்த்தத்துடன் பார்த்தேன். ஹுசைனம்மா கவலைப்படாதீங்க குழந்தைகளுக்கு வாழ்க்கைப்பாடத்தைத்தான் நாம் கற்றுத்தருகிறோம். :)


32 comments:

பாச மலர் / Paasa Malar said...

கஷ்ட நஷ்டம் என்றாலும் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெரும்பலானோர்க்கு வந்து விட்டது மிகவும் நல்லதொரு விஷயம்...வறுமை காரணமாக ஆங்காங்கே இருக்கும் தடைகளும் நீங்கும் காலம் வர வேண்டும்...

சூழலைப் புரிந்து கொள்வதில் நம்மை விட, இக்காலத்துப் பிள்ளைகள் தேர்ந்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்..அதனால் பல வேளைகளில் பெற்றொரின் வேலைகள் எளிதாகத்தான் இருக்கின்றன..

சே.குமார் said...

Nalla pakirvu....
kuzhanthaigal ippa peroyavargal pol sinthikka arampichchuttanga akka....

ஹுஸைனம்மா said...

அக்கா, எனக்காகவே எழுதப்பட்டதுபோல இருக்கு, நன்றிக்கா.

உங்கள் வீட்டில் வேலைசெய்பவரை நீங்கள் மதிப்போடு நடத்துவதும் தெரிகிறது. வாழ்த்துகள்.

//அங்கே தான் வாழ்க்கை பாடம் இருக்கிறது என்றார்//
ஆமாக்கா, ஏட்டுக் கல்வி ஒரு அளவுவரைதான் உதவும். அனுபவப்பாடமும் அவசியம்.

புதுகைத் தென்றல் said...

உங்கள் வேலக்காரம்மாவின் மகளுக்கு என் வாழ்த்தை சொல்லிடுங்க.

ஆஷிஷ் அம்ருதாவை நான் வேலைவாங்க (கொஞ்சமாத்தான்) தயங்குவதேயில்லை. அவர்கள் தன் காலில் நிற்க பழக்கும் ஒரு முயற்சியாகவே நினைக்கிறேன்.

Chitra said...

இன்றைய காலகட்டத்தில் படிப்பு என்பது மதிப்பெண் பெறுவது மட்டும் கற்றுக்கொடுக்கும் இடமாக இருப்பதால் தான் ஊழல் மலிந்து மக்கள் துன்புறுகிறார்கள் . குழந்தைகளும் பள்ளிப்படிப்பு என்று சொல்லிவிட்டு வாழ்க்கையின் பாடங்களை தெரிந்துகொள்வதில்லை. என் தாய்க்கு நான் சமையல் வேலையிலிருந்து மாடு மேய்ப்பது வரை உதவியபடியே தான் படித்தேன். அங்கே தான் வாழ்க்கை பாடம் இருக்கிறது என்றார்.


...... சிந்திக்க வேண்டிய விஷயம். நல்ல பகிர்வு.

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் சிறப்பானப் பதிவு . பகிர்வுக்கு நன்றி நண்பரே .

அமைதிச்சாரல் said...

//ஆணோ பெண்ணோ குழந்தைக்கு வாழ்க்கைப்பாடத்தை கற்றுத்தரத் தவறாதீர்கள்//

நிச்சயமா.. மலர்களின் வாசனையை மட்டுமல்ல முட்களின் கூர்மையை நுகர்வதற்கும் அவர்கள் தயாராய் இருக்கணும்..

சுந்தரா said...

குழந்தைகளை வேலைக்குப் பழக்கவில்லை என்று சொல்வதேகூட ஒரு ஃபேஷனாயிருச்சு இப்ப.

என் தோழி ஒருவர், அவருடைய மகன்களுக்கும் வீட்டு வேலைகள் அத்தனையையும் கற்றுக்கொடுத்திருக்கிறார்.தையல்கூடக்கற்றுக்கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன்

அந்தக் குழந்தை காயத்ரிக்கு என் பாராட்டுக்களையும் சொல்லிடுங்க. ரொம்ப அருமையாக எழுதியிருப்பதற்கு.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

நல்லாயிருக்கு...முயற்சிக்கு வாழ்த்துகள்.!

கோபிநாத் said...

அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் ;)

அன்புடன் அருணா said...

ப்ளாஸ்டிக் கவிதை அருமை அதற்கு பூங்கொத்து ஒன்று.
Life Skill எனக்கு மிகவும் பிடித்தமான ஏரியா!ஒரு நள் முழுக்கக் கூட அதைப் பற்றிப் பாடம் நடத்த தயார்! அதைப் பகிர்ந்துக்கிட்டதற்காக இன்னொரு பூங்கொத்து!

கோவை2தில்லி said...

அந்த பெண்ணிற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.
அனுபவப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

துளசி கோபால் said...

ஒளி வீசட்டும்!

நம் வீட்டில் உதவி செய்யும் சரோஜ், மகளை (அஞ்சாப்பு) கூடவே கூட்டிவந்து வேலை செய்யவைப்பதை நான் கண்டித்து வைத்திருக்கிறேன்.

ஏன் பள்ளிக்கு அனுப்பலையான்னா...... பேப்பர் ச்சல்தா ஹை என்று பதில் வரும்.

குழந்தைகளை வேற வீட்டில் வேலைக்கு அனுப்புவது குற்றம். போலீஸுக்குச் சொல்லிடுவேன்னு சொல்லி வச்சுருக்கேன்.

அதே சமயம் அவர்கள் வீட்டில் தாய்க்கு உதவி செய்யட்டும். பிரச்சனை இல்லை.

goma said...

நல்லவிழிப்புணர்வு தரும் வண்ணம் அமைந்திருக்கிறது...

கலாநேசன் said...

நல்பதிவு...

asiya omar said...

ஆமாம் முத்துலெட்சுமி,குழந்தைகளுக்கு வாழ்க்கைப்பாடத்தைத்தான் நாம் கற்றுத்தருகிறோம். :)
எல்லாரையும் நன்றாகப் படிக்கவைப்பதற்காகவே நான் அவர்களை மிக மதிப்பதுண்டு.

மிக நல்ல போஸ்ட்.அந்த பெண் குழந்தையின் படைப்பு அருமைன்னு சொல்லிடுங்க.

மாதேவி said...

விழிப்புணர்வு.பெண்ணுக்கு வாழ்த்துகள்.

☀நான் ஆதவன்☀ said...

அந்த பெண்ணுக்கு வாழ்த்துகள்க்கா.

//நான் எப்பவும் அவர்களுக்கும் லெக்சர் கொடுப்பது வழக்கம். //

:)

தமிழ் பிரியன் said...

\\\நான் எப்பவும் அவர்களுக்கும் லெக்சர் கொடுப்பது வழக்கம். \\\
இங்க ஒரு ஸ்மைலி போடனுமாக்கும்...;-))))

ஜிஜி said...

அருமையான பகிர்வுங்க.கண்டிப்பாக நம்ம குழந்தைகளுக்கு நாமதான் வாழ்க்கை பாடம் கற்று தர வேண்டும்.உங்க வேலைக்கார அம்மாவின் குழந்தைக்கு எனது வாழ்த்தை தெரிவிச்சிடுங்க..

geetha santhanam said...

நல்ல பதிவு. உங்கள் வீட்டு வேலைக்காரர்களை நீங்கள் மதிப்புடன் நடத்துவது, அவர்கள் குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம் தருவது, அந்தக் குழந்தைகள் அதைப் புரிந்து கொண்டு படிப்பதுடன், ஸ்மூக விழிப்புணர்வுடன் இருப்பது-எவ்வளவு நல்ல விஷயங்கள்.

asiya omar said...

உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.நிச்ச்யம் தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையில்.

http://asiyaomar.blogspot.com/2011/03/blog-post_17.html

கோமதி அரசு said...

//இன்றைய காலகட்டத்தில் படிப்பு என்பது மதிப்பெண் பெறுவது மட்டும் கற்றுக்கொடுக்கும் இடமாக இருப்பதால் தான் ஊழல் மலிந்து மக்கள் துன்புறுகிறார்கள் . குழந்தைகளும் பள்ளிப்படிப்பு என்று சொல்லிவிட்டு வாழ்க்கையின் பாடங்களை தெரிந்துகொள்வதில்லை. என் தாய்க்கு நான் சமையல் வேலையிலிருந்து மாடு மேய்ப்பது வரை உதவியபடியே தான் படித்தேன். அங்கே தான் வாழ்க்கை பாடம் இருக்கிறது என்றார். பெற்றோர்களே ஆணோ பெண்ணோ குழந்தைக்கு வாழ்க்கைப்பாடத்தை கற்றுத்தரத் தவறாதீர்கள் என்று”...//

அருமையாக சொல்லியிருக்கிறார்.

நல்ல பதிவு முத்துலெட்சுமி.

Thekkikattan|தெகா said...

வீட்டில் உதவிக்காக நாம் அமைத்துக் கொள்பவர்களுக்கு நம்மிடமிருந்து அவர்களுக்கும், அவர்களிடமிருந்து நமக்கும் பகிர்ந்து கொள்ள எக்கச்சக்கமான விசயங்கள் இருக்கிறது.

அது உங்கள் வீட்டில் நிகழ்கிறது என்று தெரிகிறது. அந்த அம்மாவுடைய பொண்ணு எழுதியிருக்கும் அச்சு வடிவ கவிதையை பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் நிறைய பகிர்ந்துக்கோங்க, அந்த குடுப்பத்துடன். :-)

Vijisveg Kitchen said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.

Lakshmi said...

மிகவும் நல்லபதிவு.குழந்தைகளுக்கு
வாழ்க்கைப்பாடத்தை நாமதான் கத்துக்கொடுக்கணும்.

இராஜராஜேஸ்வரி said...

விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் சிறப்பானப் பதிவு சிந்திக்க வேண்டிய விஷயம். நல்ல பகிர்வு.

அப்பாவி தங்கமணி said...

அழகான பதிவுங்க அக்கா... நான் அம்மாவுக்கு அதிகம் உதவினதில்ல... அம்மாவும் சில சமயம் கட்டாயப்படுத்தி செய்ய வெப்பாங்க... பெரும்பாலும் அப்பா பாட்டி சப்போர்ட்ல தப்பிச்சுடுவேன்... ஆனா திருமணமான புதிதில் எதுவும் செய்ய தெரியாம திணறினப்ப "மூத்தோர் சொல்லும் முதி நெல்லிக்காயும்" நினைவு வந்து ரெம்பவும் வருத்தப்பட்டேன்... இப்ப நாம செய்யறப்ப அதோட கஷ்டம் புரியுது... தினமும் அம்மாவை நினைச்சுப்பேன்... ஊருக்கு போறப்ப ஒரு நேரமாச்சும் உக்காரவெச்சு சமைச்சு தரணும்னு.... ஆனா அம்மாவை பாத்தா எங்க இருந்து தான் வருமோ அப்படி ஒரு செல்லம்...அம்மாவும் "எனக்கு முடியாத காலத்துக்கு நீ தானே செய்வ... இப்ப என்னை செய்ய விடு"னு சிரிப்பாங்க...இந்த தலைமுறை அப்படி இருக்க கூடாதுனு நீங்க சொன்னது ரெம்ப சரி..

வல்லிசிம்ஹன் said...

வெகு நல்ல பதிவு முத்துலட்சுமி.
எங்கள் வீடு ராணி பேரன் பேத்திகளும் அருமையாகப் படிக்கிறார்கள்.
அதற்கKஅ இவர்களும் கூடவே சிரமப் படுகிறார்கள். எல்லாம் கற்றும் உண்மை வாழ்க்கை வெளியே தான் இருக்கிறது. அதை எங்கள் குழந்தைகள் சுலபமாகக் கற்றார்கள். இனி நானும் கற்க வேண்டும். ஒரு ஆல் ரவுண்டர் தன் எல்லா விதங்களிலும் சிறக்க முடியும். அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

raji said...

பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய நல்ல பதிவு

வளரும் பிளளைகள் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களையும்
வெற்றி மட்டும் அல்லாது தோல்வியின் பக்கத்தையும் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.
அதுவே அவர்களின் மனோதிடத்தை வளர்க்கும்

நிலாமகள் said...

”இன்றைய காலகட்டத்தில் படிப்பு என்பது மதிப்பெண் பெறுவது மட்டும் கற்றுக்கொடுக்கும் இடமாக இருப்பதால் தான் ஊழல் மலிந்து மக்கள் துன்புறுகிறார்கள் . குழந்தைகளும் பள்ளிப்படிப்பு என்று சொல்லிவிட்டு வாழ்க்கையின் பாடங்களை தெரிந்துகொள்வதில்லை.//

மிகச் சரியான அலசல். அருமையாய் பதிவிடுகிறீர்கள் தோழி! சக மனிதர்களிடம் ... அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டுமே... நல்ல எண்ணங்களைப் பரவச் செய்வது உன்னதம் தானே. செறிவான கருத்துரைகளும் மேலதிக மகிழ்வை தருவதாய் உள்ளது. வாழ்த்துகள்... உங்களுக்கும் பணியாளரின் மகளுக்குமாக.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காயத்ரியை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிப்பா..:)

கருத்துக்களுக்கும் நன்றி நன்றி:)