October 9, 2008

கஞ்ஜக் தேவிகள்

நவராத்திரியின் அஷ்டமி தினத்தில் வடநாட்டில் பொதுவாக கஞ்ஜக் என்று கன்னிப்பெண்களை அழைத்து பூஜை செய்வது வழக்கம். வருடா வருடம் என் மகளும் அதற்கு செல்வது வழக்கம்.. இப்போது தான் ப்ளாக்கராகிவிட்டோமே அதைப்பற்றி பதிவிடவில்லை என்றால் அழகில்லையே? அதனால் தான் இந்த பதிவு. போனவருடமே ஏன் போடவில்லை என்று யாரங்கே முந்திரிக்கொட்டையாக கேட்பது? அதுக்கும் காரணம் இருக்கிறது. போனவருடம் புதுப்பதிவராகையால் பதிவுக்கு விசயப்பஞ்சமெல்லாம் வரலையே..

சிலர் நவமியிலும் செய்வாங்க சிலர் அடுத்த நாள் அஷ்டமிலயும் செய்வாங்க... அந்த நாட்களில் காலையில் வேகமாய் எழுந்து அழகா தயாராகி சின்னப்பெண்கள் எல்லாம் கலகலப்பாய் இருப்பாங்க. ஒவ்வொரு வீட்டிலும் 9 கன்னிப்பெண்களை அழைத்து பூஜை செய்யவேண்டும் என்பதால் முன்பே புக் செய்துவிடுவார்கள்.


நான் நேரில் பார்த்ததில்லை ஆனால் என் மகள் சொன்னதை வைத்து எழுதுகிறேன். முதலில் பெண்களை உட்காரவைத்து கால்களை அவ்வீட்டுப்பெண்கள் கழுவி விடுவார்கள். பிறகு குங்குமத்தில் தண்ணீர் விட்டு கலந்த கரைசலில் அரிசி யை தொட்டு நெற்றியில் பொட்டு வைத்து இக்கன்னிப்பெண்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொள்வார்கள். கைகளில் சிகப்பு கயிறு கட்டி விடுவார்கள். கன்னிப்பெண்கள் காலில் விழுந்தவர்களுக்கு அவ்வாறே குங்குமம் வைத்துவிடுவார்கள்.


பூரி அல்வா, கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் வகைகளை ஒரு தட்டில் வைத்து பிரசாதமாக தருவார்கள். ( அன்னைக்கெல்லாம் நான் சமைக்கவே மாட்டேன் ஏன்னா இதே தான் அதிகம் சேர்ந்துடுமே) சிலர் அந்த தட்டும் புதிதாக தருவார்கள். சிலர் புது தோடு ..காதணி .. கர்சீப் பத்து ரூபாய் அதோடு வைப்பார்கள்.

என் வீட்டுவேலைக்காரம்மா ஒரு படம் பார்த்தாங்களாமா.. அதில் ஒரு பெண்ணுக்கு குழந்தை இல்லாத குறை தீர கன்னிப்பெண்களை அழைத்து பூஜை செய்யும்படி பரிகாரம் சொல்கிறார்கள். ஆனால் குழந்தை இல்லாத பெண் வீட்டிற்கு யாரும் குழந்தைகளை அனுப்பவில்லையாம். இதனால் மாதா தன் சகோதரிகளான மற்ற மாதாக்களை அழைத்துக்கொண்டு வந்ததாக ஐதீகம் . எனவே தான் கன்னிப்பெண்களை அழைத்து பூஜை என்றார்.

கீழ் வீட்டு ஆண்ட்டியிடம் இதற்கு கதை எதுவும் இருக்கிறதா ? என்றேன். இத்தனை நாள் இல்லாத சந்தேகம் ஏனடா வந்தது இவளுக்கு என்று சந்தேகமாய்ப்பார்த்தார்கள். அப்படி இல்லை ஆண்ட்டி நான் ஒரு ப்ளாக்கராக்கும் இணையத்தில் தேடியும் வி்வரமாய் கதை ஒன்றும் தெரியவில்லை என்றேன்.

எனக்குத்தெரிந்து கதையெல்லாம் இல்லை. நவராத்திரி நாயகிகள் தான் அந்த ஒன்பது கன்னியரும் அவர்களை கடைசி நாள் அழைத்து நவராத்திரி விரதத்தை முடிப்பது வழக்கம் என்றார். இங்கே நவராத்திரி முழுவது வெங்காயம் பூண்டு இல்லாமல் சாப்பிடுவது எல்லாருடைய வழக்கம். உணவகங்களில் கூட இதற்க்காக தனியாக வகைகள் செய்வார்கள்.
முழு நேரமும் சிலர் உருளைக்கிழங்கை வேக வைத்து அதை மட்டுமே உணவாகக் கொள்பவரும் உண்டு.இன்னமும் சிலரிடம் பேட்டி கண்டு அடுத்த வருடம் இன்னும் விவரமா பதிவு போடலாமென்று தோண்றுகிறது.

இங்கே குழந்தைகள் பெரியவர்களைக் கண்டால் காலில் விழும் பழக்கம் உண்டு என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா? ( வளைந்து காலைத்தொடுவது போல் முட்டிவரை கை கொண்டுபோவது தான்) அதைப்போல பழக்க தோஷத்தில் குழந்தைகள் செய்தால் பெரியவர்கள் .. பயந்து ஒதுங்கி இன்று நீ கஞ்சக் தேவி நீ காலில் விழக்கூடாது நாங்கள் தான் விழ வேண்டும் என்று சொல்லி வணங்கி செல்வார்கள்.

ஆனால் இதில் பெரிய சோகம் என்னவென்றால் கஞ்சக் தேவி என்று பெண் குழந்தைகளை வணங்கும் வட இந்தியாவில் தான் பெண் குழந்தையா என்று பார்த்து அழிக்கும் வழக்கமும் வரதட்சிணை கொலைகளும் அதிக அளவில் இருக்கிறது.

42 comments:

Thekkikattan|தெகா said...

ஆனால் இதில் பெரிய சோகம் என்னவென்றால் கஞ்சக் தேவி என்று பெண் குழந்தைகளை வணங்கும் வட இந்தியாவில் தான் பெண் குழந்தையா என்று பார்த்து அழிக்கும் வழக்கமும் வரதட்சிணை கொலைகளும் அதிக அளவில் இருக்கிறது.//

இந்தப் பதிவின் "நோக்கம்" இந்த செய்தியைச் சொல்வதுதானே, உண்மையச் சொல்லுங்க :-)).

ஆயில்யன் said...

//இப்போது தான் ப்ளாக்கராகிவிட்டோமே அதைப்பற்றி பதிவிடவில்லை என்றால் அழகில்லையே?//

கண்டிப்பா!

இந்த ஆர்வம் இதுதான் வேணும்

:))))

ஆயில்யன் said...

//போனவருடமே ஏன் போடவில்லை என்று யாரங்கே முந்திரிக்கொட்டையாக கேட்பது? அதுக்கும் காரணம் இருக்கிறது. போனவருடம் புதுப்பதிவராகையால் பதிவுக்கு விசயப்பஞ்சமெல்லாம் வரலையே..//

யாருன்னே தெரியாதவங்க கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்றது மூத்த பதிவருக்கு அழகில்ல! :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெகா நீங்க.. 'மங்கை' , 'ஏன் இப்படி' போன்ற பதிவுகளின் மெஸேஜ் தர மாதிரியான வட்டத்துக்குள் என்னை அடைக்கப்பார்க்கறீங்க அதுக்கு நான் மயங்க மாட்டேன்..

ஆயில்யன் said...

//அன்னைக்கெல்லாம் நான் சமைக்கவே மாட்டேன் ஏன்னா இதே தான் அதிகம் சேர்ந்துடுமே///


யேயப்பாடியேவ்வ்வ்வ்வ்!

அக்கா! எம்புட்டு அருமையான ஐடியாவெல்லாம் கைவசம் வைச்சிருக்காங்க பாருங்களேன்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மூத்த பதிவர் நானில்லை.. இல்லை ..இல்லவே இல்லை.. ஆமா இது உங்களையும் மூத்தபதிவராக்கிக்க போட்டத்திட்டதுல ஒன்றா ஆயில்யன் ?

இருந்தாலும் பதிவிடுவதில் உங்களளவுக்கு ஆர்வம் யாருக்குமில்லை.

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
தெகா நீங்க.. 'மங்கை' , 'ஏன் இப்படி' போன்ற பதிவுகளின் மெஸேஜ் தர மாதிரியான வட்டத்துக்குள் என்னை அடைக்கப்பார்க்கறீங்க அதுக்கு நான் மயங்க மாட்டேன்..
//

ஆமாம் அக்காவை சுத்தி நீங்க ஒரு வட்டம் போட்ட அவுங்க அதிலேர்ந்து வெளியே வந்து உங்களுக்கு வட்டம் கட்டிடுவாங்க எதுக்கும் சாக்கிரதை !

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
மூத்த பதிவர் நானில்லை.. இல்லை ..இல்லவே இல்லை.. ஆமா இது உங்களையும் மூத்தபதிவராக்கிக்க போட்டத்திட்டதுல ஒன்றா ஆயில்யன் ?

இருந்தாலும் பதிவிடுவதில் உங்களளவுக்கு ஆர்வம் யாருக்குமில்லை.
//

ம்ஹுக்கும் இப்படி சொல்லி சொல்லியே இப்ப சிங்கம் சிங்கிளா சோம்பேறியா தூங்க ஆரம்பிச்சிடுச்சி
:((

ஆயில்யன் said...

//ஆனால் இதில் பெரிய சோகம் என்னவென்றால் கஞ்சக் தேவி என்று பெண் குழந்தைகளை வணங்கும் வட இந்தியாவில் தான் பெண் குழந்தையா என்று பார்த்து அழிக்கும் வழக்கமும் வரதட்சிணை கொலைகளும் அதிக அளவில் இருக்கிறது.//

அடடே என்ன கடைசியில அடுத்த வருசத்துக்கு பதிவ தொடரணும்ங்கறதுக்காகவே ஒரு சோகமான சீன்ல முடிச்சிட்டீங்க :((( (நொம்ப நாடகம் பாக்கறீங்க அக்கா கொறைச்சுக்கோங்க :))))) )

Thamiz Priyan said...

//இப்போது தான் ப்ளாக்கராகிவிட்டோமே அதைப்பற்றி பதிவிடவில்லை என்றால் அழகில்லையே?//
மூத்த பதிவர்களுக்கு இதுதான் அழகாமே.... ;))

Thamiz Priyan said...

//ஆனால் இதில் பெரிய சோகம் என்னவென்றால் கஞ்சக் தேவி என்று பெண் குழந்தைகளை வணங்கும் வட இந்தியாவில் தான் பெண் குழந்தையா என்று பார்த்து அழிக்கும் வழக்கமும் வரதட்சிணை கொலைகளும் அதிக அளவில் இருக்கிறது.//

கடைசியில் மெசெஜ் வைத்திருக்கிறீர்கள்.

சந்தனமுல்லை said...

வித்தியாசமா இருக்கு இந்த விஷயம். நல்ல கான்செப்ட். ஆனா நீங்க பஞ்ச் சொன்னமாதிரி, தூக்கி கொண்டாடிட்டு, போட்டு மிதிக்கறதும் கஷட்மாத்தான் இருக்கு!!

இந்த ரேஞ்ச்-ல போனா, என் டிடிவி ரிப்போர்ட்டராகிடுவீங்க போலிருக்கே! :-)

சந்தனமுல்லை said...

//மூத்த பதிவருக்கு அழகில்ல//

ஆயில்ஸ்..சந்தடி சாக்கில முத்துலெட்சுமியை ஓல்டீஸ் லிஸ்டில் சேர்க்கற இந்த நுண்ணரசியலை கண்டிக்கிறேன்!! :-)

rapp said...

மீ த எத்தனாவது?:(:(:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யூ டூ தமிழ்பிரியன் ? :)
மெஸேஜெல்லாம் கண்டுக்காதீங்க.. படம் பூரா ரத்தம் காட்டிட்டு பின்னால கத்தி எடுக்காதீங்கன்னு சொல்ற படம் மாதிரி தான்.. :)

rapp said...

ஒட்டுமொத்தமா பதிவு சூப்பரோ சூப்பர்:):):)

rapp said...

//போனவருடம் புதுப்பதிவராகையால் பதிவுக்கு விசயப்பஞ்சமெல்லாம் வரலையே//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போனவருஷம் 2007தானே, நீங்கதான் 2006லேயே ஆரம்பிச்சிட்டீங்களே:):):)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முல்லை சரியா சொன்னீங்கப்பா.. உங்களுக்கு தெரியுது .. ஹ்ம்..

ஆனா இருங்க .. ரிப்போர்ட்டர் அதுவும் என் டி டி வி லயா.. ம் சரி .. ஆளாளுக்கு ஓட்டறதுன்னு ஒரு முடிவோட இருக்கீங்க போலயே இன்னைக்கு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் என் டிடிவி பேரு கேட்டதும் எப்படி வந்து சூப்பர் வுமன் மாதிரி குதிச்சே..?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆ கணக்கு சூரப்புலி ராப்.. நல்லா கவனி நான் 2006 நவம்பர்ல தான் ப்ளாக்கரா முடி சூட்டிக்கிட்டேன்.. இந்த கொலு இருக்கே அது ரெண்டு மாசம் முன்னயே வந்துட்டு போயிடுச்சு..

rapp said...

இதை கன்னடர்களும் செய்வார்கள். இதை நான் ரெண்டு தரம் அட்டென்ட் பண்ணிருக்கேன். ஒரு முறை ராஜஸ்தான் குடும்ப நண்பர் வீட்ல நான் மூணாங்கிளாசு படிக்கறச்சே போயிருந்தேன். அவங்க வீட்ல கிட்டத்தட்ட இருபத்தஞ்சு வகை பலகாரம் செஞ்சு வெச்சி, நான் ஒரு வாயாவது எல்லாத்திலிருந்தும் டேஸ்ட் பண்ணனும்னு சொல்லி அன்பா மிரட்ட, நானும் அதுல பாதி கிணறு தாண்டும்போதே ஒன்னும் முடியாம, வாந்தி எடுத்து, யப்பான்னு ஆகிடுச்சி. எப்படி இருந்திருக்கவேண்டிய நான் அப்படிப்போய் இருந்திருக்கேன், அவ்வ்வ்வ்வ்வ்.................

அடுத்தது நான் கல்லூரியில படிக்கும்போது, ஒரு காலக்கட்டத்தில் லொடுக்கு சுந்தரியா இருந்தேன். அப்போ எங்க தலய லவ் பண்ண கன்னட பையன், இந்த பூசாரி வாரம் இல்லாட்டி ஒன்னும் முடியாதேன்னு, ரெண்டு பேரையும் அவங்க வீட்டு கொலுவுக்குக் கூப்டான்(செம சீக்ரெட்டா வேற செஞ்சான், தெரிஞ்சா எல்லாரும் அவனை கன்னாபின்னான்னு கலாசுவாங்கன்னு). அவங்க வீட்ல எங்க ரெண்டு பேரையும் இந்த பூஜையில் உக்காரவெச்சி பூஜைய செஞ்சாங்க. இவங்க வீட்ல விருந்து சாப்பாடு ப்ளஸ் மாவிளக்கு செஞ்சிருந்தாங்க. அன்னைக்கு எல்லாருக்கும் சுண்டலோட மாவிளக்கும் கொடுத்தாங்க. அதை ஒரு வாய் போட்டு எங்க தல முழுங்கரத்துக்குள்ள, அவங்கம்மா ஏதோ கேக்கப்போக, இவ பதில் சொல்ல வாய் திறக்கும்போது அவங்க மூஞ்சிலயே எல்லாத்தையும் ஊதிவிட்டுட்டா:):):)

rapp said...

//சிலரிடம் பேட்டி கண்டு அடுத்த வருடம் இன்னும் விவரமா பதிவு போடலாமென்று தோண்றுகிறது//

இணைய ஜர்ணலிஸ்டாயிட்டாலே இப்படில்லாம் தான் தோணும்:):):)

rapp said...

//நல்லா கவனி நான் 2006 நவம்பர்ல தான் ப்ளாக்கரா முடி சூட்டிக்கிட்டேன்.. இந்த கொலு இருக்கே அது ரெண்டு மாசம் முன்னயே வந்துட்டு போயிடுச்சு..
//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

rapp said...

//என் வீட்டுவேலைக்காரம்மா ஒரு படம் பார்த்தாங்களாமா.. அதில் ஒரு பெண்ணுக்கு குழந்தை இல்லாத குறை தீர கன்னிப்பெண்களை அழைத்து பூஜை செய்யும்படி பரிகாரம் சொல்கிறார்கள். ஆனால் குழந்தை இல்லாத பெண் வீட்டிற்கு யாரும் குழந்தைகளை அனுப்பவில்லையாம். இதனால் மாதா தன் சகோதரிகளான மற்ற மாதாக்களை அழைத்துக்கொண்டு வந்ததாக ஐதீகம் . எனவே தான் கன்னிப்பெண்களை அழைத்து பூஜை என்றார்//

அம்மன் படத்துலக் கூட இப்படி ஒரு சீன் வரும்

rapp said...

//ஆனால் இதில் பெரிய சோகம் என்னவென்றால் கஞ்சக் தேவி என்று பெண் குழந்தைகளை வணங்கும் வட இந்தியாவில் தான் பெண் குழந்தையா என்று பார்த்து அழிக்கும் வழக்கமும் வரதட்சிணை கொலைகளும் அதிக அளவில் இருக்கிறது//

:(:(:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கன்னிப்பெண்கள்ன்னா கூட இங்க ஒரு கணக்கு இருக்குன்னு சொல்றாங்க எங்க வேலைக்காரங்க.. அதாவது மேஜர் ஆகாத பொண்ணுங்களைத்தான் கூப்பிடுவாங்களாம்.. அப்பறம் நம்ம பதிவர் மங்கைகிட்ட பேசும்போது தான் ஒரு விசயம் ஞாபகம் வந்தது..(அவங்கள மாதிரி ஆளுங்க தானே சமூகத்தில நடக்கிற ஏற்ற இறக்க விசயங்களை டக்குன்னு புரிஞ்சு பேசுவாங்க) .. ஏழை பாழை பிள்ளைங்களும் அன்னைக்கு கஞ்ச்க் ன்னு வீடு வீடா அலைவாங்க அவங்களை வெளியே வச்சே ப்ரசாதம் பணம் கொடுத்து அனுப்பிடுவாங்க.. அவங்களை உள்ள விட்டு காலில் விழுவதெல்லாம் கிடையாது. ஆனா இப்படி 9 நல்ல வீட்டு பிள்ளைங்க கிடைக்க அல்லோலகல்லோலப்பட்டு தேடுவாங்களாக்கும்.. ஹ்ம்.

பரிசல்காரன் said...

பகிர்தலுக்கு நன்றி தங்கச்சி!

கயல்விழி said...

//ஆனால் இதில் பெரிய சோகம் என்னவென்றால் கஞ்சக் தேவி என்று பெண் குழந்தைகளை வணங்கும் வட இந்தியாவில் தான் பெண் குழந்தையா என்று பார்த்து அழிக்கும் வழக்கமும் வரதட்சிணை கொலைகளும் அதிக அளவில் இருக்கிறது//

என்ன ஒரு முரண்பாடு!

வட இந்தியாவில் மட்டுமல்ல, தென் இந்தியாவிலும் இப்படி முரண்பாடுகள் உண்டு. மஹாலட்சுமி என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே மற்றொரு பக்கம் பெண் சிசுகொலைகள், வரதட்சணைக்கொடுமை, மாமியார்- நாத்தனார் கொடுமை எல்லாமே நடக்கும்.

வரதட்சணை பிரச்சினை தான் முக்கியமான காரணம் :(

கோபிநாத் said...

\\ஆனால் இதில் பெரிய சோகம் என்னவென்றால் கஞ்சக் தேவி என்று பெண் குழந்தைகளை வணங்கும் வட இந்தியாவில் தான் பெண் குழந்தையா என்று பார்த்து அழிக்கும் வழக்கமும் வரதட்சிணை கொலைகளும் அதிக அளவில் இருக்கிறது.\\

;-(

துளசி கோபால் said...

எங்கும் எதிலும் ஏழைகளுக்கு இடமில்லை என்பதுதான் உண்மை. எத்தனை பேர் வீட்டில், வேலைக்கு இருக்கும் பெண்களுக்கு கொடுக்கற (தண்ணிக் )காப்பியையே மரியாதையாக் கொடுக்கறாங்க? சாப்பாட்டுப் பொருட்களும் இப்படித்தான் பாத்திரத்தில் காஞ்சுகிடக்கும். பார்த்தாவே கோவம் வருது. இதுக்குக் கொடுக்காமலேயே இருக்கலாம்(-:

எங்க வீட்டிலும் இப்படி பெண்குழந்தைகளுக்குக் காலில் நீர் ஊற்றிக் கழுவி மஞ்சள் பூசி, நெற்றிக்குத் திலகம் வச்சு விதவிதமான பிரசாத வகைகளைக் கொடுப்பாங்க. நான் சின்னவளா இருந்தப்ப என் க்ளாஸ்பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு வந்தேன். ஆனா அது 7 பொண்கள்தான்ப்பா.

வயசும் 9 க்குமேல் இருக்கக்கூடாதுன்னு சொல்லிக் கேட்டுருக்கேன்.

வட இந்தியா மட்டுமா....இந்தியா முழுசும் தெய்வங்கள் பெண்தான். அதான் சாமியாலே வாயைத் திறந்து ஒன்னும் சொல்ல முடியாதுன்னு கொடுமைகள் பெண்கள் மேலே காமிப்பது(-:

Iyappan Krishnan said...

//ஆயில்யன் said...

//போனவருடமே ஏன் போடவில்லை என்று யாரங்கே முந்திரிக்கொட்டையாக கேட்பது? அதுக்கும் காரணம் இருக்கிறது. போனவருடம் புதுப்பதிவராகையால் பதிவுக்கு விசயப்பஞ்சமெல்லாம் வரலையே..//

யாருன்னே தெரியாதவங்க கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்றது மூத்த பதிவருக்கு அழகில்ல! :(
//


ரிப்பீட்டிக்கிறேன்.

jokes apart -

இந்த பழக்கம் தமிழ் நாட்டிலும் பரவி வருகிறது. ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.

சென்ஷி said...

நல்ல பதிவு அக்கா... நீங்கள் இறுதியில் குறிப்பிட்டிருக்கும் விசயமும் வருந்தக்கூடிய ஒன்று :(

ஆமாம். "கஞ்ஜக்" என்றால் என்ன?

சென்ஷி said...

//கீழ் வீட்டு ஆண்ட்டியிடம் இதற்கு கதை எதுவும் இருக்கிறதா ? என்றேன். இத்தனை நாள் இல்லாத சந்தேகம் ஏனடா வந்தது இவளுக்கு என்று சந்தேகமாய்ப்பார்த்தார்கள். அப்படி இல்லை ஆண்ட்டி நான் ஒரு ப்ளாக்கராக்கும் இணையத்தில் தேடியும் வி்வரமாய் கதை ஒன்றும் தெரியவில்லை என்றேன்.
//

நீங்க இன்னமும் அம்மன் படம் பார்க்கலையா.. அதுல சௌந்தர்யா வீட்டுல நடக்குற பூஜை, அன்னதானத்துல கலந்துக்க ரம்யா கிருஷ்ணன் அவங்க அக்கம் பக்க சாமிகளெல்லாம் கூட்டிட்டு வருவாங்க. :)

சென்ஷி said...

//துளசி கோபால் said...
எங்கும் எதிலும் ஏழைகளுக்கு இடமில்லை என்பதுதான் உண்மை. எத்தனை பேர் வீட்டில், வேலைக்கு இருக்கும் பெண்களுக்கு கொடுக்கற (தண்ணிக் )காப்பியையே மரியாதையாக் கொடுக்கறாங்க? சாப்பாட்டுப் பொருட்களும் இப்படித்தான் பாத்திரத்தில் காஞ்சுகிடக்கும். பார்த்தாவே கோவம் வருது. இதுக்குக் கொடுக்காமலேயே இருக்கலாம்(-:
//

டீச்சர்.. இன்னமும் நீங்க அந்த காலத்துலேயே இருக்கீங்கன்னு நினைக்குறேன். இப்பல்லாம் டெல்லியில‌ சில இடத்துல வீட்டு வேலைக்கு அவங்களோட அசோசியேசன்ல சொல்லித்தான் ஆளு எடுக்க வேண்டிய நிலைமை.. ஷிப்ட் டைமிங்க் எல்லாம் உண்டு.
பழைய சாப்பாடுன்னு நீங்க நினைக்கறத எல்லாம் அவங்க எட்டிக்கூட பார்க்க மாட்டாங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பரிசலண்ணன் நன்றி.
-------------------------
வாங்க கயல்விழி..ஹ்ம். .. ஒரே காரணம் பணம் தான்ங்கறது ரொம்ப உண்மைதான்.
------------------
கோபி இன்னைக்கு கூட ஒரு பேப்பர் செய்தி ஒரு பெண்ணை அவள் காதல் கணவன் வரதட்சினைக்காக கொன்று வீட்டுல கட்டிலுக்கு அடியில் இருக்கற சாமான் அடைக்கிற பெட்டியில் போட்டுவச்சிட்டானாம்..:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிலர் 7 பேர் வச்சும் செய்யறாங்க சிலர் 9 .. ஆமா நீங்க சொன்னமாதிரி சாமின்னு சொல்லிட்டப்பின்ன வாயத்திறது பேசமுடியாமப்போயிறுதோ..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜீவ்ஸ் நமக்குத்தான் தெரியலபோல ஏற்கனவே இங்க இருக்காமே துளசி சொல்றாங்க பாருங்க.. அம்மன் படத்துலவேற வருதாமே..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி கஞ்ஜக் ன்னா சின்ன பெண் குழந்தைகள்ன்னு அர்த்தமாம் அதாவது கன்னிப்பெண்கள்ன்னும் சொல்லலாம்.ஆனா 10 வயசு வரை தான் ..

வேலைக்காரங்களைப்பத்தி சொல்றது சில இடங்களில் உண்மைதான் பழசெல்லாம் வாங்கறது இல்ல ..முழு சமையலும் அவங்களே செய்துட்டு கிளம்பும் போது அவங்க பங்கை அவங்களே எடுத்துட்டு போயிடறாங்க..

அம்மன் மாதிரி க்ராபிக்ஸ் படமெல்லாம் பாக்கறதுல்ல சாமி மேல கொஞ்ச நஞ்ச இருக்கற பக்தியும் போயிடகூடாதுன்னு தான்.. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்போது தான் ப்ளாக்கராகிவிட்டோமே அதைப்பற்றி பதிவிடவில்லை என்றால் அழகில்லையே?

CHO CHWEET!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமிர்தவர்ஷினி அம்மா, நீங்க இன்னும் பாப்பாவை கொஞ்சிட்டிருந்த மாதிரியே பின்னூட்டம் போட்டுட்டீங்க :)

மங்கை said...

இது தொடர்பா நான் ஒரு பெரிய வாக்கு வாதமே செய்துருக்கேன்பா.. அதென்ன குழந்தைகள் கிடைக்கலைன்னு புலம்பறீங்க..எத்தன குழந்தைகள் இருக்காங்கன்னு சொல்வேன்...எனக்கு சப்போர்ட் பண்ணி பேசறவுங்களும் வீட்ல அப்படித்தான் பண்றாங்கன்னு அப்புறம் தெரிஞ்சது.. எதுல தான் பாகுபாடு பாக்குறதுன்னு இல்லை.. வடநாட்ல அவ்வளவு சிரத்தையா விரதம் இருக்காங்க...ஆனா எனக்கென்னமோ எல்லாம் வேண்டாம்..ம்ம்ம்..நான் சொல்லலை...

தெரிஞ்சா அடிக்க வந்துடுவாங்க..எங்க ஊர்ல உக்கார்ந்துட்டே லொல்லு பேசறியானு..:-)


வடநாட்டுல மாதிரி பெண்களை அவமதிக்கும் நிகழ்வுகள் எங்கேயும் நடக்காது.. ஹரியானா, ராஜஸ்தான்.. எல்லாம் போய் பார்த்தா கண்ல இரத்தம் வரும்...ம்ம்ம்ம்

ராமலக்ஷ்மி said...

இம்முறை கர்நாடகத்திலும் உண்டென கேள்விப் பட்டிருக்கிறேன். ஜீவ்ஸ் சொன்னது போல தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் காலைச் சாப்பாட்டுக்கு இப்படி கன்னிப் பெண்களை அழைத்து மரியாதை செய்யும் வழக்கம் இப்போது பரவலாக இருக்கிறது.

கடைசிப் பத்தி மனதை கனக்கச் செய்து விட்டது:(!