October 26, 2007

நானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து

நேசித்த நிறங்களெல்லாம்
பிடிக்காமல் போன அந்த கணத்தில்,
மனிதர்கள் எல்லாருமே நிறம் மாறிகள்
என்றாகி
நான் சிவந்தேன்.
மயக்கும் மொழிகளெல்லாம்
நெஞ்சம் மறந்த அந்த கணத்தில்,
வார்த்தைகள் எல்லாமே போலிகள்
என்றாகி
விழி இழந்தவனின்
கம்பு விசிறலைப்போல,
வீசி வீசி நானிறைத்த சொற்களெல்லாம்
சிதறிய அறையில்
தனிமை தியானத்திற்குப் பிறகான ஒர் கணத்தில்
தேடியபடியிருக்கிறேன்,
நானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து
வெளிவர எனக்கிருக்கும்
ஒரே சாவியான சில சொற்களை-

அ ச
ன் மா
பு தா
ம் ..........

37 comments:

வித்யா கலைவாணி said...

//ஒரே சாவியான சில சொற்களை-

ன்
பு.//
நல்ல உணர்வு. இது பெரு முயற்சி.

கோபிநாத் said...

எத்தனை நாள் ஆச்சு உங்க கவிதை படிச்சி !...;))

அன்பு..
எளிமை
அருமை
அட்டகாசம் :)

துளசி கோபால் said...

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

முத்துலெட்சுமி said...

நன்றி கலைவாணி.. சரியாச்சொன்னீங்க சில கோப உரையாடலுக்கு பின் சமாதானம் அன்பு இதெல்லாம் பெருமுயற்சியால் தான் திரும்ப கிடைக்கிறது..

முத்துலெட்சுமி said...

நன்றி கோபிநாத் (அது என்னமோ பிரிச்சு பிரிச்சே எழுத வருது அப்பறம் சேக்கிறேன் .)

முத்துலெட்சுமி said...

துளசி நன்றி... அன்புக்கு தாழ் இல்லைங்கறதால தான் ஒவ்வொருமுறை அது அத்துமீறி கோபப்பட்டாலும் திருப்பி ஏத்துக்கப்படுவதும் தொடருது.
உண்மையில் ஒரிஜனல் கவிதையில்
ஐந்தெழுத்தை (இந்த மூன்றெழுத்தூக்கு பதிலா).. தேடினேன்ன்னு இருக்கும்..

காயத்ரி said...

//விழி இழந்தவனின்
கம்பு விசிறலைப்போல,
வீசி வீசி நானிறைத்த சொற்களெல்லாம்//

உவமை நல்லாருக்கு அக்கா!!

காயத்ரி said...

நான் இதுக்கு முன்ன போட்ட கமெண்ட் வந்துச்சான்னு தெரிலயே??!!

அருட்பெருங்கோ said...

சில சமயங்களில் சொற்களை, விழி இழந்தவரின் கம்பு விசிறலைப் போல பார்த்து(?) பார்த்து(?) தான் வெளியிட வேண்டியிருக்கிறது.

பிடித்துக்கொள்ள ஓர் 'அன்பு' கரம் கிடைத்தால் மகிழ்ச்சி :-)

முத்துலெட்சுமி said...

வந்துச்சுப்பா காயத்ரி வந்துச்சு.. கவிதாயினி நீங்க அதிகம் வரதில்லை.. இல்லையா அதான் ரெண்டு கமெண்டா வாங்கிகிச்சு என் ப்ளாக்கர்.. புத்திசாலி.

முத்துலெட்சுமி said...

அருட்பெருங்கோ பதற்றத்துல பயத்துல இருக்கற கண்ணு தெரியாதவங்களை ப்
பாத்துருப்பீங்க அவங்க தான் விசிறி விசிறி கம்பை அங்கயும் இங்கயும் அடிப்பாங்க பாக்க பயங்கரமா இருக்கும் .. நீங்க பாத்து கவனமா எடுத்து வைக்கும் ஓவ்வோரு அடிக்கும் தட்டி தட்டி நடந்துபோகும் நிதானமான கண்ணிழந்தவரை சொல்றீங்க.. அப்படி கவனமா சொல்லை வெளிப்படுத்தினா உறவோ நட்போ பிரச்சனையே இல்லையே...

அபி அப்பா said...

கவிதயின்னா இப்படில்ல இருக்கனும் , இருங்க படிச்சுட்டு வாரேன்!!

கண்மணி said...

முத்து உங்க கவிதைகள் மெருகேறி வருகிறது கவிதையை விட தலைப்பே ஒரு நல்ல கவிதையாகத் தோன்றுகிறது.
பெண் எனும் புதிர்

இராம்/Raam said...

நல்லாயிருக்கு அக்கா...


//நெஞ்சம் மறந்த அந்த கணத்தில்,
வார்த்தைகள் எல்லாமே போலிகள்
என்றாகி விழி இழந்தவனின்
கம்பு விசிறலைப்போல,
வீசி வீசி நானிறைத்த சொற்களெல்லாம்
சிதறிய அறையில்//

ரசித்த வரிகள்.... :)

லக்ஷ்மி said...

ரொம்ப அருமையான கவிதை முத்து.

//கவிதயின்னா இப்படில்ல இருக்கனும் , இருங்க படிச்சுட்டு வாரேன்!!// படிக்காமலே சர்டிபிகேட்டா? இதெல்லாம் ரொம்ப ஓவராத் தெரியல உங்களுக்கு? :)

முத்துலெட்சுமி said...

அபி அப்பா உங்க ட்ரேட் மார்க் பின்னூட்டம் போட்டுட்டீங்களா..எங்க கவிதைன்னா எட்டிக்கூட பாக்கமாட்டாரே ன்னு ஒரு நிமிசம் முதல் சில வார்த்தையை படிச்சு மயக்கமே வந்துடுச்சு...எனக்கு.

முத்துலெட்சுமி said...

தலைப்பும் அந்த கடைசிவரிகளும் கூட கடைசி நிமிசத்தில் சட்டுன்னு தோணிச்சுப்பா கண்மணி.. மத்தவரிகளில் எல்லாம் திருத்தமும் அடித்தலும் ஆகி வந்தது இந்த கவிதை. எனக்கே அந்த வரிக்கப்பறம் தான் கவிதை பிடித்தது பப்ளிஷ் செய்ய .. ஏதோ நீங்கள்ளாம் படிச்சு தான் நான் தொடர்ந்து எழுதும்படி செய்யறீங்க் நன்றி.

முத்துலெட்சுமி said...

ராம் ரொம்ப நன்றீ. தலைப்பைப்போலவே அந்த வரி எங்கருந்து மனசுக்குள்ள வந்துதுன்னே தெரியாத அளவு நானே குழம்பிகிட்டு இருக்கேன்பா..தானா வருது.. (ஓவரா பந்தா விடரன்ல.. :)) )

முத்துலெட்சுமி said...

லக்ஷ்மி நன்றிப்பா...
அப்பறம் அபி அப்பா அப்படி பின்னூட்டம் போடலன்னா தான்
ஓவரா இருந்துருக்கும்..இதான் அவர் உண்மையான ஸ்டைல்... ;))

செல்வம் said...

கவிதை அருமை.

மங்கை said...

ஆஹா மறுபடியும் கவிதை எழுதியாச்சா

...ஹ்ம்ம்
மத்தவங்க அளவுக்கு கவிதைய பாராட்ட தெரியாதுப்பா...ஆனா அன்பு பத்தி எழுதினுது நல்லா இல்லாமையா இருக்கும்.. ரொம்ப நல்லா இருக்கு

cheena (சீனா) said...

அருமையான கவிதை.

கோபத்திற்குப் பின் .....

"விழி இழந்தவனின் கம்பு விசிறலைப் போல ""

உண்மையான உவமை.

தனிமை-தியானம்-தேடுதல்-புதிர்-சாவி- ???

அன்பு.
சமாதானம்.

அற்புதம் அற்புதம்.

நாகை சிவா said...

என் போஸ்ட் க்கு எதிர் போஸ்ட் மாதிரி இருக்கே... அப்படி ஏதும் இல்லல... :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

கவிதையெல்லாம் நல்லா இருக்கு...

அசன்மாபுதானம் என்னன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா? :-))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து
வெளிவர எனக்கிருக்கும்
ஒரே சாவியான சில சொற்களை-


அ ச
ன் மா
பு தா

ம் ..........//

எனக்கு புரியாத இந்த லாஸ்ட் வரிகள்தான் சூப்பர். ;-)

நீங்க விளக்கிய போதுதான் புரிஞ்சது. ;-)

கோபிநாத் said...

அக்கா கவிதை சூப்பர். எப்படிக்கா இப்படியெல்லாம்? ;-)

முத்துலெட்சுமி said...

செல்வம் ரொம்ப நன்றி..
மங்கை நன்றிப்பா.. மைபிரண்ட் மாதிரி தனியா டியூசனுக்கு வாங்க பிரிய வச்சிடலாம்... :))

முத்துலெட்சுமி said...

சீனா ரொம்ப நன்றிங்க.. நல்லா அலசி இருக்கீங்க கவிதையை.. ;)

முத்துலெட்சுமி said...

ஏன் நாகைசிவா இப்படி எல்லாம்...
நான் அப்படி செய்வனா ..இப்படி யோசிக்கவே எப்படி முடியுது உங்களால.. :)) இல்லங்க இல்ல நானா என் சொந்த மூளையை வச்சு எதயோ கிறுக்கி இருக்கேன்.. அது உங்களுது மாதிரி இருக்கா ;;அப்பன்னாலும் சந்தோஷம்.. ஏன்னா க்ரேட் ப்பீள் திங்க் அலைக் இல்லையா..

முத்துலெட்சுமி said...

மைபிரண்டு வழக்கம்போல பின்னூட்ட கணக்கை சரியாப்போட்டதுக்கும் சேர்த்து டியூசன் பீஸா ஒரு பின்னூட்டம் போட்டிருக்கப்பா நன்றி .

தம்பி said...

இது முடியலத்துவத்துல சேருமா?

முத்துலெட்சுமி said...

முடியலத்துவமோ ...இப்படித்துவமோ எப்படித்துவமோ தம்பி இதுல இருந்து யாருக்காவது தெளிவு கிடைத்தா இதுவ்ம் ஒரு தத்துவமாகிடும் அதுவரை இது எனக்கு மட்டும் தெளிவைத்தரும் ஒரு சின்ன கவிதை.

மங்களூர் சிவா said...

//
அருட்பெருங்கோ பதற்றத்துல பயத்துல இருக்கற கண்ணு தெரியாதவங்களை ப்
பாத்துருப்பீங்க அவங்க தான் விசிறி விசிறி கம்பை அங்கயும் இங்கயும் அடிப்பாங்க பாக்க பயங்கரமா இருக்கும் .. நீங்க பாத்து கவனமா எடுத்து வைக்கும் ஓவ்வோரு அடிக்கும் தட்டி தட்டி நடந்துபோகும் நிதானமான கண்ணிழந்தவரை சொல்றீங்க.. அப்படி கவனமா சொல்லை வெளிப்படுத்தினா உறவோ நட்போ பிரச்சனையே இல்லையே...
//

கவிதையை விட இந்த பின்னூட்டம் மிக மிக அருமை

ஜி said...

super... first puriyaathonnu nenatchen.. aana etho purinjiditchu :))))

[thanglishla ezuthunaa ungalukku pudikkaathunnu sonneengalla??? athukkuththaan ippadi... :)))]

முத்துலெட்சுமி said...

மங்களூர் சிவா கவிதையை விட வா.. :)) .. ஏங்க பின்னூட்டத்தில் சொன்னதை தாங்க கவிதையில் சொல்லி இருக்கேன்.. என்ன கொஞ்சம் விளக்கமா சொல்லி இருக்கேன் பின்னூட்டத்தில்.

முத்துலெட்சுமி said...

ஜி புரிஞ்சுடுச்சாப்பா சந்தோஷம்.
தங்கிலிஷ் படிக்கறது எனக்கு கஷ்டம்ன்னு சொன்னேன் .. ஆமா..
என் பையனைப்போலவே( இன்னும் வளரலையா?)இருக்கியேப்பா.. சொன்னதுக்கு உல்டாவா செய்யறதுல..

ரமணன்... said...

Good Thinkin :)