February 5, 2007

பெயர் மாற்றம்

நானொன்றும் பெரிதாய் பதிவுகள் இட்டுவிடவில்லை .
ஏதோ 30 பதிவு தாண்டி போய் கொண்டிருக்கிறது அவ்வளவே. இது வரை லட்சுமி எனும் பெயரில் எழுதிவந்தேன். (என்னத்த பெரிசா? ) புதிதாய் லக்ஷ்மி என்று மற்றொரு பதிவர் வந்து விட்டார்..குழப்பத்தைத் தவிர்க்கவே மாற்றம்.


என் வலையில் நானே மாட்டிக் கொண்டேன்..புரியலையா
மேலே சிறுமுயற்சி என்பதற்கு கீழே பாருங்க "மாற்றுங்கள் குழப்பத்தை தெளிவாக, " இப்போ புரிகிறதா? :))


அட அடுத்து முத்துலெட்சுமி என்று ஒருத்தர் வந்தால் என்கிறீர்களா? இன்னும் இருக்கு என் பெயர் இது பாதி தான் .அப்ப பார்த்துக்கலாம். எனவே இனி லட்சுமி முத்துலெட்சுமி ஆகிவிட்டாள்.

51 comments:

நாமக்கல் சிபி said...

அது சரி!

:))

நாமக்கல் சிபி said...

பெயர் மாற்றும் விழாவிற்கு யாரையும் அழைக்கவில்லை! விருந்து கொடுக்கவும் இல்லை!

இதைக் கண்டித்து விடியும் வரை டீக்குடிக்கும் போராட்டத்தை நடத்த இருக்கிறேன்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெயர் சூட்டுவிழா ன்னு வச்சா கலாய்த்தல் திணைல இருந்து வந்து ஒருவழி ஆக்கிடுவீங்கன்னு தானே பெயர் மாற்றம்ன்னு அடக்கமா சொன்னேன்..ஆனா இது என்ன போராட்டமா ?
பரவாயில்லை ..எப்படியோ பின்னூட்டம் கூடுதலா கிடைக்கும்:))
நடக்கட்டும் நடக்கட்டும்.

பங்காளி... said...

சொன்னா கோவிக்க கூடாது....

முத்து லட்சுமீ...மீ..மீ....என டனால் தங்கவேலு பழைய படத்தில் தன் மனைவியாக நடிப்பவரை அழைப்பார்...ஹி..ஹி..அதுதான் ஞாபகத்திற்கு வந்தது....

அந்த படத்தில்தான் புகழ்பெற்ற பூரி செய்வது பற்றிய காட்சி வரும்...

உடனே..."அதான் எனக்கு தெரியுமே!"..ன்னு சொல்லீருப்பீங்களே....ஹி..ஹி...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பங்காளி... said...
சொன்னா கோவிக்க கூடாது....

முத்து லட்சுமீ...மீ..மீ....என டனால் தங்கவேலு பழைய படத்தில் தன் மனைவியாக நடிப்பவரை அழைப்பார்...ஹி..ஹி..அதுதான் ஞாபகத்திற்கு வந்தது....
//
இது ல என்னங்க இருக்கு கோவிச்சுக்க.
புகழ்பெற்ற காட்சி இல்லயா.
நாங்கூட எனக்கு தெரியலன்ன ஒத்துக்காம இதே மாதிரி அதான் எனக்கு தெரியுமே ன்னு சொல்லி சமாளிக்கறது தான் சில சமயத்துல.

நாமக்கல் சிபி said...

//அந்த படத்தில்தான் புகழ்பெற்ற பூரி செய்வது பற்றிய காட்சி வரும்...

உடனே..."அதான் எனக்கு தெரியுமே!"..ன்னு சொல்லீருப்பீங்களே....ஹி..ஹி...
//

அது பூரி அல்ல! உப்புமா பங்காளி!

அதான் உங்களுக்குத் தெரியுமே!
:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பூரியா உப்புமாவா பட்டிமன்றத்தில் பூரியேன்னு தீர்ப்பு சொல்ல யாராச்சும் வருவாங்களா?:))

Anonymous said...

//எப்படியோ பின்னூட்டம் கூடுதலா கிடைக்கும்//

நாங்க ரெடி! எங்க வேகத்துக்கு ஈடு கொடுத்து பப்ளிஷ் செய்ய நீங்க ரெடியா?

:))

Anonymous said...

//பூரியா உப்புமாவா பட்டிமன்றத்தில் பூரியேன்னு தீர்ப்பு சொல்ல யாராச்சும் வருவாங்களா?:)) //

நாங்க வருகிறோம்!

எனி ஹெல்ப்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆஹா இவங்கள்ளாம் எங்க இருந்து வராங்கன்னு கொஞ்சம் டவுட்டு இருந்தது. இப்படி ஒரேடியா ஒரே பதிவுல வராங்களே கொஞ்சம் மறுமொழி இல்லாத என்னோட ரெண்டு பதிவு கிடக்குது .அங்க வந்து ஒருத்தரும் எட்டிப்பாக்கலையே :((

Anonymous said...

பூரியே என்ற தலைப்பில் விவாதம் செய்ய வந்திருக்கிறோம்!

Anonymous said...

நான் தான் நடுவர்.

எங்கே ரெண்டு பிளேட் பூரி! 3 பிளேட் உப்புமா பார்சல்!

பங்காளி... said...

ஆஹா...ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா...ஆரம்பிச்சிட்டாய்ங்க....சாமனியத்துல அடங்கமாட்டாய்ங்களே....ம்ம்ம்ம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இன்னைக்கு அவ்வளவு தான். இல்லைன்னா காலையில் பூரி செய்ய முடியாமல் தங்கவேலு மாதிரி முத்துலெட்சுமிய மிரட்டுவாங்க கணவரும் குழந்தைகளும் .மீதி நாளைக்கு.

லக்ஷ்மி said...

ஆஹா, உங்க பின்னூட்டம் பார்த்தப்பவே நினைச்சேன் உங்களோட கலந்து பேசி முடிவு செய்யணும்னு நினைச்சேன்.(பேர் போற விஷயமாச்சே, அதான் கொஞ்சம் ஒவர் பில்டப், ஹிஹி..ஹி) உண்மையில நாந்தான் ஜூனியர்ன்ற முறைல மாறி இருக்கணும். நீங்க பெருந்தன்மையா செஞ்சுட்டீங்க. நன்றி.

லக்ஷ்மி

வல்லிசிம்ஹன் said...

சிபி, அது முத்துலட்சுமி மி மி மி இல்ல.
தங்கலச்சுமி.
செய்தது பூரி.
ஆமா சுச்சுல ஒரு குடும்பமே குடித்தனம் பண்ணுகிற ஸீன் கூட நல்லா இருக்குமே.
நாங்க டணால் தங்கவேல் விசிறிக் கழகம்:-)
இப்படி பேரு வச்சா தப்பு இல்லியே.??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\லக்ஷ்மி said...
ஆஹா, உங்க பின்னூட்டம் பார்த்தப்பவே நினைச்சேன் உங்களோட கலந்து பேசி முடிவு செய்யணும்னு நினைச்சேன்.(பேர் போற விஷயமாச்சே, அதான் கொஞ்சம் ஒவர் பில்டப், ஹிஹி..ஹி) உண்மையில நாந்தான் ஜூனியர்ன்ற முறைல மாறி இருக்கணும். நீங்க பெருந்தன்மையா செஞ்சுட்டீங்க. நன்றி.

லக்ஷ்மி //
நன்றிதாங்க சொல்லனும் உங்களுக்கு.
ரெண்டு பாட்டி பேர சேத்து வச்சாங்க ஒருத்தங்க பேர மட்டும் வெச்சுக்கிட்ட நியாயமா சொல்லுங்க..பாட்டி கோச்சுகிட்டு உங்கள அனுப்பிட்டாங்க..
நடப்பதெல்லாம் நன்மைக்கே.
பாருங்க வாரதவங்கள்ளாம் வராங்க அதான் கொள்ளிவாய் ,குட்டிச்சாத்தான் ,பங்காளி(கோச்சுக்காதீங்க பங்காளி வராதவங்க லிஸ்ட் ல நீங்களும் இருக்கீங்களே என்ன பண்றது)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆஹா வாங்க வல்லி..இப்போதான் பூரியா உப்புமாவான்னு பட்டிமன்றம் முடிஞ்சது..நீங்க என்னன்னா பேருக்கே பட்டிமன்றம் வைக்க சொல்லுவீங்க போலயே..ஆனா முத்து லட்சுமி தான் அவங்க ஒரிஜனல் பேரே . நானும் உங்க தங்கவேல் விசிறி கழகத்துல சேர்ந்துக்கறேன்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

முத்துலெட்சுமி,

அழகான பெயர். எனக்குப் பிடித்த பெயருங்கூட. முத்துலெட்சுமி என்ற பெயரைக்கேட்டாலே தமிழ்நாட்டின் முதலாவது டாக்டர்தான் நினைவுக்கு வருவாங்க. விக்கிபீடியாவுல தேடினே. உடன கிடைச்சிருச்சு. :)

http://en.wikipedia.org/wiki/Muthulakshmi_Reddi

தமிழ்விக்கிபீடியாவில இதை மொழிபெயர்த்துப் போட்டுவிடுங்களேன். ;) [வந்துட்டா பாரு. வாழ்த்து சொன்னகையோட வேலையும் வைக்கிறான்னு வையாதீங்க.). :(

புதுப்பெயருக்கு வரவேற்புடன்,
மதி (சந்திரமதி)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தங்கவேலு படத்தில அது தங்கலெச்சுமி மி மி மி இல்ல? ;)

அதாந்தெரியுமேன்னு சொல்லிராதீங்கப்பா.

-மதி

வெற்றி said...

முத்துலட்சுமி,
வாங்க, முத்து முத்தான பதிவுகளாகத் தாருங்கள். :))

நல்ல முடிவு. ஒரே பெயரில் இருந்தால் பல குழுப்பங்கள்/சிக்கல்கள் எழலாம். நீங்கள் உங்களை வர முன்னே காத்துவிட்டீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.:))

துளசி கோபால் said...

அன்புள்ள முத்துவுக்கும் லட்சுமிக்கும் எழுதிக்கொ(ல்)ள்வது,
இப்பவும் உன் பெயர் மாற்றம் பற்றி அறிந்தேன். எல்லாம் நல்லதுக்குன்னு
நினைச்சுக்கோ. இன்னும் வேற எதாவது பேரையும் கூடச் சேர்க்கலாமுன்னு
நினைச்சா...' ஓடிவந்து' என்னக்கேளு? நான் வேற எதுக்கு இருக்கேன்?:-)

எப்படியோ எல்லாரும் நல்லா இருந்தாச் சரி.

இப்படிக்கு,
உன் அன்புள்ள(???)
--------

மங்கை said...

சொல்லியிருந்தா இங்க கெடா வெட்டி விழா எடுத்திருப்பேனே...மிஸ் ஆயிடுச்சே முத்தூஊஊஊ...
...:-(((((((.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\மதி கந்தசாமி (Mathy) said...
முத்துலெட்சுமி,

அழகான பெயர். எனக்குப் பிடித்த பெயருங்கூட. முத்துலெட்சுமி என்ற பெயரைக்கேட்டாலே தமிழ்நாட்டின் முதலாவது டாக்டர்தான் நினைவுக்கு வருவாங்க. விக்கிபீடியாவுல தேடினே. உடன கிடைச்சிருச்சு. :)

http://en.wikipedia.org/wiki/Muthulakshmi_Reddi

தமிழ்விக்கிபீடியாவில இதை மொழிபெயர்த்துப் போட்டுவிடுங்களேன்.
புதுப்பெயருக்கு வரவேற்புடன்,
மதி (சந்திரமதி) //

பெயரைப் பாராட்டியதுக்கு நன்றி.மதி.
முயற்சி செய்யறேன் நீங்க குடுத்த வேலையை செய்ய.அவ்வளவு விஷய ஞானம் உள்ள ஆளு இல்லை நான்:((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ வெற்றி said...
முத்துலட்சுமி,
வாங்க, முத்து முத்தான பதிவுகளாகத் தாருங்கள். :))

நல்ல முடிவு. ஒரே பெயரில் இருந்தால் பல குழுப்பங்கள்/சிக்கல்கள் எழலாம். நீங்கள் உங்களை வர முன்னே காத்துவிட்டீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.:)) //
ஆமா வெற்றி. குழப்பம் சிக்கல்ன்னாலே நமக்கு பயம்.அப்புறம் அவங்கள மாற சொல்லலாம்னா அவங்களும் நவம்பரில் வலை பதிய ஆரம்பித்தவர்கள்.தமிழ்மணத்துக்கு புதிதுன்னாலும் ஆங்கிலத்தில் எழுதிக்கிட்டு இருந்தாங்க போல.
சரி மாற்றங்கள் வேண்டுமென்றால் முதல் முயற்சி உங்களில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் எனும் படி நானே மாறிவிட்டேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா சொன்னீங்க துளசி . இன்னைக்கு புதன் கிழமை...நான் அவளில்லை..இப்படி பதிவுகளுக்கான தலைப்பு களஞ்சியமே உங்க கிட்ட இருக்கு போல. அதென்ன அன்புள்ள போட்டு ??? எதுக்கு:|

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\மங்கை said...
சொல்லியிருந்தா இங்க கெடா வெட்டி விழா எடுத்திருப்பேனே...மிஸ் ஆயிடுச்சே முத்தூஊஊஊ...
...:-(((((((..... //
ஆஆ... கெடாவாஆ... ஏங்க எனக்கு பெயர வச்சுட்டு கெடாவ நீங்க சாப்பிடுவீங்க...அப்ப நான் என்ன பண்றது நான் சைவமச்சே...வேணா
சக்கரபொங்கல போடுங்க இப்ப : ))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த பின்னூட்ட கடை வச்சிருக்கறது யாருங்க..கடை ஓனர் யாரு ...கோவைக்காரரா...?

பின்னூட்ட கடைக்காரர் , கொள்ளிவாய் ,குட்டிசாத்தான், மோகினி கழகம் எல்லாருக்கும் பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி சொல்ல விட்டுப் போச்சு.நன்றிங்க :))

அபி அப்பா said...

டணால் தங்கவேலு நியாபகத்துக்கு வர்ரார். ஒரு படத்துல சொல்லுவாரு....முத்து லெச்சுமீமீமீ...என்று...
நிறைய எழுத வாழ்த்துக்கள்..

அபி அப்பா said...

ஆஹா, இப்போதான் பாத்தேன்...."பங்காளி"யும் அதே தான் சொல்லியிருக்காரு....

அபி அப்பா said...

//அது பூரி அல்ல! உப்புமா பங்காளி!//

இல்ல சிபி, அது பூரிதான்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன அபி அப்பா பொறுமையா எல்லா பின்னூட்டததையும் படிச்சுட்டு இன்னும் நிறைய பின்னூட்டம் போடுவீங்க போல. :)) பின்னூட்டம் என்னைக்கும் இல்லாம இதுக்கு எகிறுது போங்க.

Anonymous said...

என்னய வச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலயே!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆவிகளுக்கு இங்கு இடமில்லை.

அபி அப்பா said...

கும்மி கூட்டம் வந்தாச்சு..உங்க காட்டுல மழை. ஜமாய்ங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இல்லை இல்லை ..போதும்...ஏற்கெனவே ஒன்னு ரிஜக்ட் பண்ணியாச்சு.:))

சீனு said...

//முத்து லட்சுமீ...மீ..மீ....என டனால் தங்கவேலு பழைய படத்தில் தன் மனைவியாக நடிப்பவரை அழைப்பார்...ஹி..ஹி..அதுதான் ஞாபகத்திற்கு வந்தது....//

அட! நான் நெனச்சேன் அத சொல்லிட்டிருக்கார்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பள்ளிக்கூடம் பதிவுல மதி உங்ககிட்ட கேள்வி கேட்டுருக்காங்க பாத்துட்டீங்களா?

சீனு said...

//பள்ளிக்கூடம் பதிவுல மதி உங்ககிட்ட கேள்வி கேட்டுருக்காங்க பாத்துட்டீங்களா?//

பாக்குறேன்...

தமிழ்நதி said...

எனது பதிவில் வந்து பின்னூட்டம் இட்டபோது என்னடா இது லட்சுமிதானே வழக்கமா வருவாங்க என்று குழம்பினேன். போலிக்குப் பயந்து பெயர்மாற்றமோ என்று நினைத்தேன். இப்போது புரிந்தது. சரி!முத்துலட்சுமி!

மங்கை said...

முத்தூஉஉஉஉ

//நீங்க சாப்பிடுவீங்க...அப்ப நான் என்ன பண்றது நான் சைவமச்சே...வேணா
சக்கரபொங்கல போடுங்க இப்ப //

நானும் உங்களோட பொங்கல் தான் சாப்பிடனும்....
கெடா நம்ம மக்கள்ஸ்க்கு..:-)))

சென்ஷி said...

// மங்கை said...
முத்தூஉஉஉஉ

//நீங்க சாப்பிடுவீங்க...அப்ப நான் என்ன பண்றது நான் சைவமச்சே...வேணா
சக்கரபொங்கல போடுங்க இப்ப //

நானும் உங்களோட பொங்கல் தான் சாப்பிடனும்....
கெடா நம்ம மக்கள்ஸ்க்கு..:-))) //

இந்த பதிவுல நான் பின்னூட்டம் போடலன்னு அப்புறம் கிடா விருந்துல என்னை கூப்டாம விட்டுட்டா !
அதுக்காக இது :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட அட என்ன ஒரு முன் யோசனை...சென்ஷி உங்களுக்கு..

நிஜமா நல்லவன் said...

ஒரு வருஷம் முன்னாடி போட்ட பதிவுக்கு இப்ப பின்னூட்டம் போடலாமா?

நிஜமா நல்லவன் said...

அப்படி போட்டா தமிழ்மணத்துல வருமா?

நிஜமா நல்லவன் said...

அப்படி வந்தா இந்த பதிவை படிச்சுட்டு இன்னும் கொஞ்ச பேரு குழம்புவாங்களா? இல்ல தெளிவாங்களா?

நிஜமா நல்லவன் said...

இப்ப கயல்விழின்னு ஒருத்தர் எழுத ஆரம்பிச்சி இருக்காங்களாமே?

நிஜமா நல்லவன் said...

லெஷ்மி இருக்காங்க. கயல்விழி இருக்காங்க. முத்துலெட்சுமி என்ற பேருல கூடிய சீக்கிரம் யாரும் பதிவு எழுத வருவாங்களா?

நிஜமா நல்லவன் said...

கயல் அக்கா பேருக்கு மட்டும் ஏன் இத்தனை பேரு போட்டியா வராங்க?

நிஜமா நல்லவன் said...

50 ஆச்சுன்னு நினைக்கிறேன். அப்புறம் வந்து பார்க்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிஜம்மா நல்லவன்.. 45 நாளுக்குள்ள உள்ள பின்னூட்டங்களை மட்டும் தான் தமிழ்மணம் திரட்டுமாம்..அதனால் இது முன்னால வராது :(

என் பேருக்குன்னு இல்ல..அதிகமான பேர் போட்டிபோடுவது சிவா என்கிற பேருக்குத்தான்.. நாகை சிவா புதுவை சிவா.. மங்களூர் சிவான்னு எத்தனை எத்தனை .. அப்பறம் ரவிசங்கர்..

ஆனா இப்ப என்னோட பேர் காம்பினேஷன் ல யாருமே இருக்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன்..