October 7, 2007

அமிர்தசரஸ் ஸ்பெஷல்-2 (வாஹா பார்டர்)

அமிர்தசரஸ் செல்லுவதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்தது ஷானே பஞ்சாப் ரயில் , வெயிலுக்கு வயதானவர்களுக்கு ஏசி இருக்கட்டுமே என்பதால் சேர்க்கார் புக் செய்திருந்தோம்.. குளிரூட்டப்பட்ட அறையின் பழுப்பு நிறக்கண்ணாடி வழியே இதமாகவே தெரிந்தது சுட்டெரிக்கும் வெயிலும். தாமதமாக கிளம்பிய ரயில் வண்டி அரைமணி நேரம் தாமதமாகவே சென்றடைந்தது. இறங்கிய உடனே யே சாமான்களோடே வண்டி பேசினோம் வாஹா பார்டர் செல்வதற்கு. ஆட்டோ என்றால் 250 கார் என்றால் 400, 450 என்று பேரம் பேசி செல்லலாம். 28 கிலோமீட்டர்ஸ்.

வாஹா பார்டரில் 4.30 மணிக்கு அனுமதி அளிப்பார்கள்.
வெளியே மூவர்ணத்தில் ஐஸ் செய்து விற்கிறார் ஒருவர். சிறு சிறு பையன்கள் மூவர்ணக்கொடிகளும் மூவர்ணத்தில் அமைந்த வெயிலுக்கான நெற்றி ம்றைக்கும் தொப்பிகளும் விற்கின்றன்ர் .


முழு நிகழ்ச்சிகளின் வீடியோ 20 30 ரூபாய்க்களுக்கு கிடைக்கிறது . நல்ல தரமானது . 30 ரூபாய்க்கு வாங்கினால் அமிர்தசரஸின் முக்கியமான இடங்கள் பொற்கோயில் ஜாலியான் வாலாபாக் உட்பட எல்லாமே காட்டுகிறான் அதில் . நியாபகத்துக்கு எல்லாருமே வாங்கிச் செல்லலாம். வெளி வாயிலிலிருந்து உள்ளே செல்ல ஒரு கிலோ மீட்டர் நடக்கவேண்டும். அதற்கும் இம்முறை ரிக்ஷா கிடைக்கிறது. சில வண்டிகள் மட்டும் அனுமதி பெற்று உள்ளே செல்லலாம். வழியில் மின்சாரம் செலுத்தப்பட்ட தடுப்புகள் இரு நாட்டுக்கும் நடுவே செல்வதைக் காணலாம்.ஸ்வர்ண ஜெயந்தி வாயிலின் முன் இரு கைகள் குலுக்குவதை ப்போன்ற சிற்பம்.
எப்போதுமே இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூட்டம் அதிகமாகவும் பாகிஸ்தானில் குறைவாகவும் தான் வருவதா தோன்றுகிறது. வாஹா அருகில் பெரிய ஊரான சுற்றுலா ஊர் அமிர்தசரஸ் இருப்பதால் அப்படி இருக்க்லாம் என்று நினைக்கிறேன். இம்முறை எங்கெங்கும் தலைகள் தான்.


நேரடி யான பாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதன் சிறு துண்டு காட்சி தான் கீழே. கொடி இறக்கும் காட்சியை ஆரம்பிக்கும் முன் அவர்களின் வர்ணனைகளோடான பாடல்கள் மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு ஜவான் பெண்குரலில் லதா மங்கேஷ்கரின் பாடலை பாடினார் என் கண்களில் இருந்து கட்டுப்படுத்தமுடியாமல் கண்ணீர் வந்துவிட்டது.. அந்த பாடலை(ம்யூசிக் இண்டியா ஆன்லைன் by anuradha ) எப்போது கேட்டாலும் இப்படித்தான்.. லதா எப்படித்தான் முழுதாக அந்த பாடலைப் பாடினாரோ ...துக்கம் தொண்டை அடைக்கும்.


இந்த முறை நம் மக்களின் அட்டகாசம் தாங்க வில்லை.. அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் காலரியில் நன்றாக வே தெரியும்..ஆனால் எழுந்து எழுந்து நின்று சரியாகவே பார்க்க விடவில்லை. ஜவான்கள் முறை மாற்றி பொறுப்பு எடுத்துக்கொள்வதும் கொடிகளை இரு நாட்டு வீரர்களும் இறக்கி மரியாதையோடு ஒருவருக்கொருவர் சல்யூட் அடித்து கதைவை மூடிக்கொண்டு வருவதும் தான் பார்க்க வேண்டிய விசயம். கால்களை அடித்து அடித்து நடை போடும் அவர்களின் வேகம் அசாத்தியமானது.

மக்களை நம் நாட்டின் பெயர் சொல்லி ஜிந்தாபாத் என்று வாழ்த்து மட்டும் சொல்லும்படி கேட்டுக்கொண்டனர் மைக்கில். இல்லையென்றால் உணர்ச்சி பெருக்கில் இவர்கள் பாகிஸ்தான் முராதாபாத் என்று ஒழிக கோசமும் போடுவார்கள். பாடல்கள் சமயத்தில் கட்டுப்படுத்தமுடியாமல் நம் மக்கள் எழுந்து ஆடுவதும் நடந்தது. இறங்கி காவலர்களின் அனுமதியோடு நடுவிலும் ஆடினார்கள் சிலர்.

பாகிஸ்தானியர் கூட்டம் குறைவென்பதால் வரும் ஒரு சிலர் கொஞ்சம் அதீதமாய் செய்வார்கள். ஒரு வர் முழுவதும் அவர்களின் கொடி போன்ற ஆடையுடுத்தி பெரிய கொடியை அசைத்தபடியே இருந்தார்.. அடிக்கடி சிலர் அப்படி கொடியோடு கதவு வரை ஓடி வருவதும் போவதுமாய் இருந்தனர். நம் மக்களின் நாட்டுப்பற்று இது போன்ற நேரங்களில் நன்றாகத்தான் இருக்கிறது. எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை அதை எடுத்துபோகாதே இதை எடுத்துப்போகாதே என்று.. அமிர்தசரஸில்.அதுவே பெரிய விசயமாக இருக்கிறது . லாகூரிலிருந்து பஸ் வருகிறது இல்லையா வருபவர்களை வரவேற்கும் பலகை.

6.30 வரை ஆகிறது வெளியே வரும்போது.

24 comments:

வடுவூர் குமார் said...

வாஹா வில் எதற்கு அந்த மாதிரி காலை அடிக்கிறார்கள்?கீழே ஏதாவது சுரங்கம் இருக்கா என்று சோதிக்கிறார்களா? :-))
Prison Break சீரியல் பார்ப்பதின் விளைவு.
முட்டி ஜாக்கிரதை என்று சொல்லத்தோனும்.

கோபிநாத் said...

1 :))

கோபிநாத் said...

இதை எல்லாம் படிக்கும் போது ஒருமுறையாவது பார்த்து விடவேண்டும் என்று தோன்றுகிறது...

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்க... :))

ஆயில்யன் said...

//வெயிலுக்கு வயதானவர்களுக்கு ஏசி இருக்கட்டுமே என்பதால் சேர்க்கார் புக் செய்திருந்தோம்.. //

நல்லதுதான்! ஆமாம் வயசு ரொம்ப அதிகமோ??

மற்றபடி பதிவையும்,படங்களையும் பார்க்கையில் "இதை எல்லாம் படிக்கும் போது ஒருமுறையாவது பார்த்து விடவேண்டும் என்று தோன்றுகிறது..."" ஸேம் ஃபீலிங்ஸ்

துளசி கோபால் said...

இந்தப் பாட்டு நிஜமாவெ உள்ளத்தை உருக்குமுங்க. இங்கே நாம் ஆரம்பிச்ச இண்டியன் க்ளப் ஆரம்ப விழாவில் இந்தப் பாட்டை 'நீலு' என்ற தோழி பாடுனாங்க. அப்படியே நம்ம கண்ணுலெ பொலபொலன்னு கண்ணீர்தாங்க.மகள் இதுக்கு ஆர்கெஸ்ட்ராவுலே ப்ளூட் வாசிச்சாள்.


இன்னும் வாஹா பார்டர் பார்க்கலைங்க. உங்க பதிவு பார்த்ததும் உடனே அங்கெ போகணுமுன்னு ஒரு வெறி வந்துருக்குங்க.

இந்த்ப் பதிவு அருமையான படங்களோடப் போட்டதுக்கு நன்றிங்க

முத்துலெட்சுமி said...

ஆமா வடுவூர்குமார்.. அவங்க அடிக்கறத பாத்தா என்ன ஆகுமோ காலுக்குன்னு ஒரு பயம் வரும். தலையை வேற உலுக்கு உலுக்குன்ன்னு உலுக்கி இதான் மரியாதைங்கறாங்க... என்னவோ கோபமா பார்த்துடுவோம்டான்னு சொல்ற மாதிரி தான் இருக்கும். :)

முத்துலெட்சுமி said...

கோபி இரண்டாவதா போயிடுச்சா பரவாயில்லை.கண்டிப்பா பாருங்க..பக்கத்துல அட்டாரி ரயில்வே ஸ்டேசன் இருக்கு நாங்க அங்க போகலை.. அதான் பார்டர் ஸ்டேஷன் நேரமில்லை எங்களுக்கு.

முத்துலெட்சுமி said...

நாங்க இளமைதாங்க ஆயில்யன்.. எங்க மாமனா ர் மாமியாருக்காகத்தான் இந்த ரெண்டாவது விசிட். :)

முத்துலெட்சுமி said...

ஆகா துளசி வாங்க அடுத்த முறை வாஹா பாக்க.. இந்தியால ஒன்னா இரண்டா பாக்க இருக்குது??
அந்த பாட்டுல முதல்லயே சொல்லிடறாங்களே.. மீண்டும் திரும்பி வீட்டுக்கு வராதவர்களை நினைத்து பார்த்து கொஞ்சம் கண்ணில் நீரை நிரப்பிக்கொள்ளுங்கள் என்று சத்தியமான வார்த்தை . அதோட அந்த மியூசிக் கூட எதோ செய்யுது.

Hariharan # 03985177737685368452 said...

உண்மையில் வாஹா என்பது பாகிஸ்தான் பக்கத்து எல்லையோர கிராமம்.

அட்டாரி கிராமம் என்பது இந்திய எல்லை.

சமீபமாத்தான்(ரெண்டுமாசம் முன்னால்) பஞ்சாப் அரசே வாஹான்னு சொல்வதை மாற்றி அட்டாரி என்பதை கெசட்டில் அறிவித்தது!

கொடி இறக்கும் விதமே இரு பக்கத்து புரிந்துணர்வை வெளிப்படுத்தும் :-))

சீக்கிரம் நேரடியா விசிட் அடிக்கணும் ஒரு தரம்.

மங்களூர் சிவா said...

ரொம்ப நல்ல தகவல்

.:: மை ஃபிரண்ட் ::. said...

sUper thagaval. vaahaannu oru ooru pere ippOthuthaan kelvi paduren. ;-)

முத்துலெட்சுமி said...

தகவலுக்கு நன்றி ஹரிஹரன்.

முத்துலெட்சுமி said...

மங்களூர் சிவா , மை பிரண்ட் ரெண்டுபேருக்கும் நன்றி..

மை பிரண்ட் அதான் வாஹா பாகிஸ்தான் கிராமத்தோட பேராச்சே நீங்க எப்படி தெரிஞ்சு இருப்பீங்க மலேசியால உக்காந்து கிட்டு..

குசும்பன் said...

படங்களும் தகவல்களும் அருமை, இருந்தாலும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக அந்த நிகழ்ச்சிகளை பற்றி எழுதி இருக்கலாமோ என்று தோன்றுகிறது!!!

நாகை சிவா said...

ரொம்ப நாள் போகனும் என்று ஆசை என்று தான் நிறைவேற போகிறதோ... பாக்கலாம்....

மங்கை said...

ஆஹா..மிஸ் பண்ணிட்டனே.. பரவாயில்லை அடுத்தடவை தலைவி கூட போயிட வேண்டியது தான்... படங்கள் நல்லா இருக்குப்பா

Natpu thedi said...

Very nice article...don't know how to type in tamil...can some one please help me

முத்துலெட்சுமி said...

நட்பு தேடி நன்றிங்க ...இந்த் லிங்க் கு போய் இகலப்பையை டவுன்லோடு செய்துட்டு தமிழ் அடிங்க..
http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=3
இ கலப்பை அஞ்சல் .

முத்துலெட்சுமி said...

உண்மைதான் குசும்பன் எனக்கே தோன்றியது கொடி இறக்கும் நிகழ்ச்சியை இன்னும் விரிவா எழுதலையோன்னு.. அதை அப்பறமா வீடியோ வா போட்டுறட்டுமா.. அவசரமா எழுதிட்டேன் அதான் .. அதை விவரிக்காமலே கதை அடிச்சு பாருங்க பதிவு என்ன நீளமா இருக்குன்னு இதுல அந்த கொடி இறக்கினது படம் கொஞ்சம் இருட்டாப்போச்சேன்னு போடாம வேற விட்டுட்டேன் போல.. நிறைய படமா எதை அப் லோட் செய்தேன் செய்யலைன்னு ஒரே குழப்பம் வேற.

முத்துலெட்சுமி said...

ஆமா நாகை சிவா ..முன்னாடி தேவ் போட்ட பதிவுன்னு நினைக்கிறேன் அதுல கூட போகனும்ன்னு ஆசைன்னு பின்னூட்டம் போட்டு வருஷம் ஆகுது.. இன்னும் எத்தனை நாள் ஆசையாவே வெச்சிட்டு இருக்கறது..

முத்துலெட்சுமி said...

மங்கை நான் தான் கூப்பிட்டனே .. பாருங்க.. லீவு கேக்க பயப்படாம நார்த்ல இருக்கும்போது சுத்திப்பாத்துக்குங்கப்ப்பா... :)

அபி அப்பா said...

ஹல்லோ, நான் ஒருத்தன் இருக்கேன் இங்கே, என்னய விட்டுட்டு யாரும் பொக கூடாது ஆமா சொல்லிட்டேன்:-))

முத்துலெட்சுமி said...

ஊருக்கு அவங்க அவங்க வீட்டுக்கு போக நேரத்த காணோமாம்...இதுல ஊர் சுத்தி ப்பாக்க நான் நான் வரெனாம் ஏன் அபி அப்பா..