September 5, 2007

மாடர்ன் கிருஷ்ணரும் தில்லி கிருஷ்ணஜெயந்தியும்

தில்லியில் கிருஷ்ணஜெயந்தி அன்று இரவு குழந்தைகள் கிருஷ்ணனின் பர்த்டேயை அவங்க பர்த்டேயை விட சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள். முப்பையில் இருந்து வந்த ஒர் பெண் வருடா வருடம் இப்படி கொண்டாடுவீங்களா என்னையும் இனிமே சேத்துக்கோங்களேன் என்று கேட்டாள் ...அப்ப மும்பையில் இப்படி பழக்கமில்லை போல என்று நினைத்துக் கொண்டேன்..



அவரவர் வீட்டிலிருந்து கிருஷ்ணனின் வித விதமான பொம்மைகளை கொண்டுவந்து சாலையோரத்தில் செங்கல்லால் வேலி போல கட்டி அதனுள் மண் நிரப்பி ஒரு ஓரத்தில் மலை ...ஆறு ஓடுவது போல என்று நம் கொலுவில் பக்கத்தில் ஊர் அமைப்போமே அது போல செய்து கோயில் கட்டுவார்கள்.


இரவாக இரவாக மெழுகுவத்தி ஏற்றி வரும் போவோர்களுக்கு பிரசாதம் தந்து உற்சாகமடைவார்கள். ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருக்கிறார்களோ அதற்கு தகுந்த மாதிரி இடமும் அலங்காரமும் அதிகமாகும்..ஒவ்வொரு வரும் விதவிதமான அலங்காரங்களுடனும் பவனி வருவார்கள்..



பெரிவர்கள் சாமி கும்பிட்டபின் ப்ரசாதம் எடுத்துக்கொண்டு கோயிலில் தருவது போலவே காணிக்கையும் தருவார்கள் அது குழந்தைகளின் சேமிப்பில் சேர்ந்து விடும்... பலர் வந்து அவர்களின் வித்தியாசமான அலங்காரமான கோயிலை பாராட்டும் போது அவர்கள் பெருமிதமாக உணர்வார்கள் .



நேற்றைய கொண்டாட்டத்தின் சில புகைப்படங்கள் இங்கே.....












கீழ் வீடாக இருப்பவர்கள் கரெண்ட் கனெக்ஷன் எடுத்து லைட் போட்டிருக்கிறார்கள்.


கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு நடந்த ஒரு பேன்சி டிரஸ் போட்டியில் சின்ன கிருஷ்ணன் செய்த ஒரு குறும்பைக் கேளுங்கள் .3 லிருந்து 5 வயதுக்கான குழுவைச்சேர்ந்த பையன் அவன் மேடையில் ஏறவேண்டுமென்றால் ஃபோனைக் குடு என்று அவன் அம்மாவிடம் வாங்கி வைத்திருந்திருக்கிறான் . மேடை ஏறும்போது "சரி அதைக்குடுத்துவிட்டு புல்லாங்குழலை வாங்கிக்கொள்ளடா" என்றால் "அது வேணாம் போ" என்று மேடையில் மைக்கில் சொல்லிவிட்டு போன் நம்பர்களை அழுத்திக்கொண்டே கொஞ்ச நேரம் மேடையில் நின்று விட்டு வந்து விட்டான்.


ஆமாம் மாடர்ன் கிருஷ்ணன் இல்லையா..இன்னும் எத்தனை நாள் தான் ராதையை புல்லாங்குழல் ஊதி அழைப்பது. இப்போது தான் மொபைல் வந்து விட்டதே...."ஹலோ ராதா ஐ யம் வெயிட்டிங் ஃபார் யூ" ன்னா , "எங்கே இருக்கிறாயென்று " கேட்டு விட்டு அவளும் தேடாமல் கொள்ளாமல் நேராக வந்துவிடப்போகிறாள்...

18 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நம்ம ஊரில் சின்ன கால்தான் டாக்டர் ..எங்க வீட்டிலும் சின்னக்கால் தான் :)
ஆனா இருக்க ஊருக்கு தகுந்த மாதிரி ரோட்டோரக்கோயிலும் கட்டி என் பொண்ணு கொண்டாடினாள்..

கோபிநாத் said...

\\...."ஹலோ ராதா ஐ யம் வெயிட்டிங் ஃபார் யூ" ன்னா , "எங்கே இருக்கிறாயென்று " கேட்டு விட்டு அவளும் தேடாமல் கொள்ளாமல் நேராக வந்துவிடப்போகிறாள்... \\

:-)))))))))))))))))))))))

கண்மணி/kanmani said...

நல்ல செய்தி ஆனா இன்னும் பசங்க அடிச்ச லூட்டியச் சொல்லியிருக்கலாம்.
ரொம்பப் பேசறீங்கன்னு சொன்னதால கோபமா?;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி , கண்மணி மறுமொழிக்கு நன்றி..

இன்னும் நிறைய சேட்டை செய்தாங்க குழந்தைங்க ஆனா எனக்கு எழுத நேரமில்லாம சட்டுன்னு முடிச்சிட்டேன் போல...

கண்மணி நிறைய பேசுறதுக்கு வாய் வலிக்காது வேலை செய்துகிட்டே கூட பேசலாம்..ஆனா பாருங்க டைப் அப்படி இல்லையே ;)

Jazeela said...

கிருஷ்ண ஜெயந்திக்கு பாதம் வரைவார்களே அது காணோம்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜெஸீலா எங்கள் வீட்டு கிருஷ்ணஜெயந்தியைப்பற்றி பதிவு போடவில்லை போட்டிருந்தால் சின்ன கால்கள் மாவில் போட்டதை போட்டிருப்பேன்...அது தான் நம்ம தமிழ் ஆளுங்க்ளுக்கு தெரியுமே...சும்மா தில்லியில் எப்படி கொண்டுடாறாங்கன்னு சொல்லலாமேன்னு போட்டேன். இது குழந்தைகளின் ரோட்டோர கிருஷ்ணன் கோயில் தமிழ் நாட்டில் இருப்பவங்களுத் தெரியாதே.. :)

Unknown said...

அக்கா,
படமெல்லாம் நல்லா இருக்கு…
அப்படியே அந்தக் கோயில கட்டின சின்ன சிற்பிகளையும் சேர்த்து எடுத்திருக்கலாமோ? :)

மங்கை said...

இது எல்லாம் நான் பார்த்தே இல்லைப்பா... நான் வேஸ்ட்னு நினைக்குறேன்..

குழந்தைகள் எது செய்தாலும் அது நல்லாதான் இருக்கு இல்ல...ஹ்ம்ம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருட்பெருங்கோ சிற்பிகளையும் எடுத்தேன் தான் ...ஆனால் அதை பிரசுரிக்கவில்லை.. பயம்தான் வேறென்ன?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை நீங்க இருக்கும் இடத்தில் இப்படி நடப்பதில்லை போல எங்க ஏரியாவில் நடக்கிறதுப்பா...வருஷா வருஷம்.
கர்வாசவுத் எல்லாம் ஏன் கொண்டாடுறாங்கன்னு பதிவு போட்ட நீங்க வேஸ்ட் ன்னு சொல்லிக்கலாமா ?

காட்டாறு said...

வருங்கால இன்ஜினியர்கள் கலக்கியிருக்காங்க.

சின்ன கால்கள் கேட்ட மாமக்களே, கடேசி புகைப்படத்திலே மார்டன் கிருஷ்ணன் கால்கள் தெரிகிறதை கவனிக்கவில்லையா? என்ன இவர் ஜீன்ஸ் போட்டிருக்கிறார். அவ்வளவே.
:-)

லக்ஷ்மி said...

படங்கள் நல்லா இருக்கு. குழந்தைகளோட கிரியேட்டிவிட்டிய காண்பிக்க ஒரு நல்ல வாய்ப்பு இல்ல இது? நம்ம ஊர் கொலுவிலேயும்கூட தரைல பார்க்/பீச் போன்றவை அமைக்கறதை பொதுவா குழந்தைகளுக்கு அலாட் பண்ணிடுவாங்க... அதுபோல அவங்க ஊர்ல இந்த வாய்ப்பை உபயோகிக்கறாங்க போல.. நல்ல விஷயம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு ஆமாம்பா ஒரு போட்டோல பின்னாடி விளக்குமாறோட ஒரு பையன் கூட்டிக்கிட்டு இருந்தான் கோயிலை சுத்தி சுத்தமா இருக்கனுன்னு தம்பி போட்டோ எடுக்கனும் என்று கேட்டுகிட்டு அவனை நகர்த்தினேன்..இன்னொரு இடத்தில் கால் தெரியும் தள்ளி வா ன்னு ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணை அவளே நகத்திட்டா..இந்த கடைசி போட்டோ கொஞ்சம் அவசரத்தில் எடுத்தேன்..பிரசாதமா தர பூந்தி வாங்க கடைக்கு போற வழியில் எடுத்தேனா அவசரத்தில் காலை கவனிக்கலை... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம் லக்ஷ்மி குழந்தைங்க நல்லா யோசிக்கறாங்க மலை செய்ய ஓடிப்போய் ஒரு தொட்டியில் மண் நிரப்பி அதை அப்படியே தலைகீழாத்தட்டி வச்சாங்க சாக்ப்பீஸை ரோட்டோரம் கம்பங்களாக்கினாங்க..
மஞ்சள் மணலில் கருப்பு மணலை ரோடாக்கினாங்க :) ம் ஒவ்வொருத்தரும் ஒரு ஐடியா தந்து கடகடன்னு கட்டினாங்க கோயிலை.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல படங்கள்..நன்றி.

Anonymous said...

விளையாட்டோட விளையாட்டா இங்கன பகவத்கீதையையும் கேட்டுக்குங்க.


http://www.sangeethapriya.org/~tvg/247.GITA%20-VELUKKUDI%20SRI%20KRISHNAN/

cheena (சீனா) said...

நல்லா இருக்கு நல்லா இருக்கு - சின்ன வயசிலே சின்ன சப்பரம் கட்டி இழுத்துகீட்டு ஓடுவோமே - ம்ம்ம்ம்ம்ம்

கோவை விஜய் said...

ஆமாம் மாடர்ன் கிருஷ்ணன் இல்லையா..இன்னும் எத்தனை நாள் தான் ராதையை புல்லாங்குழல் ஊதி அழைப்பது. இப்போது தான் மொபைல் வந்து விட்டதே...."ஹலோ ராதா ஐ யம் வெயிட்டிங் ஃபார் யூ" ன்னா , "எங்கே இருக்கிறாயென்று " கேட்டு விட்டு அவளும் தேடாமல் கொள்ளாமல் நேராக வந்துவிடப்போகிறாள்...//


நல்ல கற்பனை
படங்கள் அருமை

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/