January 8, 2008

லைஸ் மை ஃபாதர் டோல்ட் மீ

எல்லாரும் ரொம்ப பாராட்டின இஷானோட படம் பார்த்து என்னத்த கத்துக்கறது ... வேண்டாம் வேண்டாம்ன்னாலும் ரைம்ஸ் புக்கையும் மை ஃபர்ஸ்ட் டிக்ஸன்ரியும் வச்சிக்கிட்டு அப்பா வர வரை பதினொருமணியானாலும் ஆர்வமாய் படிச்சு நல்ல ஸ்கூலில் அவளாவே பேசி இடம் வாங்கிக்கிட்ட குழந்தை என் குழந்தை. ஆல்ரவுண்டர்ன்னு விளையாட்டா படிச்சே பேருவாங்கினவ தான்.. 4 வயசில் முத்திரைபிடிச்சு ஆடி ப்ளேஸ்கூல் ஆண்டுவிழாவில் என் கண்ணில் கண்ணீர் வரவைத்த குழந்தை.. நீங்க தான் அந்த் பொண்ணோட அம்மாவான்னு கேட்டு நாலு பேரு வந்து கை கொடுத்துட்டு போக வைத்த குழந்தை.



சொல்லிக்குடுத்த ஸ்டெப்பை அடுத்த நிமிசமே பிடிச்சிக்கிறா அவளுக்கு ஆர்வமிருக்கு நாட்டியம் கத்துக்குடுங்கன்னு ஆசிரியை சொன்னாங்கன்னும் டிவியை பாத்தாலோ இசை எங்கிருந்தோ கசிந்து வந்தாலும் கூட தானாக ஆடிய கால்களின் ஆர்வம் கண்டும் சேர்த்தாயிற்று..படிபடி என்று போட்டு பயமுறுத்தவில்லை.. 40 க்கு 39 வாங்கிய பெண் இப்போது படிக்க உக்காருவதே இல்லை 30 வாங்கினாலும் சரி அம்மா... பாத்துக்கோ ன்னு விட்டாச்சு.. சரி நாட்டியத்துக்கோ ஆசைப்பட்டு சேர்ந்த இசைவகுப்போ வீட்டில் பயிற்சி எடுத்தால் தானே ..அடிக்கக்கூடாது சரி திட்டக்கூடாது சரி... அம்மாதங்கமே கொஞ்ச்ம் ப்ளீஸ் கொஞ்சம் எதுலயாவது கவனம் வையேன்னு கெஞ்சும் நிலைமையா இருக்கு...


இதுல இந்த படம் பாத்து "இங்க பாரு என்ன வருமோ அதான் வரும் சும்மா நை நைன்னு எதாச்சும் என்னை சொல்லக்கூடாது ஆமாம்" ன்னு சொல்லாம ... ம்.. சரி சரி "ஹயால் கர்ன்னா ன்னா என்ன ..எந்த கஷ்டத்துலயும் . மெ ஹூன்னா " ன்னு சொல்றதுக்கு அமீர் சொல்ற மாதிரி நீயும் அப்பாவும் இருக்கீங்க.. ஒகே தேங்க்யூன்னு சொல்லும் குழந்தைக்கு அப்பாடா நல்லவேளை நம்மளை திட்டலன்னு சந்தோஷம் தான் பட்டுக்கனும்... என்னதான் குழந்தை தன் இஷ்டம் போல இருக்கறதுக்கு விடனும்ன்னாலும் சாக்கடையில் தலை பட ஒரு குழந்தை விளையாட எந்த அம்மா விடமுடியும்..

---------------------------------------

பொல்லாதவன் முதல் பாதி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது .. நடுத்தரவர்க்கத்து பையன் காதலிக்கறதும் அதை நண்பனிடம் திருப்பி திருப்பி .. சொல்வதும் இன்னைக்கு எத்தனாவது தடவைன்னு நண்பர்கள் கேட்டும் தொடர்வதும் அவள அங்க பாத்தேண்டா இங்க பாத்தேண்டா திரும்பி பாத்தாடான்னு ... அதை நண்பர்களூம் பாவமா கேக்கறதும் ... இயல்பா என்னவோ சிறுகதைமாதிரி இருந்தது முதல் பாதி பின்பாதி சினிமாத்தனம் ஒருத்தனே அத்தனைபேரை அடிக்கறது .. அது ஆரம்பிச்சிட்டோம் முடிவ பாத்துடலாம்ன்னு பாத்தேன்..

------------------------------------------

மிருகம் ம் நல்லா நடிக்கிறாரு ஹீரோ அதுவும் கடைசியில் உருக்கமா நடிச்சிருக்காரு.. பிச்சக்காரிக்கிட்ட போனதுக்கப்பறம் கீழே விழறானா பிச்சக்காரி கிட்ட இருந்து எயிட்ஸ் வந்துதுன்னு கிராமத்துமக்கள் நினைக்கக்கூடாது பாக்கும் போது இன்னும் விளக்கமா சொல்லி இருக்கலாம்ன்னா அப்பறம் டாக்குமெண்ட்ரி ஆகிடும்... மனைவியும் தாயும் அவனுக்கு செய்கிற சேவையில் அவன் திருந்துவது நல்லாத்தான் இருக்கு ... எந்த நோயுக்கும் அன்பு ஒன்று தானே மருந்து கூடக்கொஞ்சம் நாள் வாழ்வதற்கு.... என்னைக்காச்சும் உனக்காக உன் மகன் சண்டை போட்டிருக்கானா எனக்காகத் தான என் புருசன் ஒருத்தன் கிட்ட சண்டை போட்டான்னு முட்டாள் தனமா பேசும்போது மட்டும் சிரிப்பு வந்தது.. அது அவளுக்காக இல்லை அவனோட உடமையை ஒருத்தன் தப்பா பேசிட்டான்னு தான் தெரியலை அவளுக்கு. அய்யோ எங்க போனாலும் ஈயம் விடாது போலயே... கடைசியில் ஊருக்கே த்ண்ணி கிடைக்கசெய்து நல்லவனாகி மத்தவங்கள மனுசங்களா மிருகமான்னு யோசிக்க வச்சிட்டானாம். எப்படி வாழக்கூடாது எப்படி சாகனும்ன்னு சொல்லி இருக்கானாம்.

----------------------------------


எவனோஒருவன் பாவம் அவ்வளவுதான் நியாயத்துக்கு எல்லாம் மரியாதை.. எதோ படத்தை பார்த்தமோ நாம வாங்குகிற பொருளுக்கு பில் வாங்கினோமா நம்ம மட்டில என்னமுடியுமோ அப்படி ஒழுக்கமா இருக்க முயற்சிக்கனும்... அவன் மாத்ரி எல்லாரும் ஒழுக்கமா இல்லைன்னா சிலர் மட்டும் ஏண்டா ஒழுக்கமா வாழ்ந்து ஏமாளிபட்டம் வாங்கிக்கட்டிக்கனும்ன்னு கேட்டா இப்படித்தான் தியாகி ஆகி சாகனும்.

------------------------------------

லைஸ் மை பாதர் டோல்ட் மி ஒரு கனாடியன் படம்.. சின்னபையன் ஒருத்தன் அவன் தாத்தாக்கூடவே ஒட்டிக்கிட்டு அவர் சொல்லித்தர கடவுள் நம்பிக்கையை எல்லாம் கத்துக்கிறான்.. அவர் கூட குதிரை வண்டியில் போறது அவனுக்கு ரொம்ப பிடிக்குது." தாத்தா இந்த இலையெல்லாம் யார் பெயிண்ட் பண்ரா".. கடவுள் ன்னு சொல்ற தாத்தாகிட்ட "எந்த ப்ரஷ் வச்சு செய்யறாரு" ன்னு கேள்வி மேல கேள்வி கேட்பது அழகு.





அவரும் சலிக்காமல் கடவுள் பற்றி விதம்விதமான விசயங்களைச் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால் பையனோட அப்பா அதான் அந்த தாத்தா இருக்காரே அவரோட மருமகனுக்கு இது பிடிக்கலை.. தாத்தாக்கிட்ட இருந்து பிரிக்க முயற்சி செய்து தோத்து அந்தகோபத்துல இருக்கார். மழை உங்க தாத்தா சொல்ற மாதிரி கடவுள் அனுப்பறது இல்லை அது மேகத்திலிருந்து வருதுன்னு சொன்னா போங்கப்பா பொய் ன்னு ஓடரான். அந்த குட்டி பையனை யாரும் அடிக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டுருக்கார் தாத்தா.





குதிரை தான் அந்த தாத்தாக்கு ரொம்ப நண்பன் அதோட லாயம் நடுவில் இருக்கரதால பக்கத்துவீட்டம்மா ப்ரச்சனை செய்யரா... இன்னொரு குழந்தை பிறக்கிறது அவங்க வீட்டுல .அப்பறம் அவன் சந்தேகம் எப்படி குழந்தை பிறக்குது , இந்த வயசில் நமக்கு ஏன் அம்மா பால் கொடுப்பதில்லைன்னு..



அவன் வயதுத்தோழியோடு லாயத்தில் பேசிக்கொண்டிருக்க
தாத்தா மறைந்திருந்து அந்தகுழந்தைகள் பேசிக்கொள்வதை கேட்டு சிரிக்கும் காட்சியில் குழந்தை எப்படி எதுவழி பிறக்கும் என்று
சொல்ல ஆரம்பிக்கும் போது தாத்தா மிரண்டு போய் எட்டி பார்க்க அங்கே ஒரு ஆட்டுக்குட்டியை வைத்து அந்த பெண் சொல்லிக்கொடுப்பாள்.


தன் வயசுத்தோழி சொல்வதும் மற்றொரு நாள் ஒரு வீட்டில் பார்க்கிற தவறான ஒரு காட்சியும் அவனுக்கு பெரியவங்க எல்லாரும் பொய் சொல்றாங்கன்னு ஒரு எண்ணத்தை உருவாக்கி அவன் செய்யக்கூடாததுன்னு தாத்தா சொல்லி இருந்ததை செய்யத்தூண்டுகிறது.




குதிரை லாயத்தின் குப்பையெல்லாம் கொண்டுபோய் பக்கத்துவீட்டுக்கு முன் போட ப்ரச்சனை பெரியதாகி லாயத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார் தாத்தா.. ஆனால் அதற்கு வருகிற அதிகாரிகள் வயதாகிவிட்ட குதிரைக்கு ஏன் இத்தனை மதிப்பு என்கிற போது உங்கள் வீட்டு வயதாகி விட்ட பெரிவர்களுக்கு இதான் கதியா என் நண்பன் அந்தகுதிரை அது இறக்கும் வரை இங்கே தான் இருக்கும் நான் இருக்கும் வரையும் கூட என்று கூறுகிறார்.



தாத்தா உயிருக்கு போராடும் நிலையில் அவனை சொந்தக்காரர்கள் வீட்டில் கொண்டுவிடும்போது தாத்தா நான் அம்மா கிட்ட சொல்லி இருக்கிறேன் அவங்க குதிரையை பாத்துகறதா வாக்குறுதி குடுத்துருக்காங்க நான் போயிட்டுவரேன்னு சொல்லும் போது அந்த சின்னப்பையனுக்குத்தான்
தாத்தாமேல என்ன ஒரு அக்கறை....


திரும்பி வந்து குதிரையும் தாத்தாவும் இல்லாதது அவனுக்கு அதிர்ச்சியாகி தாத்தாவை அழைத்துக்கொண்டே பனிக்குள் ஓடுகிறான்.. வீட்டில் அவன் தந்தை இனி அவன் வரட்டும் என் மகனாய் வளர்க்கிரேன் என்று காத்திருக்கிறான்..

எப்பவாச்சும் இப்படி வித்தியாசமாய் ஒரு படம் பாத்தா நல்லாத்தான் இருக்கு இதுல இருந்து ஒன்னும் கத்துக்கவேண்டாம் பாருங்க..

21 comments:

இராம்/Raam said...

பேச்சு வழக்கிலே விமர்சனம் எழுதியிருக்கீங்க.. :) நல்லாயிருக்கு.. :)

கப்பி | Kappi said...

//இஷானோட படம//

அது :))


லைஸ் மை ஃபாதர் டோல்ட் மீ - நோட் பண்ணிக்கிட்டேன் :))

அபி அப்பா said...

ம் நல்லாயிருக்கு விமர்சனங்கள் அதிலும் முதல் படம் தமிழில் எடுக்கும் போது கண்டிப்பா பார்க்கிறேன், சரியா?:-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாருக்குன்னா சரி ராம்... ஏன்னா ரொம்ப நாளாச்சா எழுதி .. நேரில் உக்காந்துருக்கவங்க கிட்ட பேசற மாதிரி அப்படியே டைப் செய்துட்டேன்..பதிவின் நீளம் பார்த்து கண்டுபிடிச்சிருப்பீங்களே..பேச்சு வழக்குன்னா புல்ஸ்டாப் கிடையாதே எனக்குத்தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கப்பி என்னபண்ரது அவன் பண்ண சேட்டை அதான் நினைவுக்கு வருது அந்த படம் நினைச்சா... :)
அதான் இஷானோட படம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழில் வரனுமா ட்ரான்ஸ்லேட்டர் வச்சிக்கோங்க.. ஆனா என்னை கேட்டா அதுக்கூட வேணாம்.. சும்மா பாருங்க.. போதும்..

Boston Bala said...

நன்றி

துளசி கோபால் said...

'அங்கெ' ஆரம்பிச்சு 'இங்கெ' கொண்டாந்து முடிச்சதுக்கு ஒரு சபாஷ்.

ஒண்ணுத்தையும் விட்டுறாதீங்க. வாழ்க்கையின் சுவாரசியமே இதுதான்.

கோபிநாத் said...

\\எல்லாரும் ரொம்ப பாராட்டின இஷானோட படம் பார்த்து என்னத்த கத்துக்கறது ... \\

பார்த்துட்டிங்களா!!..சூப்பர்..எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...;)

அதுவும் கிளாசுக்கு வெளியில் நின்னுக்கிட்டு அவன் செய்யும் சேட்டை, லேட்டாக தூங்கி எழுந்து வேகவேகமாக பள்ளிக்கு ஓடுறது எல்லாம் சேம் பீச் ;)..இன்னும் இருக்கு..!!

\\பொல்லாதவன் முதல் பாதி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது .. \\

ம்ம்ம்...அப்படியே ஏரியா உள்ள போயிட்டு வந்த மாதிரி இருந்தது எனக்கு :)

\\லைஸ் மை பாதர் டோல்ட் மி ஒரு கனாடியன் படம்.. \\

நன்றாக விமர்சனம் செய்திருக்கிங்க ;)

நானும் நோட் பண்ணிக்கிட்டேன்...;)

காட்டாறு said...

லைஸ் மை ஃபாதர் டோல்ட் மீ... இது போல ஒரு புத்தகம் வாசிச்ச ஞாபகம் இருக்குது. பெயர் ஞாபகத்துக்கு வந்தா சொல்லுறேன். :-)

Unknown said...

முதல் படம் பார்த்தாச்சு. எல்லாரும் எழுதி தள்ளிட்டதால் நான் எதுவும் எழுதல :) அதுல உங்க கடைசி பத்திய ரசிச்சேன்.
மற்ற படங்கள இன்னும் பாக்கல..
கடைசி படம் பார்க்கனும்னு தோணுது… பார்க்க முடியுமான்னு பார்க்கலாம் ;-)

Ayyanar Viswanath said...

லைஸ் மை ஃபாதர் டோல்ட் மீ..அறிமுகத்திற்கு நன்றி..

உங்க புண்ணியத்துல ரெண்டாவது படம் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி பாஸ்டன் பாலா...
-------

உண்மைதான் துளசி நன்றி.. எல்லாமே நல்லா இருக்கு ரசிச்சிக்கிறேன்..

----
கோபிநாத் சின்னப்பிள்ளைங்க சேட்டை செய்தா கூட நல்லாத்தான் இருக்கும்.. அதான் அந்தப்படம் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி காட்டாறு இதுநாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம்ன்னு தான் நினைக்கிறேன்..
:)
----------
நன்றி அருட்பெருங்கோ.. என்ன மத்தப்படம் எல்லாம் பாக்கலயா.. ரொம்ப வேலையா இருப்பீங்க போல..
மெதுவா பாருங்க .
---------
அய்யனார் நன்றி.. இதுக்கெல்லாம் கூட புண்ணியம் கிடைக்குமா ? சரி சரி :)

✪சிந்தாநதி said...

அட...திரை விமர்சனம். அருமை. வித்யாசமான முறையில் எழுதி இருக்கீங்க.

கதிர் said...

ஆத்தா!!

இவ்ளோ படம் பாத்தீங்கன்னா கண்ணு கெட்டு போயிடாதா? :)

மிருகம் படம் நானும் பாத்தேன். எய்ட்ஸ் பத்தின படத்தை எப்படி எடுக்க கூடாதோ அப்படி எடுத்திருக்கார் சாமி. அரசாங்க கருத்துப்படம் இதைவிட நல்லாருக்கும்.
ஜாஸ்தி பப்ளிசிட்டி வேற இதுல.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சிந்தாநதி... வித்தியாசமான முறையா.. ம்.. மனசுபோன போக்கில டைப்படிச்சிட்டேன்..
-------

தம்பி கெட்டு போக இன்னும் இந்த கண்ணுல என்ன இருக்கு... பெரிசா தான் போட்டிருக்கேனே புட்டி.. இன்னும் கூட கல்லூரி பத்தி இதுல எழுதல.. விட்டுட்டேன்..

எதோ பத்மப்பிரியாவுக்காகவும் கஞ்சா கருப்புக்காகவும் பாத்துட்டேன் ... மிருகத்தை. கருப்பா எங்கடா போன உனக்கென்ண்டா குறைவச்சேன்னு என்னமா ஒரு புலம்பல் .

M.Rishan Shareef said...

விமர்சனங்கள் அருமை.
'மிருகத்'தை இன்னும் விமர்சித்திருக்கலாமே...
பத்மப்பிரியாவினதும், அந்த தண்டட்டி பாட்டியினதும் நடிப்பு நன்றாக இருந்திச்சே...!

மங்கை said...

அடேங்கப்பா இவ்வ்வ்வ்வ்வ்ளோஓ படம் பார்த்துட்டீங்களா...ஹ்ம்ம்ம்

புது மாதிரி விமர்சனம்

Anonymous said...

Hi,

This is not to discourage you, but my humble opinion is, please do not follow this style of writing. It was really teadious to follow what you are trying to say. Cheers....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ரிஷான் உண்மைதான் அந்த பாட்டி ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க..
--------
மங்கை இன்னும் கூட நாலு படம் பார்த்தேன் அது இந்த வரிசையில் வரலைப்பா.
----------
கனிவான அறிவுரைக்கு நன்றி அனானி..ரொம்ப நாளா எழுதலயா அதனால் வந்த ஆர்வக்கோளாறு.. என் கணினி சரி இல்லை லேப்டாப் கொஞ்ச நேரத்திற்கு கிடைத்தது ஆர்வத்தில் தட்டிவிட்டேன்..மன்னிக்கவும்..