அன்புடன் குழுவில் எனது காட்சிக்கவிதை இரண்டாவது பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
என் கவிதை வரிகள்:பூங்கா
(திறந்தவெளி)
தத்தித் தளிர்நடையிடும்
பேச்சறியாப் பிள்ளைப்பருவமோ
நண்பருடன் கூடிக்களிக்கும்
வெயிலறியா விளையாட்டுப்பருவமோ
இன்றென்ன செய்தார்கள்
செல்லக் கண்மணிகளென்று
குறைபடுவது போல் தெரிந்தாலும்
புகழ்ந்திருக்கும் நடுவயதுப்பருவமோ
நேற்றென இன்றென நாளையென
பேசிப்பேசி ஓயும்
நடைதளர்ந்த முதிர்ப்பருவமோ
நாற்சுவரின் சிறையிலிருந்து
வெளியேறி திறந்தவெளியில்
பொழுதெல்லாம் இனிதாக்கிச்
சுதந்திரமும் சந்தோஷமுமாய்.
26 comments:
வாழ்த்துக்கள் முத்துலட்சுமி :-)
நன்றி சேதுக்கரசி... ஒரு இயக்குனரை உருவாக்கியதற்கும் சேர்த்து நன்றிகள். :))
இந்திரா 'சுஹாசினி', கண்ட நாள் முதல் 'ப்ரியா' வரிசையில் இன்னுமொரு...
வாழ்த்துக்கள் அக்கா...
ஆகா ஜி தம்பி எல்லாமே ஓவராத்தான் சொல்லுவீங்க போல
பேசினா ப்ரேக் பிடிக்காத தண்ணி லாரி..குறும்படம் எடுத்தா அதும்
கண்ட நாள் முதல் பிரியா வா...சே புல்லரிக்குது ப்பா!
வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி....
மேலும் பல வெற்றிகளை குவிக்கவும் வாழ்த்துக்கள்....
ஊர்ஸ் என்பதால் டபுள் சந்தோஷம்.
நன்றி நன்றி நாகை சிவா ...எதோ முதல் முயற்சியே கிளிக் ஆகிடுச்சு ...
:-)
என்ன படிச்சப்ப வேற தலைப்பு இருந்துச்சு, இப்ப வேற தலைப்பு இருக்கு...
நீங்க மாத்திட்டீங்களா. இல்ல கவிதை படிச்சதால் எனக்கு குழம்பி விட்டதா?
ஆமாமா நீங்க படிக்கும் போது வேற தலைப்பு தான். பயப்படாதீங்க நீங்க தெளிவாத்தான் இருக்கீங்க..வாஸ்து சரியில்லையோன்னு மாத்தினேன்.:)
அடடே..... யக்கோவ்வ்வ்வ்..... இனிமே மருவாதையா கூப்பிடனுமப்பா... ஜியின் வாழ்த்து பலிக்க என் வாழ்த்துக்கள்!
கலக்குங்க அம்மணி நீங்க! உதவி இயக்குனர் தேவைன்னா சொல்லியனுப்புங்க.... வெளிச்சம் பிடிக்க ஓடோடி வந்துருவோமில்ல....
;-)
ஆகா காட்டாறு அப்பறம் என்ன டிக்கெட் ப்ளாக் பண்ணி வச்சுக்கப்பா
எப்பவேணுமோ கூப்பிடறேன். சரியா?
//ஜி said...
இந்திரா 'சுஹாசினி', கண்ட நாள் முதல் 'ப்ரியா' வரிசையில் இன்னுமொரு...
வாழ்த்துக்கள் அக்கா... //
ரிப்பீட்டே
வாழ்த்துக்கள் அக்கா ;)))
இந்த சிறு முயற்சியிலேயே கலக்கிட்டிங்க...மேலும் பல வெற்றிகள் கிட்ட மீண்டும் வாழ்த்துக்கள் ;))
\\ ஜி said...
இந்திரா 'சுஹாசினி', கண்ட நாள் முதல் 'ப்ரியா' வரிசையில் இன்னுமொரு...
வாழ்த்துக்கள் அக்கா...\\
இந்த இடத்தில் ஒரு "ரீப்பீட்டே" கண்டிப்பாக போட வேண்டும் ;)))
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் முத்துலெட்சுமி
சென்ஷி , கோபி நாத்,ஒப்பாரி , ஜெஸிலா எல்லாருக்கும் நன்றி..
ஒப்பாரி எங்க ரொம்ப பிஸியா ?
வாழ்த்துக்கள் [லட்சுமி.]முத்துலட்சுமி
முத்துலட்சுமி,
வாழ்த்துக்கள்.
கண்மணி ,வெற்றி நன்றி ப்பா .
மனம் நிறைந்த வாழ்த்து(க்)கள் !!!!
மொதல்லே கவிதைன்னதும் கண்டுக்காமப் போயிட்டேன்(-:
அண்ணாத்தை சூப்பரா இருக்கார்:-)
அருமையா எடுத்திருக்கீங்கப்பா.
நன்றி துளசி... நான் இயக்குனாரன கதைன்னு தலைப்பு வச்சிருந்தா வந்திருப்பீங்க...பரவால்ல இப்பவாவது படிச்சீங்களே..
//கோபிநாத் said...
\\ ஜி said...
இந்திரா 'சுஹாசினி', கண்ட நாள் முதல் 'ப்ரியா' வரிசையில் இன்னுமொரு...
வாழ்த்துக்கள் அக்கா...\\
இந்த இடத்தில் ஒரு "ரீப்பீட்டே" கண்டிப்பாக போட வேண்டும் ;))) //
நல்ல வேளை சென்ஷி ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டு போடல.. எனக்குத்தான் க்ரெடிட் கெடச்சிருக்கு :))
ஜி said...
//கோபிநாத் said...
\\ ஜி said...
இந்திரா 'சுஹாசினி', கண்ட நாள் முதல் 'ப்ரியா' வரிசையில் இன்னுமொரு...
வாழ்த்துக்கள் அக்கா...\\
இந்த இடத்தில் ஒரு "ரீப்பீட்டே" கண்டிப்பாக போட வேண்டும் ;))) //
நல்ல வேளை சென்ஷி ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டு போடல.. எனக்குத்தான் க்ரெடிட் கெடச்சிருக்கு :))
:)))
SENSHE
முத்துலட்சுமி, உங்க பரிசுப் புத்தகத் தெரிவுகளை விரைவில் அன்புடன் கவிதைப் போட்டி முகவரிக்கு அனுப்புங்க. இன்னும் தெரிவு செய்யாதவங்களால மத்தவங்களுக்கும் தாமதமாகுது. நன்றி...
//சேதுக்கரசி hi கோபி யின் தகடூரை உபயோகித்துத் தமிழ் தட்டச்சும் வழி சொன்னது மிக எளிதாக இருக்கிறது. நன்றி கோபி.//
அவரை, தகடூர் கோபின்னு அழைக்கணுமாம்.. இந்தப் பதிவைப் பாருங்க :-)
மன்னிக்கவும் சேதுக்கரசி...இன்று முக்கால் வாசி தேர்ந்தெடுத்துவிட்டேன் புத்தகங்களை நாளை கண்டிப்பாக மெயில் செய்துவிடுகிறேன்..
தகடூர் கோபி யா சரி இனிமே அப்படியே சொல்லிவிடலாம்.. :)
Post a Comment