June 29, 2007

பெயரிட்டு அழைக்காதே!நான் நிரம்பி இருக்கிறேன்.
இனி இடமில்லாமல்.
உன் அன்பால், உன் நினைவால்.
என்ன வேண்டும் இனி.
நேசத்தால் நிறைந்த நெஞ்சம் ,
பெயர் சொல்லி அழைத்தாலே,
நிரம்பிய பாத்திரமென தளும்புகிறது.
கண்ணின் ஓரத்தில் சில துளிகள்.
போதும்
போதுமென்று தோன்றுகிறது.
பெயரிட்டு அழைக்காதே.
நான் நிரம்பி இருக்கிறேன் ,
இனி இடமில்லாமல்.


----------------------------------


அருகாமை உறுதிப்படுத்துவதில்லை
என்னுரிமை என்று.
அருகில் என்றா சொன்னேன்.
இல்லை ,
இட்டு நிரப்பிட முடியாத
பல வருடங்களின்
நீண்ட .....
இடைவெளி இருக்கிறது ,
கண்ணுக்குத் தெரியாமல்.
நீ நீயாகவும் இல்லை
நான் நானாகவும் இல்லை.
இருந்தாலும் இல்லாமல் போனதாக
சொல்லிக்கொள்ளலாம்.


26 comments:

நாகை சிவா said...

என்ன விட்டுட்டுங்க.. நான் வரல் இந்த விளையாட்டுக்கு...

எங்க போனாலும் ஒரே கவுஜு இருக்கே... :-(((

முத்துலெட்சுமி said...

ஏன் புலி ! இதுக்கு முன்னால நாலு போஸ்ட் கவிதை இல்லாம போட்டேனே அப்ப எங்க காட்டுல ஒளிஞ்சிருந்தீங்க?

அவங்களையெல்லாம் நிறுத்தச்சொல்லுங்க அப்புறம் நான் நிறுத்தறேன். ஊரோட ஒத்து வாழதான் கவிதை அப்பப்ப எழுதறேன்.

thiyagu said...

வணக்கம் முத்துலட்சுமி

நல்ல கவிதை வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

அதான் எல்லா போஸ்டையும் சேர்த்து படிச்சு கமெண்ட் போட்டாச்சே...(சென்னை சந்திப்பை தவிர, ஆனா படிச்சாச்சு)

ஊரோட ஒத்து வாழுறேன், என்று எல்லாரும் கிளம்பி என்னைய ஊர விட்டு துரத்திடுவீங்க போல இருக்கே...

முத்துலெட்சுமி said...

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தியாகு.

முத்துலெட்சுமி said...

அத்தனைக்கு பயப்படுறீங்களா கவிதை படிச்சு...அடப்பாவமே..
நீங்க இந்தியா வந்ததும் வேணா
கவிதை எழுதறதைக் குறைச்சுக்குவோம் எல்லாரும் ...அப்பவும் குறைச்சுக்குவோம் அவ்வளவு தான்..

இங்க இல்லன்னா எங்கள் கவிதை எல்லாம் எங்க பிரசுரமாகப்போது?

லக்ஷ்மி said...

கவிதை அருமை. அதைவிடவும் இந்த கமென்ட் ரொம்ப பிடிச்சுதுங்க - //இங்க இல்லன்னா எங்கள் கவிதை எல்லாம் எங்க பிரசுரமாகப்போது?// படிச்சோடனே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு - நம்மளை அப்படியே புரிஞ்சுகிட்ட ஜீவன் ஒன்னு இருக்கே உலகத்துலேன்னு. ஹிஹி...

மங்கை said...

ஆஹா நல்லா இருக்குப்பா...

நீங்க எழுதுங்கப்பா..நான்...லக்ஷ்மி எல்லாம் இருக்குறோம் படிக்கிறதுக்கு.. ஆனா பிறியிற மாதிரி எழுதோனும்..

பங்காளி... said...

உங்க கவிதை(!)யை படிச்சவுடனே'வசந்தமாளிகை' வர்ற இந்த பாட்டுதான் நினைவுக்கு வருது...

'உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்.

உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன்'

முத்துலெட்சுமி said...

இத்தனை பாசக்காரப்பிள்ளைங்களா இருக்கீங்களே நன்றி மங்கை நன்றி லக்ஷ்மி...
எழுதித்தள்ளிருவோம்...

முத்துலெட்சுமி said...

என்னடா இன்னிக்கு மழை வருதேன்னு பார்த்தேன்...பங்காளி மிளகாயில் செய்தி போட்டு களைச்சுப்போய் இங்கிட்டு வரதே நிறுத்திட்டீங்கள்ள...
இயக்குனரான கதை படிச்சிட்டீங்களா?

முத்துலெட்சுமி said...

உங்க கவிதை(!)யை//
பங்காளி..
ம் ..நேரம் தான்.. புரியறமாதிரி எழுதினா கவிதையா ன்னு கேப்பீங்க...புரியலன்னா கவிதைன்னு வீங்க போல..

காட்டாறு said...

யக்கோவ்வ்வ்வ்வ்..... ஊர்லேருந்து வர்றப்பவே ஒரு முடிவோட தான் வந்திருக்கீங்க போல...

அசத்துறீங்க. ;-)

முத்துலெட்சுமி said...

காட்டாறு said... \\ஊர்லேருந்து வர்றப்பவே ஒரு முடிவோட தான் வந்திருக்கீங்க போல...//
//

வர்றப்பவே இல்லடா தங்கம் போகும் போதே முடிவோட தான் போனேன்.
வந்து கலக்கறதுன்னு..தேத்திட்டு வந்திருக்கேன்ல பதிவு போட விஷயம்.

:)

சென்ஷி said...

கலக்குங்க....
காயத்ரிக்கு மாயுரத்துல வக்காலத்து வாங்கிட்டு இந்த மாதிரி கவுஜ கூட எழுதலன்னா எப்படி...

சென்ஷி

கோபிநாத் said...

\\ மங்கை said...
ஆஹா நல்லா இருக்குப்பா...

நீங்க எழுதுங்கப்பா..நான்...லக்ஷ்மி எல்லாம் இருக்குறோம் படிக்கிறதுக்கு.. ஆனா பிறியிற மாதிரி எழுதோனும்.. \\

மங்கைக்கா...சூப்பர் காமெடி போங்க ;))))))))

கோபிநாத் said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு ;))

காயத்ரிக்கு போட்டியா ????? (யப்பா..இனி நல்லா தூக்கம் வரும்) ;)))

Radha Sriram said...

உங்களை எட்டு விளையாட்டுக்கு அழைச்சிருக்கேன் முடிஞ்சப்போ எழுதுங்க

அபி அப்பா said...

எனக்கு ஏன் கவிதை எழுத வரமாட்டங்குது, ஐயோ ஆண்டவா:-))

முத்துலெட்சுமி said...

சென்ஷி கோபிநாத்...காயத்ரி எல்லாம் பெரிய கவிதாயினி...நான் கவிதை எழுதுவேன்னே அவங்களுக்கு தெரியாதாம்...நான் அவங்களுக்கு போட்டியா...எதோ என் வழி தனி வழின்னு கிறுக்கிட்டு இருக்கேன்.

முத்துலெட்சுமி said...

ராதா நன்றி அழைத்ததற்கு காயத்ரி கூட கூப்பிட்டாங்க..என்னங்க செஞ்சிருக்கேன் எழுதறதுக்கு அதான் ஒரு தயக்கம்..பார்க்கறேன்..

---------

அபி அப்பா கவலைப்படாதீங்க..கவிதை எழுத வராத வரைக்கும் நல்லது தானே....நீங்களாவது நல்லா இருங்க.

குசும்பன் said...

மங்கை said ::::"நீங்க எழுதுங்கப்பா..நான்...லக்ஷ்மி எல்லாம் இருக்குறோம் "

அவுங்க இருப்பாங்க ஆனா நீங்க...ஆப்பு ரேசன் கவுஜர்ல துர்க்கா,மை ஃபிரண்ட், பொறி புகழ் கோபி...இப்படி 1000 பேர் இருக்கோம்

முத்துலெட்சுமி said...

ஏம்பா பிடிக்கலன்னா படிக்காதீங்க..அதுக்கு எதுக்கு ஒரு கூட்டம்...ஓசில ப்ளாக்கர் இடம் குடுக்குது எங்களுத எங்களோட இடத்துல போட யார் தடுக்கறது..நல்லாருக்கே..
நல்லபிள்ளைங்களா இருங்க...எதிர்கால வாழ்க்கையை கெடுத்துக்காதீங்க..1000 பேரும் கம்பி எண்ணப்போறீங்க.

குசும்பன் said...

ஏம்பா பிடிக்கலன்னா படிக்காதீங்க..

சாரி அக்கா சும்மாச்சுகும் சென்னேன்.

ஜி said...

ஆஹா கவித கவித...
ஐயய்யோ கவித கவித...

எப்டி சொல்றதுன்னு தெரியலக்கா :))

siva said...

ஆஹா கவித கவித...
ஐயய்யோ கவித கவித...

எப்டி சொல்றதுன்னு தெரியலக்கா :))

7/02/2007 12:11 PM

//

கவிதை என்று சொல்ல வேண்டும்