August 22, 2012

இயல்

ஆர்க்கும் கரையிலிருந்து
தொலைவில்
வெகுதொலைவில்
பழக்கமான மௌனத்தில்
விழுந்து மிதக்கிறது
ஆழிமழை

மின்னி மறைந்து கொண்டிருந்தது
இருளின் பரப்பை 
பழகவிடாத ஒளிக்கத்திகள்

இயல்பாய் இருப்பதென்பதாய்த்தான்
சற்றே கவனங்கள் சிதறுவதை
கவனிப்பதுவும்

---------------------------------------------------
வருடங்கள் மிகுத்து
கிளை பரந்தும்
வேர்பரவா மரமதென்று
உறங்காதென்று
வணங்கி நிமிர்ந்து பின் 
புழுவாகி பாம்பாகி
மரமாகியோ
சாபம் தீரவோ 
காத்திருந்த மரத்தின்
நினைவுக்கென்று 
பட்டை உரித்தார் 
உய்விக்க வந்த
கடவுளோ இவர்?

15 comments:

சே. குமார் said...

அக்கா...
நலமா?
நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான கவிதைகளுடன்..
தொடர்ந்து எழுதுங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி குமார். நலம் :)
எழுதுவது குறைந்து வாசிப்பது நிறைய ஆகிடுச்சு.. எப்படியோ நல்லது தானே :)

கோபிநாத் said...

அருமை ;-)

வல்லிசிம்ஹன் said...

மரத்தின் பட்டை யை உரித்தால்
அதற்கு ஜன்ம சாபல்யமா:(

சலனமில்லாத ஆழ்கடலின் மௌனத்தை உடைக்கும் ஒளிக்கத்திகள்
அருமையான உவமை.
கயல் நாம் மௌனமாகி நின்றாலும் நம்மைச் சீண்ட வரும் கத்திகளை நினைவு படுத்துகின்றன.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபி :)

வல்லி இல்லையா பின்ன மரமா எடுத்த ஜென்மத்துல இருந்து விடுதலை எப்ப அடையரதாம்..:)

நன்றிங்க தனபாலன்.. :)Asiya Omar said...

மிக அருமை.கருத்துள்ள வரிகள்.

ஹுஸைனம்மா said...

என்னை மாதிரி (கவிதைத்) தற்குறி(களு)க்காக ஒரு பொழிப்புரை, விளக்கவுரை போடக்கூடாதாக்கா? ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவுன்னு ஆசையா ஓடிவந்தேன்... அவ்வ்வ்....

ராமலக்ஷ்மி said...

இரண்டுமே மிக அருமை.

மகிழ்ச்சி. தொடரட்டும் எழுத்து:)!

கோமதி அரசு said...

கவிதை அருமை. இப்படி
பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

நிலாமகள் said...

ஆழி ம‌ழையும் மீனின் க‌ண்ணீரும் அறித‌ற்க‌ரிது.
மின்னி ம‌றையும் ஒளிக்க‌த்திக‌ளின் கிழிப்பில் இருள் வெட்டுண்ட‌ வேக‌த்தில் இணைகிற‌து.
க‌வ‌ன‌ங்க‌ள் சித‌றுவதும் இய‌ல்பே... இழுத்து நிறுத்துவ‌தால் ம‌ட்டுமே குறிக்கோள‌டைய‌லாம்.

இய‌ல்பாகவும் அழ‌காக‌வும் இருக்கின்ற‌ன‌ க‌விதை வ‌ரிக‌ள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆசியா..:)

மாதாஜி ஹுஸைனம்மா.. உங்களுக்குப் புரியலன்னு சொல்லலாமா
பாருங்க ஆசியாக்கு புரிஞ்சுருக்கு.. :)

ராமலக்‌ஷ்மி நன்றி :)

கோமதிம்மா நன்றி :)

நிலாமகள் அழகான பின்னூட்டம் மிக்க நன்றி :)

மாதேவி said...

கவிதைகள் அருமை.Easwaran said...

இந்தக் கவிதைகளில் ஒரு வசதி. அவரவர் எண்ண ஓட்டங்களின் படி பொருள் கொள்ளலாம். கவிஞரும் வாசகரும் ஒரே பரிமாணத்தில் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

(நான் என்ன மாதிரி புரிந்து கொண்டேன் என்று கேட்காதீர்கள்.)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி மாதேவி,,:)

நன்றி ஈஸ்வரன்.. என்ன கோணத்தில் எழுதினீர்கள் என்று கேட்காதமாதிரியே நானும் நீங்கள் புரிந்துகொண்டதைக் கேட்கமாட்டேன்.. :))