தில்லியின் தமிழ்சங்கம் போலவே உத்திர பிரதேச மக்களுக்காக ஒரு தமிழ்சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.
தினம் ஒரு திருக்குறள் என்று திருக்குறளின் பொருளும் கூடவே தமிழில் ஒரு வார்த்தை மற்றும் பொன்மொழிகளூம் இணைய முகவரி தருபவர்களுக்கு மடலிட்டு வருகிறார்கள்.
.
அதன் சிறு சிறு அறிமுக நிகழ்ச்சிகளுக்கு பிறகு இந்த ஏப்ரல் 20 ம் தேதி அன்று நொய்டாவில் ஒரு கோடை விழா ஏற்பாடு]
செய்திருக்கிறார்கள்.
சங்கத்திற்கென ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து இருந்தார்கள். ஆனால் தற்போது கூகிள் பக்கம் ஆரம்பித்த பின் தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அறிவிப்புகளை அந்த பக்கத்தில் உடனுக்குடன் புதுப்பித்து வருகிறார்கள். விரைவில் சங்கத்திற்கென கட்டிடம் மற்றும் நூலகவசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று குழுவினர் முனைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
13 comments:
irukken sir!
நல்ல முயற்சிகள்... தமிழகத்தை விட்டு தொலைவில் இருப்பவர்கள் இது போன்றவற்றிற்கு ஆதரவு அளிக்க வேண்டும்... பிள்ளைகளும் தமிழில் ஆர்வமுடன் இருப்பர்... வாழ்த்துக்கள்.
சத்யா உங்கள் கடமையுணர்ச்சியை பாராட்டுகிறேன்.. :)
நன்றி தமிழ்பிரியன்.. ஆமாம் குழந்தைகளுக்கு தமிழுடனான பரிச்சயத்துக்கு இது உதவும்..
\\தமிழ் பிரியன் said...
நல்ல முயற்சிகள்... தமிழகத்தை விட்டு தொலைவில் இருப்பவர்கள் இது போன்றவற்றிற்கு ஆதரவு அளிக்க வேண்டும்... பிள்ளைகளும் தமிழில் ஆர்வமுடன் இருப்பர்... வாழ்த்துக்கள்.
\\
ரீப்பிட்டே ;))
நன்றி!. நீங்கள் அவ்வை தமிழ் சங்கத்தின் ப்ளோகிலும் எழுத வேண்டும் என்பது எங்கள் விண்ணப்பம். அவ்வை தமிழ் சங்க செயற்குழு.
அடுத்த வாரம் நிகழ்ச்சி தொகுப்பையும் ஒரு அனுபவப் பகிர்வா போட்டுலாம்பா
உங்களைப் போன்றவர்கள் ஆதரவு தான் ரொம்ப முக்கியம்
நெல்லை பிரகாஷ்
விரைவில் நூலகம் துவங்க எனது வாழ்த்துக்கள்
அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/
முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
நொய்டா பகுதியில் நிறைய தமிழர்கள் வசிக்கிரார்களா?/பணியில் இருக்கிறார்களா?
அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.
நன்றி கோபி நன்றி மங்கை.. போட்டுவிடலாம் மங்கை அனுபவம்நிகழ்வுகள்ன்னு எழுத ஒரு விசயம் கிடைக்குதுல்ல.. :) யோசிக்கவேண்டாம் பாருங்க..
நெல்லைப்ப்ரகாஷ், கே.ஆர்.பி வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.
---------
ஜோதிபாரதி ,ஆமாங்க நொய்டாவில் தமிழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. கேந்த்ரயவிஹார்.. மற்றும் அருகில் காசியாபாத் சிப்ரா சன் சிட்டி என்று பரவலாக அவரவர் பணி நிமித்தம் வசித்து வருகிறார்கள்..
பேச்சில் மட்டுமல்ல, மூச்சிலும் தமிழ் வாழவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டும்! அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த அவ்வை தமிழ்ச்சங்கம். வாழ்க! வளர்க!
> கிரிஜா மணாளன்
படைப்பாளர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு . கிரிஜா மணாளன் அவர்களே..
Post a Comment