November 22, 2008

சாரநாத் புத்தர் , பாரத்மாதா கோயில் - காசிதொடர்-5


காசியில் உள்ளூர் கோயில்களுக்கு பின்னர் சற்றே தூரமாக பிரயாணித்து சாரநாத். கபகப பசிக்கு "ஹாலிடே இன் இருக்கு சாப்பிடுங்க" என்றார் ஆட்டோக்காரர்..அதிகமா இருக்குமே என்று எட்டிப்பார்த்தால் , டூப்ளிகேட் தான். ரொட்டி சப்ஜி சாப்பிட்டுவிட்டு மூல்காந்த் குடிர் விஹார் புத்தர் கோயில். அழகான தங்க நிற புத்தர்.சிறிதே தியானத்தில் அமர்ந்தோம்.

இந்த கோயிலில் ஒரு வித்தியாசமான அறிவிப்பு என்னைக் கவர்ந்தது. புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் . ஆனால் அதற்கான பணம் 20 ரூபாயை உண்டியலில் நன்கொடையாக நீங்களே சேர்ப்பியுங்கள் என்பது தான் அந்த அறிவுப்பு. கேட்கவே நல்லா இருக்கு இல்லையா.நான் போட்டுட்டேன்ப்பா 20 ரூபாய்.

வெளியே வந்தால் கோயிலுக்கு இடதுபுறத்தில்
புத்தர் தன் சீடர்களுக்கு அறிவுரை செய்கிறார்போன்ற மிகப்பெரிய சிலைகள்...சிங்கள எழுத்துக்களால் ஆன பெரிய பெரிய கல்வெட்டுக்கள் இருந்தன. சிறு சிறு துணிகளில் வேண்டுதல்கள் போல எழுதி சிலைகளை சுற்றிய கம்பி வேலியில் கட்டி இருந்தார்கள்.

சாரநாத் ஸ்தூபி .மற்றும் அதனருகிலான புத்தர்கோயில் பழமையின் மிச்சங்கள். சென்னையில் இருக்கும் ஏதோ ஒரு சொசைட்டி என்று பெயரிட்ட அடையாள அட்டையுடன் சிங்கள மக்கள் கூட்டம் வரிசை வரிசையாக வந்து இறங்கினர். தலை மொட்டை அடித்த ஒரு பெண்மணி ஒலிபெருக்கி சகிதம் பாடல் பாட மக்கள் அனைவரும் சென்று சிதிலமான இடங்களில் முட்டியிட்டு வணங்கி பாடலை பின் தொடர்ந்தனர்.

செங்கல் பாவிய இடங்களிலேல்லாம் அமரக்கூடாது. அது தான் கோயிலின் மிச்சம். வந்து இறங்கியதும் சிலர் அதில் சாமான்களை வைப்பதும் அமர்வதும் என்று இருந்தனர். பிறகு ஒரு காவி அணிந்த சிங்களவர் வந்து அனைவரையும் புல்வெளியில் அமரச்செய்தார்.

ஜப்பானியர் புத்தர் கோயில்.

மீண்டும் காசிக்குள் நுழைந்ததும் மங்கி டெம்பிள் போவோமா என்று ஆரம்பித்த ஆட்டோக்காரருக்கு நோஓஓஓஓஓ என்ற ஒற்றுமையாக பதில் கொடுத்தோம். மீண்டும் குரங்குக் கூட்டத்தில் மாட்டிக்கொள்ள பயம் தான்.

துளசி மானஸ் கோயில் . ஏறக்குறைய பிர்லா மந்திரைப்போலவே தான்.

பாரத் மாதா கோயில் செல்லவேண்டும் என்ற போது ஆட்டோக்காரர் அங்கே ஒன்னுமில்லைங்க என்று மறுத்தார் . இல்லை எங்களுக்கு பார்க்கவேண்டும் என்று வற்புறுத்திய பின் ஒரு பனாரஸ் சேலை கடை இருக்கிறது . நெய்யும் இடமும் பார்த்துவிட்டு சேலை எடுங்கள். அருகில் தான் பாரத் மாதா கோயில் அழைத்துச் செல்கிறேன் என்றார். சேலை எல்லாம் 4000, 5000 .. வாங்கித்தரவேண்டிய ஆட்கள் வாய் திறக்காததால் நடையைக்கட்டினோம்.

பாரத் மாதாகோயிலில் மிக அற்புதமாக 3D இந்தியா மேப் தரையில் இருந்தது.

மலைகள் எல்லாம் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டு பயணிகள் கூட்டத்திற்கு ஒருவர் அழகாக விளக்கமளித்துக்கொண்டிருந்தார். கையில் இருந்த சிவப்புநிற ஒளி உமிழும் உபகரணத்தால் எந்த எந்த இடம் என்று குறிப்பிட்டுக்கொண்டிருந்தார்.

ம்யூசியம் ஒன்றும் சாரநாத்தில் இருக்கிறது . ஆனால் அதற்கு மேல் பொறுமையில்லாத குழந்தைகளுக்காக அறைக்குத்திரும்பினோம்.

27 comments:

கானா பிரபா said...

சுருக்கமா முடிச்சிட்டீங்க, ஆனாலும் சிறப்பு

துளசி கோபால் said...

எதுக்கு இந்த ஓட்டம்?

மாரத்தான்லே கூப்புட்டுட்டாங்களா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கானா, துளசி.. வாங்க.எனக்கும் என்னவோ ஒன்னுமே இல்லையே பதிவிலே ன்னு தோணுச்சு.. நாளாக ஆக மறந்துட்டேனோ...மறதிக்கேஸாச்சே நான்... இப்பவே அடுத்து எங்க போனோம்ன்னு எங்க போனோம்னு கணவர் கிட்டக்கேட்டு எழுதினேன்.. அந்த சிங்கள அம்மா பாடிய பாட்டு இனிமையா இருந்தது.. அதை யூ ட்யூப்ல அப்டேட் செய்து போடறேன்.. ஹ்ம்.. ஒரு இடமா இருந்தா தானே நாலு ப்ளாக் ஆரம்பிச்சி வச்சுட்டு எதிலும் உருப்படி இல்ல.. :)

ஆயில்யன் said...

இந்த கோயிலில் ஒரு வித்தியாசமான அறிவிப்பு என்னைக் கவர்ந்தது. புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் . ஆனால் அதற்கான பணம் 20 ரூபாயை உண்டியலில் நன்கொடையாக நீங்களே சேர்ப்பியுங்கள் என்பது தான் அந்த அறிவுப்பு. கேட்கவே நல்லா இருக்கு இல்லையா.நான் போட்டுட்டேன்ப்பா 20 ரூபாய்.
//

வித்தியாசமான செய்திதான்!
நம்மூர் கோவில்களில் யாரிடம் காசு கொடுப்பது என்று தெரியாமல் காசு கொடுத்தாலும்.பார்ப்பவர்கள் எல்லாம் கேட்கும் கேள்விகளை தவிர்க்க இது போன்ற முறையினை நடைமுறைப்படுத்தலாம்!

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
சுருக்கமா முடிச்சிட்டீங்க, ஆனாலும் சிறப்பு
///

அக்கா பேச வேண்டியதை அவர் எடுத்த படங்கள் பேசிடுச்சுன்னு நான் நினைக்கிறேன் :)

Thamiz Priyan said...

கலவையான ஆன்மீக பிரயாணமாக இருக்கிறது!
///வாங்கித்தரவேண்டிய ஆட்கள் வாய் திறக்காததால் நடையைக்கட்டினோம்.///
:))))

ஆயில்யன் said...

//வாங்கித்தரவேண்டிய ஆட்கள் வாய் திறக்காததால் நடையைக்கட்டினோம்.
//
:))))))

(ஒரு வேளை ஆட்டோ டிரைவர்க்கிட்ட மாமா முன்கூட்டியே பேசியிருப்பாரோ????)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் சரியான சந்தேகத்தைக்கிளப்பிட்டீங்களே.. அப்படியும் இருக்குமோ... :)
---------------
தமிழ்பிரியன்.. வாங்கிக்கட்டிக்கவேண்டிய எங்க அத்தையும் (மாமியார்) என்னத்துக்கு இது எல்லாம் எக்கச்சக்கமா விலையா இருக்கேன்னுட்டு வேணாம் வேணாம்ன்னு சொல்லிட்டே இருந்தாங்களே.. அதனால் வாங்கித்தரவேண்டிய மாமாவுக்கும் ரங்கமணிக்கும் மகிழ்ச்சி தான்.

கிரி said...

//நல்லா இருக்கு இல்லையா.நான் போட்டுட்டேன்ப்பா 20 ரூபாய்.//

நீங்க ரொம்ப நல்லவங்க தான் :-)

//செங்கல் பாவிய இடங்களிலேல்லாம் அமரக்கூடாது. அது தான் கோயிலின் மிச்சம். வந்து இறங்கியதும் சிலர் அதில் சாமான்களை வைப்பதும் அமர்வதும் என்று இருந்தனர். //

அப்பாடா! பேரை காப்பாத்திட்டாங்க ;-)

// மீண்டும் குரங்குக் கூட்டத்தில் மாட்டிக்கொள்ள பயம் தான்.//

ஹி ஹி ஹி

//வாங்கித்தரவேண்டிய ஆட்கள் வாய் திறக்காததால் நடையைக்கட்டினோம்.//

ஹா ஹா ஹா கலக்கலா கூறி இருக்கீங்க

நாகை சிவா said...

//வாங்கித்தரவேண்டிய ஆட்கள் வாய் திறக்காததால் நடையைக்கட்டினோம்.
//

பர்ஸ் திறந்தா போதுமே ;)

அதும் இல்லாம் நீங்க வாய் திறந்து இருந்தால் பர்ஸ் திறந்து இருக்கும் ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

"செங்கல் பாவிய" வை பிரிச்சு அர்த்தம்படுத்திட்டீங்களா கிரி.. :)) அவங்களும் சாதாரணக் குடிமக்களா இருக்கபோறாங்க..நாம் ஏன் அப்படி சொல்லிக்கிட்டு ..
-------------------
பட்டுசேலை நகைக்காக எல்லாம் நான் என்றைக்குமே பர்ஸைத்திறக்கவைப்பதில்லை நாகை சிவா.. நம்ம ரேஞ்சே வேற.. :)

பாச மலர் / Paasa Malar said...

படங்கள் ..எழுத்து ரெண்டும் நல்லாருக்கு முத்துலட்சுமி...இதையெல்லாம் பாக்கணும்கிற ஆசை இன்னும் கூடிப் போச்சு..

கோபிநாத் said...

\\வாங்கித்தரவேண்டிய ஆட்கள் வாய் திறக்காததால் நடையைக்கட்டினோம்.\\

பாவம்..(உங்களை இல்லை) ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாசமலர்.. பாருங்க பாருங்க..இன்னும் அலகாபாத் வேற இருக்கு அது அடுத்த பதிவில்..
---------------------
கோபி கடைக்காரன் தான்பாவம்..வியாபாரம் ஆகலையே...

சென்ஷி said...

பதிவு வழக்கம் போல அருமை.. புகைப்படங்களும்

Sundar சுந்தர் said...

சுருக்கமா நல்லா இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

உங்க தயவில புத்தரையும் பார்த்தாச்சு.

நீங்க அனுமான் சாலிசா பாடியிருந்தா அந்த வானரங்கள் எல்லாம் சும்மா விட்டு இருக்குமில்ல. என்னப்பா முத்து :))

ரேஞ்சே வேறன்னா???? வைரம் ,எமெரல்ட் அந்த மாதிரியா:)

butterfly Surya said...

பதிவும் படங்களும் அருமை. அடடா.. இதுவும் கயல் தானா..??

நல்லாயிருக்கு

வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி, சுந்தர் நன்றி
---------------
வல்லி .. சாலிசா எல்லாம் சன்ஸ்கார் டீவி கூட சேர்ந்து பாடினாத்தான் வரும்.. பயத்துல எங்க ?:)
என் ரேஞ்சுன்னா ..ஏற்கனவே பதிவில்பின்னூட்டத்தில் சொன்னது தான்..அட்வான்ஸ்ட் மொபைல் , கேமிரா, இப்படி ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வண்ணத்துப்பூச்சியார் அது என்ன இதுவும் கயலா? சினிமா விமர்சனத்துக்கும் காசி தொடருக்கும் வித்தியாசம் உணர்ந்தீங்களா? :)

butterfly Surya said...

சினிமா விமர்சனத்துக்கும் காசி தொடருக்கும் கலக்கலான வர்ணணை சூப்பர் இருக்கேன்னு சொல்ல வந்தேன்..

வாழ்த்துக்கள்

rapp said...

பாரதமாதா கோவில் பத்தி கேள்விப்பட்டிருக்கேன், இப்போதான் அந்த போட்டோஸ் பாக்கறேன்:):):)

rapp said...

//மாரத்தான்லே கூப்புட்டுட்டாங்களா?//

ஹா ஹா ஹா :):):)

rapp said...

//நாலு ப்ளாக் ஆரம்பிச்சி வச்சுட்டு எதிலும் உருப்படி இல்ல//


அநியாயமா எங்க சபரியோட பிளாகை இதுல சேக்காதீங்க. க்யூட் பாப்பா இருக்கிற அம்மாங்களே இப்படித்தான்:(:(:( அவன் எவ்ளோ க்யூட்டா கிப்ட் கொடுத்தான், அதை இங்க ஒரு பதிவா போடலாம்ல. அதுல எதாவது மறந்துச்சுன்னா கேளுங்க நான் சொல்றேன்:):):)

rapp said...

//செங்கல் பாவிய இடங்களிலேல்லாம் அமரக்கூடாது. அது தான் கோயிலின் மிச்சம். வந்து இறங்கியதும் சிலர் அதில் சாமான்களை வைப்பதும் அமர்வதும் என்று இருந்தனர்//

என்னை மாதிரியானவங்கப் போலருக்கு:):):)

rapp said...

me the 25TH:):):)

rapp said...

அதானப் பார்த்தேன், நாம எப்டி இதை மிஸ் பண்ணோம்னு, நீங்க வீக்கெண்ட்ல போட்டீங்களா.