April 3, 2008

யாரும் என் கதையைக் கேட்பது இல்லை!!

கதைகள், கதைகள் தானென்றாலும் சில நேரம் உண்மையாகவே எழுத்துக்கள் எழுந்து வந்து கதாபாத்திரங்களை நம் கண் முன்னே நடமாடவும் வைத்து , அதுவும் துன்பமயமான அந்த கதாப்பாத்திரத்தின் ஆழமானதொரு வலியை நாம் உணரும்படி செய்தால் அது கதைதானா என்று அறியாமை மயக்கமே வருகிறது ... பார்த்திராத கதாப்பாத்திரங்கள் நம் கூடவே சில நாட்களுக்கு உலவிக்கொண்டிக்கிறார்கள்.

கே.ஏ.அப்பாஸ் கதைகள் - தமிழாக்கம் முக்தார்

முதல் நான்கு சிறுகதைகள் வாசித்ததுமே .. அதிலும் இந்த "சந்தா" வின் கதை குற்றவாளிகள்
படித்ததும், சுருக்கம் நிறைந்த ஒரு மூதாட்டி மனசிற்குள் உட்காந்து கொண்டு புலம்பிக்கொண்டே இருக்கிறாள்.
"இந்தக் கிழவியை மன்னித்து விடு மகனே! எனது இதயம் நோகும்போது கண்களில் நீர் தாரை தாரையாக வந்து கொண்டே இருக்கும் "
ஓ, மழை குறைந்து விட்டது. இப்போது வெளியே போனால் கடைத்தெருவிற்கு, வைத்தியர் கடைக்குச் சென்று, ‘என் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது, மருந்து கொடுங்கள்’ என்று சொல்லு, பைத்தியக்காரி சந்தா அனுப்பி இருக்கிறாள் என்று சொல்லு.

ஆனால் நீ முதலிலேயே சென்று விட்டாயே, என் வெற்றுரைகளைக் கேட்டு அலுத்து விட்டாயா? இறுதியில் நீயும் என் கதையைக் கேட்கவில்லை - யாரும் என் கதையைக் கேட்பதில்லை - நான் பைத்தியக்காரி அல்லவா...” மழை நிற்கும் வரை தங்கி இருக்கலாமே, மகனே

கதையினை நீங்களும் வாசியுங்கள் முழுமையாக ....
------------------------
வெகுநாட்களுக்கு பிறகு ஒரு அழகான காதல் கதை படித்தேன்.
இப்பொழுதும் தான் எத்தனையோ பேர் கதையும் நாவலும் எழுதுகிறார்கள்.ஆனால் எவற்றிலிருந்தாவது கற்றுக்கொள்வதற்கு உணர்ந்து கொள்வதற்கு எதாவது இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். நாவலோடு இணைந்து கதாபாத்திரங்களோடு இணைந்து இப்படி இரு இப்படி இருக்காதே என்று சொல்லாமல் சொல்வது இப்போது காணக்கிடைப்பது இல்லை. அவன் நல்லவன் இவன் கெட்டவன் ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு, அந்த கதாப்பாத்திரம் கதையில் என்ன செய்கிறது என்பது ,அந்த வார்த்தைக்குள் அடங்காமல் போனாலும் கவலைப்படாமல் இழுத்துக்கொண்டே போவதும் வழக்கமாய் இருக்கிறது.

மு.வரதராசன் எழுதிய "பாவை" நாவல் படிக்கக்கிடைத்தது. காதல் ரசம் தான் கதையின் நாடி என்றாலும் இடையிடையே இருந்த வரிகள் அந்நாளைய சமூக நிலைகளை அதனைப்பற்றிய ஆசிரியரின் கருத்துக்களை குறிப்பிடும்படியாக அமைந்திருக்கிறது.
"குருவிக்காரர் செய்யும் ஆரவாரங்கள் தெருக்கூத்துக்காண ஊரார் கூடிவிட்டார்கள். ஆனால் ஊரில் உள்ள எல்லாரும் போகவில்லை . உறங்கிவிட்ட குழந்தைகள் போகவில்லை: உறங்காதகிழவர்களும் போகவில்லை. உறங்கத்தெரியாத செல்வர்கள் போகவில்லை. பட்டுத்துணிகளை அடுக்கிவைத்திருக்கும் பேறு பெற்றவர்கள் போகவில்லை........... அரசாங்கத்திற்குத் தாம் ஒரு தூண் என்பதாக எண்ணிய மணியக்காரர் போகவில்ல: ...இப்போது அவர்களோடு சேர்ந்து ஆற்றைக்கடந்தால் வாழ்வின் பெருமை போய்விடும் என்பது அவர்கள் கவலை.."

இன்றும் இந்த நிலை ஒன்றும் மாறவில்லை.. மேல்தட்டு மக்களின் கோயிலில் கீழ் தட்டுமக்கள் தென்படுவது குறைவு. கீழ்த்தட்டுமக்களின் கோயிலுக்குள் மேல் தட்டுமக்கள் நுழைவதாகத் தெரியவில்லை.. .
கதையில் கதாபாத்திரங்களைக்கொண்டு அன்பையும் நேர்மையையும் உண்மையையும் அதன் சிறந்த நிலையையும் உணரும் படி செய்கிறார்.. காதல்கதையே ஆனாலும் அதில் இத்தனை யும் பிரதிபலிக்கிறது.

எடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடித்துவிட்டேன்.எனக்குப்பிடித்த கதாப்பாத்திரங்கள் - ஏகாம்பரம் செட்டியார் - நேர்மை,
சுவாமிநாதன்,கமலம்- நல்லதொரு இணை
கண்ணப்பர்- நல்லதொரு கணவன் .

டிஸ்கி: தலைப்பு சும்மாவாச்சுக்கும் கேட்சியா இருக்கதான்.. என்ன வைக்கிறதுன்னு தெரியல.. கிழவியை மன்னித்துவிடு மகனே! ன்னு வச்சிருக்கலாமோ :)

30 comments:

Radha Sriram said...

நல்ல அறிமுகம். இரண்டையும் படித்து விடுகிறேன்...:)

கோபிநாத் said...

\\டிஸ்கி: தலைப்பு சும்மாவாச்சுக்கும் கேட்சியா இருக்கதான்.. என்ன வைக்கிறதுன்னு தெரியல.. கிழவியை மன்னித்துவிடு மகனே! ன்னு வச்சிருக்கலாமோ :)\\


தமிழ்மணத்துல இருந்துக்கிட்டு இப்படி எல்லாம் செய்யமால் இருந்தால் தான் தப்பு...;))

கோபிநாத் said...

படித்ததை உணர்ந்து நன்றாக எழுதியிருக்கிங்க....அப்படியே பதிவின் தலைபில் சொல்லுவது போல விரைவில் ஒரு கதை போடுங்க...ரொம்ப நாள் ஆச்சு ;))

சென்ஷி said...

//கோபிநாத் said...
\\டிஸ்கி: தலைப்பு சும்மாவாச்சுக்கும் கேட்சியா இருக்கதான்.. என்ன வைக்கிறதுன்னு தெரியல.. கிழவியை மன்னித்துவிடு மகனே! ன்னு வச்சிருக்கலாமோ :)\\


தமிழ்மணத்துல இருந்துக்கிட்டு இப்படி எல்லாம் செய்யமால் இருந்தால் தான் தப்பு...;))//

ரிப்ப்பிட்டு :))

சென்ஷி said...

//கோபிநாத் said...
படித்ததை உணர்ந்து நன்றாக எழுதியிருக்கிங்க....அப்படியே பதிவின் தலைபில் சொல்லுவது போல விரைவில் ஒரு கதை போடுங்க...ரொம்ப நாள் ஆச்சு ;))//

ரிப்பீட்டு :))

சென்ஷி said...

//Radha Sriram said...
நல்ல அறிமுகம். இரண்டையும் படித்து விடுகிறேன்...:)//

ரிப்பீட்டு :))

சென்ஷி said...

//"யாரும் என் கதையைக் கேட்பது இல்லை!!"///

மெய்யாலுமா.... நீங்க அபி அப்பாகிட்ட சொல்லி பாருங்க. அப்புறம் ஊரு உலகத்துக்கே அந்த கதை தெரிஞ்சுடும் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராதா நன்றிப்பா.. அப்பாஸ் கதைகளில் ஒன்று மட்டும் தான் லிங்க் தந்தேன் ..
----------
கோபி இந்த மாதிரி வித்தியாசமான கதைஎல்லாம் படிச்சு நான் பழகிகிட்டிருக்கேன் .. எனக்கு சாதாரணமாவே எழுத வரமாட்டேங்குது இதெல்லாம் படிச்சா பயம் தான் வருது எழுதாம இருக்கறது பெஸ்டோன்னு :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி சரியா நீ வர்ர நேரமே போட்டேனா.. ஆகா.. அபி அப்பா பாவம் வீட்டு சிறையில் இருக்காரு இப்ப..

சென்ஷி said...

//கோபி இந்த மாதிரி வித்தியாசமான கதைஎல்லாம் படிச்சு நான் பழகிகிட்டிருக்கேன் .. எனக்கு சாதாரணமாவே எழுத வரமாட்டேங்குது இதெல்லாம் படிச்சா பயம் தான் வருது எழுதாம இருக்கறது பெஸ்டோன்னு :)//

:))

இதுக்கு ரிப்பீட்டு போட்டு என்னை தமிழ்மணத்த வுட்டு அப்பீட்டு ஆக்கிடுவாங்க.. அதுனால் வுடு ஜூட்டு :))

நிஜமா நல்லவன் said...

நான் இங்க வந்ததே லேட். அதனால கதைய அப்புறம் வந்து படிச்சிக்கிறேன். மு.வா. பற்றி எழுதியது அருமை. இப்போது அவரை போல் எழுத யாரும் இருப்பதாக தெரியவில்லை. அப்புறம் அந்த தலைப்பு கடைசில சொன்ன மாதிரியே வச்சிருக்கலாம். வழமையாய் உள்ளதை விடுத்து நீங்களே ஒரு கதை எழுதுங்களேன். கண்டிப்பா வந்து பார்த்துட்டு ஸாரி பட்டிச்சிட்டு போறேன்.

நிஜமா நல்லவன் said...

///கயல்விழி முத்துலெட்சுமி said...
சென்ஷி சரியா நீ வர்ர நேரமே போட்டேனா.. ஆகா.. அபி அப்பா பாவம் வீட்டு சிறையில் இருக்காரு இப்ப..///சிறையில் இருக்கிற மாதிரி ஆனா இல்ல..

Thekkikattan|தெகா said...

இது போன்ற கதைகளை படிச்சிப் போட்டுத்தான், அறன்டு போயி உட்கார்ந்துருபீங்க போல :).

நல்லாத்தான் அறிமுகப் படித்திருக்கீங்க, இப்ப இதுக்கு என்ன. இருந்தாலும் கதைகளில் வரும் பகுதியை இட்டாலிக் பண்ணி உங்க பகுதியை சும்மா விட்டுறுந்தா கன்ஃபூயுசன் குறைஞ்சிருக்குமின்னு நினைக்கிறேன்...

சேதுக்கரசி said...

ஏங்க நீங்கதான் இப்படி கயல்விழி முத்துலெட்சுமின்னு பேரை மாத்திக்கிட்டீங்களா? நானும் அப்பப்ப தமிழ்மணத்தில் இந்தப் பேரைப் பார்க்கிறப்பயெல்லாம் வேற யாரோன்னு நினைச்சிட்டிருந்தேன்.. இன்னிக்குதான் கவனிச்சேன் அது நீங்கதான்னு!

கண்மணி/kanmani said...

முத்து இப்ப உள்ள தலைப்புப் பார்த்துட்டு இதென்னடா முத்தக்காவுக்கு வந்த சோதனை...யாருமே அவங்க கதையை கேட்பது இல்லைனு புலம்பறாங்கன்னுட்டு வந்தேன்....இதுவேஎ நல்ல கேட்சியான தலைப்புதான்...

Thamiz Priyan said...

படித்து உள்வாங்குவதற்கு கொஞ்சம் கடினமாக உள்ளது. தலைப்புக்கு
///தமிழ்மணத்துல இருந்துக்கிட்டு இப்படி எல்லாம் செய்யமால் இருந்தால் தான் தப்பு...;))///

சென்ஷி said...

//சேதுக்கரசி said...
ஏங்க நீங்கதான் இப்படி கயல்விழி முத்துலெட்சுமின்னு பேரை மாத்திக்கிட்டீங்களா? நானும் அப்பப்ப தமிழ்மணத்தில் இந்தப் பேரைப் பார்க்கிறப்பயெல்லாம் வேற யாரோன்னு நினைச்சிட்டிருந்தேன்.. இன்னிக்குதான் கவனிச்சேன் அது நீங்கதான்னு!//

:))

என்ன கொடுமக்கா இது...

மங்களூர் சிவா said...

/

டிஸ்கி: தலைப்பு சும்மாவாச்சுக்கும் கேட்சியா இருக்கதான்..
/

தலைப்பு ரொம்ப 'கேட்ச்'சியா இருந்தது.

துளசி கோபால் said...

எதுக்கு இந்த அழுவாச்சின்னு பார்க்க வந்தேன்.

காலம் கிடக்கிற கிடப்பில் கிழவியைத் தூக்கி மணையில் வச்சா யாரு வந்து கேப்பாங்க? :-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிஜம்மா நல்லவன் நானா எதுவும் எழுத முடியலன்னு தானே இந்த புலம்பலே.. வேலையோ வேலை இதுக்கும் நடுவில் எப்பவாச்சும் அரசியல்வாதி மாதிரி என் பதிவை அப்ப அப்ப எட்டிப்பாக்கிறேன்..
-------------
உண்மைதான் தெக்கிகாட்டான் நீங்களே பாருங்க கதைன்னு என் பதிவில் ஒன்னு எழுதி எக்கசக்க நாளாச்சு.... நீங்க சொன்னா மாதிரி புத்தக எழுத்துக்களை நான் கலர் மாத்தி போட்டுட்டேன்..
-------------

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்பிரியன் கதைக்கு லிங்க் குடுத்திருக்கேன்.. நான் எழுதியதே புரியலங்கறீங்களா.. :(
தலைப்புக்குன்னு போட்டுட்டு ஒன்னுமே போடலையே.. சிரிப்பான் போட விட்டுட்டீங்களா ?
------------
கண்மணி பாத்தீங்களா உங்களுக்காகவாவது இப்படி தலைப்பு வைக்கனும் போல என்னடா இது மதுரைக்குவந்த சோதனைன்னு நீங்க வந்து படிச்சு அதுவும் பின்னூட்டம் வேற போட்டுட்டீங்களே.. எல்லாம் தலைப்பின் மகிமைதானே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சேதுக்கரசி .. இதெல்லாம் நியாயமா..? போனமுறை லட்சுமி யிலிருந்து முத்துலெட்சுமி ஆனப்போ ஒரு விழா எடுத்தேன் அப்படி எடுக்காதது தப்பு போலருக்கே..
சரி இந்த் தலைப்பை இப்படிவச்சதுக்கு ஒரு நியாயமான அர்த்தம் குடுத்துருக்கீங்க..நாந்தாங்க நானேதான்.. என் முழுப்பேரு இதாங்க..
--------
பாருப்பா சென்ஷீ இப்படி புலம்ப வச்சிட்டாங்களே.. அதானே என்ன கொடும சென்ஷி இன்னும் எத்தனை பேரு இப்படி நினைச்சிக்கிட்டுருக்காங்களோ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்களூர் சிவா இதெல்லாம் நல்லாவா இருக்கு.. தலைப்பு மட்டும் தான் படிப்பீங்களா..
------------
துளசி எப்பன்னாலும் நல்ல எழுத்து நல்ல எழுத்து தானே.. ம்.. எதோ படிச்சேன் பதிவெழுதி வேற நாளாச்சா சரி இதேயே போடலாம்ன்னு .. ஆனா எட்டிப்பாக்காதவங்க சிலர் வந்து எட்டிப்பாத்ததால பதிவு போட்டது நன்மையா போச்சு.. :)

துளசி கோபால் said...

//அப்பப்ப தமிழ்மணத்தில் இந்தப் பேரைப் பார்க்கிறப்பயெல்லாம் வேற யாரோன்னு நினைச்சிட்டிருந்தேன்//

இதுக்குத்தான் சினிமா இஷ்டாரு மாதிரி அடிக்கடி பேரை மாத்திக்கக்கூடாதுன்றது:-)))))

அப்படியே மாத்துனாலும் அறிக்கைவிட்டு, பார்ட்டியெல்லாம் கொடுத்துருக்கணும்.

சென்ஷி said...

துளசி கோபால் said...
//அப்பப்ப தமிழ்மணத்தில் இந்தப் பேரைப் பார்க்கிறப்பயெல்லாம் வேற யாரோன்னு நினைச்சிட்டிருந்தேன்//

இதுக்குத்தான் சினிமா இஷ்டாரு மாதிரி அடிக்கடி பேரை மாத்திக்கக்கூடாதுன்றது:-)))))

அப்படியே மாத்துனாலும் அறிக்கைவிட்டு, பார்ட்டியெல்லாம் கொடுத்துருக்கணும்.
//

repeattu :))

சேதுக்கரசி said...

//போனமுறை லட்சுமி யிலிருந்து முத்துலெட்சுமி ஆனப்போ//

ஓ.. லட்சுமியும் நீங்கதானா? நான்கூட அது இன்னும் வேற யாரோன்னு நினைச்சிட்டிருந்தேன்! (நெசமா!) என்னடாது முந்தியெல்லாம் லக்ஷ்மி லக்ஷ்மின்னு ஒருத்தங்க இருப்பாங்களே இப்ப காணோமேன்னு.. இல்ல லட்சுமி வேற, லக்ஷ்மி வேறயா.. (எனக்குத் தலைசுத்துது இப்போ.. உங்களுக்கு??)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சேதுக்கரசி தலை சுத்துதா :(( லட்சுமி ன்னு எழுதிட்டிருந்தப்ப லக்ஷ்மி வந்தாங்கப்பா .. நல்லா கவனிங்க.. லட்சுமி வேற லக்ஷ்மி வேற அப்பறம் தான் முத்துலெட்சுமி ஆனேன்....இப்ப முழுப்பேரு இது.. சரியா இனி பேரே மாத்த மாட்டேன் நல்லவேளை என் பதிவு தலைப்புசிறுமுயற்சிங்கறது மட்டும் மாத்தல..

( லக்ஷ்மி இப்ப கொஞ்சநாளா பிசியா இருக்கறதால எழுதறத குறைச்சிருக்க்காங்க போல)

ஜீவி said...

அப்பாஸ்...மு.வ...யாரைத்தான் மறக்கமுடியும்? மு.வ. என்றதும்,
அவரது 'கரித்துண்டு' நினைவுக்கு
வருகிறது...அந்தக்காலத்து எழுத்தாளர்களின் எழுத்துக்கள்,அவர்கள் கையாண்ட வளப்பமான அந்த மொழி அழகு, இன்றும் நினைவாக நம் மனத்தில்
நிழலாடிக்கொண்டிருக்கும் மனிதர்கள்
என்றைக்கும் மறக்கப்படமாட்டார்கள்
என்பதே அவர்களுக்கு கிடைத்த வெற்றி.
நல்ல பதிவொன்றை பார்த்த திருப்தி.
வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

//இதுக்குத்தான் சினிமா இஷ்டாரு மாதிரி அடிக்கடி பேரை மாத்திக்கக்கூடாதுன்றது:-)))))

அப்படியே மாத்துனாலும் அறிக்கைவிட்டு, பார்ட்டியெல்லாம் கொடுத்துருக்கணும்.//

நானும் ரீப்பிட்டிக்கிறேன்ன்ன்ன்

Unknown said...

உங்க கதைனு நெனச்சு வாசிக்க வந்தேன்... ம்ம்ம் நீங்க வாசிச்ச கதையா? நான் வாசிச்ச பின்னாடி சொல்றேன் :)