November 17, 2008

இரண்டு வருடம் ஓடிப்போச்சு....

வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைத்து இத்தோடு 2 வருடங்கள் ஆகிறது. தமிழ்மணத்திற்கு நன்றி.

பதிவின் பிறந்தநாளை எப்படி கொண்டடலாம்ன்னு யோசிச்சேன். புதுகைத்தென்றல் தன்னுடைய பதிவில் பிடித்தது எது என்று எல்லாரிடமும் கேட்டார்கள். சென்ஷி தந்த ஐடியா ,ஸ்ரீதரன் என்பவர் தன்னுடைய பதிவில் சிலவற்றையே எடுத்து அலசி ஆராய்ந்த மாதிரி நீங்களு ம்... (ஏன் ஏன்.. எல்லாரும் ஓடிப்போகறதுக்கா..) சரி என்ன செய்யலாம் ... எப்போதும் போல ஒத்திப்போட்டாச்சு.
வழக்கமான பாணியில்.. காலையில் கை போன போக்கிலே தட்டியாச்சு. சரி பழய பதிவுகளை நாமே படிச்சுப்பார்ப்போம்ன்னு பின்னோக்கிப்போனால்...........

வர்சானா , கோவர்த்தன ஆன்மீகச்சுற்றுலா,மணாலிச்சுற்றுலா பதிவுகளுக்கு கூட்டமே இல்லை காத்துவாங்குது ... அப்ப நான் வேற புது பதிவரா, அதனால இருக்குமோ.. ஆரம்பத்துல எழுதின கவிதைகளுக்கும் வரவேற்பு கம்மி தான் இருந்தும் தொடர்ந்து எல்லாரையும் கவிதை எழுதி சோதனைக்குள்ளாக்கி இருக்கிறேன்.

சிறுகதைகள் வகை கொஞ்சமாத்தான் எழுதி இருக்கேன். கதையை ஆரம்பிக்க விவரிக்கத் தெரிந்த அளவுக்கு முடிக்கத்தெரியவில்லை. முதலில் கதையோட ஒன்லைன் சரியாகக்கிடைத்தால் தானே கதை எழுதலாம். சரி அடுத்து... பாருங்க சமையல் வகையில் ஒன்னுமே இல்லை.. ஏன்னா அது கைக்கு வந்ததைப்போட்டு சமைப்பது .. நோ ஸ்பெசிஃபிக் ரெசிபி..

செய்திவிமர்சனங்கற பேரில் 4 போஸ்ட் போட்டிருக்கேன். ஆனால் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை. காரணம் ஒரு விசயத்தைப் பார்த்த உடனோ கேட்ட உடனேயோ எதாவது தோன்றுகிறது. கொஞ்சம் விட்டு அதன் பிண்ணனி வெளியே வந்ததும் பார்த்தால் அது வேற மாதிரி இருக்கிறது. இது ஒன்றும் புதிதில்லை. எப்போதும் பட்டிமன்றம் போலவே.. இந்த பக்கம் பேசுபவர்கள் பேசும் போது கேட்டால் அட இது சரியா இருக்கே.. அந்த பக்கம் பேசுபவர்கள் பேசும் போது இது கூட சரிதானேப்பா..

நேற்று டிடி பொதிகையில் "அந்த நாள்" திரைப்படத்தின் சில பகுதிகள். ( இது ரொம்ப வசதி கொஞ்சம் கொஞ்சமா பிரித்துப்போடுவதால் முழுபடம் பார்க்க போரடிக்காது) முதலில் சிவாஜி வந்து மாணவர்களுக்கு படிப்புத்தான் முக்கியம் என்று பேசியபோது ஆகா ன்னு எதிரில் இருந்தவர்களைப்போலவே கைதட்ட ஆசையா இருந்தது. பின்னாலே எழுந்த பண்டரிபாயின் வீரா வேசப் பேச்சைக்கேட்டதும் .. நமக்கும் போராட்ட உணர்ச்சி வந்துவிட்டதே.. பேசாம நடுநிலை யா இருக்கலாமே என்று எப்பவும் நடுநிலை .. அதாவது பேசாமல் பார்க்கிற கூட்டத்தில் சேர்ந்தே இருந்துகொண்டு.. (அடிவிழுந்தால் முதலில் நடுநிலைக்குத்தான் விழும் அது தெரியுமா?) அந்த வீடியோவைப்பாருங்களேன்..


நினைவலைகள் .. அதான் கொசுவத்திப்பா...அது கைகொடுக்கும் கை.. எழுத ஒன்றுமில்லையென்றால் இதை எழுதலாம். சரிக்கு சமமாக தொடர்விளையாட்டுக்களில் இதே அலை வேறுவிதமாக அடித்திருக்கிறது.

கவிதைக்கு??(22) அடுத்த அளவில் குழந்தைகள்(15) வகை தான் நிறைய எழுதி இருக்கிறேன்..அம்மா ஆச்சே.. இவை திருப்தி தந்த பதிவுகள் ..ஆனால் தொடர்ந்து குழந்தைகளைப்பற்றி எழுத தனித்தனியாக அவர்கள் பெயரில் பதிவு ஆரம்பித்துவிட்டதால் இங்கே குறைந்துவிட்டது.

200 பதிவு எழுதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.
"அளவில் என்ன இருக்கிறது .. க்ளிக்க்ளிக்கில் 20 பதிவு இருக்கே அதை நாங்களே கூட்டிப்பார்த்துக்கறோம் கவலை வேண்டாமென்று துளசி ஆறுதல் சொன்னார்கள்.

வழக்கப்போல விழா மேடையில் எல்லாரையும் வாழ்த்துவது போல இதுவரை படித்து , படித்து பின்னூட்டி, பாராட்டி, அறிவுறுத்தி, உடன் வருகிற நட்புணர்வை பாராட்டி அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

69 comments:

கானா பிரபா said...

vaazhthukkal ;)

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் அக்கா :)

ஆயில்யன் said...

//அப்ப நான் வேற புது பதிவரா அதானல இருக்குமோ..//

இருக்கும்!

இருக்கும்!

இனியவள் புனிதா said...

வாழ்த்துகள் :-)

துளசி கோபால் said...

ஆஹா.............


பிறந்த நாட்களுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

டபுள் டபுள் டீக் ஹை?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கானாப்பிரபா, ஆயில்யன் ,புனிதா .. நன்றி ...:)

துளசி பெரிய எழுத்துல போட்டு ..ம்.. உங்க வார்த்தை விளையாட்டுத்தான் எனக்கு ரொம்ப பிடிக்குமே.. நன்றிநன்றி..

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. :-)

ஆயில்யன் said...

//சரி பழய பதிவுகளை நாமே படிச்சுப்பார்ப்போம்ன்னு பின்னோக்கிப்போனால்...........//


ரொம்ப பின்னாடி - ரெண்டு வருசம் - போய் அச்சச்சோ என்னது எனக்கு பதிவே இல்லைன்னு ஃபீல் ப்ண்ணுனீங்களா பாஸ் :)))))))

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள்!

கப்பி | Kappi said...

மூத்த பதிவர் முத்துலெட்சும்யக்கா வாழ்க!! வாழ்த்துகள் :)

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சந்தனமுல்லை said...

நல்ல பதிவுகள்..முன்னாடியே படிச்சிருக்கேன்..ஆனா இப்போதான் மௌனம் கலைத்து கொஞ்ச நாளா பின்னூட்டம் போடறேன்..ஓக்கே..நீங்க அந்த செய்தி விமர்சனத்தை தொடரலாம்! என்ன சொல்றீங்க?!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மை ப்ரண்ட்.. ராமலக்ஷ்மி நன்றி.. :)
-------------
ஆயில்யன் எப்படி எல்லாம் யோசிக்கிறீங்கப்பா.. ஆனா உண்மை அதான். ரொம்ப நாளுக்கு முன்னயே ஏன் நமக்குத்தெரியலன்னு வருத்தப்படுவேன் தான் பாஸ்..
:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கப்பி நீங்க வந்து மூணுவருசம் ஆகப்போதா.. அப்ப ஒரு மூத்தபதிவரே வந்து மூத்தபதிவருன்னு பட்டம் வழங்கறதை நான் ஏத்துக்கிறேன்.. குருவிக்காரருக்கே டாக்டர் பட்டம் கிடைக்கும்போது .. எவ்வளவோ பேரு மாத்திட்டேன் .. இத ஏத்துக்கமாட்டோமா..:)

-------------
சந்தனமுல்லை நன்றிப்பா...:)

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள்...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மௌனம் கலைத்தா ஆகா முல்லை :).. மௌனம்ன்னா எனக்கு சேதுக்கரசிதான் நினைவுக்கு வருவாங்க.. என் ஆரம்பக்காலபதிவுல என்னை பாரட்டி எழுதி இருக்காங்க..
செய்திவிமர்சனம் எழுதலாங்கறீங்களா ? :))

-------------
தமிழன் கறுப்பி நன்றி..

sindhusubash said...

வணக்கம்! வாழ்த்துக்கள்.துளசி தளம் வழியா தான் உங்களை தெரியும்..(தோசை புகழ்).உங்க பெயர் காரணம்(2 பெயர்) தெரிஞ்சிக்கலாமா?

அமுதா said...

வாழ்த்துக்கள்

தமிழன்-கறுப்பி... said...

உங்க பெயரைத்தன் அடிக்கடி மாத்திடறிங்க..
அதனால அடிக்கடி புது பதிவராகினமாதிரியும் இருக்கும்ல...;)

Anonymous said...

vaalthukkal paatti

Alien said...

வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றி அமுதா ;)
--------
சிந்து சுபாஷ் ..வாங்க..நீங்க புதுப்பதிவருல்லயா ..என்பேருகதை உங்களுக்கு தெரியாதது குத்தமில்ல.. அத எப்படி சொல்வேன்.. என்ன சொல்ல வேண்டாமா.. சே சே இருங்க லிங்க தரேன் போய் படிச்சிக்குங்க ..
இது இனி மாத்த எனக்கு கிடைத்த ஐடியாக்கள்

இது முன்னால லெக்ஷ்மி முத்துலெட்சுமி ஆனப்ப

இது தற்போது இருப்பது ஏன்னு


:))) போதுமாப்பா..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தமிழன் கறுப்பி.. புதுப்பதிவர் ஆகனுன்னா ரொம்ப மனதிடம் தேவை..பேரை மாற்றினா பெரிசா புதுப்பதிவரானமாதிரி தோணாது.. எப்பவாவது எட்டிப்பார்க்கற ஆட்களுக்கு புதுசா தெரியும்..அடிக்கடி வாசிப்பவங்களுக்கு தெரியுமே.. ஒரு சீனியர் இருக்கார் அடிக்கடி பேரை மாத்துவார் ஆனா தானே காட்டியும் கொடுத்துப்பார் யாருன்னு.. புதுப்பதிவராகுவதும் மறுபிறப்பும் ஒன்னு தான்...
---------------------
அனானி :) நன்றி..
--------------------
ஏலியன் நன்றி.. :)

வல்லிசிம்ஹன் said...

பதிவு ஆரம்பித்து ரெண்டு வருஷம் ஓடிப்போச்சா:)
ரொம்ப நாளா உங்களைத் தெரியும்னு உணர்ச்சி இருக்கு கயல் முத்து.
இன்னும் நிறைய எழுதுவீங்க. நிறைய பயணங்கள் சென்ற்து படப் பதிவும், விஷயங்களும் சொல்லுங்க.

நடு நடுல பாட்டுப் போடறதையும் விட்டு விட்டீங்களே!!!

அமோகமாப் பதிவுகள் வர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

rapp said...

me the 25th:):):)

rapp said...

வாழ்த்துகள் :):):)

rapp said...

எனக்கு உங்க போஸ்ட்லயே ரொம்ப ரொம்பப் பிடிச்சது, சாட்ட, சாட்ட(டேப் ரிக்கார்டர்ல பதிவு பண்ணும் போஸ்ட்):):):)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வல்லி ரொம்ப நன்றி.. அட நீங்க தான் நம்ம பஜ்ஜி பதிவுக்கே வந்து கமெண்ட் போட்டவங்களாச்சே அப்ப உங்க பேரு வேற இல்லை.. ( பாருங்க எப்படி ஆளுங்க ஒன்னா சேர்ந்திருக்கோம்)

பாட்டு ஆமாம்பா ஒரே பிசியா அதான் தேன்கிண்ணம் பக்கமே எட்டிப்பார்க்க முடியல உங்களுக்காகவே சில நல்ல பாட்டை சீக்கிரமே ஏத்தறேன் அங்க..

rapp said...

அதேமாதிரி எப்போ நீங்க பதிவுலக பேர் மாற்றல் துறையோட சாதனை நாயகிங்கர பட்டத்தை துரக்கிறதா இருக்கீங்க:):):)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராப் வாம்மா மீத் பர்ஸ்ட் போடமுடியலன்னு மீத 25 த் போட காத்துக்கிட்டு உக்காந்துருந்தயாம்மா.. :))
நன்றி ..:)

rapp said...

செய்தி விமர்சனத்தைப் பத்தி நீங்க சொல்றது கரெக்டு, ஆனா இப்படில்லாம் உண்மையப் போட்டு உடைக்கிரதன் மூலமாக என்னைப் போன்ற கருத்துப் போலீஸ்கள் திருந்திவிடுவோம்னு நெனச்சீங்கன்னா உங்களோட கனவு பலிக்காது:):):)

rapp said...

சென்ஷி அண்ணன் நாளைய விழா ஏற்பாடுகளில் பிசியாகிட்டாரா:):):) இன்னும் ஆளக் காணோம். மிஸ்டர் லேட் கம்மர் சென்ஷி அண்ணன், இதுக்காக பின்நவீனத்துவம் கலக்காத ஒரு பதிவை முத்துவைப் பற்றி எழுதவேண்டும்னு தீர்ப்பு சொல்லிக்கறேன்(பானுமதியம்மா வாய்சில் படிக்கவும்):):):)

rapp said...

//ராப் வாம்மா மீத் பர்ஸ்ட் போடமுடியலன்னு மீத 25 த் போட காத்துக்கிட்டு உக்காந்துருந்தயாம்மா//

கரெக்ட், நீங்க பல நாடுகளில் வாழற எங்கள மனசுல வெச்சுக்காம பதிவை போட்டுட்டீங்க, அதான் நாங்க எங்க வழியில தெரமய காமிக்கறோம்:):):)

rapp said...

என்னடி முனியம்மா(பழசு) பாட்டு என்னோட ரொம்ப ரொம்ப பேவரிட். அதை எனக்காக வலையேத்திட்டு, எனக்கு வேற சொன்னீங்களே, மறக்கவே மாட்டேன்:):):)

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சீக்கிரம் கமெண்ட்சை ரிலீஸ் பண்ணுங்க:):):)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

முதல் வேலையா நீ போட்ட கடைசி கமெண்ட்டை ரிலீஸ் பண்னிட்டுத்தான் மத்ததை ரிலீஸ் செய்தேன் ராப்.. :)

ராப் முன்ன எல்லாம் காலை எழுந்ததும் ஏழு எட்டு மணிக்கெல்லாம் பதிவு போடுவேன் வாரம் 5 பதிவு .. இப்பத்தான் வீட்டுக்கடமை எல்லாம் முடிச்சுட்டு 10 மணிக்கு ஆபீஸ் போறமாதிரி பதிவு போடறேன்.. என்ன பண்ண சொல்லு க்ளோபலா வேலை செய்யறேன்னு ஞாபகப்படுத்தற .. ம்.. யோசிக்கிறேன்..

sindhusubash said...

நல்லா தெளிவா குழம்பிட்டேன்.நான் பதிவர் அல்ல வெறும் படிப்பர் மட்டும் தான்.கடந்த 2 வருஷமா துபாயில் இருக்கோம்..நேரம் போகணுமேனு படிக்க ஆரம்பிச்சது இப்ப படிக்க மட்டும் தான் நேரம் இருக்கு.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சிந்து குழம்பாதீங்க பாவம்ங்க நீங்க.. ஒன்னுமில்லங்க.. என் முழுபேரை பிச்சி பிச்சி போட்டிருக்கேன் அவ்வள்வு தான்..

புதுப்பாலம் said...

வாழ்த்துக்கள்.

=இஸ்மாயில் கனி

கண்மணி said...

வாழ்த்துக்கள் கயல்விழி முத்துலக்ஷ்மி
ஆனா நீங்க மட்டும் எப்படி பதிவை இணைக்கிறீங்க.நமக்கு சொதப்புதே

கண்மணி said...

இரண்டு வருஷமா ஒரே டெம்ப்லட்டில் குப்பை கொட்டும் தானைத் தலைவி வாழ்க வாழ்க.....

இராம்/Raam said...

// கப்பி | Kappi said...

மூத்த பதிவர் முத்துலெட்சும்யக்கா வாழ்க!! வாழ்த்துகள் :)/


ரீப்பீட்டே.... :)

சென்ஷி said...

வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் அக்கா :))

சென்ஷி said...

//வழக்கப்போல விழா மேடையில் எல்லாரையும் வாழ்த்துவது போல இதுவரை படித்து , படித்து பின்னூட்டி, பாராட்டி, அறிவுறுத்தி, உடன் வருகிற நட்புணர்வை பாராட்டி அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.//


அடடா! அக்கா இவ்வளவு சீக்கிரம் உரைய முடிப்பாங்கன்னு நினைக்கவே இல்ல..!

எனக்கு உங்க பதிவுல ரொம்ப பிடிச்சது எதுன்னு தனித்தனியா பிரிச்சு பார்க்க முடியாட்டியும் "தீக்குள் விரலை வைத்தால்" இந்த கதை ரொம்ப பிடிக்கும்.

சென்ஷி said...

//கண்மணி said...
இரண்டு வருஷமா ஒரே டெம்ப்லட்டில் குப்பை கொட்டும் தானைத் தலைவி வாழ்க வாழ்க.....
//

ரிப்பீட்டே.. ரிப்பீட்டே :))

(அட கண்மணி டீச்சரா.. கமெண்டு போட்டுருக்காங்களா.. அட சொக்கா.. இன்னிக்கும் துபாய்ல மழை பெய்யப்போகுது)

சென்ஷி said...

//rapp said...
சென்ஷி அண்ணன் நாளைய விழா ஏற்பாடுகளில் பிசியாகிட்டாரா:):):) இன்னும் ஆளக் காணோம். மிஸ்டர் லேட் கம்மர் சென்ஷி அண்ணன், இதுக்காக பின்நவீனத்துவம் கலக்காத ஒரு பதிவை முத்துவைப் பற்றி எழுதவேண்டும்னு தீர்ப்பு சொல்லிக்கறேன்(பானுமதியம்மா வாய்சில் படிக்கவும்):):):)
//

அப்ப உங்க அக்கவுண்ட் என்னாச்சு?

சென்ஷி said...

//sindhusubash said...
வணக்கம்! வாழ்த்துக்கள்.துளசி தளம் வழியா தான் உங்களை தெரியும்..(தோசை புகழ்).உங்க பெயர் காரணம்(2 பெயர்) தெரிஞ்சிக்கலாமா?
//

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

சிந்து சுபாஷ் ..வாங்க..நீங்க புதுப்பதிவருல்லயா ..என்பேருகதை உங்களுக்கு தெரியாதது குத்தமில்ல.. அத எப்படி சொல்வேன்.. என்ன சொல்ல வேண்டாமா.. சே சே இருங்க லிங்க தரேன் போய் படிச்சிக்குங்க ..

//

ஒய் ப்ளட்.. சேம் ப்ளட்ன்னு கதறப்போறாங்க உங்க பதில பார்த்து.. :))

சென்ஷி said...

// rapp said...
அதேமாதிரி எப்போ நீங்க பதிவுலக பேர் மாற்றல் துறையோட சாதனை நாயகிங்கர பட்டத்தை துரக்கிறதா இருக்கீங்க:):):)
//

இது மனித பெயர் உரிமை மீறல்.. இதற்கு மிகக்கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு அதிகமாய் உள்ளது. அக்காவோட டார்கெட் பக்கத்துல நிக்கக்கூட இங்கன யாருமே இல்ல :))

யட்சன்... said...

வாழ்த்துகள்.....

என்ன மாதிரி புதிய பதிவர்களுக்கு நீங்கதான் இன்ஸ்ப்ரேசன்(ஸ்பெல்லிங் கரெக்டா !)....

காசியாத்திரை படித்து காதுல புகையினால் பின்னூட்டவில்லை... :)

அப்பால..யாருப்பா அந்த பதிவர் பேர மாத்தினாலும்..நான்ன்ன்ன்ன்ன்னு சொல்லிக்கிறது... ஹி..ஹி...ம்ம்ம்ம்

பரிசல்காரன் said...

வாழ்த்துக்கள் கயல்.

இந்தப் பதிவுக்கு 50வது பின்னூட்டம் இட வாய்ப்பு கிட்டியமைக்கு மகிழ்கிறேன்.

(50 தானே... இல்லையோ..?)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அக்கா ;))

வாழ்த்துக்கள் அக்கா ;))

நாகை சிவா said...

ஒடிப் போனதுக்கு வாழ்த்துக்கள்

இனி ஒட இருப்பதற்க்கும் வாழ்த்துக்கள்

நசரேயன் said...

வாழ்த்துக்கள்
/*
முதலில் கதையோட ஒன்லைன் சரியாகக்கிடைத்தால் தானே கதை எழுதலாம். சரி அடுத்து... பாருங்க சமையல் வகையில் ஒன்னுமே இல்லை.. ஏன்னா அது கைக்கு வந்ததைப்போட்டு சமைப்பது .. நோ ஸ்பெசிஃபிக் ரெசிபி..
*/
இது ஒரு சர்வதேச பிரச்சனை இன்னும் யாரும் தீர்வு கண்டு பிடிச்ச மாதிரி தெரியலை

NANDHU said...

YEN INIYA PIRANTHA NAAL VALTHUKKAL.............NEEDUDI VAZHKA

கிரி said...

வாழ்த்துக்கள்

தமிழ் பிரியன் said...

அக்கா! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

புதுகைத் தென்றல் said...

manamarntha valthukkal.

ungal eluthu nadai enaku migavum piditha ondru.

thodarnthu eluthungal.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றி இஸ்மாயில் கனி.. :)
--------------------------
ஒரே டெம்ப்ளேட் ஏன்னா அதை மாத்தி ஒன்னு கெடக்க ஒன்னு ஆகப்போதேங்கற பயம் தாங்க கண்மணி.. இதுக்கெல்லாம் வாழ்த்துக்கிடைக்குன்னே தெரியாதே :) தானைத்தலைவியா.. ஆகா... என் பதிவு பிற்ந்தநாளுக்கு என்ன செய்யலாம்ன்னு ஐடியா கேட்டா தமிழ்மணத்துக்கு லீவு விடலாம்ன்னு சென்ஷி ஒரு ஐடியா தந்தாப்ல.. நல்லவேளை பதிவு போடமுடிஞ்சுருச்சு.. ஹப்பாடா..
---------------------

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இராம் சின்னத்தல.. நீங்களும் மூத்தபதிவர்தானே வாழ்த்துங்க வாங்கிக்கரேன்.. :)
---------------------
சென்ஷி நீ சீக்கிரமா வந்திருந்தா சிந்துவுக்கு சரியான பதிலைக்கொடுத்துருப்ப இதே லிங்கெல்லாம் தந்திருப்ப.. நானே சொல்லவேண்டியதா போயிடுச்சு...
என்ன மனித பெயர் உரிமை மீறலா..புதுமையா இருக்கே..

-----------------

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மீத 60த்!!!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றி ,யட்சன் நான் இன்ஸ்ப்ரேசனா.. நல்ல கதையா இருக்கே.. எதுல பேர் மாத்தறதுலயா :))
காசிப்பதிவுக்கு வரலைன்னதுமே நினைச்சேன் ...
யார் அந்த சீனியரா.. உங்க பங்காளி தானே..
---------------------
பரிசல் அம்பதே தான்.. நன்றி..:)
எப்படியோ ராப் கவனிக்காதப்ப நீங்க 50 நான் அறுபதுன்னு போட்டுக்கலாம்.. மை ப்ரண்ட் வேற இப்பலாம் மீத -- வெளையாடறது இல்ல... :)

பாச மலர் said...

வாழ்த்துகள் முத்துலட்சுமி..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மழை வருதா பாருங்கப்பா கோபி டைப் அடிச்சு வாழ்த்திருக்காப்ல.. நன்றி நன்றி.. :)
------------------
நாகை சிவா வாழ்த்துக்கு நன்றிகள்..
------------------
நசரேயன்..எந்த ப்ரச்சனைங்க சொல்றீங்க.. கதை ஒன்லைன் ப்ரச்சனையா.. இல்ல ரெசிபி ப்ரச்சனையா.. :))
------------------------
நந்து , கிரி, தமிழ்பிரியன் நன்றி.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

புதுகைத்தென்றல்.. நன்றிப்பா.. :)

--------------
பாசமலர் நன்றி.. :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

முத்துலட்சுமி அக்கா,

வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..

200 விரைவில் 400 ஆகட்டும்..

SurveySan said...

same pinch :)

நானானி said...

சிறுமுயற்சியின் ரெண்டாவது பிறந்தநாளுக்கு நைன் வெஸ்டின் அன்பான வாழ்த்துக்கள்!!!

கவிதா | Kavitha said...

வாழ்த்துக்கள் முத்து..!! :))

வெள்ளை நிலா said...

வாழ்த்துக்கள்