November 27, 2011

கூட்டம்


வண்ணக்குழம்புகள் பூசிய முகங்கள்
ஒன்றேபோல உடைகள்
புடைத்த நரம்புகள்
கனத்த குரல்கள்
குறிக்கோள் தாங்கிய கண்மணிகள்
வீசி உதறி குதித்து
ஓரோர் பக்கமாய் நிமிர்ந்து நின்றனர்.

பறவையைப்போல்
சிறகுவிரித்துப் பறந்தான் ஒருவன்
மஞ்சள் வண்ணம் ஒளிரும் முகம்
சிரிக்கக் கண்டார்கள்.

நிமிட இடைவெளியில்
புகுந்தான் ஒருவன்
திரண்ட தோளுக்குரியவனாய்
கருமையும் செம்மையுமாய்
வண்ணக்கலவை மிரட்ட
உரக்கக்கூவினான்
யார் நீ? யார் நீ?

நான் நீ! நான் நீ!
குழம்பி உரைத்தான் இவன்.
மறுத்துச் சாய்த்தான் ஒருவன்..
மடங்கி சரிந்தான் இவன்..
இதயம் கனத்தது என்றது கூட்டம்.
எதையோ இழந்தோம் என்றது கூட்டம்.
பேசிக் கலைந்தது கூட்டம்.
கூட்டம் விட்டுச்சென்ற
முகமூடிகளைப்
பொறுக்கிச் சேர்த்தான் ஒருவன்.

நன்றி:
 22 ஜூலை 2009 ல் ஈழநேசன் முல்லை இணைய இதழில்  வெளிவந்த என் கவிதை. 

9 comments:

வெங்கட் நாகராஜ் said...

கடைசி வரிகள் நிதர்சனம்....

நல்லதோர் கவிதைக்கு நன்றி.

kumaraguruparan said...

குறியீடாகச் சொல்லப் பட்டிருக்கும் செய்திக்குப் பின்னுள்ள பாமரன் நிலை பல கேள்விகளை எழுப்புகிறது...அருமை கயல்!

Bibiliobibuli said...

நன்றி கயல்!

ராமலக்ஷ்மி said...

பொருள் நயத்தோடு லயமும் இணைந்த கவிதையின் கடைசி வரிகள் மிக நன்று.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி வெங்கட் .

நன்றி சித்தப்பா ..

நன்றி ரதி ..

நன்றி ராமலக்‌ஷ்மி..

சத்ரியன் said...

முகமூடிகளை இனம் காண அனைவருக்கும் போதிக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது.

Unknown said...

அழகான வரிகள்

ADHI VENKAT said...

நல்லா இருக்குங்க.

சாந்தி மாரியப்பன் said...

அழகாருக்குங்க வரிகள்..