July 20, 2011

ஒன்றுக்கு மூன்றா பதில் கொடுக்கனுமாம்

ரொம்ப நாட்களாகிவிட்டது (பதிவுலக) பரிட்சை எழுதி இல்லையா? வெங்கட் கேள்விபதில் தொடருக்கு அழைத்திருக்கிறார்கள். இதோ விடைத்தாள்....

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

* தொல்லை தராம எப்பவும் சிரிச்சிக்கிட்டே அம்மா அப்பான்னு சொல் பேச்சுக்கேட்டு பிள்ளைங்க சமத்தா இருக்கின்ற நேரங்கள்
* இனிமையான பாடல்களும் தனிமையும்..
*அடுத்து செய்யவேண்டிய வேலை என்று எதுவும் என் முன்னால் இல்லாமல் இருப்பது .



2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

• குழந்தைகளை சீண்டி விளையாடும் பெரியவர்கள்
* வரிசையில் குறுக்கப்போகும் புத்திசாலிகளின் கர்வம்
* நல்ல பாடலுக்கு நடுவில் விளம்பரங்களைப்போட்டு கடுப்பேத்தும் வானொலி தொகுப்பாளர்


3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

• இரவு நேரத்தைய கார் மற்றும் பஸ் பயணங்கள்
• புதுகைத்தென்றல் பதிவில் இருந்து காப்பியடித்த பதில் ..எனக்கு பிடித்த தனிமையே பயமுறுத்தும் வேளைகள்... •
* மருத்துவரின் எதிர் நாற்காலியில் இருந்து பதில் சொல்லும் நேரம்

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
ஹே இதை சாய்ஸ் ல விடறேன்ப்பா.. நிஜம்மாவே இந்த கேள்விக்கு என்ன எழுதறதுன்னு புரியலை:)


5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

• என் கைபேசி
* சாப்பிட்டு முடித்த சாக்லேட் கவர் ( இதோ எழுதி முடிச்சிட்டு எடுத்துப் போட்டுடறேன்)
* இந்தக் கணினி

6) உங்களை சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?
*வீட்டில் குழந்தைகள் பெரியவங்க மாதிரி நீட்டி முழக்கிட்டு குழந்தை மாதிரி முகத்தை வைத்துக்கொள்ளும் தருணங்கள்
* தோழிகள், மற்றும் உறவினர்களாக கூடி களிக்கும் தருணங்கள் முக்கியமாக அப்பா சித்தப்பா பெரியப்பா எனச் சேரும்போது அவர்கள் பழைய நினைவுகளை வரிசை கட்டிச் சொன்னால் ......சுவாரசியமும் சிரிப்பும் தான்.
* நகைச்சுவைக்காட்சிகள்

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

• லீவுக்குப் போய்வந்த அமெரிக்கா பற்றி பதிவு எப்படி எழுதறதுன்னு யோசனை செய்வது
http://www.ragasurabhi.com/identifying-ragas.html இந்த தளத்தில் இருந்து ராகங்களை அறிந்துகொள்ளக் கத்துக்கலாம்ன்னு ஒரு சிறுமுயற்சி.
• மகனுக்கு வீட்டுப்பாடங்களில் உதவுகிறேன்.

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

• முடிந்தவரை பல இடங்களைச் சுற்றிப்பார்க்கவேண்டும்.
• மகளும் மகனும் அவர்கள் வாழ்க்கையில் நான் எட்டாத உயரம் அடைய உதவுவது.
• திண்ணையும் ஊஞ்சலும் தோட்டமும் என ஊரில் வீடு.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
இதுக்கு என்ன எழுதறதுன்னு தெரியலை.
(இந்த பதிவையே முழுசா முடிக்க முடியலையே..)

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

• ஒருவேலையைச் செய்யச்சொல்லி அதுக்கு ஒரு டார்கெட் வைத்து என்னிடம் ஒப்படைப்பது.
• வெட்டி பந்தாப்பேச்சு
• ஓவர் அட்வைஸ்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

• வயலின்
• வேற மொழிகள்
• நீச்சல்

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?

• பேல் பூரி
• வெங்காய பக்கோடா ( ஊரிலிருந்தா சிங்கமடை ஸ்வீட் ஸ்டால் பக்கோடா)
• இட்லி கூட சாம்பார் அதுல கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

• நாளாம் நாளாம் திருநாளாம் நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்
• ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சலாடுதோ
* ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே

இது ஒரு எக்ஸ்ட்ரா பதில்
• எப்பவும் மகளுக்கு பாட்டு வகுப்பில் புதியதாகச் சொல்லிக்கொடுத்தப் பாடல்களில் எனக்கு பிடித்தது முணுமுணுப்பில் இருக்கும். இப்பொழுது ”மனவியால கிஞ்சரா தடே” .. என்ன ஒரு நளினமான நளினகாந்தி ராகம். பிடிச்சுப்போய் இப்ப பைத்தியமாகி இந்த வீடியோவில் ஸ்வரங்களின் தேனை ரசிச்சிட்டிருக்கேன். “இசையின் ஸ்வரங்கள் தேனா”
ரைட் .. எந்தன் நெஞ்சில் நீங்காத பாட்டோட ராகம் தான்..

14) பிடித்த மூன்று படங்கள்?

•கரகாட்டக்காரன்
• பூ
• மணல்கயிறு

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?

• கொஞ்சம் காலமாக கணினி
• எப்போதும் எதாவது பாட்டு
• ----
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

*ஆதவன்
*யாழினி
*விருப்பமுள்ள வேறு யாரும் சொல்லுங்கப்பா
-----------------------------------------
தமிழ்மணம் தமிழ் பதிவர்களுக்கு தாயின் மடிப் போல.... நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தோர் காசுகள் தாரீர்! http://tamilmanam.net/
---------------------------------------------------

19 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமையான பதில்கள்.

ஹுஸைனம்மா said...

//அமெரிக்கா பற்றி பதிவு எப்படி எழுதறதுன்னு யோசனை செய்வது //

இன்னும் யோசனைதானா? சரியாப் போச்சு போங்க. :-)))))))

எனக்கு டிக்கெட்டும், விஸாவும் எடுத்துத் தாங்க. போய்ப் பார்த்து, உங்க யோசனைக்கு ஹெல்ப் பண்றேன். :-)))))

ராமலக்ஷ்மி said...

//• திண்ணையும் ஊஞ்சலும் தோட்டமும் என ஊரில் வீடு.//

ரொம்பப் பிடிச்சது இதுதான்:))!

ரசனையான சுவாரஸ்யமான பதில்கள் அத்தனையும். ரசித்து வாசித்தேன்.

ஹூஸைனம்மாவின் பதிலும் சூப்பர்:))!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குமார் உங்க வேகம் ஆச்சரியப்படுத்துது.:) நன்றி..

----------------
ஹுசைனம்மா ப்ளாக்கராக ஊரு சுத்தல அதனால் தான் இந்த யோசனை இல்லாட்டி வழக்கமா ஒரு பொருளை இடத்தைப் பாருக்கும் போதே அதை பதிவாக்குவது பற்றியே யோசனையா இருக்கும்..:)
---------------------
ராமலக்‌ஷ்மி நன்றிப்பா.. :)

ஆமினா said...

செம கலக்கல்....!!!

கோபிநாத் said...

சூப்பரு ;-))

\\நாளாம் நாளாம் திருநாளாம் நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்\\

update பண்ணவேல்லியா இதை ;-))

சாந்தி மாரியப்பன் said...

ஹுஸைனம்மாவோட நாங்களும் கூடப்போயி அவங்களுக்கும் உங்களுக்குமா ஹெல்ப் பண்றோம். எங்களுக்கும் சேர்த்து டிக்கெட் எஸ்ட்ரா.. எஸ்ட்ரா எல்லாம் ஏற்பாடு செய்யுங்க
:-)))

திண்ணையும் ஊஞ்சலும் தோட்டமும், அப்றம் ஆடு,மாடு,கோழின்னு எல்லாமும் வளர்ற வீடு வேணாமா :-))

pudugaithendral said...

ஹுசைனம்மா, அமைதிச்சாரலுக்கு அசிஸ்டெண்டா நானும் ரெடி :))
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சலாடுதோ//

ஐயோ இந்தப் பாட்டை உடனே கேட்டாகணுமே. இதோ மீ த கோயிங்

அம்பிகா said...

//• திண்ணையும் ஊஞ்சலும் தோட்டமும் என ஊரில் வீடு.//

\\நாளாம் நாளாம் திருநாளாம் நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்\\

ரசித்த பதில்கள். ரசனையான பதில்கள்....

அன்புடன் அருணா said...

நிறைய விஷயம் ஒத்துப் போகுதே!!! நீங்க பரீட்சை எழுதிட்டீங்க! புதுகை அழைத்து இன்னும் எழுதாம இருக்கேன்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமினா நன்றிங்க :)

கோபி,இசைக்கு ஏதுப்பா அப்டேட்.. பழமை இனிமை..:) வருசம் வருசம் கூட மணநாள் வருதே..:)

சாரல் , தோட்டம் வளர்ப்பது ஈஸி ..ஆடு கோழி வளர்ப்பது கடினமாச்சே..:)

தென்றல் உடனே சென்று கானகந்தர்வனில் பாடலை ஒலிக்கவிட்டதற்கு நன்றிகள்.:)

அம்பிகா நன்றிப்பா :)

அருணா டீச்சர்,நாங்கல்லாம் எழுதினா நீங்க பெரியவங்க திருத்துவீங்க.. :))

Meenu27 said...

Nalla irukku ella pathilum....

வெங்கட் நாகராஜ் said...

அழைப்பினை ஏற்று தொடர்பதிவினைத் தொடர்ந்ததற்கு முதலில் நன்றி.

நல்ல, சுவையான பதில்கள்.... நடுநடுவே சாய்ஸ்-ல விட்டது கூட நல்லா இருந்துச்சு.... :)

தொடரட்டும் இத் தொடர்பதிவு.....

நானானி said...

நல்ல ரசிச்சு எழுதியிருக்கீங்க.

நல்ல வேளை என்னைக் கூப்பிடலை.

அமெரிக்கா பதிவை ஆறப்போட்டால் அமெரிக்கையாகிவிடும். சீக்கிரம்!!
காத்துக் கொண்டிருக்கிறேன். சேரியா?

//எனக்கு டிக்கெட்டும், விஸாவும் எடுத்துத் தாங்க. போய்ப் பார்த்து, உங்க யோசனைக்கு ஹெல்ப் பண்றேன். :-)))))//

இது நல்லாருக்கே!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நானானி நிஜம்மாவே பயம்மா இருக்கே சீக்கிரமே எழுதிடரேன்... சேரியா..

கூப்பிடலைன்னா சொல்றீங்க.. விருப்பமிருக்கும் யாரும்ன்னு போட்டிருக்கேன் பாருங்க..விருப்பமும் நேரமும் இருந்தா எழுதிடுங்க.. நாங்க உங்க விருப்பங்களை தெரிஞ்சுக்க ஒரு வழி தானே..

Unknown said...

ரசனையான பதில்கள்.

Thamiz Priyan said...

பூ... என் முதல் மூன்றில் இருக்கு!.. ;-)

☀நான் ஆதவன்☀ said...

:)) எழுத ஆரம்பிக்க சான்ஸ் கொடுத்திருக்கீங்க... நன்றிக்கா. முயற்சி பண்ணி எழுதிடுறேன்

கோமதி அரசு said...

கேள்வியும் பதிலும் அருமை.

அமெரிக்கா பயணப்பதிவை சூட்டோட எழுதினால் தான் நல்லது.

என் அமெரிக்க பயணகட்டுரை, கோவில்கள் பற்றிய தொடர் மட்டும் முடிந்து இருக்கிறது.

திண்ணையும் ஊஞ்சலும் தோட்டமும் கூடிய வீடு அமைய வாழ்த்துக்கள்.