August 29, 2007

நிகழ்தகவின் படி என்றேனும்

நிகழ்தகவின் படி என்றேனும்
நடந்தே ஆகவேண்டியது தானே!!
சுழற்றி அடிக்காத ஒரு சின்னத்தூரல் மழை நேரத்தில்
மலைச்சாலையின் வளைவில்
தேநீருக்கு இறங்கிய இடத்தில்
எதிர்பாராமல் நடக்கவேண்டும் அந்த சந்திப்பு
இல்லையெனில்,
ஓய்வாக அமர்ந்த படி
அலைகளின் எண்ணிக்கையை எண்ணியப்டி
இருக்கையில்
சாயலை உணர்ந்து
திரும்பி வந்து
உற்றுப்பார்த்து
எப்படியேனும் நடக்கவேண்டும் அந்த சந்திப்பு.
திட்டமிடாமல் நடக்கும் என்று
எதிர் பார்த்திருக்கும் மனம்.
சின்ன சிரிப்போடு தொடங்குமா ?
துளி கண்ணீரோடு தொடங்குமா?
அனிச்சையாய் கை பிடித்து
நலம் கேட்டு தொடங்கிடுமா?
கேள்விகளின் வரிசை
நான் முந்தி நீ முந்தி என போட்டியிட்டு ஓடிவர
அத்தனையும் பின் தள்ளி
மவுனம் ஜெயிக்குமா?

30 comments:

பங்காளி... said...

ஆஹா...

மழையோட கவிதை....
கையில் சூடா கோப்பை தேனீர்...
இதுதான் வாழ்க்கை....

இதுவும் நிகழ்தகவின் படி நடக்குதோ...ஹி..ஹி...

முத்துலெட்சுமி said...

ஆமா இந்த பின்னூட்டம் ஒரு நிகழ்தகவின் படி தான் நடந்திருக்கு...
நான் பதிவு போட்ட சமையத்தில் பங்காளியும் தமிழ்மணத்தில் போளி சுட்டு கொண்டிருந்ததால் கவிதையைப்படிப்பதற்கான மற்றும் பதில் பின்னூட்டம் போடுவதற்கான நிகழ்தகவு அதிகமானது.

அய்யனார் said...

மவுனத்தை செயிக்க விட வேணாமே :)

நல்ல கவிதை

கப்பி பய said...

gud one :)

குசும்பன் said...

நமக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்முங்கோ:((((

முத்துலெட்சுமி said...

நன்றி அய்யனார்.. அந்த நொடியே வெற்றி தோல்வியையும் நிர்ணயித்து கொள்ளட்டும்.

முத்துலெட்சுமி said...

.. ரொம்ப ஷார்ட் கமெண்ட்.. பட் நன்றி கப்பி .

முத்துலெட்சுமி said...

குசும்பன் யாருக்கு கவிதை தூரம் உங்களுக்கா ...அப்ப எதிர் கவுஜ எல்லாம் போடறீங்களே அது எல்லாம் மண்டபத்துலயா வாங்கிட்டு வந்தீங்க..?

அபி அப்பா said...

அருமையான கவிதை! ரொம்ப ரசிச்சு படிச்சேன், தயவு செஞ்சு எனக்காக இன்னும் ஒரு கவிதை எழுதுங்க ப்ளீஸ்!

கோபிநாத் said...

ஒரு விதமான அமைதியும், அழகும் இருக்கு :)

அருட்பெருங்கோ said...

மற்ற எதனையும் விட மௌனமே வலுவானது + வலியானதும் கூட :)

மங்கை said...

லட்சுமி..இது மாதிரி அடிக்கடி எழுதி எனக்கு ஃபோனும் பண்ணிட்டீங்கன்னா எனக்கும் கவிதை புரிய ஆரம்பிச்சுறும்

நல்லா இருக்குப்பா..

காட்டாறு said...

யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்! என்ன நடக்குது இங்கே. கவிதை பீறிட்டு வருது. சூப்பரு.

இதுல நமக்கு..... அதாவது உங்களுக்கே புரியாத, நீங்கள் அறியாத மெளனம் எங்கே, எப்படி?

முத்துலெட்சுமி said...

அபி அப்பா நீங்க பதிவு படிச்சு அதுவும் கவிதையை முழுக்க ரசிச்சீங்கனா கவிதை யை கண்டா காத தூரம் ஓடரவரே கேட்டா
ஆச்சரியம். பொய் ஏன் சொல்றீங்க .இன்னோன்னு தானே எழுதிட்டா போச்சு ...

முத்துலெட்சுமி said...

கோபிநாத் நன்றி
அருட்பெருங்கோ உங்களின் சத்தமிடும் மவுனம் தானே இந்த கவிதை டிரிக்கரே!... :)

முத்துலெட்சுமி said...

கவிதை புரிய ஆரம்பிச்சிருச்சா? மங்கை போற போக்கை பாத்தா நீங்களே கவிதைபதிவும் ஆரம்பிச்சிடுவீங்க போலயே :-P

முத்துலெட்சுமி said...

காட்டாறு வாம்மா வா ...கேக்கமாடீங்களா பின்ன? அதான் கேள்வி கேக்கற திறமை இருக்கறதா உங்களுக்கு பட்டமே கிடைச்சிருக்கே...அருட்பெருங்கோ கவிதை ஒன்னை படிச்சேன் அப்படியே கவிதை ஊற்றாவந்துடுச்சு ..
(மவுனமா நமக்கா(எனக்கா) அதானே அதெல்லாம் நமக்கு ஒத்துவருமா என்ன)

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாவ் சூப்பர். இப்போதான் என்ன சொல்ல வந்தீங்கன்னு புரியுது.. விளக்கத்தை படிச்சுட்டு கவிதை படிக்கும்போதுதான் இதெல்லாம் தெரியுது.. இப்போ சொல்றேன். கவிதை சூப்பர். :-)

mglrssr said...

நிகழ்தகவுனா என்ன
probablity??

மங்களூர் சிவா

கண்மணி said...

முத்து நீங்க சொல்ற சந்திப்பு காத்லுடனா?தோழமையுடனா?
பனகாளி என்னமோ ஸ்வீட் காரம் காபி ங்கிறாரே?
love is nothing but a probability factor of getting a chance to interact with one another

கண்மணி said...

இந்த பதிவின் தொடர்ச்சி:[காதல் தொல்வியுற்றவருக்கு]

மௌனம் ஜெயிக்குமா?
ஜெயித்து விட்டால் கனவுகள் கலைந்து
வாழ்க்கையைத் தேடலாக்கி
வீணாய்ப் போகுமோ எதிர் காலம்

[காதல் ஜெயித்தவருக்கு]
கலையாத மௌனமாயின் என்னைக் காத்திருக்கும் இன்றோ
வெறும் தலையாட்டும் பொம்மையாய் முடங்கிப் போனேன்

முத்துலெட்சுமி said...

அப்ப இனிமே கவிதை எழுதினா கோனார் உரை மெயிலில் அனுப்பனுமா மை ப்ரண்ட் ??? :0

முத்துலெட்சுமி said...

மங்களூர் சிவா ஆமாங்க நிகழ்தகவுன்னா ப்ராபபலிட்டி தான்...

:)

முத்துலெட்சுமி said...

கண்மணி தோழமையை சந்திக்க இத்தனை கற்பனை ஏங்க ? அதுவும் பேசவும் தயக்கம் வரப்போவது இல்லையே?
\\ love is nothing but a probability factor of getting a chance to interact with one another
// ரொம்பவே உண்மை தான்..
சான்ஸ் குறைய குறைய சில சமயம் காதலும் குறைஞ்சுடுது.

இரண்டாவது பின்னூட்டம் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.

தம்பி said...

:)
நல்லாருக்கு.

முத்துலெட்சுமி said...

நன்றி தம்பி...

நாகை சிவா said...

நல்லா இருக்குங்க...

பத்தி பிரிச்சு எழுதி இருக்கலாம்...

நாகை சிவா said...

//நமக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்முங்கோ:(((( //

என்ன ஒரு 200, 250 இ.மீ. இருக்குமா.. இல்ல இன்னும் அதிகமா?

நாகை சிவா said...

//அருமையான கவிதை! ரொம்ப ரசிச்சு படிச்சேன், தயவு செஞ்சு எனக்காக இன்னும் ஒரு கவிதை எழுதுங்க ப்ளீஸ்! //

தெரிஞ்சு போச்சுங்க உங்க சூது.. அவங்க உருப்படியா(???) ஒரு கவிதை எழுதுற வரைக்கும் விட மாட்டேன் என்று சொல்லுறீங்க... அப்படி தானே....

நல்லா இருங்க சாமி... நல்லா இருங்க...

முத்துலெட்சுமி said...

சிவா அநியாயம்ங்க இதெல்லாம்...
பத்தி பிரிச்சா..நான் கட்டுரையா வரைஞ்சிருக்கேன்..?

\\அவங்க உருப்படியா(???) ஒரு கவிதை எழுதுற வரைக்கும்//
அப்படின்னா இதுவும் ஒரு வகையில் கவிதையில் தான் சேரும் இல்லையா. உருப்படியில்லாத விசயம் பத்தி க்விதை பேசறது தானே பிடிக்கல உங்களுக்கு எல்லாம் அப்பாடா...