July 26, 2011

ஆன் த வே டு கேப் மே...Denny's ல காலைச்சாப்பாட்டிற்கு வந்திருக்கிறோம். தம்பி மனைவியின் பிறந்தநாள் என்பதால் வெளியில் சாப்பாடு. ப்ரஞ்ச் டோஸ்ட்  மேலே கொஞ்சம் ஜீனி தூவி , ப்ரன்ச் ப்ரைஸ், சீஸ் காஸடியா (Quesadilla), குழந்தைகள் மெனுவில் இருந்து ஆப்பிள் துண்டுகள் , லெமன் ஜூஸ்,சீஸ் ஆம்லெட்.
இந்த சீஸ் காஸடியா ரொம்ப நல்லா இருந்தது.. மைதா மாவில் சிறிய சப்பாத்தி போல இட்டு அதில் நடுவில் சீஸை வைத்து அழுத்தம் கொடுக்கிறார்கள். எங்க போனாலும் குட்டிப்பையனுக்கு அது இருந்தால் போதும்.அடுத்து cape may கேப் மே நோக்கிப் புறப்பட்டோம். அந்த ஊரில் எல்லா வீடுகளும் அவ்வளவு அழகு. பழமையான விக்டோரியன் மாடல் வீடுகள் என்று அவற்றை அழைக்கிறார்கள். வண்ணமயமான வீடுகள்.

சிலபழமையான வீடுகளை அப்படியே தங்கும் விடுதிகளாக செய்து பராமரிக்கிறார்கள். திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்துதருகிறார்கள். விக்டோரியன் வீடுகளில் , அழகான கடற்கரையில் திருமணங்கள் செய்துகொள்வது என்றே ஆர்வமாய் சிலர் வருகிறார்கள்.


  பொதுவாக அமெரிக்கா முழுவதுமே எல்லார் வீட்டு முகப்பிலும் அந்நாட்டுக்கொடி ஒன்று சாய்ந்தபடி பறந்துகொண்டிருக்கிறது.  நம்ம எல்லாம் நேராத்தான் நிறுத்துவோம்ன்னு..நிறுத்திய கம்பத்தில் காற்றில்லாம கொடி சுருங்கிக் கிடக்கவிடுகிறோம். . கம்பத்தை சாஞ்சாப்பல சொருகிவச்சிட்டு கொடியை முழுக்கத் தெரியும்படி பறக்கவிடறாங்க..:)

(photo : thanks Steve and liza)
நியூஜெர்ஸி மாநிலத்தின் தெற்கு முனையில் இந்த லைட் ஹவுஸ் இருக்கிறது. இந்த இடம் படக்காட்சியாக ஓவியமாக அதிகமாக வெளிவந்திருக்கிறதாம். நீங்க பார்த்திருக்கீங்களா?முதல் முறை கட்டப்பட்ட கலங்கரைவிளக்கத்தை கடலே சாப்பிட்டுவிட்டதாம். இரண்டாம் முறை சரியில்லாததால் உடைந்துபோய்விட்டதாம். இப்போது இரண்டு சுவர்களாக மிக அதிகமான பாதுகாப்புடன் கட்டப்பட்டு ,தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் கலங்கரை விளக்கத்தில் ஒன்றாக இருக்கின்றது.( தானியங்கி)


ஜன்னல் வழி காட்சி. வெளிப்புறச்சுவரின் பரிமாணம் தெரிகிறதா?


photo :capemaytimes

199 இரும்புப்படிகள் .  மேலே ஏறியபின் அங்கிருந்து அழகான காட்சி. கம்பிகள் இட்டிருந்தாலும் என்னவோ அந்த இரும்பு மேடையின்  ஓரமாக நடப்பதற்கு ஒரு திகில் தான். காற்று பிச்சு வாங்கியது.


 இந்தப்படத்தில் கடற்கரையில் சிமெண்ட் நிறத்தில் தெரிவது இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட பங்க்கர். படத்தைக் கிளிக் செய்து பெரிதாகப்பாருங்கள். கடலுக்கு எதிரில் தேங்கி இருக்கின்ற நீர்ப்பகுதியில் விதவிதமானப் பறவைகள் வருவதால் அங்கே பறவை பார்க்கும் மேடை ஒன்றும் அமைத்திருக்கிறார்கள்.  அதன் அருகில் ஒரு பிக்னிக் கூடாரம் உள்ளது . கொண்டுவந்த உணவை அங்கே வைத்து சாப்பிடலாம். எங்கும் உணவு விற்பனை கிடையாது.
(காலையிலேயே அறையில்  மின் குக்கரில் சாதம் சமைத்து வந்திருந்தோம். புளிக்காச்சல் சேர்த்து , சிப்ஸ் மற்றும் ப்ரூட்டியுடன் அங்கே தான் அமர்ந்து மதிய உணவு முடித்தோம்.)

 ஒரு ”ப்ரஞ்ச் பியர்’ பெரியவர் மேலே ஏறி வந்தார். ஆனால் கதவைத்தாண்டி அந்த இரும்பு மேடையில் கால் வைக்கவில்லை. “ஹனி ஐ ம் கோயிங் டௌன்.. டோண்ட் டோண்ட் டச் மீ “ என்று அவரை நிறுத்த முயன்ற மனைவியை நோக்கி பரபரப்பாக பதில் சொல்லிவிட்டு கீழே இறங்க ஆரம்பித்துவிட்டார். அவர் முகம் மேலும் சிவந்து பயந்து போயிருந்தது.  அவர் ஒழுங்காக இறங்கிப்போய்விடுவாரா என்று எனக்கு பயமாக இருந்தது. வெளியில் பார்க்கத்தான் அவருக்கு பயம் போல...


photo: southfloridadayily


கடற்கரைக்குப் போகலாமா? இதோ இந்த நொடி கடற்கரை எப்படி இருக்கென்று  கூட நீங்கள் பாக்கலாம். ஒரு சில இடங்களில் லைவ் கேமராக்கள் பொருத்தி இருக்கிறார்கள். இந்த இரண்டு இணைப்பிலும் நீங்கள் பார்க்கலாம். நமது நேரம் பகலில் பார்த்தால் கருப்பானத் திரையினைத் தான் பார்ப்பீர்கள்:) அமெரிக்க நேரத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கவும்.
cape may live cam

http://www.thesurfersview.com/index.php?option=com_content&view=article&id=200&Itemid=199

http://www.sunsetcam.com/cams/capemaycams.html

கடற்கரைக் காட்சிகள் இரண்டு . இந்தப் பாட்டு  எவ்ளோ அழகு கேளுங்களேன்..காதல் ஜோடிகளாகப் போகாவிட்டாலும்  போகிற வழியில் காதலை சந்திப்பார்களோ?
on the way to cape may
i fell in love with you
on the way to cape may 
i saw my dreams come true

16 comments:

delphine said...

good one Muthu.

அமைதிச்சாரல் said...

படங்களெல்லாம் ரொம்ப அழகாருக்கு முத்துலெட்சுமி :-)

மாதேவி said...

அழகான இடங்கள்.ரசித்துப் படித்தேன்.

கோமதி அரசு said...

அழகான படங்கள், விளக்கங்கள், இரண்டு கடற்கரைப் படங்கள், பாடல்கள் எல்லாம் ரசித்தேன்.

பயணம் மிக இனிதாக இருக்கிறது.

☀நான் ஆதவன்☀ said...

:) நல்லாயிருக்குக்கா. நல்ல வெயில் காலத்துல போயிருக்கீங்க போல?

சே.குமார் said...

படங்களெல்லாம் ரொம்ப அழகாருக்கு.

கோபிநாத் said...

சூப்பராக போகுது...போன பதிவில் படம் இந்த பதிவில் வீடியோன்னு கலக்குறிங்க ;)

Thekkikattan|தெகா said...

கம்பத்தை சாஞ்சாப்பல சொருகிவச்சிட்டு கொடியை முழுக்கத் தெரியும்படி பறக்கவிடறாங்க..:) //

அதை இப்படியும் கூட ஒரு கோணத்தில் பார்க்கலாமா? நான் நினைச்சிட்டு இருக்கேன் சுவற்றில் அறைய கன்வினீயண்டான ஆங்கில், ப்ளஸ் இப்போ நீங்க சொன்னதையும் சேர்த்து கொள்ள வேண்டியதுதான்.

பயணக் கட்டுரை எல்லாமா கலந்து கட்டி போகுது. ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும் (சைஸ பார்த்தீங்களா), காஃபியுமே போதுமானதா இருக்குமே காலை சிற்றுண்டிக்கு :)

அன்புடன் அருணா said...

அட! கலக்குறீங்க! இதெப்போ ஆரம்பிச்சீங்க?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி டாக்டர் :)

சாரல் நன்றி :)

மாதேவி நன்றி:)

கோமதிம்மா நன்றி:)

ஆதவன்... வெயில் தான் :) ஆனா இந்த டூர் அப்ப கொஞ்சம் குளிர்காத்து இருந்தது.

குமார் நன்றி:)

கோபி நன்றி :) வீடியோவை எல்லாம் மக்கள் பாக்கறாங்களான்னு தெரியல..

தெகா .. நல்லா சுத்தனும் நடக்கனும்ன்னா தெம்பு வேணாமா நல்லா சாப்பிட்டோம்ப்பா நாங்க :)

அருணா நன்றிப்பா.. இது ஆரம்பிச்சு மூணாவது பதிவாக்கும்..:)

வல்லிசிம்ஹன் said...

முத்து எப்போ ஆரம்பிச்சீங்க பயணத்தொடர்.? அகஸ்மாத்தா பார்த்தேன்.
கடற்கரையும் லைட் ஹவுஸும் வெகு அழகு. படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. உண்மைதான்
நல்ல ப்ரேக்ஃபஸ்ட் உள்ள போனால் தான் மேற்கொண்ட வேலைகள் நடக்கும்.

Easwaran said...

சுத்தமான கடற்கரைகள் என்றுமே அழகுதான்.

கோவை2தில்லி said...

அமெரிக்கப் பயணக் கட்டுரைகள் விறுவிறுப்பாக செல்கிறது. நாங்களும் கூடவே வருகிறோம்.

படங்களுடன் நல்லாயிருக்குங்க.

ஜிஜி said...

உங்களது அமெரிக்கப் பயணத்தை டெல்லியிலிருந்து ஆரம்பித்து, அட்லாண்டிக் சிட்டி,இப்பொழுது கேப் மே வரை படித்தாகிவிட்டது. படங்களுடன் அருமையாக இருந்ததுஉங்கள் பதிவு. இன்னும் தொடர்ந்து எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

goma said...

உங்கள் கேமரா நல்லா கண் சிமிட்டியிருக்கிறது......அருமை

ராமலக்ஷ்மி said...

பகிர்வு அருமை. படங்கள் கொள்ளை அழகு.