September 20, 2012

கைநிறைய அள்ளிய நீர்


அள்ளாமல் விட்ட நதிக்காய்
குறைபட்டுக்கொண்டே
பெருநதியிலிருந்து
கைநிறைய அள்ளிய நீரும்
நொடிக்கொரு துளியாய்
குறைகின்ற சலிப்பின்றி
நதியோரமாய் நடப்பதெப்படி?
----------------------------




நம்பிக்கைகளுக்கு வலிக்காமல்
சொல்லிக்கொண்டேன்
கடினமற்ற பாதையில்
கூழாங்கல் தெரிய
நதியாக ஓடி
இசையாக இசைந்திருக்கவும்
ஆரவாரித்து வீழ்வதென்றாலும்
அருவியாக இசைத்திருக்கவுமாய்

7 comments:

Anonymous said...

nice

கோமதி அரசு said...

நதியாக ஓடி
இசையாக இசைந்திருக்கவும்
ஆரவாரித்து வீழ்வதென்றாலும்
அருவியாக இசைத்திருக்கவுமாய்//

அருவி படமும், அருவி கவிதையும் அருமை.
இப்படி அடிக்கடி அருவியாக இசை பாடம்மா.

ராமலக்ஷ்மி said...

நதியின் அழகுடன் வரிகள். இரண்டும் நன்று.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... (படமும்)

வல்லிசிம்ஹன் said...

அருவிப் படம் மிக அழகு. தண்ணீர் பற்றாக்குறையில் நம் ஊர் அவதிப் படும் நேரம் உங்கள் கவிதை வரிகள்
இசையாய் விழுகின்றன. கயல்.

'பரிவை' சே.குமார் said...

அழகான கவிதை வரிகளும்..
அவற்றிற்குப் பொருத்தமான கவிதையான அருவிப் படமும் கவர்ந்தன.

பாச மலர் / Paasa Malar said...

அருமையான வரிகள் கயல்..