May 30, 2012

நற்குறிகள்

தோகை நீண்ட மயில்
இரட்டை மைனாக்கள்
இன்றைக்கும்
நற்குறியோடு விடிந்தது
இருந்தும்
என்னோடு
காத்திருப்பை விட்டுச் செல்வதும்
உன்னோடு
பிரிவைக் கொணர்வதும் 
என்றும் மாறுவதில்லை


-----------------------------------



நிதானமாய் 
காத்திருக்கிறேன்
நொடிகள் தெரிகிறது
இதயம் துடிப்பதைக்கொண்டு 
நேரம் சொல்லமுடிகிறது

நாழிகை தெரிவதில்லை
நாளும் தெரிவதில்லை

கடிகாரப்படியும்
நாட்காட்டிப்படியும் பேசி 
பதட்டம் நிறைக்கிறார்கள்
சுற்றிலும் நகர்பவர்கள்

9 comments:

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

அக்கா...

கவிதை அருமை...

//நாழிகை தெரிவதில்லை
நாளும் தெரிவதில்லை//

ரசித்தேன்...

கோபிநாத் said...

;-))

ராமலக்ஷ்மி said...

/இதயம் துடிப்பதைக்கொண்டு
நேரம் சொல்லமுடிகிறது/

நான் ரசித்த வரிகள்:)!

பூங்குழலி said...

இதயம் துடிப்பதைக்கொண்டு
நேரம் சொல்லமுடிகிறது


மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்

வல்லிசிம்ஹன் said...

காத்திருத்தல்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

@ ரத்னவேல்
நன்றிங்க :)

குமார் நன்றி :)

கோபி நன்றி :)

ராமலக்‌ஷ்மி நன்றிப்பா :)

நன்றி பூங்குழலி :)

வல்லி ..
ஆமா :)

பாச மலர் / Paasa Malar said...

//இதயம் துடிப்பதைக்கொண்டு
நேரம் சொல்லமுடிகிறது//

மிகவும் பிடித்த வரிகள்..இரண்டாவது கவிதையின் வரிகள் மிகவும் பிடித்திருந்தது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இரண்டு பத்திகளுக்கு இடையிலுள்ள கோட்டை எடுத்து விட்டு மூன்று புள்ளிகள் வைக்கலாம்..காத்திருப்பின் நன்குறிகள் என்று தலைப்பைச் செதுக்கலாம்..

அழகான காத்திருப்பு அனைவருக்கும் வாய்ப்பதில்லை;அதுவும் சுற்றிலும் கடிகாரம் பார்ப்பவர்கள் பதட்டம் நிறைக்கும் அளவுக்கு காத்திருப்பை ரசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்..

:))