October 5, 2012

என் வீட்டு ஜன்னல் எட்டி...


முன்பிருந்த செம்பருத்திச் செடி வெளியூர் போய் இருக்கும் போது குட்பை சொல்லிவிட்டுப்போய்விட்டது.. வெறுமையாய் இருந்த தொட்டிக்கு வேறு ஒரு செம்பருத்தியை அதுபோலவே கொண்டுவருவதாய் சொல்லி இருந்தார் தோட்டக்காரர். ஆனால் வேறு விதமான ஒரு செம்பருத்தி . அதன் முதல் பூவையே நான் வெறுத்தேன். மிகவும் அளவில் பெரியதாக..சிவப்பு நிறம் அடர்த்தியற்று வெளிரென்று  அதை நான் பறிக்கவும் இல்லை . சாமிக்கு வைக்கவும் இல்லை. என்னை சமாதானப்படுத்த வேறு ஒரு சிகப்பு செம்பருத்தியும் ஒரு வெள்ளை செம்பருத்தியும் கூட கொண்டுவந்தார். ஆனால் எனக்கு பழைய செம்பருத்தியைப் போல எதுவும் வரவில்லை.

தோட்டவேலையையும் கணவருக்குக் கொடுத்துவிட்டு எப்போவாவது ஒரு சின்ன ஹாய் (மற்ற செடிகளுக்குதான்) சொல்லுவதுடன் இருந்தேன். பால்கனிக்கு போனாலும் ஒரு பாராமுகம் தான். கூடவே ஒரு பப்பாளியை நட்டு அதற்குரிய தனித்தன்மையையும் கொடுக்க மறுத்தேன்.  பப்பாளி பூக்கவே இல்லை அது வேறு விசயம்.

மாடிவீட்டிலிருந்தும் , பக்கத்துவீட்டிலிருந்தும் புதுச்செடியின் பூ அழகு என்று பாராட்டையும் வாங்கிக்கொண்டது. ’க்கும் ’ என்று சொல்லிவிட்டு அந்த விசாரிப்பையும் நான் அதற்கு சொல்லவே இல்லை.

அடுக்களை ஜன்னலை திறந்து வைத்து சமைக்கும் போது பின்னால் இருக்கும் மரங்களையும் குருவிகளையும் ரசிப்பது வழக்கம்.[அடுக்களையில் இருக்கிறோம் என்பதை மறக்கத்தான்..:) அதனால் தான் அடிக்கடி சூடு படுகிறதோ :) ] ஒரு நாள் ஓரமாய் எட்டிப்பார்க்கும் இந்த செம்பருத்தி என்னைப்பாரேன் என்றது .அட அழகா இருக்கியே என்று ஒரு கணம் நினைத்துவிட்டேன்.


அந்த நேரம் பார்த்து மகளும் வந்து நான் என்ன ரசிக்கிறேன் என்று கேட்டுவிட்டு..இந்தச்செடிக்கு எவ்வளவு  பாரேன்மா.. நம்ம வீட்டுப்பக்கத்தில் பூக்காமல் வெளியே போய் இத்தனைப்பூக்கிறது  என்று சொல்லவும் தான் நிஜம்மாகவே இந்த செம்பருத்தி ஜன்னல் எட்டிப்பார்த்து  புன்னகைக்கத்தான் இப்படிப் பூக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

இருந்தாலும் நான் பறிக்கப்போவதில்லை. இவ்வளவு அழகா புரிஞ்சுக்கிற செடியிலிருந்து பறிச்சு வைக்கலையேன்னு கேக்கவாப் போறார் சாமி. (சோம்பேறித்தனத்துக்கு என்ன ஒரு சப்பைக்கட்டு)

 பார்க்கின்ற மலரூடு நீயேயிருத்தி அப்பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன் ’ - தாயுமானவர்22 comments:

சாந்தி மாரியப்பன் said...

ஹைய்யோ.. ரொம்ப அழகா இருக்குங்க. அதுவும் பூச்சியும் மேட்சிங்கா இருக்குது பாருங்க ஜூப்பரு :-)

கோபிநாத் said...

பதிவும் படங்களும் சூப்பரோ சூப்பர் ;))

ராமலக்ஷ்மி said...

அட, எத்தனை அழகாய் இருக்கு:)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சாரல் & ராமலக்‌ஷ்மி நன்றி..
முதல் படம் பழைய செம்பருத்தியாக்கும்.. க்ளிக் க்ளிக் பதிவில் வச்சிருந்தேன் அங்க இருந்து கொண்டுவந்தேன்..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி நன்றிப்பா.. இன்னைக்கு 3 பூ அதேமாதிரி ஜன்னல் வழியா தெரியற பக்கத்தில் மட்டும் பூத்திருக்கு..:)

வெங்கட் நாகராஜ் said...

அழகிய பூ.....

தோட்ட வேலையும் அவருக்குக் கொடுத்தாச்சு! :)))

சரி சரி...

Thekkikattan|தெகா said...

பூவில் அழகென்ன/அற்றது என்ன? எல்லாமே பூக்கள்தானே... அதற்கு பாரா முகமா? சுத்தம்!!

நல்ல கற்பனை! சாளரத்தின் வழியாக எட்டிப்பார்ப்பதனைப் போல... hide and seek!

கோமதி அரசு said...

இந்த செம்பருத்தி ஜன்னல் எட்டிப்பார்த்து புன்னகைக்கத்தான் இப்படிப் பூக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.//

பாராமுகமாய் இருந்தாய் இந்த செம்பருத்திமேல். இப்போது அந்தபூ உன் ஜன்னல் வழியாக உன்னை பதிவுஎழுத இழுத்து வந்து விட்டதே1
இன்னைக்கு பூத்த மூன்று பூவையும் பதிவில் கொண்டு வந்து இருக்கலாமே.

ராமலக்ஷ்மி said...

பழைய செம்பருத்தி நினைவில் இருந்தாள் எனக்கு:)!

திண்டுக்கல் தனபாலன் said...

அழகாக இருக்கு... சந்தோசமாக இருக்கு... (எங்கள் வீட்டிலும் பறிக்க மனம் வராது...)

Meenu27 said...

ரொம்ப நல்லா இருக்கு உங்க பகிர்வு. கணவர் தோட்ட வேலை செய்வது நல்ல விஷயம் தானே.

ADHI VENKAT said...

பூவும்... பதிவும் அழகு.....

அதுகிட்ட ஏன் பாராமுகம்.... பறிச்சு சாமிக்கு வெச்சிடுங்க...:)

jeevagv said...

முடிப்பு இனிப்பூ!!!

பாச மலர் / Paasa Malar said...

பூவை விடவும் விஷயங்களை விடவும் சொல்லியிருக்கின்ற அழகை ரசித்தேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெங்கட் கவனிச்சிட்டீங்களா.. அவங்க நல்லதுக்குத்தானேங்க..:)

தெகா என்ன தான் இருந்தாலும்.. சரி அதான் இப்ப ப்ரண்டாகிட்டோம்ல நாங்க..:)

கோமதிம்மா இருந்தாலும் எட்டிப்பார்த்தது இந்தப்பூ தானே.. அதான் இந்தப்பூ பதிவில்..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்‌ஷ்மி புதுக்கேமிராவில் முதலில் படம் எடுத்ததால் எனக்கும் அந்த பழைய செம்பருத்தி மறக்கமுடியாத ஒன்று..
-------------
தனபாலன் நன்றி.. இயற்கை இறைவனுக்கு மலர் அலங்காரம்.. :)
-------
மீனு கரெக்டா சொன்னீங்க.. அவங்க நல்லதுக்காகவெ தான் அந்த வேலைய அவங்களுக்குக் கொடுத்திருக்கேன்..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆதி பூவை வைக்கிறது ப்ரச்சனை இல்லப்பா.. ஆனா முழுக்க வாடறதுக்குள்ள அதை வீட்டிலிருந்து வெளியே அனுப்பனும்ன்னு எதிர்ப்பாப்பாங்க.. அதான் இந்த வேலை இல்லன்னா அந்த வேலையும் இல்லையே..:)

----------------

நன்றி ஜீவா :)

-----------
பாசமலர் ரொம்ப நன்றிப்பா..:) க்கும் ல நொடிச்சிக்கிட்டேன் ல அதான் பிடிச்சிருக்கும்..:))

வல்லிசிம்ஹன் said...

எங்கவீட்ட்ல நித்தியம் பத்து செம்பருத்தியாவது பூக்கிறது. அதில மஞ்சள்.ஒவ்வொரு சாமிபடத்தில வைக்கும்போதும் அது தான்க்யூன்னு சொல்ற மாதிரி கற்பன ஓடும்.
அதுக்கு எத்தனை பாசம் பாரேன். கண்ணு முன்னால் வந்து எட்டிப்பார்த்து''கயல் வா; அப்டீன்னு கூப்பிடுகிறது!!

ஹுஸைனம்மா said...

நீங்க இருக்கிறது அடுக்ககத்தில்தானே? அப்படின்னா, பால்கனியில் தொட்டியில் வைத்திருக்கும் செடியா இவ்ளோ பெரூசா இருக்கு? வாவ்... (ஹூம்... - இது என் செடியப் பாத்து) :-)))

அது, செம்பருத்தின்னா சிவப்பு நிறம்னு மனசுலபதிஞ்சு போனதாலயோ என்னவோ, இப்ப வருகீற கலர் கலர் செம்பருத்திகள், பூவென்று ரசிக்க முடிந்தாலும், செம்பருத்திப்பூ என்று ஏற்றுக் கொள்ள முடிவ.... இல்லை, சிரமமாக இருக்கிறது. :-))))

//’க்கும் ’ என்று சொல்லிவிட்டு அந்த விசாரிப்பையும் நான் அதற்கு சொல்லவே இல்லை.//
எப்படிச் சொல்லமுடியும்? வீட்டுக்காரர் பராமரிப்பில் பூத்த செடியாச்செ? :-D :-D :-D :-D :-D :-D

//அடுக்களையில் இருக்கிறோம் என்பதை மறக்கத்தான்//
ஹி..ஹி.. ஸேம் ப்ளட். கிச்சனிலிருந்து தோட்டம் தெரியாது என்பதால், கார்ட்லெஸ் ஃபோனை எடுத்துக் கொண்டு கதை பேசிக்கொண்டே சமையல்... (ஃபோன் பேசாம செஞ்சாலும் உப்பு, காரம், ருசி ஒண்ணும் பிரமாதமா இருந்திடப்போறதில்லை) :-)))))))

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/8.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பகிர்வு! முக்கியத்துவம் கொடுக்கும் ஒன்றை போல மற்றொன்று வராதுதான்! சிறப்பு! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

மீண்டும் உங்களின் தளம் வலைச்சரத்தில் (http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_2.html) அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

நன்றி...