October 20, 2008

வாழ்வெனும் பாதை


வெயிலால் நீண்டுகொண்டிருக்கும்
சாலையைப்போன்ற
தகிக்கும்
நெடியநினைவுகள்...
ஒரு மரநிழலுக்கும் மற்றொன்றுக்குமான
தூரவித்தியாசமென
பிரிதலும் சேர்தலுமான காட்சிகள்
வெம்மையும் இளைப்பாரலுமென
கடக்கின்ற நாட்கள்...

வளைவுகளில் நிதானிக்கையிலோ
வந்தவழி புலப்படாத மனமயக்கம்..
நேர்க்கோட்டு நேர்ப்பார்வையிலோ
கானல் நீர் கலங்கலாக
போகும்வழி குழப்பும் கண்மயக்கம்.

பிரிவுகளில் தேர்ந்திடத் தடுமாற்றம்
ஏற்றங்களில் இறக்கங்களில்
சுமையென விழிப்பென ,
கடந்த, எதிர்-காலங்கள்.
எதிர்படும் அறிந்த அறியாத
முகம்தெரிந்த தெரியாத பயணிகள்
முற்றுப்பெறாத பயணங்கள்.

31 comments:

கோபிநாத் said...

தலைப்பும் கவிதையும் அருமை ;)

ராமலக்ஷ்மி said...

சாலைப் பயணத்தில் வாழ்க்கைப் பயணத்தைக் காட்டியிருப்பது அருமை முத்துலெட்சுமி.

//வளைவுகளில் நிதானிக்கையிலோ
வந்தவழி புலப்படாத மனமயக்கம்..
நேர்க்கோட்டு நேர்ப்பார்வையிலோ
கானல் நீர் கலங்கலாக
போகும்வழி குழப்பும் கண்மயக்கம்.//

அற்புதம்.

வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

ச்சே ஜஸ்ட்டு மிஸ்ஸு :(

இப்ப இது மீ த தேர்டு :)

சென்ஷி said...

கவிதை ஓக்கே ரகம் :)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அருமையான கவிதை அக்கா!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நாமனைவரும் பயணிகள் தானே!

நாம் பயனிக்கும் பாதையும் நோக்கமும்
வேறு வேறாக இருக்கலாம்!

ஏதோ ஒரு மர நிழலில் இளைப்பாறும் போது அறிமுகப்படலாம்!

நமக்கான பாதை காத்துக்கொண்டிருகிறது!

லட்சியத்தை எட்டும் வரை சோர்ந்துவிடாதே!

பாதைகள் நீண்டாலும் பயணங்கள்
இனிமையாகட்டும்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட அதிசயமே! கோபி முதலில் வந்தாச்சா.. நன்றி..

-------------
ராமலக்ஷ்மி நன்றிப்பா... ரொம்ப நாளாச்சேன்னு ஒரு சிறுமுயற்சி..

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

என்னமோ சொல்ல வந்து ஏதே உளறிட்டு போறேன்! ஒன்னும் தப்பா நினைக்காதிங்க! நல்ல கவிதை எழுத முயற்சி செய்கிறேன்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி பாதையில் அவசரம் கூடாது.. தேர்ட் வந்தாலும் பரவாயில்லை.. :)
சென்ஷி எல்லாம் இந்த அவசரத்தால் வந்த வினை தான்.. முதல் பாரா இருக்கே அது கொஞ்ச நாள் முன்ன ஸ்ட்டேட்டஸ் கவிதையா போட்டது ..மேற்கொண்டு பாதையை செப்பனிட்டேனா அது சரியில்லாத காண்ட்ராக்டர் போட்ட ரோடு மாதிரி ஆகிடுச்சு.. :)
-----------------------

சுடர்மணி நீங்க கொஞ்சம் இல்ல நிறைய நல்லவர் தான் போல....

Thamiz Priyan said...

அக்கா! நீங்களா இப்படி கவிதை எழுதி இருக்கீங்க... வித்தியாசமா இருக்கே?... :)

சென்ஷி said...

//முதல் பாரா இருக்கே அது கொஞ்ச நாள் முன்ன ஸ்ட்டேட்டஸ் கவிதையா போட்டது ..மேற்கொண்டு பாதையை செப்பனிட்டேனா அது சரியில்லாத காண்ட்ராக்டர் போட்ட ரோடு மாதிரி ஆகிடுச்சு.. :)//

:))

மங்கை said...

கடைசி பத்தி அருமையா இருக்குப்பா... கவிதை எழுத சொன்னா எழுத மாட்டேங்கறீங்க... எழுதுங்க இனி...

Thekkikattan|தெகா said...

வெறுமனே பாராட்டிட்டு போன அது சம்பிரதாயமா போயிடும், அதுனாலே இந்தாங்க பிடியுங்க... :)

//வெயிலால் நீண்டுகொண்டிருக்கும்
சாலையைப்போன்ற
தகிக்கும்
நெடியநினைவுகள்...//

இளைப்பாற மர நிழல்கள் இல்லாத சாலையின்னா ஒன்று அது வறண்ட பூமியா இருக்கணும், அதுவே இங்கே கவிதையில எடுத்துட்டா மனம் இளைப்பாற பசுமையான நினைவுகளே இல்லாத வறண்ட நீண்ட நெடிய பயணமின்னு எடுத்துக்கலாமா :))?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுடர்மணி இப்பத்தானே நல்லவ்ர்ன்னேன்.. இப்படி 'நல்ல' கவிதை எழுத முயற்சிக்கிறேன்னு சொல்லிட்டீங்களே..சரி சரி முயற்சிங்க.. :)

--------------------
தமிழ்பிரியன் அப்ப நீங்க என்னோட மற்ற வித்தியாசமான கவிதை எல்லாம்படிக்கலையா :( :)))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை , எழுதவரலையேன்னு தான் விட்டுட்டேன்.. ஆனா அதனால் என்ன ஆச்சு அடுத்தவங்களோடதும் படிக்க பிடிக்காம போயிடுச்சு.. எனக்கு வராததை ஏன் படிக்கனுன்னு போல.. :)

----------------
தெகா.. படிச்சிட்டு உங்க கோணத்துல சொல்லிட்டீங்க..அவங்கவங்களுக்கு வேற வேற கோணம் புரியுதுன்னா நல்லது. ஒன்னும் மட்டும் சொல்லிக்கறேன்... நெடிய நினைவுகள் .. மேலே போட்ட சாலை இது. :)

ஆயில்யன் said...

//பிரிவுகளில் தேர்ந்திடத் தடுமாற்றம்
ஏற்றங்களில் இறக்கங்களில்
சுமையென விழிப்பென ,
கடந்த, எதிர்-காலங்கள்.
எதிர்படும் அறிந்த அறியாத
முகம்தெரிந்த தெரியாத பயணிகள்
முற்றுப்பெறாத பயணங்கள்.///

ரொம்ப நல்லா இருக்கு அக்கா!

எனக்கு பிடிச்ச வரிகளில்...!

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................என் ஸ்டேண்டர்டுக்கு கொஞ்சம் ஜாஸ்தி இது:):):) ஆனா நான் புரிஞ்சிடுச்சி, நல்லா இருக்குன்னு சொன்னாலும் எல்லாரும் கும்மத்தான் போறாங்க:):):) ஹி ஹி, யாரும் கலாசக் கூடாது சொல்லிட்டேன்:):):)

Iyappan Krishnan said...

ஆஹா கவுஜ கவுஜ


நல்லா சொல்லிருக்கீங்க :)

சென்ஷி said...

// rapp said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................என் ஸ்டேண்டர்டுக்கு கொஞ்சம் ஜாஸ்தி இது:):):) ஆனா நான் புரிஞ்சிடுச்சி, நல்லா இருக்குன்னு சொன்னாலும் எல்லாரும் கும்மத்தான் போறாங்க:):):) ஹி ஹி, யாரும் கலாசக் கூடாது சொல்லிட்டேன்:):):)
//

மத்தவங்க வருவாங்களான்னு தெரியல.. ஆனா இப்படில்லாம் சொன்னா நான் கண்டிப்பா வந்து கும்முவேன் :)

கவுஜாயினி பாராட்டி பின்னூட்டம் போடறதுன்னா சும்மாவா?!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் நன்றி :)
----------
ராப் பயப்படாதே இன்னிக்கு அநேகம் பேர் இந்த பதிவுக்கு வரமாட்டாங்க.. என் பதிவு தமிழ்மணத்துல சரியா சேரலை.. வந்தவங்கள்ள முக்கால்வாசி பேரும் வேற வழி இல்லாம வந்தவங்க தான்.. பாரு நீகூப்பிட்டு சென்ஷி வந்திருக்காப்ல..

-----------
ஜீவ்ஸ் நன்றி.. கவுஜ என்ற வார்த்தைகு முன்னால போட்ட ஆகா நல்லா இருக்கு..

சென்ஷி said...

//சென்ஷி said...
// rapp said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................என் ஸ்டேண்டர்டுக்கு கொஞ்சம் ஜாஸ்தி இது:):):)
//

அப்ப இன்னும் அஞ்சாப்பு பாஸ் பண்ணலையா :)

சென்ஷி said...

// ஆனா நான் புரிஞ்சிடுச்சி, நல்லா இருக்குன்னு சொன்னாலும் எல்லாரும் கும்மத்தான் போறாங்க:):):)//

இல்ல. என்ன புரிஞ்சதுன்னு இதுக்கு ராப் நோட்ஸ் கொடுக்க சொல்வோம் :)

சென்ஷி said...

//ஜீவ்ஸ் நன்றி.. கவுஜ என்ற வார்த்தைகு முன்னால போட்ட ஆகா நல்லா இருக்கு..//

அப்ப கடைசியா சொன்ன நல்லா சொல்லியிருக்கீங்க உங்களுக்கே ஓவரா தெரியுதா :)

Iyappan Krishnan said...

சென்ஷி

சிறுகுறிப்பு வரைக :

1 - கவுஜ
1.1.5 - கவிதை
2 - புனைவு
2.5 புண்நவீநத்துவம்

Anonymous said...

kayal.....neenka mihavum nandraka karpanai seireenga....'Vazvenum Pathai'vaguttha 'kayalenum Methai" neengal......addada........yenne yen kavithai

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அனானிமஸா வந்தவரே இது உங்களுக்கே ஓவராத்தெரியலயா..? ஆனாலும் எதுகைமோனையா நல்லாத்தான் சொல்றீங்க..

தமிழன்-கறுப்பி... said...

நீங்களா...:)

எழுதுங்க எழுதுங்க...

நாநா said...

//ஒரு மரநிழலுக்கும் மற்றொன்றுக்குமான
தூரவித்தியாசமென
பிரிதலும் சேர்தலுமான காட்சிகள்//

நான் மிகவும் ரசித்த வரிகள். அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழன் நான் கவிதை எழுதுவேன்னு தெரியாதுன்னு சொல்ல வர்ரீங்களா ? :)
---------------
நாநா வாங்க.. நன்றி..எனக்கு ம் அந்த வரிகளை எப்படித்தான் யோசிச்சேனோன்னு ஆச்சரியமாத்தான் இருக்கு.. நல்லா இருக்குல்ல..

அமிர்தவர்ஷினி அம்மா said...

வளைவுகளில் நிதானிக்கையிலோ
வந்தவழி புலப்படாத மனமயக்கம்..
நேர்க்கோட்டு நேர்ப்பார்வையிலோ
கானல் நீர் கலங்கலாக
போகும்வழி குழப்பும் கண்மயக்கம்

அருமையான வரிகள்.

வாழ்வோடு இயைந்தோடும் வார்த்தைகள்.

priyamudanprabu said...

உங்களின் எல்லா கவிதைகளும் நல்லாயிருக்கு