June 28, 2007

மாயவரத்தில் பாசக்காரகுடும்பம்

அபி அப்பா தான் முதலில் நீங்க மாயவரம் போறீங்களா நானும் அந்த சமயம் வந்தாலும் வருவேன் பாக்கலாம் என்றார். கோபிநாத் மெயில் செய்து நானும் வரேன் அக்கா என்றார். கோவை பட்டறைக்கு சொல்லிக்காம் தில்லியிலிருந்து கிளம்பி வந்த சென்ஷி அங்கேயே டேரா போட்டிருந்ததால் அவரும் வருவார் என்று தெரிந்தது .அதுக்கப்புறம் பார்த்தா இம்சை (அதாங்க பேசாம உட்கார்ந்து இம்சை பண்ணாங்களே) , பாலைத்திணை காயத்ரி , மூத்தபதிவர் ராயல் ராம் , ஜி எல்லாரும் வராங்கன்னாங்க சரிதான் கச்சேரி களைகட்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்...சந்திப்புக்கு முதல் நாள் தான் சொர்ணாக்கா (கண்மணி) வந்தாலும் வருவாங்க அப்படின்னு ஒரு செய்தி..



நான் உள்ள போன போது இம்சை குளிக்க போயிருந்ததால் காயத்ரியை காயத்ரி என்றும் அவர்கள் அம்மாவை அவர்கள் அம்மா என்றும் ஜி யை கோபி என்றும் கோபி யை ஜி என்றும் அறிமுகப்படுத்தினார்கள்.. ராயல் ராம் சின்ன கைப்புள்ளை என்ற அடைமொழியோடு அறிமுகப்படுத்தினார்கள். சின்ன வயசுல குளிக்கப்போன இம்சை கொஞ்சம் பெரிய பொண்ணா வெளிய வந்தாங்க. .
குளிக்கப்போன ராயல் ராம் இம்சையை விட அதிக நேரம் ஆக்கிட்டார் இதுக்கிடையில் வந்த சென்ஷிக்கான அறிமுகப்படலத்தில் இம்சையை காயத்ரி என்று குழப்பி சொன்னவுடன் ஏ ..மாத்தி சொல்றாங்கப்பான்னேன்.அட உங்களுக்கு ஜி யாரு கோபி யாருன்னே தெரியாது நீங்க சொல்ல வந்திட்டீங்களான்னாங்க



தலைவி என்ற ஒரு கெட்டப்போடு வந்தாலும் வரலாம் வராமலும் போகலாம் ...எத்தனை மணிக்கு வருவார்கள் என்று தெரியாது என்று கண்மணியின் வ்ருகை எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் எல்லாரும் காலைஉணவு சாப்பிட்டாங்க. காயத்ரி எல்லாத்துக்கும் என்னப்பா இது நான் கேட்டனா அப்படின்னு சிரிச்சுக்கிட்டே கேட்டுக்கிட்டு இருந்தாங்க .அவங்க அம்மா ஒரு புத்தகத்தோடு மூழ்கி எப்பவாவது அவங்க பொண்ண கலாய்ச்சா கொஞ்சமா கண்ணெடுத்து பார்த்துகிட்டாங்க.
காயத்ரி யின் அருமை பெருமையெல்லாம் அங்க போய் தான் தெரிஞ்சுகிட்டேன்


அஜெண்டா உண்டான்னு கேட்டேன் ..இது பதிவர் சந்திப்பு இல்லை ..நாமெல்லாம் ஒரு குடும்பம் . அப்படின்னாங்க...இம்சை எதாச்சும் பேசுங்க ...நீங்க பேசவே மாட்டிங்களான்னு கேட்டா...ஏன் ஏன் பேசுவேனே அப்படின்னு சொல்லிட்டு புல்ஸ்டாப் வச்சிட்டாங்க...ஏங்க இப்படி டப்புன்னு முடிச்சிட்டா எப்படிங்க பேச்சு வளரும்..அதான் வேற வழி இல்லாம் நானே பேச வேண்டிய தா இருந்தது..அப்படியும் ஒவ்வொருத்தரையும் ஜி நீங்க எப்படி எழுத வந்தீங்க..கோபி எப்படி எழுத வந்தீங்கன்னு கேள்வி கேட்டு பேச வச்சதும் நாந்தான். ..
ராயல் ராம் கிட்ட மூத்த பதிவரா நீங்க என்ன சொல்ல விரும்பரீங்கன்னு கேட்டதும் அவர் வெட்கப்பட்டுகிட்டே தன் அனுபவங்கள் சொல்ல ஆரம்பித்தார்.ஆனா குறுக்க வேறயாராவது பேசினா ட்ப்புன்னு டாபிக்க் மாறிப்போயிடும்.தமிழ் மணத்தோட புது மாற்றங்கள் பற்றி சந்தோஷமா பேசிக்கிட்டோம்.



கண்மணி வந்ததும் நானே யாராருன்னு கண்டுபிடிக்கிறேன்னு சொன்னாங்க..அசத்தலா கண்டும்பிடிச்சாங்க...ஆனா ஆஜானுபகவா ஒரு ஆள நினைச்சேன் இப்படி இருக்கீங்களேன்னு கொஞ்ச நேரத்துக்கு புலம்பிக்கிட்டே இருந்தாங்க என்னைப்பார்த்து. சரவெடியை கொளுத்திப்போட்ட மாதிரி படபடன்னு இருந்தது அவங்க பேச்சு..ரொம்ப வெளிப்படையா தனக்கு ஜூனியரான அபி அப்பாவின் காமெடி பதிவுகள் பார்த்து அவங்க பொறாமைப்பட்டதையும் அப்புறம் நட்பானதையும் சொன்னபோது உயர்ந்துட்டாங்க அப்படியே.
எனக்கு ராத்திரி ரயிலுக்கு போகவேண்டியதால சாப்பாடு எத்தனைமணிக்கு போடுவீங்கன்னு கேட்டுக்கிட்டே இருந்தேன்..அப்படியும் அபி அப்பா 3 மணிக்கு த்தான் போட்டார். நல்லவேளை அவங்க அக்கா வந்து கொஞ்சம் உதவி எல்லாம் செஞ்சாங்க இல்லன்னா அவருக்கென்ன பொறுப்பாவது ஒன்னாவது.
சும்மா உட்காராமா சுத்தி வேலை செய்யர மாதிரி ஆக்ட் விட்டார்.
அபி அவள் அப்பாவின் வண்டவாளங்களை தண்டவாளங்கள் ஏற்றினாள்..



சாப்பிட்டவுடன் காலையில் வெளியே போன ஆண்கள் சிறிது நேரம் பிறகு வ்ந்தார்கள்..இதற்கிடையில் மங்கை போன் செய்து ஏன் நீங்க போலயான்னு கேட்டாங்க ...எனக்கு பழக்கமில்லைங்கன்னு சொன்னேன்.பிறகு எல்லாருடனும் அவங்க டில்லியிலிருந்தே அறிமுகம் செய்து கொண்டார்கள்.
நான் பேசவே ஆரம்பிக்கவில்லை என்று சென்ஷி சொன்னதும் பாவம் அவங்களுக்கு நெஞ்சு வலியே வந்திருச்சு. அப்புறம் இல்லையில்லை கொஞ்சமா பேசிகிட்டு இருக்கேன்னு கண்ணாடியை கழட்டிகிட்டே சினிமா டாக்டராட்டம் சொல்லி மங்கையை அபாயக்
கட்டத்திலிருந்து சென்ஷியே காப்பாத்திட்டார்.


குடும்பத்தில் ஒருத்தராக தன்னை இணைத்துக்கொண்ட அய்யனாரின் சில கவிதைகள் புரியாமலும் சில வார்த்தை பிரயோகங்கள் எங்களுக்கு பிடிக்காமலும் இருப்பதை பேசிக்கொண்டோம்.. இனிமே எல்லாரும் அப்பப்பவாச்சும் எதாச்சும் உருப்படியா எழுதுங்கன்னு கேட்டு கிட்டேன். எனக்கும் சேர்த்துத்தான் இது .



ஜி மற்றும் இம்சை ரொம்ப அமைதியானவங்க மாதிரி தெரிஞ்சாலும் உண்மையில் ரொம்ப ஆர்பாட்டமான ஆளுங்க...எழுத்துல யும் அவங்க ரொம்ப க்ளோஸான வட்டத்துலயும் ரொம்ப ஜாலியா இருக்காங்க..
கோபி அதிகம் பேசவே இல்லை...நான் தான் அடிக்கடி என்ன சொல்றீங்க ன்னு கேட்டு கேட்டு பேச வேண்டி இருந்தது..சென்ஷி க்கிட்ட முத்துலெட்சுமி இப்படி பேசுவாங்கன்னு எதிர்பார்க்கலன்னாராம் என்கிட்ட இல்ல சொல்லி இருக்கணும்..இப்படியே அமைதியா இருந்து நல்லபிள்ளை பட்டம் வாங்கியவர் கோபி ஒருவர் தான்.


பேசிய விஷயத்தில் நிறைய குடும்ப ரகசியம் அதனால அதெல்லாம் எழுதல.கல்யாணத்தில் நீங்கள்ளாம் சேரை வட்டமா இழுத்துப்போட்டு அரட்டை அடிப்பீங்களா அந்த மாதிரி ஒரு அழகான அனுபவம். தெரு முக்குக்கு கேட்டுச்சாம் சிரிப்பு சத்தம். அபி தம்பிக்கு நன்றி.

ஒரு விஷயம் மறந்து போய் சேர்க்கிறேன்..வராத மீத ஃபர்ஸ்ட் தங்கச்சிய எல்லாரும் சந்திப்பின் போது நினைச்சிக்கிட்டோம்.

48 comments:

அபி அப்பா said...

மீ த ஃப்ர்ஸ்ட்

மை பிரண்ட்!!!

அபி அப்பா said...

ஆஹா நல்ல வேளை நீங்கலாவது என்னய ரொம்ப கலாய்க்காம விட்டீங்களே! பசங்க எல்லாம் செமத்தியா கலாய்ச்சுட்டாய்ங்க அவிங்க அவிங்க பதிவிலே!!:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அப்படியும் அபி அப்பா 3 மணிக்கு த்தான் போட்டார். நல்லவேளை அவங்க அக்கா வந்து கொஞ்சம் உதவி எல்லாம் செஞ்சாங்க இல்லன்னா அவருக்கென்ன பொறுப்பாவது ஒன்னாவது.
சும்மா உட்காராமா சுத்தி வேலை செய்யர மாதிரி ஆக்ட் விட்டார்.
அபி அவள் அப்பாவின் வண்டவாளங்களை தண்டவாளங்கள் ஏற்றினாள்..//

இதெல்லாம் கலாய்த்தல் இல்லையா?அடப்பாவமே...

அவங்கள்ளாம் பஸ்ஸ்டாண்டுல அனாதையா சுத்தி ...உள்ளூரான எனக்கே கஷ்டமான உங்க வீட்டை தேடி வந்து பாவம் அதான் அப்படி

அபி அப்பா said...

இளந்தல ராயல் ராம் இருந்த அந்த கூட்டத்தில் அவரை கலாய்க்காமல் அப்பாவி அபிஅப்பா தாக்கப்படுவெது எந்த விதத்தில் ஞாயம், நீங்களே சொல்லுங்க மக்கா!:-))

துளசி கோபால் said...

அதென்னங்க எல்லாரும் இந்த நேரத்துலே போய் மாறி மாறி குளிக்கப்போனாங்க?

சரி சரி. சாப்பாடு போட்டாங்கதானே?
என்னென்ன இருந்துச்சுன்னு ஒரு வார்த்தை...............!!!!

ஜி said...

ஆஹா அக்கா...

அங்க எப்படி ப்ரேக் பிடிக்காத தண்ணி லாரி மாதிரி பேசுனீங்களோ அதே மாதிரி இந்தப் பதிவுலையும் கலக்கிட்டீங்க....

ஜி said...

பாசக்காரக் குடும்ப சந்திப்பைப் பற்றிய பதிவுகளில் நான் போட்ட பின்னூட்டம்...

பாசக்கார குடும்பம் சந்திப்பில் வெளிவராத சில உண்மைகள்...

* வலைப்பதிவில் எப்போதுமே அடிவாங்கும் மூத்தப் பதிவர் (வயசுல இல்லீங்க), இளந்தலை ராயல் ராமை யாருமே டார்கட் செய்யவில்லை என்பதில் அனைவருக்குமே வருத்தம். அப்பப்ப செல்பேசியில் ரஞ்சனி காலிங், மஹா காலிங்னு மட்டும் வந்துக் கொண்டே இருந்தது.

* இம்சை அரசி தன்னை கண்மணி அக்கா டீச்சர் ஆக்கியதைக் குறித்து பயங்கற குற்றச்சாற்றை எழுப்பினார். தான் இன்னும் LKG தான் படித்துக் கொண்டிருப்பதாகவும், அதனால் தன்னை மாணவியாக அறிவிக்க வேண்டுமென்றும் அடம்பிடித்தார். ஒரே இடத்திலேயே உக்காந்து உக்காந்து படித்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால்தான் இத்தனை வருசமாக ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்.

* சென்ஷி வந்த பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு கஜினி சூர்யா கேஸ் என்று. சந்திப்பு முடியும் வரை யார் நீங்க? நான் எங்க இருக்கேன்? போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தார். சந்திப்பு முடிந்து அனைவரும் கிளம்பும் நேரத்தில் "இன்று சந்திப்பு நன்றாக நடந்தது ராம்" என்று என் கையைப் பிடித்து என்னிடம் கூறியதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படித்தியது.

* நண்டை எடுத்துக் கொண்டு இந்த கோழிக்கு நாலு காலுதான் இருக்குன்னு காயத்ரி தரையில உருண்டு அழ, அது நொண்டி கோழி அதான் இன்னொரு கால் இல்லைனு அபிஅப்பா சமாளிச்சதுக்கப்புறம்தான் காயத்ரி தன் அழுகையையே நிறுத்தினார். அடுத்த முறை எட்டுக்கால் பூச்சி பிரியானி ஆர்டர் செய்வதாக அபிஅப்பா கூறியதும், 'பூரான் பிரியானி செஞ்சிடுங்க. அதுலதான் எக்கச்சக்க கால் இருக்கும்'னு காயத்ரி அறிவுறை கூறினார்.

* கண்மணி அக்கா உள்ளே வந்தவுடனே, வலைப்பதிவிலுள்ள அதே கலகலப்பில் அனைவரையும் ஓட்டிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசியதைப் பார்த்து முத்துலட்சுமி அக்காவே வாயடைத்துப் போனார் என்றாள் பார்த்துக் கொள்ளுங்கள்.

கோழி பிரியானி, நண்டு வறுவல், மீன் பொறியல், சந்திப்பில் பேசிய பல விசயங்களை மறக்கடிக்க செய்துவிட்டது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க துளசி காலையில் சாப்பிட்டுட்டு போய்ட்டதால நான் காலை சாப்பாடு சாப்பிடலை அங்க..மிளகாய்பொடி தோசை..ரவாதோசை, பொங்கல் , இட்லி வடை இருந்தது. டீக்கு பசங்க வெளியே போய்ட்டாங்க..மதியம் எங்களுக்கு சாம்பார் வத்தக்குழம்பு கீரை அப்பறம் பீன்ஸ் பொரியல் ஒரு கூட்டு அப்பளம் தயிர் இருந்தது...

எல்லாரும் ராத்திரி பஸ்ஸில் வந்ததால குளிக்க வேண்டி இருந்தது நான் சொன்னேன் மதியம் சாப்பாட்டுக்குமுன்ன குளிங்கப்பான்னு பொறுப்பா குளிக்க போனாங்க ஆன யார் கடைசியா குளிக்கறதுங்கறதுக்கு அங்க போட்டி.சின்ன புள்ளைங்களாட்டம் நீ குளிச்சு ட்டு வா அப்புறம் தான் ந்நான் னு ...:)

----------------

Ayyanar Viswanath said...

/குடும்பத்தில் ஒருத்தராக தன்னை இணைத்துக்கொண்ட /@@@@@@@@@@@

/சில வார்த்தை பிரயோகங்கள் எங்களுக்கு பிடிக்காமலும் / @@@@@

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜி இதெல்லாம் நியாயமா...தண்ணி லாரியா அதுவும் ப்ரேக் பிடிக்காத ..ம்..அடியெடுத்துக் கொடுத்தாலும் பேசாத உங்களுக்கெல்லாம் என்ன பெயர்?

கதிர் said...

//நல்லபிள்ளை பட்டம் வாங்கியவர் கோபி ஒருவர் தான்.//

நீங்க மேத்ஸ்ல வீக்குனு நினைக்கிறேன்.

பெருங்கொண்ட பேச்சுக்கு சொந்தக்காரர் எங்க ஷார்ஜா சிங்கம்.

Ayyanar Viswanath said...

/அங்க எப்படி ப்ரேக் பிடிக்காத தண்ணி லாரி மாதிரி பேசுனீங்களோ/

ஹி..ஹி..ஜி நானும் இவங்கள ரொம்ப அமைதி ன்னு நெனச்சன்யா..
இம்சைதான் லொட லொட ன்னு பேசும் னு நெனச்சேன்..எல்லாம் தலகீழா இருக்கே

Ayyanar Viswanath said...

/பேசிய விஷயத்தில் நிறைய குடும்ப ரகசியம்/

முடிந்தால் தனிமடலிடவும் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தம்பி அப்படியா ..அப்ப கோபி அமைதியா இருந்தாரே அக்கா கிட்ட அவ்வளவு மரியாதையோ?
--------

அய்யனார் உங்களுக்கு குடும்ப உறுப்பினர் அபி அப்பா வந்து எல்லாவற்றையும் ஆல் இண்டியா ரேடியோ போல சொல்லிடுவார் கவலைப்படாமல் இருக்கவும்.
-------
நான் அமைதி என்று நினைத்தீர்களா அது எப்படி நினைக்கலாம்.அதுக்கு யார் பொறுப்பு.

MyFriend said...

Ippo opisle irukken.. piragu vanthu kummuren. :-)

காயத்ரி சித்தார்த் said...

//காயத்ரி யின் அருமை பெருமையெல்லாம் அங்க போய் தான் தெரிஞ்சுகிட்டேன்//

அக்கா இதை நீங்க இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லியிருக்கலாம்னு நான் ஃபீல் பண்றேன்.. நீங்க என்ன நினைக்கறீங்க? :))

காயத்ரி சித்தார்த் said...

அடப்பாவி ஜி.. என் பதிவுல போட்ட பின்னூட்டத்தையே(பொய்) காப்பி பேஸ்ட் பண்ணிருக்கியே? பேசத்தான் சோம்பேறித்தனம்னா இதுலயுமா?

காயத்ரி சித்தார்த் said...

//அவங்கள்ளாம் பஸ்ஸ்டாண்டுல அனாதையா சுத்தி ...//

அவ்வ்வ்வ்.. அதையெல்லாம் ஏன்க்கா நியாபகப்படுத்தறீங்க. எனக்கு அழுவாச்சி அழுவாச்சியா வருது. :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யோ ஒன்னும் தெரியாத பொண்ணா இருக்கியே காயத்ரி..அருமை பெருமை அப்படின்னா நிஜமான்னு நினைச்சிட்டியாஇப்ப அபி அப்பாவப்பத்தி எழுதி இருக்க ற மாத்ரி ... உன்னைப்பத்தி எல்லாருக்கும் தெரியணுமா என்ன...பாவம் போனாப்போது அப்படின்னு தான் விவரமா எழுதல உன்னைப்பத்தி.என்ன சொல்ற?

அப்புறம் நீ திருப்பி வந்து...

"அக்கா இதெல்லாம் ஏன் எழுதினீங்க கேட்டனா நான்"அப்படின்னு வ.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மெதுவா நிதானமா வாம்மா மை பிரண்ட் தங்கச்சி..நீயாவது ஆபிஸுல வேலைப்பாக்கறியே..நல்ல பொண்ணு.

ஜி said...

//காயத்ரி said...
அக்கா இதை நீங்க இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லியிருக்கலாம்னு நான் ஃபீல் பண்றேன்.. நீங்க என்ன நினைக்கறீங்க? :))//

விரிவா சொன்னா அப்புறம் டப்பா டான்ஸ் ஆடிடும்.. பரவாயில்லையா?? ;))

//அடப்பாவி ஜி.. என் பதிவுல போட்ட பின்னூட்டத்தையே(பொய்) காப்பி பேஸ்ட் பண்ணிருக்கியே? பேசத்தான் சோம்பேறித்தனம்னா இதுலயுமா? //

இதத்தான் கம்ப்யூட்டர் ஃபீல்டுல Reusability னு சொல்லுவாங்க.. மறுயுபயோகிப்புன்னு தமிழ்ல சொல்லலாம் :))

கண்மணி/kanmani said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.கரீட்டாப் புட்டு புட்டு வச்சிட்டீங்க.
ஆனா லேட்டா வந்ததால தலைவின்னு கமெண்ட்டா இதுக்கு நீங்க நாலு வார்த்தை திட்டியிருக்கலாம்.
லேட்டா வந்ததால் நிறைய விஷயங்களை நான் தான் மிஸ் பண்ணிட்டேன்
அப்புறன் 'குட்டீஸ் ஜங்ஷன்' ஓகே ஆகி ஓடிக்கிட்டிருக்கு.மாதினி ய டிரெய்ன் உடச் சொல்லுங்க ஃபிரீயா இருக்கும் போது.

கப்பி | Kappi said...

//மூத்தபதிவர் ராயல் ராம்/

'சின்ன தல' என்று குறிப்பிடாமல் விட்டதைக் கண்டித்து இந்த பதிவை புறக்கணிக்கிறேன் :)))


கோபி அமைதியின் திருவுருவமா???? இதெல்லாம் ரொம்ம்ப ஓவரு :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜி சரியாச்சொன்னீங்க..
பாவம் புதுசு இல்லயா காயத்ரி.

தமிழ் நல்லா சொல்லித்தர்ரீங்க தமிழாசிரியைக்கு..

--------

கண்மணி சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்க தலைவி தானே
குட்டீஸ் ஜங்க்சன் படிக்க சொல்றேன்.மாதினியை.
--------

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மன்னிக்கவும் கப்பிபயலே! சேகஷ்டங்க இந்த பேரோட
\\ராயல் ராம் சின்ன கைப்புள்ளை என்ற அடைமொழியோடு அறிமுகப்படுத்தினார்கள்//

என்று குறிப்பிட்டிருக்கிரறேனே
பிறகு ஏன் புறக்கணிப்பு போராட்டம்..
கூல் கூல்

முதல் வருகை என்று நினைக்கிறேன்..நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...
This comment has been removed by the author.
நாகை சிவா said...

//கல்யாணத்தில் நீங்கள்ளாம் சேரை வட்டமா இழுத்துப்போட்டு அரட்டை அடிப்பீங்களா அந்த மாதிரி ஒரு அழகான அனுபவம். //

அழகான விசயம்... அழகான அனுபவமும் கூட... இதானே வேண்டும்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன சிவா சொன்னதுக்காக எல்லாத்தையும் ஒரே மூச்சுல படிச்சு பின்னூட்டம் போடறீங்களா? அடுத்த முறை நீங்களும் வந்திருங்க...

நாகை சிவா said...

ஹலோ... நீங்க சொல்வதற்கு முன்பே படிச்சு பின்னூட்டம் போட்டாச்சு...

கண்டிப்பாக... அழைப்பிற்கு நன்றி

மங்கை said...

//நான் அமைதி என்று நினைத்தீர்களா அது எப்படி நினைக்கலாம்.அதுக்கு யார் பொறுப்பு//

அதானே..

யார் அப்படி நினைக்க சொன்னது?

எப்படி அப்படி நினைக்கலாம்?

ஏன் அமைதியா இருக்கனும்?

உங்களை எல்லாம் பேசக்கூடாதுன்னு யார் சொன்னா?

இப்படி பல கேள்விகள் இருக்கு...யார் பதில் சொல்லப் போறீங்க பாசமப் பறவைகளே..

எங்க தலைவிய சிறப்பு விருந்தினரா கூப்டு நக்கல் பண்றீங்களா..:-)))

காட்டாறு said...

ஆத்தீஈஈஈஈ.... இப்பிடியா கூத்தடிச்சிருக்கீக....

அது சரி.... நீங்க ஒரு மெனு சொல்லியிருக்கீங்க; ஜி முற்றிலும் வேறுபட்டதா சொல்லியிருக்காக... என்ன நடந்தது அங்கே? ஏமாத்தலாமின்னு பாக்காதீக... ஆமா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு நான் egg டேரியன்...
மத்தவங்க சாப்பிட்டது பறப்பது ஊர்வது கூவுவது...நான் சாப்பிட்டது என் லிஸ்ட் ..அவங்க சாப்பிட்டது அவங்க லிஸ்ட்.

சென்ஷி said...

ஆனாலும் நீங்க அதிகமா பேசாதது எனக்கு வருத்தம்தான்.

கோபிநாத் said...

\\ தம்பி said...
//நல்லபிள்ளை பட்டம் வாங்கியவர் கோபி ஒருவர் தான்.//

நீங்க மேத்ஸ்ல வீக்குனு நினைக்கிறேன்.

பெருங்கொண்ட பேச்சுக்கு சொந்தக்காரர் எங்க ஷார்ஜா சிங்கம்.\\

பார்த்திங்களா...நம்பவே மாட்டாங்க யாரும் ;)))

கோபிநாத் said...

\\ காயத்ரி said...
அடப்பாவி ஜி.. என் பதிவுல போட்ட பின்னூட்டத்தையே(பொய்) காப்பி பேஸ்ட் பண்ணிருக்கியே? பேசத்தான் சோம்பேறித்தனம்னா இதுலயுமா? \\

அய்யோ...காயத்ரி எல்லா பதிவுளையும் இதே பின்னூட்டத்தை போட்டுக்கிட்டு இருக்காரு ஜி...சீக்கிரம் இதுவே பதிவாக வந்தாலும் வரும் ;))

MyFriend said...

ஹீஹீ.. நான் வந்துட்டேன். ;-)

MyFriend said...

@அபி அப்பா:

//மீ த ஃப்ர்ஸ்ட்

மை பிரண்ட்!!! //

ஹீஹீ. துபாய்க்கு வந்துட்டீங்கன்னு டெஹ்ரியுது! நன்றி. :-))

MyFriend said...

மத்தவங்க சொன்னது உண்மையோ? இந்த வர்ணனையிலும் நீங்க புல்ஸ்டாப் வைக்காமலேயே பேசி முடிச்சிட்டீங்களே. ;-)

MyFriend said...

//ஒரு விஷயம் மறந்து போய் சேர்க்கிறேன்..வராத மீத ஃபர்ஸ்ட் தங்கச்சிய எல்லாரும் சந்திப்பின் போது நினைச்சிக்கிட்டோம்.
//

இந்த டிஸ்கி பலமா இருக்கே? எப்போ போட்டது? :-P

MyFriend said...

40 போட்டாசு. :-D

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆனாலும் இந்த கிண்டல் கொஞ்சம் ஜாஸ்தி தான்.சென்ஷி...நான் கொஞ்சம் தான் பேசினேனா அதான் ஊரை விட்டே நீங்க காலி செஞ்சிட்டிங்களே...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி மரியாதையா பெரியவங்க பேசட்டும்னு இருந்தீங்க போல..உங்க வட்டத்துல பெரிய சிங்கம் போல ...ஒகே ஒகே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க மை பிரண்ட் தங்காச்சி.. 40 போட்டதுக்கு தேங்க்ஸூ...அந்த டிஸ்கி அபி அப்பா வந்து முதல் பின்னூட்டம் போட்டதும் நினைவுக்கு வந்து போட்டேன்...

மத்தவங்க சொன்னதெல்லாம் உண்மை தான் கமா வைக்காம புல் ஸ்டாப் வைக்காம பேசுறது என் ஸ்ஸ்ஸ்ஸ்டைல்.:)

இராம்/Raam said...

யக்கா,

இந்த வாரம் புல்'லா ஆபிஸிலே ஆணி பிடுங்க வைச்சிட்டானுக.... :(((


இப்போதான் படிக்கமுடிஞ்சது.....

இராம்/Raam said...

//
இம்சை எதாச்சும் பேசுங்க ...நீங்க பேசவே மாட்டிங்களான்னு கேட்டா...ஏன் ஏன் பேசுவேனே அப்படின்னு சொல்லிட்டு புல்ஸ்டாப் வச்சிட்டாங்க...ஏங்க இப்படி டப்புன்னு முடிச்சிட்டா எப்படிங்க பேச்சு வளரும்..அதான் வேற வழி இல்லாம் நானே பேச வேண்டிய தா இருந்தது..//

இம்சையக்கா'கிட்டே பஸ்ஸிலே வர்ற்ப்போ நானும் ஜியா'வும் 500 ரூபாய்'க்கு மீட்டிங்க் அன்னிக்கு பேசமா இருக்கனுமின்னு பெட் கட்டினோம்....

அதுனாலே தான் அவங்க பேசாமே இருந்தாங்க... ஹிம், அமைதியான, சாந்தமான பொண்ணு எல்லாம் அன்னிக்கு யாரோ பட்டப்பேரலாம் கொடுத்தாங்க...

கொடுமைடா சாமி... :((

இராம்/Raam said...

//சாப்பிட்டவுடன் காலையில் வெளியே போன ஆண்கள் சிறிது நேரம் பிறகு வ்ந்தார்கள்..இதற்கிடையில் மங்கை போன் செய்து ஏன் நீங்க போலயான்னு கேட்டாங்க ...எனக்கு பழக்கமில்லைங்கன்னு சொன்னேன்.//

ஊரெல்லாம் சுத்தி பார்க்க வேணாமா??? அங்க இருக்கிற பொட்டிகடை வியாபரம் எல்லாம் நடக்க வேணாமா??? ;)

இராம்/Raam said...

//
பேசிய விஷயத்தில் நிறைய குடும்ப ரகசியம் அதனால அதெல்லாம் எழுதல.கல்யாணத்தில் நீங்கள்ளாம் சேரை வட்டமா இழுத்துப்போட்டு அரட்டை அடிப்பீங்களா அந்த மாதிரி ஒரு அழகான அனுபவம். தெரு முக்குக்கு கேட்டுச்சாம் சிரிப்பு சத்தம். அபி தம்பிக்கு நன்றி.//

அதே அதே.....

நீங்க கிளம்பி போனதுக்கப்புறமும் உங்க குரலு எங்க காதிலே கேட்டுக்கிட்டே இருந்துச்சு.... :))))

ஹிஹி ஒங்களுக்கு அரசியல்வாதி ஆக நல்ல ஒளிமயமான எதிர்காலம் இருக்கு'க்கா.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க ராம்...நீங்க அடுத்த சந்திப்பு வேலையில் இருப்பீங்க வேற!..
இம்சை 500 ரூ பாய்க்காக வா பேசாம இருந்தாங்க ...எனக்கெல்லாம் 500 டாலர் பெட் வச்சாலும் பேசாம இருக்க முடியாதே! அப்புறம் பெட்டிக்டைக்காரர் உங்களுக்கு புண்ணியமாப்போகும் வியாபரத்தை பெங்களூரிலிருந்து வந்து செழிக்க வச்சீங்கண்ணு சொல்ல சொண்ணாரு.

மங்கை கட்சி ஆரம்பிச்சா நான் அரசியலுக்கு வரேன்.