January 12, 2014

ஒளிர்

 
பனியின் கரங்கள்
மிடாஸின் துயரம் போல
உயிர்களை
சிலைகளாக்கி செல்கிறது
உறைந்தும் உயிர்த்திருக்கும் மனம்
தன்னையே
உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது

வெம்மைசூழ் நாட்களுக்குள்
தன்னையறிந்துகொண்டால்
விரிந்துகொண்டிருக்கும்
இடைவெளிகளை நிரப்ப
விலைமதிப்பற்றவைகளை
சேகரிக்கத் தொடங்கலாம்

4 comments:

கோமதி அரசு said...

வெம்மைசூழ் நாட்களுக்குள்
தன்னையறிந்துகொண்டால்
விரிந்துகொண்டிருக்கும்
இடைவெளிகளை நிரப்ப
விலைமதிப்பற்றவைகளை
சேகரிக்கத் தொடங்கலாம்//

உறவுகளை புரிந்து கொண்டால்
இடைவெளிகள் குறைந்து அன்பு எனும் புதையல் கிடைக்கும் என தெரிகிறது.
வாழ்த்துக்கள் கவிதைக்கு.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை.

Easwaran said...

//வெம்மைசூழ் நாட்களுக்குள்
தன்னையறிந்துகொண்டால்
விரிந்துகொண்டிருக்கும்
இடைவெளிகளை நிரப்ப
விலைமதிப்பற்றவைகளை
சேகரிக்கத் தொடங்கலாம்//

உண்மை! உண்மை!