October 24, 2008

கடைசி விடுமுறை


லாஸ்டு ஹாலிடே
50 ல் ஒரு முறை எடுக்கப்பட்ட கதை. அந்த திரைப்படத்தில் ஒரு ஆணைச்சுற்றிப் பின்னப்பட்டிருந்த கதையை கொஞ்சம் மாற்றி 2006 ல் வேறு மாதிரி எடுத்திருக்கிறார்களாம்.. வாய்விட்டு ரசித்து சிரித்து மகிழ்ந்த படம் இது. சாதரண விற்பனையாளரா வேலை பார்க்கிற ஜியார்ஜியாங்கறபெண். தான் என்னவெல்லாம் ஆசைப்படுகி்றாளோ அவையெல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் புகைப்படங்களா சேமித்து வைத்திருக்கிறாள்.

தன்னுடன் வேலை செய்கிற நண்பரிடம் தோன்றுகின்ற காதலை சொல்லமுடியாமல் இருக்கும் நிலையில் மூன்று வாரத்தில் தான் சாகப்போகிறவள் என்று தெரிய வருகிறது. டாக்டராக வருகிறவர் ஒரு இந்தியர் . அவர் வருகிற காட்சி நல்ல நகைச்சுவை (கொஞ்சம் கிறுக்கு மாதிரி??)

அப்பறமென்ன அம்மணி கையிருப்பில் இருக்கும் சேமிப்பு எல்லாம் எடுத்துகொண்டு கிளம்பி ஹெலிக்காப்டர்ல போய்... இருக்கறதுல யேஏஏ பெரிய ஹோட்டல்.. வசதியான அறை, வாழ்க்கை, வீர தீர ஆபத்தான விளையாட்டுக்கள் என்று அடித்து தூள்பரத்துகிறார்..

விமானத்தில் சகபயணி இருக்கையை சாய்க்கவிடாமல் தடுப்பதும், பின்னர் சண்டை போட்டுக்கொண்டு அதிகம் பணம் கொடுத்து மேல்வகுப்பில் பயணம் செய்வதாகட்டும்.. "மேக் மி இண்டர்நேஷன்ல்" என்று துணிக்கடையில் கேட்பதாகட்டும் ஆஹா! கனவுலகம் போனமாதிரி தான் ..

கூழாங்கல் ஸ்பா, ஆவிக்குளியல் என்று என்ன என்ன வகையுண்டோ அத்தனை அழகு படுத்தும் முறைகளையும் செய்து கொள்கிறாள். ஸ்கேட்டிங் ஜ்ம்பிங் என்று விளையாடி தன் கடைசி விடுமுறையை அட்டகாசமா கொண்டாடுறாங்க..

அங்கே தங்கி இருக்கும் ஏனைய பெரிய பணக்காரர்கள் இவள் யார் யார் என்று மண்டையை பிய்த்துக்கொள்ளும் போது பெருமிதமாக சுற்றிவருகிறாள். வேலை செய்பவர்கள் எல்லாரிடம் கனிவு காரணமாகவும், பணக்காரர்களிடம் பேச்சுத்திறமையாலும் நட்பாகிறாள்.. ஒருவரைத்தவிர , எல்லாரிடமும் நட்பாகிவிடுகிறார்.. நாளையைப்பற்றியோ , என்ன நினைப்பார்கள் என்ற கவலையோ இப்போது அவளுக்குஇல்லையே..அவள் நினைப்பதை செய்கிறாள் நினைப்பதை பேசுகிறாள்.கடைசியில் அந்த ஒருவரும் ஜார்ஜியாவைப்புரிந்து கொள்கிறார். காதலரும் இவர் இருக்கும் இடம் தேடி வந்துவிடுகிறார்.

கடைசி காட்சியில் பெரிய கட்டிடத்திலிருந்து தற்கொலைக்கு முயல்கிற ஒருவரை மனம்மாறச்செய்யும் காட்சி எனக்கு மிகவும் பிடித்தது.

வழக்கமான சினிமா தானே... மருத்துவர் தவறாக நோய் என்று கணித்திருக்கிறார் என்று சொல்லி சுபமான முடிவு.. இன்னும் இரண்டு தடவை பார்த்து சிரிக்கனும் என்று தோண்றுகிறது.



Enjoy yourself . . . It's later than you think! இதைத்தான் படத்தில் சொல்லவர்ராங்க.. அப்படி நினைத்து செய்யும் போது நிஜம்மாவே நாம் நாமாக இருப்போம் என்றே தோன்றுகிறது. ஜார்ஜியா முதலில் இருந்த ஷை டைப்புக்கும் கடைசியில் பெற்ற வெற்றிக்கும் அவள் அவளாகவே இருந்தது தானே காரணம்.

29 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டூ பதிவு படிச்சிங்க் :))

ஆயில்யன் said...

/Enjoy yourself . . . It's later than you think! /


இதுக்கு ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா நான் கவியரசுவை கூப்பிட்டு சொல்றேன்

:)

மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்
மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்

Anonymous said...

Kayal...........Ithu Yenna ungal Deepavali Release aaaaa........ wish you and your family very very happy DEEPAVALI
Nandhu

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் நன்றி..நல்ல பாட்டுவரிகள்..:)
----------------
நன்றி நந்து.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலும் எல்லாருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்.. :)

நிஜத்தில் வர தீபாவளி ரிலீஸ் எல்லாம் அறுவையா இருக்கு இதையே புதுப்படமா வச்சுக்கலாம்..

ராமலக்ஷ்மி said...

படம் எனக்குப் பார்க்கக் கிடைக்கிறதோ இல்லையோ, ரசித்து அனுபவித்ததை.. அனுபவித்து எழுதி எங்களை ரசிக்க வைத்து விட்டீர்கள். கதையின் மெசெஜும் சூப்பர்.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

பார்த்த படம் மாதிரி இருக்கு...எதுக்கும் இன்னொரு முறை பார்க்கிறேன் ;))

சென்ஷி said...

நான் இந்த படத்தை இன்னும் பார்க்கலை. கண்டிப்பாக பார்த்துடுவேன்னு நினைக்குறேன் :)

சென்ஷி said...

// டாக்டராக வருகிறவர் ஒரு இந்தியர் .//

ஒரு வேளை போலி டாக்டரா இருந்திருப்பாரோ :(

யட்சன்... said...

நான் இவங்களோட பெரிய விசிறியாக்கும்...சமீபத்துல(ரெண்டு மூணு நாளைக்கு முன்னால) Queen Latifah நடிச்ச ”Bringing Down the House” பார்த்தேன்.

அதைப்பத்தி எழுதனும்னு நினைச்சிட்டு இருந்தேன்..நீங்க இந்த படத்தை பத்தி எழுதீட்டிங்க...

படத்தை தேடிப்பிடிச்சிப் பார்க்கிறேன்.

யட்சன்... said...

இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் கவி...

நலமும், வளமும் பெருகிட வாழ்த்துகள்....

வல்லிசிம்ஹன் said...

படங்களும் கதையும் சூப்பராகக் கொடுத்து இருக்கிறீர்கள் முத்து.

பார்க்க ஆசையாக இருக்கிறது.
உண்மையாக இப்படி நடந்தால் ...என்று கற்பனை ஓடுகிறது. மரணம் வரும் என்று நினைத்தாலே மனிதர்களாக உலா வர ஒரு நல்ல சான்ஸ் கிடைக்கிறது..:)

வல்லிசிம்ஹன் said...

நன்றிம்மா. நல்லதொரு படத்தைச் சொன்னதற்காக. பார்க்க முயற்சிக்கிறேன்:0)

கப்பி | Kappi said...

//நான் இந்த படத்தை இன்னும் பார்க்கலை. கண்டிப்பாக பார்த்துடுவேன்னு நினைக்குறேன் :)//


ரிப்பீட்டு :))

பாச மலர் / Paasa Malar said...

நல்ல கதையமைப்பு..

தமிழன்-கறுப்பி... said...

\\
Enjoy yourself . . . It's later than you think!
\\

இதைத்தான் மனம் ஆசைப்படுகிறது ஆனால் செயல் படுத்துவதைத்தான் நிபந்தனைகள் தடுக்கிறது...

Anonymous said...

நல்லா இருக்கு விமர்சனம்!!!

அன்புடன்
அபிஅப்பா

நாநா said...

நல்ல படம்ங்க. நாளை என்பது என்ன தெரியாது? நேற்று என்பது கனவு. இன்று மட்டுமே நிஜம் என வாழ்ந்தால் இன்பம் தினம் என்பதை நகைச்சுவையாய் சொல்லும் படம்.

rapp said...

me the 18th

rapp said...

ஹி ஹி நானும் இதே மாதிரி ஒரு மூடை வரவழைச்சுக்கிட்டுத் தான் ஷாபிங் பண்ண போவேன்:):):) நானும் கூடிய படம் சீக்கிரம் பத்திடறேன்:):):)

butterfly Surya said...

கண்டிப்பாக பார்க்க வேண்டும்.. எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியலை..


நன்றி.. வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya@gmail.com

மே. இசக்கிமுத்து said...

நன்றாக ரசித்திருக்கிறீர்கள்..
விமர்சனம் படம் பார்த்த மாதிரி இருந்தது!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி நானே டிவியில் வரும்போது தானே இதெல்லாம் பார்க்கிறேன்.. நீங்களும் இந்த HBO ZEE STUDIO இதெல்லாத்தோட ப்ரோக்ராம் ஆன்லைனில் பார்த்து வச்சிக்கோங்க.. :)
--------------------
கோபிநாத் பார்த்திருந்தாலும் இன்னொரு தடவை பார்த்து ரசித்து மனம் விட்டு சிரிங்க ..

---------------------
சென்ஷி எனக்கும் அந்த டாக்டர் மேல சந்தேகம் தான், இந்தாளு பாட்டுக்கு ஓம் ஓம் ன்னு உக்காந்துக்கறாரே ஒழுங்கா என்னத்தைப்பார்த்திருக்கப்போறாருன்னு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி யட்சன்.. நீங்க சொல்ற படம் சில காட்சிகள் பார்த்திருக்கேன்.. முழுதாய் பார்க்க இன்னும் சான்ஸ் வரலை.. ஆனா ரசிகர் மன்றம் வைக்க நல்ல நடிகை தான்..
--------------------
நன்றி வல்லி..
கண்டிப்பா பாருங்க..
-------------
நன்றி கப்பி
நீங்களே பார்க்கலையா ஆச்சரியம்தான்
------------------------

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி பாசம்லர்..
-----------
நன்றி தமிழன்(கறுப்பி)நீங்க சொல்வதும் சரிதான்..
ஆமா நீங்க தமிழனா கறுப்பியா கொழப்பிட்டீங்களே..
:)

------------------
நன்றி அபி அப்பா..
=---------------
நன்றி நா நா.. நாளைய பத்தி கொஞ்சமாச்சும் கவலையிருக்கான்னு திட்டி திட்டியே நாம சந்தோஷப்படறதையே விட்டுட்டோம் போல இருக்கு..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் யூ ஆர் ஆல்வேஸ் இண்டர்நேஷனல்யா..
:)

-------------------
சூர்யா மிஸ் பண்ணாம் எல்லா படமும் பாத்துடுவீங்க போலயே.. ஓகே இதையும்பார்த்திடுங்க.
:)
----------------
வாங்க இசக்கி முத்து ... லேட்டானாலும் லேட்டஸ்டா வந்துடறீங்க .. :)

butterfly Surya said...

நன்றி.. ML

ஆம்.. உலக திரைப்படம் நிறைய பார்பேன்..ஒரு நாளைக்கு ஒன்று மட்டும்.. இன்னும் பார்க்க வேண்டிய பெரிய பட்டியல் இருக்கு.. இதையும் சேர்த்து கொள்வேன்..

வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya@gmail.com

சந்தனமுல்லை said...

//நீங்களும் இந்த HBO ZEE STUDIO இதெல்லாத்தோட ப்ரோக்ராம் ஆன்லைனில் பார்த்து வச்சிக்கோங்க.. :)//

:-)) அடப்பாவிகளா? இப்படில்லாம் கூட டைம் பாஸ் பண்றீங்களா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இன்னும் நிறைய டைம்பாஸ் விசயங்கள் இருக்கு.. ஆனா என்ன பண்ரது உங்களுக்கு ஒரே டைம் பாஸ் ஆபீஸ் ல தூங்கறதாமே? முல்லை :))

butterfly Surya said...

பார்த்தாச்சு கயல்.. சூப்பர்..

"The Motorcycle Diaries" முடிந்தால் இதையும் பார்கவும்.