August 22, 2008

பே இட் ஃபார்வேர்ட்

இன்றைக்கு மகனின் பள்ளியில் ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் . பதினொன்றரை மணிக்கே அழைத்து வந்தாயிற்று. இணையத்தில் உட்காரும் நேரம் குறையும் என்று தெரிந்ததும் முன்யோசனையாக HBO தளத்துக்கு போய் இன்று என்ன படங்கள்? என்று குறித்துக்கொண்டேன். ஒரு வரி கதை படித்ததில் , 2.30 மணிக்கு வரும் படம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. "pay it forward."


அவசரமாக அடுக்களை வேலையை முடித்துக் கொண்டு உட்கார்ந்தேன். புதிர் கோர்க்கும் ஆர்வம் வர வர மகனுக்கு அதிகரிக்கிறது. அவனுக்கு உதவிக்கொண்டே சேனல்களை ஓட்டியதில் சிக்கியது காமெடிப்படம் ட்யூப்லக்ஸ்.. ஹிந்தியில் மொழிமாற்றம்செய்யப்பட்டது. நடுநடுவில் பார்ப்பதையும் " அம்மா மேரே ஸாத் கேலோன்னா... " வுக்கு பயந்து படத்தை வெறுமனே காதில் கேட்டுக்கொண்டுதானிருந்தேன்.

2.30 மணிக்கு பே இட் ஃபார்வேர்ட் தொடங்கியது. .. சின்னப்பையன் அழகாக நடித்தான். மற்ற நடிகர்களும் நன்றாகவே நடித்தார்கள்.ஏறக்குறைய நம்ம டேக் விளையாட்டு போலத்தான். தேர்ந்தெடுக்கும் ஆளை சரியாக தேர்ந்தெடுக்கவில்லை என்றால் ஆட்டம் பாதியில் நின்று போய்விடாதா? அது போலத்தான் .


ஆசிரியர் வகுப்பில் உள்ளவருக்கு தரும் செயல் முறை பாடம் ... "உலகத்தை மாற்ற ஒரு வழி கண்டுபிடியுங்கள் அதை செயல்படுத்திக்காட்டுங்கள்". அந்த பாடத்துக்காக படத்தின் நாயகன் சிறுவன் கண்டுபிடிக்கும் முறை தான் "பே இட் பார்வேட்" ஒருவர் தான் பெற்ற நன்மைக்கு நன்றியாக , நன்மை செய்தவருக்கு நன்றியை செலுத்தும் விதமாக, உதவி தேவைப்படும், வேறு மூன்று பேருக்கு உதவி செய்யவேண்டும்.
சிறுவன் தான் தேர்ந்தெடுத்த ஆட்கள் தவறு என்று நினைத்து கவலையாகிறான் ஆனால் அவனின் வழிமுறை வெற்றி பெறுகிறது.
சிறுவனின் இந்த வழிமுறை அவன் ஆசிரியரையும் அவன் அம்மாவையும் சேர்த்துவைக்கிறது..
அவன் அம்மாவையும் பாட்டியையும் சேர்த்துவைக்கிறது.
பலருக்கு அது இயக்கமாக மாறி உதவிகள் பன்மடங்காக உயர்கிறது.
கதையின் முடிவு பார்த்து கண் நிஜமாகவே கலங்கிவிட்டது.துக்கம் தொண்டையடைத்தது.
அந்த பாடல் காட்சி இங்கே இருக்கிறது. படம் பார்க்கும் முன் முடிவு தெரியக்கூடாது என நினைப்பவர்கள் காட்சியைப்பார்க்கவேண்டாம்.


எதையோ ஆரம்பித்து எதையோ முடித்து என்று ஆயில்யன் ஒரு டேக் போட்டு பதிவிட சொல்லி இருந்தார். இந்த பதிவை அதற்காகவும் என்று எடுத்துக்கொள்ளலாம்.
வேறு மூன்று பேரை ஆயில்யனைப்போலவே ரகசியமாக அழைத்துவிடுகிறேன்..:)

19 comments:

ஆயில்யன் said...

படத்துலயும் டேக்தானா
சூப்பரூ! :))

//ஆளை சரியாக தேர்ந்தெடுக்கவில்லை என்றால் ஆட்டம் பாதியில் நின்று போய்விடாதா? அது போலத்தான் //


உண்மைதான் வாழ்க்கையையும் கூட கொஞ்சம் சேர்த்தே சொல்லும் இது போன்ற விசயங்கள்!

கானா பிரபா said...

சரி தேடிப் பார்த்து விடுகிறேன், பரிந்துரைக்கு நன்னி

தமிழ் பிரியன் said...

நான் பர்ஸ்ட் இல்லியா..... :)

தமிழ் பிரியன் said...

அப்பப்ப உலக தரத்துக்கு படங்களை விமர்சனம் செய்றீங்க.... :)

///" அம்மா மேரே ஸாத் கேலோன்னா..///
அப்ப டெல்லி சிட்டிசனாகவே சபரி மாறியாச்சா... :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆயில்யன் எதை எடுத்துக்கிட்டாலும் அதுல ஒரு நியாய தர்ம தத்துவ விளக்கம் தேடுறீங்களே ? பாராட்டுகிறேன்..
-----------
கண்டிப்பா பாருங்க..சிடியில்..
யூட்யூபில் கூட கிடைக்குது போல பார்ட் ஒன் பார்ட் 6 ன்னு எல்லாம் பார்த்தேன்..
---------------
தமிழ்பிரியன் என்ன செய்ய ?பேச ஆரம்பிக்கும் முன்னயே பள்ளிக்கூடம் போனதும் அவருக்கு அவசியத்துக்கு பேச ஆரம்பிச்சதே ஹிந்தியா போச்சு இப்ப படாத பாடு படவேண்டியதா இருக்கு தமிழை அவர் வாயிலிருந்து கொண்டுவர.. :(

கப்பி | Kappi said...

வாரயிறுதியில் பார்த்துடுவோம் :D

கோபிநாத் said...

சொல்லவேல்ல...;))

நானும் பார்த்திருப்பேன்ல...

சரி நோட் பண்ணிக்கிட்டேன் ;)

Anonymous said...

அருமையான படம் இது. அந்த சின்னப்பையன் சிக்ஸ்த் சென்ஸ்ல நடிச்ச பையன். வெளிநாடுகள்ல ஆசிரியர்களுக்கு இந்த மாதிரி ப்ராஜக்ட் குடுக்கற சுதந்திரம் இருக்கு. நம்ம நாட்ல இப்பதான் தொடங்கிருக்கு.

ஸ்ரீ said...

Okies ka weekend paaka try panren

தமிழன்... said...

நல்ல படம்னா பாஷை புரியலைன்னாலும் பாத்துடுவேன்...

பரிசல்காரன் said...

நல்ல ரசனை உங்களுக்கு!

சுரேகா.. said...

அட...இதைத்தாங்க...

நம்ம ஏ.ஆர்.முருகதாஸ்

சிரஞ்சீவியை வச்சு

ஸ்டாலின் னு தெலுங்கில் எடுத்தார்.

நல்லவேளையா சொன்னீங்க!

அடடே..அப்ப..மறுபடியும் ரெண்டுபடமும் பாக்கணும்.

நல்லா எழுதியிருக்கீங்க!

.:: மை ஃபிரண்ட் ::. said...

இந்த படம் ஸ்டாலின் என்ற படமாய் ரீமேக் செய்யப்பட்டது. கொஞ்சம் (அதிகமாவே) மசாலா தூவி தெலுங்கு படமாய் 'கஜினி' முருகதாஸ் இயக்கிக்யிருந்தார்.

venkatramanan said...

நல்லட்தொரு விமர்சனம்!
//" ஒருவர் தான் பெற்ற நன்மைக்கு நன்றியாக , நன்மை செய்தவருக்கு நன்றியை செலுத்தும் விதமாக, உதவி தேவைப்படும், வேறு மூன்று பேருக்கு உதவி செய்யவேண்டும்.// ஏ.ஆர்.முருகதாஸ் 'ஸ்டாலின்' (தெலுங்கு) படத்தில் இதை பயன்படுத்தியிருப்பார். இப்பத்தான் கொஞ்சம் உருவிட்டார்னு தெரியுது! பரவால்ல! அதுவும் நல்லாத்தானிருந்துது!

அன்புடன்
வெங்கட்ரமணன்!

சென்ஷி said...

//கோபிநாத் said...
சொல்லவேல்ல...;))

நானும் பார்த்திருப்பேன்ல...

சரி நோட் பண்ணிக்கிட்டேன் ;)
//

இதுக்கு ரிப்பீட்டே போடறதா.. வேணாமா..

ரிப்பீட்டே போட்டா நான் ஹோம் பாக்ஸ் ஆபிஸ்ல படம் பார்க்குறது உண்மைங்கறா மாதிரி ஆயிடும். ரிப்பீட்டே போடலைன்னா பெரிய தப்பாகிடும்.

எப்படியாச்சும் இந்த படத்தையும் பார்த்துடறேன்னு உறுதி சொல்லிட்டு அப்பீட்டு ஆகிக்கறேன் :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கப்பி கண்டிப்பா பாருங்க..சர்வேசனுடைய பதிவில் .... பார்க்கவேண்டியபடங்கள் லிஸ்ட்ல கூட இந்த படம் இருக்கு...
----------------
அது சரி கோபி ..சொல்லி இருக்கலாம்.. ஏன் 2 மணிக்குத்தான் உங்களுக்கு அம்மாவீட்டில் விடியுதுன்னு கேள்விப்பட்டேன்.. எந்திருச்ச உடனே எப்படி பார்க்கமுடியுன்னு சொல்லி இருக்கமாட்டேன் போல.. :)
----------------
சின்ன அம்மிணி ..ஆமாங்க இப்ப மாசம் ரெண்டு ப்ராஜகட் இருக்கு இவங்களுக்க்கு..என் பெண்ணுக்கு ஒரு ப்ரபஷனலை பேட்டி எடுத்துட்டு வர சொல்லி இருக்காங்க போனவாரம்.. அவங்களுக்கு ரோல்மாடல் யாரு ? ஏன் இந்த துறையை தேர்ந்தெடுத்தாங்கன்னு..?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஸ்ரீ சொன்ன உடனே படத்தை தேடிப்பார்க்கமுடியுதுங்கறீங்க எல்லாரும் அதே எனக்கு பொறாமைதான்.. :)
-------------
தமிழன் இதுக்கு ஒன்னும் மொழி புரியவேண்டிய அவசியம் இல்ல.. நானே புரிஞ்சிக்கிட்டிருக்கேன்னா.. பார்த்துக்குங்களேன்..
--------------------
சுரேகா நான் தெலுங்கெல்லாம் பார்க்கறது இல்லை இப்ப.. பழய படங்கள் டிடியில் மொழிவாரியா போடும்போது பார்ப்பேன்.. அவ்வளவுதான்.. இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பரிசல் அண்ணா.. நன்றி..
----------------
மைப்ரண்ட் தெலுங்குன்னாலே மசாலா தானே.. சந்தேகம் ஏன்?
-------------------
வெங்கட்ராமன் டிவிடி பார்த்து நிறைய விசயம் எடுக்கறாங்க நம்ம ஆளுங்க ..பழைய ப்ளாக் அண்ட் ஒயிட் ஆங்கிலப்படங்கள் பார்த்துக்கூட காட்சிகளை சுடறாங்கன்னு இதெல்லாம் பார்க்க ஆரம்பிச்சப்பறம்தானே எனக்கே தெரிந்தது..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சென்ஷி உனக்கும் கவலையில்ல..தேடி வாங்க கடை தெரிஞ்சுருக்கு.. என்ஜாய்...