சுழல்காற்றில் சுற்றியடித்த
நினைவுகளின் பிடியில் சுற்றி
சோர்ந்து விழும் மனம்.
ரகசியங்கள் தொலைத்துவிட,
தொலைந்துவிட
சந்தர்ப்பங்கள் தேடி அழும் மனம்.
மறதி வரம் கேட்டு
மன்றாடி மயங்கி நிற்கும் மனம்.
இரவு மறைந்து விடியல் போல
காட்சி மாறும்...
நினைவடுக்கை தூசிதட்டி
துளிர்க்குமதே மனம்.
ரகசியங்கள் குவித்து வைத்து
ரசித்திருக்குமதே மனம்.
நினைவலையில் கால் நனைத்து
மகிழ்ந்தபடி மயங்குமதே மனம்.
மீண்டும்
காட்சிகள் மாறும்
இரவு வரும் விடியல் வரும்
சோர்ந்துவிழும் துளிர்த்து எழும்.
15 comments:
அருமையான கதை, சூப்பர்:-))
நமக்கெல்லாம் காட்சி மாறும்னாலும் திரும்ப திரும்ப வந்ததேதான் வரும் :) ஏன்னா மனசும் வட்டப்பாதைல சுத்திப் பழக்கப்பட்டிருக்கு.
நன்றி அபி அப்பா..
----------
அருள் சரியா சொல்லிட்டப்பா கவிதையின் கருவே அதானே...வட்டப்பாதை..ம்
நல்லாருக்கு முத்துலட்சுமி..படமும் கவிதையும்...வாழ்க்கையின் கரு..
கடமை நம்பர் 1. :))
கடமை நம்பர் 2 :))
புத்தர் போதிமரம்த்தின் அடியில் இருந்து கவிதை சொல்ற மாதிரி இருக்கு ;))
\\ரகசியங்கள் தொலைத்துவிட,
தொலைந்துவிட
சந்தர்ப்பங்கள் தேடி அழும் மனம்.
மறதி வரம் கேட்டு
மன்றாடி மயங்கி நிற்கும் மனம்.
இரவு மறைந்து விடியல் போல
காட்சி மாறும்...\\
சூப்பர் ;)
பாசமலர் நன்றி..படம் கூகிளாண்டவரின் வரம்...
:)) ( சிலர் இதை நான் எடுத்த படம்ன்னு நினைச்சு பயந்து போயிருக்காங்க )
சென்ஷி கோபி இங்கயும் களமிறங்கிட்டீங்களா.. சொல்லிவச்சுக்கிட்டு..
கவிதையின் போக்கையே மாத்தினவங்களாச்சே நீங்க..
நல்ல கவிதை! அதற்கு ஏற்ற அழகான படம். :)
//கோபிநாத் said...
புத்தர் போதிமரம்த்தின் அடியில் இருந்து கவிதை சொல்ற மாதிரி இருக்கு ;))// :)))
எப்பட்றா மாப்பி இப்படில்லாம் :))
அக்கா ஏற்கனவே சொன்னதுதான்...
நான் முந்திண்டா அவனுக்கு ரிப்பீட்டு
அவன் முந்திட்டா எனக்கு ரிப்பீட்டு
அவன் முந்திக்கிட்டான். அதனால நான் ரிப்பீட்டே போட்டுக்கறேன் :)))
//கயல்விழி முத்துலெட்சுமி said...
சென்ஷி கோபி இங்கயும் களமிறங்கிட்டீங்களா.. சொல்லிவச்சுக்கிட்டு..
கவிதையின் போக்கையே மாத்தினவங்களாச்சே நீங்க..//
கவிதையின் போக்கா? :)))
அது சரி.. புத்தர் இப்படியெல்லாம் போக்கு மாறுனதா படிக்கலையே.. ஒருவேளை அது டெட் எண்ட் ரோடா இருந்திருக்கும்ன்னு நெனைக்குறேன் :))
\\\ சென்ஷி said...
//கயல்விழி முத்துலெட்சுமி said...
சென்ஷி கோபி இங்கயும் களமிறங்கிட்டீங்களா.. சொல்லிவச்சுக்கிட்டு..
கவிதையின் போக்கையே மாத்தினவங்களாச்சே நீங்க..//
கவிதையின் போக்கா? :)))
அது சரி.. புத்தர் இப்படியெல்லாம் போக்கு மாறுனதா படிக்கலையே.. ஒருவேளை அது டெட் எண்ட் ரோடா இருந்திருக்கும்ன்னு நெனைக்குறேன் :))
\\\
எப்பட்றா மாப்பி இப்படில்லாம் :))
அக்கா ஏற்கனவே சொன்னதுதான்...
நான் முந்திண்டா அவனுக்கு ரிப்பீட்டு
அவன் முந்திட்டா எனக்கு ரிப்பீட்டு
அவன் முந்திக்கிட்டான். அதனால நான் ரிப்பீட்டே போட்டுக்கறேன் :)))
;))
மிஸ் பண்ணிட்டேனே இந்த பதிவை.
படமும் கவிதையும் ஒன்றோடொன்று போட்டி போடுறாங்க.
வட்டத்தினின்று வெளிவரும் போது உண்டாகும் வலியும், சந்தோஷமும் வச்சி ஒரு கவிதை எழுதுங்களேன்.
அருமை கயல்.. பட்த்திற்கு ஏற்ற கவிதையா..கவிதைக்கு ஏற்ற படமா.?
இரண்டுமே சூப்பர்..
வாழ்த்துக்கள்
Post a Comment