November 27, 2013

அணுக்கநடை பயணம்

எண்கள்
பொறுமையுடன் 
தலைகீழாய்
இறங்கிக்கொண்டிருக்க
புறந்தள்ளியபடி 
பரபரத்து 
மேலேறுகின்றன எண்ணங்கள்

--------------------------------------------------------


வண்ணக்குறியீடுகளால் 

வரவேற்பெழுதிய அறையின் வாசலில்
வண்ணங்கூட்டுகையில் உச்சரிக்கப்படாத 
பெயரைத் தாங்கியதற்காய்
காத்திருக்க நேர்கையில்
நேரம் நீள்வதாய் இல்லாமல்
ஒவ்வொரு நொடியிலிருந்தும்
மீண்டும்
துவங்குகிறேன்


----------------

நூல் இற்றுக் கொண்டிருக்கும்
புத்தகத்தின் 
தொலைந்துகொண்டிருக்கும்
துவக்கமும் முடிவும்
சுருக்கிக்கொண்டிருக்கிறது
சிறுநிகழ்வென நெடியவாழ்வை

-------------------------

குறையல்ல

அறிந்தும் அறியாதவராய்
அணுக்கநடை பயணம்
எனையறியா நானும்
உனையறியா நீயும்

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை...

வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் said...

நன்று.....

ரசித்தேன்

ADHI VENKAT said...

அருமை... ரசித்தேன்.

ஏம்ப்பா! உதய்ப்பூர் பயணத்துக்கு கூட்டிகிட்டு போவீங்கன்னு பார்த்தா...பாதியிலேயே விட்டுட்டீங்களே...:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தனபாலன்.. :)

நன்றி வெங்கட் :)
நன்றி ஆதி .. என்னன்னா இதுவே நான் சேமிக்க மறந்துடறேன்னு இன்னிக்கு பதிவாக்கிட்டேன். உதய்ப்பூரை அடுத்தமாதம் மீண்டும் எழுதமுயல்கிறேன். என்னவோ நேரச்சுழலில் சிக்கியிருக்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

ரசிக்க வைக்கும் கவிதைகள் அக்கா...

Easwaran said...

//நூல் இற்றுக் கொண்டிருக்கும்
புத்தகத்தின்
தொலைந்துகொண்டிருக்கும்
துவக்கமும் முடிவும்
சுருக்கிக்கொண்டிருக்கிறது
சிறுநிகழ்வென நெடியவாழ்வை//

ஒரு பெரிய உண்மையை சுருக்கமாய் சொல்லி விட்டீர்கள். நன்று.