கங்கா ஆரத்தி சாயங்காலம் 6.45 மணிக்கு ஆரம்பிப்பார்கள் . ஆனால் நாங்கள் ஐந்து மணிக்கே கங்கைக்கரைக்கு சென்றுவிட்டோம். நல்லது தான். வெளிச்சத்தில் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
ஏழு கட்டம் கட்டமான மேடை அமைக்கப்பட்டு அதில் பூஜைக்கானப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. விளக்குக்களை பளபளப்பேற்றி துடைத்து திரியிட்டுக் கொண்டிருந்தார் ஒருவர்.
தாஸ்வமேத் கட் என்னும் படித்துறையில் தான் இந்த ஆரத்தி நடக்கிறது. போட்காரர்கள் பாய்ந்து வந்து அழைக்கிறார்கள். வாருங்கள் தலைக்கு அறுபது ரூபாய் தான். உங்களை எல்லா படித்துறையையும் காட்டிவிட்டு பின்னர் சரியாக ஆரத்தி சமயத்தில் ஆரத்தி நடக்கும் இடத்திற்கே கொண்டுவந்து நிறுத்துவோம். நீங்கள் படகிலிருந்து பார்க்கும் போது நன்றாக இருக்கும் என்றும் கழுத்தில் தொங்கிய கேமிராவைப் பார்த்ததும் காட்சியை சரியாக வீடியோ செய்ய அங்கே தான் வசதி என்றும் அழுத்தமாய் சொன்னார்கள்.
எங்களுக்கோ கங்கை படித்துறைகளைப் பார்க்கும் திட்டம் திரு.பனப்பன் சொன்னது போல காலை தான் . அதில் மாற்றம் செய்ய விருப்பமில்லை என்று சொன்னதும் அந்த படகுக்காரர் சரி நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த மேடைகளி ல் அமர்ந்து பாருங்கள் . இன்னும் சிறிது நேரத்தில் மக்கள் கூட்டம் வந்துவிட்டால் அமர இடம் கிடைக்காது என்று அறிவுறுத்தினார்.
நன்றி சொல்லிவிட்டுப்பார்த்தால் மேடைகளில் விரிப்புகளும் திண்டுகளும் கிடக்கிறதே இது யாருக்காகவேனும் செய்திருக்கப்போய் நாம் அமர்ந்து எழுப்பப்பட்டு விடக்கூடாதே என்று ஒரு தயக்கம். பெங்காலி குடும்பம் அமர்ந்திருந்த இடத்தில் சென்று யார் வேண்டுமானாலும் அமரலாமா என்று கேட்டுக்கொண்டோம்.
செருப்புக்களை அருகிலேயே வைத்துக்கொள்ள வசதியாக ஒருவர் பின் ஒருவரகா சதுரமேடையின் ஓரங்களிலேயே அமர்ந்து கொண்டோம். எங்களுக்கு முன்னால் ஒரு ஜெர்மனி பெண்மணி அந்த குடும்பத்தினரை மிரட்டி இடம் வாங்கிக்கொண்டார். அப்போதிலிருந்தே அந்த குடும்பத்துக்கும் அந்த பெண்மணிக்கும் ஒரே சண்டை. அவர்கள் என்ன செய்தாலும் இந்த பெண்மணி செய்யக்கூடாது என்று தடுத்தார். குழந்தையை ஏன் நடுவில் படுக்கப்போட்டிருக்கிறீர்கள் . மணியை அடிக்க கயிறை எடுக்காதீர்கள் அவர்கள் தான் அடிக்கனும். நான் இங்கே மூன்று இரவாக வருகிறேன் எனக்குத்தெரியும் என்று மிரட்டத்தொடங்கினார்.
ஆனால் சிறிது நேரத்திலேயே ஒருவர் வந்து ஒவ்வொரு மேடையிலும் ஒரு ஆளுக்கு கயிற்றைக் கொடுத்து அடிக்க சொல்லும்போது மணிஅடிக்கலாம் என்றார். அந்த குடும்பம் மொத்தமும் அந்த பெண்மணியை முறைத்தார்கள். சிறு அகல் விளக்கில் மெழுகு இட்டது வரிசையாக அடுக்கி அதையும் ஒருஒரு மேடையில் இருந்தும் ஒரு ஆளைத்தேர்ந்தெடுத்து மெழுகுவத்திக் கொண்டு ஏற்றச்சொன்னார்கள்.
பிறகு ஒன்றே போல் ஆடையணிந்து ஏழு இளைஞர்கள் வந்தார்கள். முதலில் ஊதுபத்தி , பின் தீப தூப ,விசிறி , வெண்சாமரம் மற்றும் பூ கொண்டு ஆரத்தியை நடத்தினார்கள். பின்னால் லைவாக ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கரையிலும் கங்கையில் படகிலும் கூட்டமாக கூட இணைந்தே பாடவும் செய்தனர். ஒன்று போலவே அவர்கள் செய்யும்போது பார்க்க அழகாக இருந்தது.
கங்கையில் விட என்று காகித தொண்ணையில் பூ மெழுகு விளக்கு விற்கின்றனர் குழந்தைகள். ஒரு பெண் அழகாக இருந்தாள் நான் புகைப்படமெடுப்பதை கவனித்ததும் பெருமையாக ஒரு பார்வை பார்த்தாள். அவளுக்கு இது வழக்கமாகிவிட்டிருக்க வேண்டும். வருகின்ற அனைத்து வெளிநாட்டினரும் கங்கைக்கரையில் சவரம் செய்பவனிலிருந்து பாசி விற்கிறவர் வரை ஒருவரை விடாமல் எடுத்துத்தள்ளுகிறார்களே...
ஏழரை மணிக்கு ஆரத்தி முடிந்தது.. சத்திரத்திற்கு சென்று இரவு உணவு சாப்பிடசெல்லவேண்டும் விடுவிடுவென்று நடைபோட்டோம். இரவு உணவு இட்லி , கோதுமை உப்புமா. காலையில் பெண்களும் இரவில் ஆண்களும் பரிமாறினார்கள். வடநாட்டினர் தான் இருந்தாலும் நம் பாணியில் அம்மா அய்யா சாம்பார் என்று அழைத்து நன்றாகப் பரிமாறினார்கள். நாட்டுக்கோட்டை சத்திரத்தின் முகவரி கேட்டிருந்தார் சின்ன அம்மிணி . இதோ நீங்கள் எல்லாருமே எடுத்துக்கொள்ளுங்கள்.
Varanasi
sri kasi nattukoottai nagara satram
Godowlia
Varanasi
221001
(UP) India
0542-2451804
Alahabhad
149, Mori-Daraganj
Allahabad
211 006
UP India
0532 2501275
இதுவும் தவிர பல மடங்கள் உண்டு. அங்கேயும் தங்கும் வசதி உண்டு. கேதார் கட் மற்றும் இந்த சத்திரங்கள் பகுதியில் ரோடுகளிலெல்லாம் இட்லி தோசை விற்கிறார்கள். தோசையை தொப்பியாக்கிவைத்திருக்கிறார்கள். நம்மவர்களுக்குத்தான் எங்கே போனாலும் தோசை இட்லி வேண்டுமே..
வாழை இலை போன்ற வடிவத்தில் கொஞ்சமே கனமான காகிதம் அதன் மேல் தான் சாப்பாடு.. அழைகாக மடித்துக் கொண்டு போட்டுவிடலாம்.
34 comments:
me the 1ST?
சூப்பர். அது ஜெர்மன்காரம்மாதானே, பிரெஞ்சுக்காரங்கன்னா எனக்குத்தெரிஞ்ச ஒருத்தங்களா இருந்திருக்கலாம், அவங்க இப்டி வம்புச்சண்டையில் ஸ்பெஷலிஸ்ட்.
விளக்கமான கட்டுரை அருமையான படங்களுடன். அந்த விளக்குகள் அழகு. சமீபத்தில் என் அம்மா தம்பியுடன் காசிக்குச் சென்று வந்தார்கள். நாட்டுக் கோட்டைச் சத்திரத்தில்தான் தங்கியிருந்தார்கள்.
கங்கா ஆரத்தி!
முதன் முதலாய் தெரிந்துக்கொண்ட விசயம் எனக்கு - ஒளி ஒவியத்துடன்....!
அருமை அக்கா!
பயண நோக்கம் நிறைவேறியது என்றே நினைக்கிறேன் அசத்தியிருக்கிறீர்கள்! - கோணங்களும் கூட ம்ம் வாழ்த்துக்களுடன்...!
அந்த விளக்குகள் ரொம்ப வித்தியாசமா இருக்கே. உங்க போட்டோக்களில் காசி ரொம்ப அழகா இருக்கு, அப்புறம் ஏன் நெறயப் பேர் அழுக்கா இருக்கும்னு சொல்றாங்க?
விலாசத்துக்கு ரொம்ப நன்றி:):):)
//நம்மவர்களுக்குத்தான் எங்கே போனாலும் தோசை இட்லி வேண்டுமே//
:):):)
நீங்க லைவ்வா பாக்குற மாதிரி ஒரு எபெக்ட் கொடுக்கறீங்க:):):)
ஆமாம்பா ஆமாம் .. ராப் நீயேதான் பர்ஸ்ட்.. :)
சரியாத்தெரியல ராப் ...:P வச்சிருந்த புக்கைப்பார்த்து தான் எந்த ஊருன்னு முடிவு செய்தேன்..
--------------
நன்றி ராமலக்ஷ்மி.. தீபாவளி சமயத்தில் செம கூட்டமாம் சத்திரத்தில்.நாங்க போகும்பொழுது எல்லாரும் கிளம்பிட்டிருந்தாங்க..
அந்தப் பொண்ணோட போட்டோ எங்கே?
ஆமாம் ஆயில்யன் ..புகைப்படப்பயணம்ன்னு சொன்னதே அதுக்குத்தான்.. போனமுறைப்போனப்ப ரோல் கேமிரா.. எனக்கென்னான்னா எந்த இடத்தை எடுத்தாலும் வீட்டாள முன்னாடி நிக்கவச்சுத்தான் எடுப்பேன் வீணாப்போகுமில்ல ஃப்லிம் .இப்ப தானே டிவிடிகேமிரா டிஜிட்டல் அடிச்சு தூள் செய்யலாம் ஆனா பேட்டரி தான் ப்ராப்ளம்..
-------------------------
ராப் எனக்கு கதையளக்கற திறமை அதிகங்கறயா.. அதைப்பத்தி என்னோட ப்ரண்ட் ஒருத்தி ஆட்டோகிராபில் அதான் எழுதினா.. என்ன சொன்னாலும் கயல் அந்த இடத்துல நாம இருந்த மாதிரியே தோண வச்சிடுவான்னு.. :))
அந்த பொண்ணு போட்டோவை கொஞ்சம் எடிட் செய்தேன் ஜிம்ப்ல அது சரியா சேவ் ஆகலை அதனால் இன்னைக்கு ஏற்ற முடியல முடிஞ்சா அது க்ளிக் க்ளிக் கேமிராக்கவிதை பதிவு ல வரும். :)
//கங்கா ஆரத்தி!
முதன் முதலாய் தெரிந்துக்கொண்ட விசயம் எனக்கு - ஒளி ஒவியத்துடன்....!//
ரிப்பீட்டு!
//முடிஞ்சா அது க்ளிக் க்ளிக் கேமிராக்கவிதை பதிவு ல வரும். :)//
வெயிட்டிங்!
//கழுத்தில் தொங்கிய கேமிராவைப் பார்த்ததும் காட்சியை சரியாக வீடியோ செய்ய அங்கே தான் வசதி என்றும் அழுத்தமாய் சொன்னார்கள்//
எத்தனை பேர பார்க்குறாங்க :-)))
//படகுக்காரர் சரி நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த மேடைகளி ல் அமர்ந்து பாருங்கள் . இன்னும் சிறிது நேரத்தில் மக்கள் கூட்டம் வந்துவிட்டால் அமர இடம் கிடைக்காது என்று அறிவுறுத்தினார்//
ரொம்ப நல்லவர் போல இருக்கு
//நான் இங்கே மூன்று இரவாக வருகிறேன் எனக்குத்தெரியும் என்று மிரட்டத்தொடங்கினார்.//
அடேங்கப்பா!
//சிறிது நேரத்திலேயே ஒருவர் வந்து ஒவ்வொரு மேடையிலும் ஒரு ஆளுக்கு கயிற்றைக் கொடுத்து அடிக்க சொல்லும்போது மணிஅடிக்கலாம் என்றார். அந்த குடும்பம் மொத்தமும் அந்த பெண்மணியை முறைத்தார்கள். //
ஹா ஹா ஹா
//ஒரு பெண் அழகாக இருந்தாள் நான் புகைப்படமெடுப்பதை கவனித்ததும் பெருமையாக ஒரு பார்வை பார்த்தாள்//
:-) சுவாராசியமா நீங்க கூறி இருக்கீங்க
//வருகின்ற அனைத்து வெளிநாட்டினரும் கங்கைக்கரையில் சவரம் செய்பவனிலிருந்து பாசி விற்கிறவர் வரை ஒருவரை விடாமல் எடுத்துத்தள்ளுகிறார்களே//
இந்திய அடையாளங்கள் என்று மின்னஞ்சலில் இவை தான் அதிகம் வருகின்றன.
நல்லா சுவாராசியமா கூறி இருக்கீங்க..நான் கூட என் பெற்றோரை இங்கே அழைத்து செல்ல வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்..உங்கள் பதிவை படித்த பிறகு அது கொஞ்சம் வலுப்பெற்று விட்டது :-)
நல்ல பயணக் கட்டுரை! நிறைய கருத்து சொல்லி இருக்கீங்க..:))
அக்கா! அப்படியே இடையிடேயே செலவு கணக்கையும் சொல்லுங்க.. .சத்திர வாடகை, சாப்பாடு இதெல்லாம்.... ;))
வாங்க சந்தனமுல்லை .. சீக்கிரமே போட்டுடறேன் அந்த பொண்ணு போட்டோவை..
----------------
கிரி நானும் அதே தான் நினைச்சே சே நல்லமனுசரா இருக்கார் ஆனா நாமதான் ப்ளான் பண்ணிட்டா நம்ம பேச்சையே கேக்கமாட்டோமே என்ன பண்றதுன்னு விட்டுட்டேன்..
:)
கண்டிப்பாக்கூட்டிட்டுப் போங்க.. இந்த ஜெனரேஷனோட இந்த மாதிரி டூரெல்லாம் கொஞ்சம் குறைஞ்சுட வாய்ப்புண்டு.. பெரியவங்களூக்காகத்தானே நாங்களும் இரண்டு முறை அடிச்சோம் ...
நானும் இந்த இந்திய அடையாளங்கள் போட்டோவெல்லாம் பாத்துட்டு அதையெல்லாம் எடுக்கலைன்னா நல்ல போட்டோக்ராபர் இல்லைன்னு நினைச்சுட்டு பாசி ஊசி விக்கறவர எடுத்திருக்கேனாக்கும் .. :)
படங்கள் கலக்க்லஸ்!
//நம்மவர்களுக்குத்தான் எங்கே போனாலும் தோசை இட்லி வேண்டுமே..
/
ஆமா ஆமா!! :D
படங்கள் எல்லாம் சூப்பரு...சுற்றுலா பதிவுகளில் அக்காவை அடிச்சிக்க ஆளில்லைனு மீண்டும் நிருபிச்சிட்டிங்க ;))
\\ஒரு பெண் அழகாக இருந்தாள் நான் புகைப்படமெடுப்பதை கவனித்ததும் பெருமையாக ஒரு பார்வை பார்த்தாள்\\
எங்க?? எங்க?? சீக்கிரம் போடுங்க...
அருமை!!!
படம் & எழுத்து எல்லாமும் அருமை!
முத்து, இப்பத்தான் படிச்சேன்.
படங்களும்,காட்சிகளும் அருமையோ அருமை.
நல்ல விவரம் இட்லி தோசை பத்தி.:)
ஆரத்தி காட்சி தினம் சன்ஸ்கார் டி வில பார்ப்பேன். அதை நீங்க எழுதிப் படிச்சதும் உடனே நம்ம ஊருக்குப் போகணும்னு தோணிப்போச்சு:)
எங்கப்பா அந்தப் பொண்ணு படம்:)
நிறைய பேருக்குப் பயனுள்ள தகவல்கள்..படங்கள் அழகு முத்துலட்சுமி.
ஆரத்தி படங்கள் அருமையா வந்திருக்கு, சத்திர விலாசத்துக்க மறுபடியும் நன்றி. (ராப் எனக்கு பதில் விலாசத்துக்கு நன்றி போட்டுருக்காங்க. இருந்தாலும் பரவாயில்ல, நானும் ஒருக்கா சொல்லிக்கறேன்.) :)
மீ த எத்தனாவது...!?
பொறுமையா படிச்சுட்டு அடுத்த கமெண்டு போடறேன் :))
மீ த 25த் :))
me the 25?:):):)
அக்கா! படங்கள் அனைத்தும் அருமை. ராப் அக்கா சொன்னது போல படங்களில் ஒருவித உயிர்ப்புத்தன்மை கிடைக்கின்றது. அந்த அழகான பெண்ணின் புகைப்படம் இல்லாதது மனதிற்கு சங்கடமாக இருந்தது. பதிவு மிகவும் அருமையாக இருந்தது!
கப்பி .. ஆமாவா ? அத்தனை வயசா ஆகிடுச்சு.. :)
----------------
கோபி அப்படி எல்லாம் இல்லப்பா.. வேற எழுத விசயமில்ல.. அதான் சுத்திப்பார்த்ததை எழுதலாம்ன்னு ஆரம்பிச்சது...:)
------------------
துளசி ரொம்ப நன்றிப்பா..
----------------
வல்லி .. நானும் சன்ஸ்கார்ல பார்த்திருக்கேன்.. நேரில் பார்த்தது வித்தியாசமான அனுபவம் தான்..
அந்த பொன்ணு படம் போடறேன் சீக்கிரமே..
நன்றி பாசமலர்..
-------------
நன்றி சின்ன அம்மிணி நீங்க சொல்லலைன்னா அந்த அட்ரஸ் போட மறந்திருப்பேன்.. :)
-------------------------
சென்ஷி நீதான் 25 த்..
:)
அந்த பொண்ணு போட்டோ பத்தி ரொம்ப எதிர்பார்ப்பை உண்டு பண்ணிட்டேனோ.. ஆனா அந்த பொண்ணு அழகுதான்..
-------------------
ராப் விட்டுட்டியே 25 ஐ..:(
ஹை 30 நான் தான்!!!
காசியின் பிரமாண்டத்தை உங்கள் படங்களும் பதிவின் விலாசமும் விளக்குகிறது, இப்போது தான் முடித்தேன் நன்றி
தங்கள் தகவலுக்கு நன்றி!!. முதல் முறையாக வட இந்தியா நோக்கி வரும் என் போன்றவர்களுக்கு உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது
கானா நன்றி..
ரிஷபன் நன்றி..
அன்பின் முத்துலெட்சுமி - வழக்கம் போல இங்கிருந்து அங்கு சென்று படம் பார்த்து - இதற்கும் சேர்த்து மறு மொழி அங்கே போட்டு விட்டேன். சரியா - ஆமா அதென்ன சிலது இங்கே சிலது அங்கே - ம்ம்ம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
Post a Comment