சிறுவயதில் புகழ்பெற்ற ஆங்கிலக்கதைகளை படக்கதைகளாக பைக்கொ க்ளாஸிக்ஸ் மூலம் தான் வாசித்திருக்கிறேன்.
பள்ளிக்கூடத்தில் தருகிற ஆங்கில புத்தகம் தவிர்த்து வேறெதுவும் வாசிக்க முயன்றதாக நினைவில்லை. பள்ளி முடித்தபின் வாசிக்க முயன்றாலும் முழுசாக முடித்ததாக நினைவில்லை. (முதல் முறையாக கொஞ்ச நாட்கள் முன்பு தான் , மகளின் புத்தக அலமாரியிலிருந்து அவள் தோழி ஒரு புத்தகத்தை எடுத்துச்சென்றுவிட்டு படிக்கப் பிடிக்கவில்லை என்று திருப்பித் தந்தபோது அது ஏன் என்று ஒரு ஆர்வத்தில் வாசிக்க ஆரம்பித்து முழுவதும் முடித்தேன்.[How I saved My Father's live - (And Ruined Everything Else)- ANN HOOD ]சின்னப்பிள்ளைகளாயிற்றே.. அப்பா அம்மா விவாகரத்து என்றும் அதனால் அக்குழந்தைக்கு நேரும் குழப்பங்கள் என்றும் முதல் பாகமே இருந்தால்.. பயந்து போய் இருவரும் அதைப் படிக்காமல் வைத்துவிட்டார்கள் போலும். )
தமிழில் க.நா.சு அவர்கள் மொழி பெயர்த்த புத்தகங்களை வாசித்து முடித்துவிட்டு அதனைப்பற்றி இணையத்தில் தேடியபோது அவை படங்களாகவே கிடைத்தது. அது இன்னும் கதையை மனதில் பதியவைக்க உதவியது.
1984 by George Orwell / Nineteen Eighty-Four
இந்தப்படத்தை இங்கே பார்க்கலாம்
Animal Farm இந்தப் படத்தை இங்கே பார்க்கலாம்.
நம்ம டாக்டர் ரோகிணி எப்பவும் அயன் ராண்ட் பற்றி பஸ்ஸில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். சமீபமாய் அவரின் பௌண்டெய்ன் ஹெட் புத்தகத்தை பதிவர் தெக்கிக்காட்டானும் வாசிக்கத்தொடங்கி விட்டு பஸ்ஸில் குறிப்பிட்டிருந்தார். அதனைப்பற்றி தேடியதில் அதுவும் படமாக வெளிவந்திருப்பதை அறிந்ததும் சோம்பேறி மனதுக்கு தெம்பாகிவிட்டது . படமாக மாற்றியதில் பல மாற்றங்களுடன் சுருக்கமாகிவிட்டாலும் எதோ அதையும் அறிமுகப்படுத்திக்கொண்டதாக ஆகிவிட்டதல்லவா?
இங்கே அப்படத்தை பன்னிரெண்டு பாகமாகப் பார்க்கலாம். இனி மெதுவாக வேண்டுமானால் பிடிஎஃப் கோப்பை இங்கிருந்து படித்துக்கொள்ளலாம்.
இதே போல பாரபாஸ் படமும் பார்த்த ஞாபகம். அப்போதே அதை சேமித்துவைக்கவில்லை.
( அதான் இந்த சேமிப்பு பதிவு )தற்போது அதன் இணைப்பு கைக்கு கிடைக்கவில்லை. வெறொரு இணைப்பில் இருக்கிறது ஆனால் எதோ மொழியில் ஒருவரே மொழிபெயர்த்து அந்தக்குரலை மேலே ஒலிக்கவிட்டிருக்கிறது போல இருக்கிறது. அதை சகித்துக்கொள்வதாக இருந்தால் படத்தைப் பார்க்கலாம். http://www.veoh.com/watch/v12000307AcXStkhH ..
19 comments:
நல்ல பகிர்வு ;-)
ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் பதிவு இன்னும் வரலியே ! ;-))
நல்ல பகிர்வு. Ayn Rand-ன் மூன்று புத்தகங்கள் மட்டும் படித்திருக்கிறேன்... மற்ற சில தேடிக் கொண்டு இருக்கிறேன்.
Atlas Shrugged, The Fountain Head and We the Living என்ற மூன்றுமே என்னிடம் இருக்கிறது. என்ன படிக்கக் கொஞ்சம் பொறுமை வேண்டும்... :)
நல்ல பகிர்வு முத்துலெட்சுமி. குழந்தைகளுக்கான பல நாவல்கள் நாம் வாசிக்கவும் மிக சுவாரஸ்யமானவையே.
அய்ன் ரேண்ட் Fountainhead புத்தகம் படித்திருக்கிறேன்...குழந்தைகள் புத்தகங்களும் படிக்க சுவாரசியம்தான்.
//ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் பதிவு இன்னும் வரலியே ! ;-))//
ரிப்பீட்டேய்.....
13 வருசம் குழந்தைகள் நூலகத்துலே வேலை செஞ்சதால்....... சின்ன வயசுலே விட்டதையெல்லாம் ஓரளவு பி(ப)டிச்சேன்:-)))))
நூலகத்துக்குப் புத்தகம் வாங்கும் கமிட்டியில் இருந்ததால் எனக்கு ரொம்பப் பிடிச்சுருந்ததுக்கெல்லாம் டபுள் ஆர்டர்தான்:-)
நல்ல பதிவு. 'க்ரேட் எக்ஸ்பெக்ட்டேஷன்'....படிக்கும் போது 'நான் -டிடெயில்டாக' படித்தது.
கோபி & துளசி எழுதினாத்தான் நினைவு வச்சிப்பேன் எழுதித்தான் ஆகனும். ஸ்டார்ட்டிங் ட்ரபிள்..:) போன வருசத்துக்கு முந்தினவருச டூரையே முடிக்காம பாதில நிறுத்திவச்சிருக்கேன்... :(
மூன்று மட்டுமே படிச்சிருக்கீங்கன்னு எவ்ளோ தன்னடக்கம் வெங்கட்.. பொறுமைதான் என்கிட்ட இல்லையே.. இருந்தாலும் புக் இருந்தா குடுங்க :)
-------------------
ஆமா ராமலக்ஷ்மி குழந்தைங்களோடதுல தான் சரியா ஸ்டார்ட் செய்திருக்கேன் பாருங்க :)
பாசமலர் குழந்தைங்க புக் படிக்க எனக்கு இப்பத்தான் நேரம் வந்திருக்கு..
:)
---------------
துளசி உங்களைப்போலவே நான் இனிதான் விட்டதைப்பிடிக்கனும்..:)
--------------------
நானானி நான் அதைத்தான் சொல்லறேன் அப்படி பாடத்தில் குடுத்ததைக்கூட நினைவில் இப்ப வச்சிக்கலை.. இப்படி படக்கதையாகவோ படமாகவோ பார்த்திருந்தால் நினைவு வச்சிக்கிறேன் ..:)
உங்க பதிவுன்னதும், ஆசையா கொலம்பஸ் கண்டுபிடிப்பு பத்தின பதிவுனு ஆசையா ஓடிவந்தேன்... சீக்கிரம் எழுதிடுங்க..
:)))
அமெரிக்காவோன்னு நினைச்சு வந்தேன்க்கா. டெல்லியிலயே இருக்கீங்க இன்னும் :)
bact to form ஆ?/..நல்லது கலக்குங்க...
புத்தகம் அதிகம் வாசித்தில்லை... நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்று வரை வீட்டில் புத்தங்களுக்கு அளவில்லை..ஆனால் எனக்கு தான் அந்த பொறுமை இருந்ததில்லை.. அப்பப்போ படித்ததுண்டு.. அதில் பசுமையாக மனதில் நிற்பது Pearl Buck எழுதின நாவல் Pulitzer Prize வாங்கினது...சீன கிராமத்தில் நடக்கும் கதை...
ம்ம்ம் நிறைய வாசிங்க,வாசிங்க. எப்படியும் The Fountain Head புதினமாகவும் வாசிச்சிருங்க. படத்தில நிறைய மிஸ்ஸிங் :)
எப்போ மற்ற பதிவுகள் எல்லாம்... சீக்கிரம் எழுதுங்க நினைவிலிருந்து நழுவி செல்வதற்குள்.
Name of the book...Good Earth...
net problem and e-kalappai m problem...:)
குழந்தைகளுக்கான புத்தகங்களை வாசிக்கிறதுதான் ரொம்பவே சுவாரஸ்யமானது :-))))))
தங்கள் வலைப்பக்கத்துக்கு முதன் முறையாக வருகிறேன்.
குழந்தைகளுக்கான உலக சினிமா,
பெண்களுக்கான உலகசினிமா எல்லாவற்றையும் எழுதி வருகிறேன்.
இப்போது காட்பாதரை பற்றி எழுதி உள்ளேன்.
வருகை தாருங்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவைப் பார்க்கிறேன். அயன் ராண்ட் பற்றிப் படித்ததும் 20 ஆண்டுகளுக்கு முன் தேடித் தேடி வாங்கியதும், இரவு முழுவதும் தூங்காமல் வாசித்ததும் நினைவில் நிழலாக. இப்போது அந்தப் புத்தகங்கள் என் நண்பர் ஒருவர் வீட்டில் கட்டில் பெட்டியில் அடங்கியிருக்கின்றன - அல்லது இருக்கும் என நம்புகிறேன். குறிப்பிட்ட ஒரு வயதில் அயன் ராண்ட் புத்தகங்கள் ஈர்ப்பைத் தருகின்றன. அதே போல விலங்குப் பண்ணை... எவ்வளவோ கேள்விப்பட்டும் படித்தும் பிறகும் இன்னும் அதைப் படிக்க முடியவில்லை, பார்க்கவும் முடியவில்லை. நகர வாழ்வில் நேரத்துக்காக நாம் என்றாகிவிட்ட பின் நமக்காக நேரம் கிடைப்பதில்லை. விரைவில் டொரன்டில் பதிவிறக்க வேண்டும். மற்றபடி.... வீட்டில் அனைவரும் நலம்தானே...
நல்ல பகர்வும். தொடுப்புகளும் நன்றி
Post a Comment