December 4, 2008

நான் தான் ஹீரோ ஓகேய்?

"டேய் ட்ராகன் டேல்ஸ் ல வர்ர அக்கா உன் அக்காவாம்.. நீ தான் அந்த தம்பியாம்.. "
ம்..... அம்மா நான் தான் ஹீரோ ஓகேய்"
-----------------------------------------------------------------
மகளின் பள்ளி விழாவுக்கு போய் இறங்குகிறோம்.
" அம்மா இந்த ஸ்கூலா ... அப்ப ஏன் அக்கா ஸ்கூலுன்னு சொன்ன...
யே மேரா பி ஸ்கூல் ஹேன்னா? ( இது என்னோட ஸ்கூலும் தானே?) "

அவனுக்குத்தான் அட்மிசன் ஆகிடுச்சே..
-----------------------------------------------------
தினம் எழுந்ததும்,
" அம்மா இன்னைக்கு கோன்ஸா( எந்த) ஸ்கூல் போகனும்?"
ப்ளே ஸ்கூலா பெரிய ஸ்கூலான்னு கேக்கரான்.
" அது ஏப்ரல் மந்த்டா"
" அது எப்ப வரும்"
".... ம் ..... வரும் இன்னும் கொஞ்சம் நாளில்"
"யூனிபார்ம் ஏன் வாங்கமாட்டேங்க்ற நான் எப்பத்த்தான் பஸ்ல போறது"
"இன்னும் கொஞ்சம் பெரிசாகனும் நீ"
" மே படா ஹூம் அம்மா" ( நான் பெரியவன் தான் அம்மா)


----------------------------------
என்னோட கம்ப்யூட்டர் ல கேம் விளையாண்டா ஏன் சத்தம் வரலை..
டேய் அது ம்யூட்ல போட்டிருக்குடா.. அப்பா நெட் மீட்டிங்க் செய்யராங்கள்ள

அப்பா ப்ளீஸ் அந்த லேப்டாப் பந்த் கரோன்னா ( மூடிவைங்களேன்)

"அதுல வேல செய்தாதாண்டா பண ம் கிடைக்கும் ..நீ மெக்டோனால்ட்ஸ் போலாம்.. குக்கும்பர் வாங்கலாம்.. பனானா வாங்கலாம்.. "

அக்கா வந்ததும் ,
"அக்கா அப்பா கம்ப்யூட்டர் மே வேலை கர்ரஹாஹை...( செய்யறாங்க) ..உஷ்...
அப்பறம் பணம் கிடைக்கும், ஹம் டோனால்ட்ஸ் சலேங்கே ( நாம மெக்டோனல்ட்ஸ் போவோம்) , பனானா, குக்கும்பர், சாக்லேட் எல்லாம் அப்பத்தான் வாங்கலாம். "

"நீ நல்லபடிப்பயாடா?"
'எதுக்கு?"
"வேலை செய்யனும்ல ?"
"ம் வேலை மிலேகா ன்னா ( கிடைக்குமில்ல) அப்ப செய்வேன்..
அப்பா கார்ல போவேன்."

38 comments:

சென்ஷி said...

மீ த ஃபர்ஸ்ட்டு :)

சென்ஷி said...

:))

கலக்கல்.. குட்டிஸ் நல்லா தமிழ் பேச ஆரம்பிச்சுட்டாராக்கா..

சென்ஷி said...

//மகளின் பள்ளி விழாவுக்கு போய் இறங்குகிறோம்.
" அம்மா இந்த ஸ்கூலா ... அப்ப ஏன் அக்கா ஸ்கூலுன்னு சொன்ன...
யே மேரா பி ஸ்கூல் ஹேன்னா? ( இது என்னோட ஸ்கூலும் தானே?) "//

பாருங்களேன்.. தலைவரு இவ்வளவு சொல்லியும் கேக்காம மகளின் ஸ்கூல்ன்னே எழுதியிருக்கீங்க.. இது நல்லால்ல.. அப்புறம் பெரிய போராட்டம் நடத்த வேண்டி வரும் :)

ஆயில்யன் said...

கலக்கல்.. குட்டிஸ் நல்லா ஹிந்தி பேச ஆரம்பிச்சுட்டாராக்கா..

ஆயில்யன் said...

//அப்பா ப்ளீஸ் அந்த லேப்டாப் பந்த் கரோன்னா ///


ரசித்தேன்!

ஆயில்யன் said...

//ம்..... அம்மா நான் தான் ஹீரோ ஓகேய்///


இந்த ஒகேய்!

அந்த ஒகேய் யா?

ஆஹா பையன் அப்படியே அவுங்கள மாதிரியேத்தானா :)))))))))))

ஆயில்யன் said...

//அக்கா அப்பா கம்ப்யூட்டர் மே வேலை கர்ரஹாஹை...( செய்யறாங்க) ..உஷ்...
அப்பறம் பணம் கிடைக்கும், ஹம் டோனால்ட்ஸ் சலேங்கே///


ஆஹா அடுத்து இந்த ஹிந்தமிழ் லாங்குவேஜ் கத்துக்கணுமா !

கானா பிரபா said...

;-) கலக்கலு

தமிழ்மணத்தில் இணைக்காம போனா என்ன, வயித்தெரிச்சல்னு ஆறுதல் படுவீங்களா

ராமலக்ஷ்மி said...

ஓகேய்ய்ய்.

அவனேதான் ஹீரோ:)))!

rapp said...

////மகளின் பள்ளி விழாவுக்கு போய் இறங்குகிறோம்.
" அம்மா இந்த ஸ்கூலா ... அப்ப ஏன் அக்கா ஸ்கூலுன்னு சொன்ன...
யே மேரா பி ஸ்கூல் ஹேன்னா? ( இது என்னோட ஸ்கூலும் தானே?) "//

பாருங்களேன்.. தலைவரு இவ்வளவு சொல்லியும் கேக்காம மகளின் ஸ்கூல்ன்னே எழுதியிருக்கீங்க.. இது நல்லால்ல.. அப்புறம் பெரிய போராட்டம் நடத்த வேண்டி வரும் :)

//


கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)

rapp said...

இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?:):):)

rapp said...

இன்னைக்கு தல எனக்கு மெசேஜ் அனுப்பலையா?:):):)

நாகை சிவா said...

தங்கிலேஷ் மாதிரி இது புது வகையோ?

தங்ந்தி வச்சுகலாமா?

;)))

சந்தனமுல்லை said...

:-)) ஹீரோ நல்லாவே பேசறாரு!!

//ம் வேலை மிலேகா ன்னா ( கிடைக்குமில்ல) அப்ப செய்வேன்..//

அதானே!

தமிழ் அமுதன் said...

" அம்மா இந்த ஸ்கூலா ... அப்ப ஏன் அக்கா ஸ்கூலுன்னு சொன்ன.?


ஜுட் மத் போல்னா


சரிதானா இது?

கப்பி | Kappi said...

:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி என்ன மொழின்னாலும் சரி மழலையில் பேசி தன் காரியத்தைப்பாத்துக்குவான்.. இது தமிழிந்தி..:) ஓ இப்பயும் தப்ப மக ஸ்கூல்ல்னு சொல்லிட்டோனோ.. தப்பு தப்பு..
----------------------
ஆமா ஆயில்யன் அந்த ஓகேய் தான்.. நாம என்னபேசறமோ அத கவனிச்சுத்தானே அவங்க பேசறாங்க.. அதனால் தான் ஓகேய்! :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் ஹிந்தமிழ் கூட நல்லாருக்கு..
---------------------
கானா தமிழ்மணத்துல இணைக்கலன்னாலும் பரவாயில்லையா.. சரி சரியாகும்போது ஆகட்டும்.. நம்ம அடிக்ஷன் குறையும்ல்ல..
--------------------
ஆமா ராமலக்ஷ்மி ஹீரோ தெரியுது வில்லன் தெரியுது.. என்னங்கறீங்க போங்க.... ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராம்..:) நன்றி
------------------
ராப் நான் தமிழ்மணத்துல இணையலன்னு சோகத்துல இருந்ததால மெஸேஜ் அனுப்பல..
:)
-------------------
நாகை சிவா..தந்தி மாதிரி இருக்கு... இத தமிழிந்தின்னோ, ஹிந்தமிழ்ன்னோ சொல்லிக்கலாம்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முல்லை.. ஆமாம்ப்பா.. அதுக்குள்ளயே எனக்கென்ன அவசரம்ன்னு கேக்கரான் போல..:)
---------------
கரெக்ட் ஜீவன்.. :)
அவனே சொல்றான் மதியம் தூங்குடான்னா.. ஜூட் க்யூம் போல்ரஹிஹோ.. நைட் ஆகலையே இன்னும்..

மங்களூர் சிவா said...

மிக அருமை!. ரசித்தேன்.
ஹீரோவுக்கு வாழ்த்துக்கள்.

மங்கை said...

ஆஹா..சூப்பர்...

//அக்கா அப்பா கம்ப்யூட்டர் மே வேலை கர்ரஹாஹை//
ஹா ஹா...

சென்ஷி ரெம்ம்ம்ம்பபப ஷார்ப்பு... சபரி நல்லா தாதாக்களை வச்சுட்டு இருக்காம்பா... பார்த்து...

Poornima Saravana kumar said...

குழந்தைங்க பேசுவதே ஒரு தனி அழகு..
உங்க பையன் ரொம்ப பெரிய ஆளா வருவான் பிற்காலத்தில:)

நசரேயன் said...

/*
அம்மா நான் தான் ஹீரோ ஓகேய்
*/
வருங்கால பாலிவுட் ஹீரோ வாழ்க

மதிபாலா said...

குழந்தைங்க பேசுவதே ஒரு தனி அழகு..//

ஆமாம் , கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

பெரும் சொற்பொழிவை விட மகிழ்ச்சியும் ஆனந்தமும் தரும் நிகழ்வு.

Anonymous said...

தமிழ்மணத்துல வந்துருச்சே, நான் தமிழ்மணத்தில பாத்துதான் வந்திருக்கேன். ஹிந்தமிழ் நல்லா இருக்கு.

Thamiz Priyan said...

விவரமான ஆளாக தான் இருக்கார் என் நண்பர் சபரி! வாழ்க வளமுடன்!

Avanthika said...

akkaaa..how r u...

i ahve tagged u in my post... and continue the tag akkaa

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சிவா.. :)
------------------
ஆமா மங்கை :) அவனே ஒரு தாதா அவனுக்கு சென்ஷி உதவிக்கு வேற..
-----------------------
நன்றி பூர்ணிமா..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நசரேயன்.. அவனுக்கு மீசை பிடிக்குமே.. எப்படி பாலிவுட்? நீங்கதான் பாரதிராஜாகிட்ட சொல்லி சான்ஸ் வாங்கித்தரனும்.. :)
-----------------------
மதிபாலா உண்மைங்க.. மனசு எப்படியாப்பட்ட கோபத்திலிருந்தும் மாறிடும்.. சில சமயம் எப்படியாப்பட்ட லேசானமனசுக்கு கோபம் வரும்படியும் சேட்டை செய்வான் அதை மறந்துடனும்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சின்ன அம்மிணி , என் மிஸ்டேக்க் இல்ல போலங்க அது தெரியாம ஹச் டி எம் எல் கோட் ல கை வச்சு அது கோச்சிக்கிச்சு .. இப்ப டாக்டரை கூப்பிட்டு சரி பண்ணி வச்சிருக்கேன்.. :)
-------------------------------

தமிழ்பிரியன்.. அவன் வளர்ந்துட்டேன்னு சொன்னதும் நண்பராக்கிட்டீங்களே.. க்ரேட்..
---------------------
ஓகேய் அவந்தி எழுதறேன்.. :)

கைப்புள்ள said...

//ஹம் டோனால்ட்ஸ் சலேங்கே //

கானா பிரபா அண்ணாச்சி ஜிடாக்ல இந்தியில ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டிருக்காரே என்ன மேட்டர்னு நெனச்சிட்டே இருந்தேன். இது தானா சங்கதி? :)

மகன் இந்தி, தமிழ் எல்லாம் கலந்து கட்டி பேசுவாரு போல?

கோபிநாத் said...

ரசித்தேன்...;)

அமுதா said...

/*ம்..... அம்மா நான் தான் ஹீரோ ஓகேய்"*/
ஓகேய்...:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கைப்புள்ள..:) முதல்ல ஹிந்தி தான் தாய்மொழியாட்டம் பேசினான் இப்ப எங்க குழப்பத்தால கலந்துகட்டறான்..
-----------
கோபி , அமுதா நன்றி.. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்.

கலக்கறாங்க பசங்க

" மே படா ஹூம் அம்மா" ( நான் பெரியவன் தான் அம்மா)
ஹாஹாஹ்ஹா

அமிர்தவர்ஷினி அம்மா said...

//அக்கா அப்பா கம்ப்யூட்டர் மே வேலை கர்ரஹாஹை...( செய்யறாங்க) ..உஷ்...
அப்பறம் பணம் கிடைக்கும், ஹம் டோனால்ட்ஸ் சலேங்கே///

செந்தமிழும், ஹிந்தமிழும் கலந்து கட்டி பசங்க கலக்கறாங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா..
அவன் பேச ஆரம்பிச்சதும் போதும் இப்ப வடிவேலு கணக்கா.. முடியலன்னு சிரித்துக்கொண்டே அழுகிறேன்.. :)