December 31, 2007

இனியதாய் அமையட்டும் 2008

எத்தனையோ ஆசைகள் குறைவில்லாத ஆசைகள் . வருடா வருடம் ஏறிக்கொண்டே போகும் ஆசைகள்.. எல்லாம் நிறைவேறிடனும் என்கிற பேராசையும் கூட. உங்களிடமும் இருக்கும் ஆசைகள் கனவுகள் நிறைவேற இந்த 2008 ஒரு இனிய வருடமாக இருக்க வாழ்த்துக்கள். 2007 எனக்கு நிறைவான வருடமாக இருந்ததற்கு கடவுளுக்கு நன்றி.

பரிசுகள் என்பதை பெற்று பலவருட இடைவெளிக்கு பிறகு 2007 ல் தான் பரிசுகளின் சுவை உணர்ந்தேன். அன்புடன் கவிதைப்போட்டியில் புத்தகப் பரிசில் என் தேர்வான 1. துப்பறியும் சாம்பு என் சிறுவயதில் நான் ரசித்த ஒரு தொடர் . இப்போது மீண்டும் வாசித்து ரசிக்கிறேன்.
2.காந்தியின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை கொத்தமங்கலம் சுப்பு கதைகளாக எழுதி இருக்கும் புத்தகம் என் குழந்தைகளுக்கு சொல்வதற்காக வாங்கினேன் அவர்களுக்கு வாசித்து சொல்லவேண்டும்.
3.மிருதுளா நாகராஜனின் எம்ப்ராய்டரி புத்தகம் அதில் கொஞ்சமேனும் பழகிப்பார்க்கனும்.


பதிவுகள் எழுதுவதற்கு இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதே அரிதாகிவிட்டது . அடுத்த வருடம் அவ்வப்போதாவது எழுதிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஆசை.
சிநேகப்பறவைகளே!
புன்னகையோடும் புதுமை சிந்தனையோடும் , அள்ளக்குறையாத அன்போடும் வரவேற்போம் புத்தாண்டை.....

15 comments:

Mangai said...

My hearty wishes for a great New Year for you and your family.

Its good that you shared about some books here. I'll also make a try

ஆயில்யன் said...

வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்

புத்தாண்டையும்,

பதிவுகளையும்...!

அபி அப்பா said...

உங்களுக்கு இந்த வருட முதல் வாழ்த்து அபிஅப்பாவின் வாழ்த்தா அமைய வாழ்த்துக்கள்!!!

மங்கை said...

உங்கள் சிறு முயற்சிகள் யாவும் வெற்றியடைய, உற்சாகம் குறையாத புத்தாண்டிற்கு வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

உங்கள் அனைவருக்கும் இந்த ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

குழந்தைகளுக்கு எங்கள் அன்பு.

என்றும் அன்புடன்,
துளசி & கோபால்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

thanks mangai... same to you

-------
ஆயில்யன் நன்றி...
------

அபி அப்பா முதல் வாழ்த்தா இல்லாட்டி என்ன வாழ்த்தினாலே சந்தோஷம்.நன்றி.
-------

நன்றி மங்கை ,,
-----
நன்றி துளசி அண்ட் கோபால்

குழவி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். சென்ற வருடம் நிறைவாக இருந்ததைப் போல் இவ்வருடமும் அதிக நிறைவுடன் இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும். பலப்பல பரிசுகளும் கிட்ட வாழ்த்துகள்.

கோபிநாத் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;))

Anonymous said...

happy new year muthulakshmi
wishing you to get more n more prizes in this year too
kanmani

Anonymous said...

நிறைவும், மகிழ்வும் நீடிக்க வாழ்த்துக்கள்....

-இரண்டாம் சொக்கன்

காட்டாறு said...

உங்களுடன் சேர்ந்து நானும் வரவேற்கிறேன். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

வாழ்த்துக்கள் அக்கா.

சிவமுருகன் said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நானானி said...

முத்துலெட்சுமி!
2008-க்கான இனிய வாழ்த்துக்கள்!!
உங்களுக்கும் குழந்தைகளுக்கும்!!!