சிறுமுயற்சியைத் தொடங்கிய இத்தனை வருடங்களில் (5வது ஆண்டு நிறைவு வரப்போகுதுங்க) பார்க்கும் எதனையும் ஒரு ப்ளாக்கராக பார்த்தே பழகி அதை பதிந்து வந்திருக்கிறேன். ஆனால் இம்முறை விடுமுறைக்கு அமெரிக்கா சென்றபோது ஒரு ப்ளாக்கராக நான் உணரவே இல்லை. இப்பொழுது அதிகமாக பதிவுகள் எழுதுவதில்லை என்பதால் இருக்கலாம். அந்த அந்த நொடியை அப்படியே அனுபவிப்பதில் மட்டுமே மனம் இருந்தது. சென்ற இடங்களெல்லாம் தம்பியும் தம்பி மனைவியும் , நாத்தனாரும் அவள் கணவரும் போட்டு வைத்தத் திட்டங்கள் என்பதால் செல்லும் இடம் அதன் விவரங்கள் என எந்தவித திட்டமிடல்களும் எனக்குள் இல்லை. வழக்கமாக நாங்களாகச் செல்லும் பயணங்களில் இருக்கும் திட்டமிடல் என்கிற பளு இல்லாத காரணத்தால் இந்தப் பயணம் இன்னும் ரசிக்கும் படி இருந்தது.
”அடுத்து இப்போ எங்கே போகிறோம்? எவ்வளவு நேரமாகும்?” என்று அவ்வப்போது விசாரித்துக் கொண்டும் வழிகளின் வரைபடத்தை ’ஐ போன்’ துணைகொண்டு பார்த்துக்கொண்டே செல்வேன். அந்த அந்த நொடியில் அது நாம் இருக்கும் இடத்தையும்,செல்லும் தொலைவையும் வரைபடத்தில் காட்டுவதைப்பார்ப்பதும் சுற்றுப்புறத்தை வேடிக்கைப் பார்ப்பதுமாக இருந்தேன். குறிப்புகள் எதுவும் கூட எழுதவில்லை. நினைவில் வருவதை இங்கே பதிகிறேன்.
-------------------
அமெரிக்கப்பயணத்தை கட்டார் ஏர்வேஸில் பதிவு செய்திருந்தோம். தில்லி விமானநிலையத்தின் ப்ரமாண்ட புதிய தோற்றத்தை முதல் முதலாகப் பார்த்தோம்.ரசித்தோம். விமானம் வரை செல்ல நகரும் நடைபாதையில் சென்றோம். புதிய வசதிகளையும் அழகையும் பார்த்து மனம் பெருமிதமாக இருந்தது.
முதல் விமானத்தில் உணவு வருவதற்குள் கார்டூனை திரையில் பார்த்துக்கொண்டே சபரி தூங்கிவிட்டான். தோஹா விமான நிலையத்தில் தரை இறங்கும் போது எங்கெங்கும் மணற்பரப்பும் , கட்டிட்டங்களும் கூட அதே நிறத்திலே தெரிந்தது வித்தியாசமாக இருந்தது. அமெரிக்க விமானங்களுக்கான அதிகப்படியான சோதனைகள் இன்னும் ஒருமுறை அங்கேயும் நடந்தது . குழந்தைகளும் ஷூ மற்றும் பெல்ட்கள் என எல்லாவற்றையும் கழட்டி ஒரு ப்ளாஸ்டிக் ட்ரேயில் போட்டுவிட்டே மெட்டல் டிடெக்டர்களை கடக்கவேண்டும். அங்கிருந்து மீண்டும் விமானம் ஏறி அமெரிக்கா செல்லும் வழியில் தூங்கி விழித்து , தூங்கி விழித்து சில படங்கள் பார்த்தோம். தமிழ் படங்கள் எல்லாம் பார்த்த படங்களாக இருந்தது.
நியூயார்க் நகரம் - ஜே எஃப் கே விமான நிலையம். இறங்கி வரும் மக்களுக்கென்று ஒரு பந்தாவையும் காண்பிக்காத அரசாங்க அலுவலக தோரணை. எல்லாரும் மிரட்டியபடி அங்கே எந்த சோதனையும் செய்யவில்லை. எங்கே செல்கிறீர்கள்? யார் இருக்கிறார்கள்? எவ்வளவு நாட்கள்? என்று கேட்டுவிட்டு கைவிரல்களின் பதிவுகளை எடுத்துக்கொண்டு நல்வரவு சொன்னார்கள். உண்மையில் இங்கிருந்து கொண்டு சென்ற உணவுப்பொருட்களை எல்லாம் ப்ரவுன் ப்ளாஸ்டிக் டேப்பால் சுத்து சுத்தென்று சுத்தி எல்லா பெட்டியிலும் கொஞ்சம் கொஞ்சமாக வைக்கணும் என்றெல்லாம் சொல்லிவைத்திருந்தார்கள். சரி கும்பிட்டுப்போன கடவுளெல்லாம் நல்லபடி துணையிருந்திருக்கிறார்கள் என்று நன்றி கூறி தம்பியின் வரவுக்காக சிறிது நேரம் காத்திருந்தோம். அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பி நியூயார்க் நகரம் வரை குடும்பத்துடன் வந்து வரவேற்பளித்தான்.
தம்பி மகனுக்கு இரண்டு வயது. பார்த்ததும் கையில் வந்துவிட்டான். ஆனால் கழுத்தை கட்டியபடி முகத்தை வேறு எங்கோ வைத்துக்கொண்டான். இத்தனை நாள் ஸ்கைப்பில் பேசியவள் நேரிலா என்று குழப்பமும் அன்புமாய் இருந்தான்.
நியூ ஜெர்ஸி நோக்கி செல்லும் வழியெல்லாம் மிக அதிகமான போக்குவரத்து நெரிசல். போனோம் போனோம் போய்க்கொண்டே இருந்தோம். சபரிக்கோ நல்ல தூக்கம் வருகிறது. ஜெட் லாகின் வேலை ஆரம்பித்துவிட்டது. மாமா வீடு எப்போது வருமென்று ஆயாசமாகக் கேட்டான். எங்களுக்கும் கண் எரிகிறது. இருந்தும் இந்திய நேரத்திற்கு தூங்கிவிடாமல் இருக்க கட்டுப்படுத்திக்கொண்டிருந்தோம்.
அடுத்த இரண்டு நாட்களும் ராஜகணபதி கோயில் , ப்ரிட்ஜ்வாட்டர் பெருமாள் கோயில் ( அங்கே ஒரு பதிவர்கள் சந்திப்பும் நடந்தது ) இரு நண்பர்கள் வீடு மற்றும் லிபர்டி சிலை சென்று பார்த்தோம். அவற்றின் புகைப்படங்களை நான் எனது கணினிக்கு மாற்றாததால் குறிப்புக்களை பிறகு எழுதுகிறேன். தற்போது அதற்கு அடுத்த ஐந்து நாட்கள் நாங்கள் சென்ற சிறு சுற்றுப்பயணம் ஆமாம் உண்மையாகவே அது சுற்றுப்பயணம் தான் இந்த வரைபடத்தைப் பாருங்களேன்..
View Larger Map பெரிது செய்து ம் பார்க்கலாம்.
வித்தியாசமான பயணம். 157 அடி உயரத்தில் (கலங்கரை விளக்கத்தில்) ஏறி..
தரைக்கடியில் குகைகளுக்குள் நடந்து,
கப்பலுக்குள் காரோடு ஏறி,
கடலுக்கு மேலே பாலத்தில் பயணித்து, (7 km)
கடலுக்குள்ளும் ( டன்னல் ரோடு) காரை ஓட்டி..............................
காலச்சக்கரத்தில் பின்னோக்கிப் பயணித்து அமெரிக்க சுதந்திர பிரகடனத்தின் போது நடந்தவற்றை கண்டு ..
சரி விளக்கமாக அடுத்தடுத்த பதிவுகளில் .........
32 comments:
அடேடே! டூர் முடிஞ்சிடுச்சா!
ஐய்ய்ய்ஆ அக்கா கூட அமெரிக்கா பயணம் ஆரம்பம் ;))
அறிமுகம் - தூள் ;)
கொஞ்சம் வேகத்தை கம்மி பண்ணுங்க அக்கா...கூட படங்கள் போடுங்கள் ;)
கிடு கிடுன்னு பயணத்தை சொடுக்கி விடுறீங்க. விறு விறு நடை... பல கட்டங்களை தாண்டி வந்து ந்யூசெர்சியில இறக்கி விட்டுறீங்க. இனிமே தனித் தனி பதிவா வருமா? :)
எழுத்து நடையும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு...
தோஹா விமான நிலையத்தில் தரை இறங்கும் போது எங்கெங்கும் மணற்பரப்பும் , கட்டிட்டங்களும் கூட அதே நிறத்திலே தெரிந்தது வித்தியாசமாக இருந்தது. //
நானும் முதல் முறையா அபுதாபி வழியா இந்த முறை வந்தேனா அப்படியே நீங்க சொன்ன மாதிரி எங்க பார்த்தாலும் கட்டடங்களும், மணலும் ஒரே நிறம் :)
அனுபவங்களைத்தொடருங்க.. காத்திருக்கோம்.
அக்கா
எங்க துளசி ரீச்சர் பதிவெல்லாம் படிக்கிறது இல்லையா? உங்க ஊர் விமானநிலையம் போறதுக்கே ரெண்டு பதிவாவது வேண்டாம்? என்னமோ போங்க.
நியூஜெர்சி மாநிலம் சின்னதுதான். அதுக்காக நகரம்ன்னு சொல்லலாமோ? :)
வெரிகுட்!! எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுக்கீற செலவுக்கு பதிவையே எழுதிடலாம்னு ஆரம்பிச்சிட்டீங்க போல!!
ரொம்ப ஸ்பீடாப் போறமாதிரி இருக்கு. நாங்களும் ஃபாலோ பண்ணனும்ல!! ;-))))
நல்ல ஆரம்பம் கயலு.
ஒன்னு(ம்)விடாம விலாவரியா எழுதுங்க.
ச்சின்னப்பையன் .. டூர் முடிஞ்சு தானே ஆகனும் பள்ளி திறந்துட்டாங்களே..:)
ஜூலை மூன்றாம் தேதி திரும்பினோம்.
----------------
படங்கள் இணைத்திருக்கிறேன் கோபி...
எதோ பள்ளிப்பிள்ளைக்கிட்ட பயணக்கட்டுரை எழுத சொன்னமாதிரி ஒரே நடுக்கம். :))
----------------
தெகா நன்றி, தனித்தனியான்னு சொல்லமுடியாட்டியும் அளவு பொருத்து நினைவுகள் மடக்கிப்போடுவோம் பதிவாக..:)
------------------
நன்றி சாரல் வாங்க :)
---------------------
கொத்ஸ் :)
துளசி டீச்சர்க்கு யானை போல ஞாபக சக்தி அதோட அவங்க எங்கே நானெங்கே..?
எங்க ஊரிலேயே அன்றைக்கு டாக்ஸிக்காரர் நாங்கள் போகாத ஒரு பாதை வழி ஏர்போர்ட் சென்றார். அசந்து போய்ட்டேன்.. அந்த சாலை சீரமைத்து அழகானது எனக்குத் தெரியாது. இத்தனைக்கு வீட்டுக்கு பக்கம் தான்.
ஹுசைனம்மா.. ரொம்ப நீட்டினா மார்க் கிடைக்காதோன்னு தான் சுருக்கினேன்..
பதிவு சீக்கிரம் போட்டதுக்கு டிக்கெட் தான் காரணம்ன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க? :))
-------------------------
நன்றி துளசி .. ஒன்னு விடாமத்தானே ஒகே ஒகே..:)
கலக்கல் :) போட்டோஸ் ஒன்னும் சரியா இல்லையே? ஏர்போர்ட்ல போட்டோவே பிடிக்கலயாக்கா?
அமெரிக்கா போறதுக்கு முன்ன துளசி டீச்சர் கிட்ட ட்யூசன் எடுத்துகிட்டு இருந்திருந்தா எப்படி எப்படி குறிப்பெடுத்து ஞாபகம் வச்சுக்கலாம்னு தெரிஞ்சிருக்கும்ல :)
//தில்லி விமானநிலையத்தின் ப்ரமாண்ட புதிய தோற்றத்தை முதல் முதலாகப் பார்த்தோம்.ரசித்தோம். விமானம் வரை செல்ல நகரும் நடைபாதையில் சென்றோம். புதிய வசதிகளையும் அழகையும் பார்த்து மனம் பெருமிதமாக இருந்தது.
//
கிராமத்து ஆள் ப்ளைட்ட பாத்த மாதிரியே , முதல் முதலில் அங்கே நுழைந்ததும் நான் அதிசயித்த ஞாபகம் இன்னும் கண்ணுல இருக்கு :)
கட்டுரை அழகா இருக்கு!! இன்னும் போட்டோ அதிகமா போடுங்களேன் ;)
NICE
இன்னும் போட்டோ அதிகமா போடுங்களேன்
அருமையான ஆரம்பம். தொடங்கி விட்டால் மடமடவென வந்து விடும்:)! (ஹி அடுத்தது படித்து விட்டு இங்கு வந்தேன்).
/இத்தனை நாள் ஸ்கைப்பில் பேசியவள் நேரிலா என்று குழப்பமும் அன்புமாய் இருந்தான்./
ஸோ ஸ்வீட்.
//அடுத்த இரண்டு நாட்களும் ராஜகணபதி கோயில் , ப்ரிட்ஜ்வாட்டர் பெருமாள் கோயில்.... //
அங்க போயும் கோவிலும், குளமுமா? :)
வாழ்த்துக்கள்.
பதிவர் சந்திப்பா. விசயமே தெரியாம போச்சே :(
வாங்க சரவணக்குமார். நலமா?:)பயணக்கட்டுரைன்னா வந்துடறீங்க சரியாக..
எங்க போனாலும் கடவுளைக்கும்பிடனுமில்ல..ராஜகணபதியைக் கும்பிட்டுட்டு தான் ஆரம்பிச்சோம் ..:)
யாரார் அமெரிக்கா ? எவ்ளோ தொலைவுகளில் இருக்காங்க என்று எனக்குத்தெரியாது இளா..அதனால் தெரிவிக்க விட்டுப்போனது.
பதிவர் சந்திப்பில் கூட அதிக நேரம் என்னால் இருக்கமுடியல.. மத்தவங்க ஜாலியா அரட்டையை கண்டின்யூ செய்திட்டிருந்தாங்க அன்றைக்கு..
யாரார் அமெரிக்கா ? எவ்ளோ தொலைவுகளில் இருக்காங்க என்று எனக்குத்தெரியாது இளா..அதனால் தெரிவிக்க விட்டுப்போனது.
பதிவர் சந்திப்பில் கூட அதிக நேரம் என்னால் இருக்கமுடியல.. மத்தவங்க ஜாலியா அரட்டையை கண்டின்யூ செய்திட்டிருந்தாங்க அன்றைக்கு..
ஹைய்யா.... நானும் அமெரிக்கா சுத்திப் பார்க்கப்போறேனே..... என்னையும் கூடவே அழைச்சுட்டு போங்க....
கொஞ்சம் படமும் சேர்த்தீங்கன்னா நல்லா இருக்குமே....
ஒரெ அசத்தலா ஆரம்பிச்சு இருக்கீங்க... தொடருங்க..... நாங்களும் பின்னோடவே வரோம்...
good one and wishes. Check all my blogs with log of photos and information. http://shyamtamil.blogspot.com
too bad, you didn`t inform me:(( I missed a chance of having a good friend with me.
:( மன்னிக்கனும் செல்வநாயகி.. இங்க வரும்போது நீங்க தில்லிக்கு எங்க வீட்டுக்கு வந்துடுங்க.. நான் சரியாகப் ப்ளான் செய்து யாரார் இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்காதது தவறு தான். மறதி வேற என் கூடப்பிறந்த குணம். அதனால் எப்போதாவது ஊர் பெயர் சொல்லி இருந்தாலும் மறந்திருப்பேன்.
நன்றி வெங்கட் .. :)
நன்றி ஷ்யாம் :)
////இங்க வரும்போது நீங்க தில்லிக்கு எங்க வீட்டுக்கு வந்துடுங்க///
sure, thank you Muthu.
கடந்த 21-6-2011, நானும் என் மனைவியும் கட்டார் விமானத்தில் பெங்களுரிலேர்ந்து அமெரிக்கா ( ஹூஸ்டன் )சென்றோம் ,அந்த விமான பயணம் பற்றி ,அவர்கள் செய்த உபசரிப்புக்காக நன்றி சொல்லலாம் ,(French Airlines போனால் கட்டார் அருமை தேரியும்) கட்டார் விமானத்தில் சாப்பிட ,குடிக்க , குடுத்த (இந்திய வகை அசைவ உணவுகள் ) நன்றாக இருந்தது , பிரெஞ்சு சிவப்பு ஒய்ன் 1 பாட்டில் தந்தார்கள் ,( விமான பயணத்தில் ஒய்ன் குடித்தால் 15 மணிநேர பயணத்தில் No-2 பாத்ரூம் போவதில் இருந்து சமாளிக்கலாம் , விமான Toilet paper பற்றி சொல்லவேண்டியது இல்லை ,நமக்கு ஒத்து வரத்து ) தோகா விமான நிலையம் நமது ஹைதராபாத் விமான நிலையத்தை ஒப்பிட்டால் தோகா சுமார் தான்.
திட்டமிடல் என்கிற பளு இல்லாத காரணத்தால் இந்தப் பயணம் இன்னும் ரசிக்கும் படி இருந்தது. //
நம் பொறுப்புகள் குறையும் போது மகிழ்ச்சிதான்.
வேக வேகமாய் பயணக் கட்டுரை போகிறது.
இப்ப தான் கவனிச்சு வாசிக்க ஆரம்பிச்சுருக்கிறேன். ஆரம்பம் நல்லா இருக்கு
கொஞ்சம் லேட். ஆனாலும் உங்கள் விமானத்தை பிடித்து விட்டேன். (ஃபுட்போர்ட் அனுமதி உண்டா?)
//நியூ ஜெர்ஸி நோக்கி செல்லும் வழியெல்லாம் மிக அதிகமான போக்குவரத்து நெரிசல்.//
கேட்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கு.
வெங்கடேசன் நன்றிங்க.
ஆமாம் நல்லா இருந்தது உணவு.. நாங்க வெஜிடேரியன் உணவுகளை ருசித்தோம்.
ஒயினா .. ம்.. நாங்க யாரும் குடிக்கிறதில்ல..
எழுந்து நடக்கச் சொல்லுறாங்களே.. ஆனா யாரும் நடப்பதில்லை. அட்லீஸ்ட் இந்த இயற்கை அழைப்புக்காச்சும் எழுந்து போறாங்க..அதையும் வேணாங்கறீங்களா..? :)
நன்றி கோமதிம்மா..:)
நன்றி கானா.. தொடருங்க :)
ஈஸ்வரன் வாங்க வாங்க.. பரவாயில்ல இப்ப நாலாவது பாகம் வரப்போது நாம ஃபெர்ரில போகனும் அடுத்து.. அதுல நிறைய இடம் இருக்கு ஏறிக்கோங்க..:)
Post a Comment